மது மகிழன் - 3
கல்லணை.
மதுவும், கார்த்திகாவும் வந்து அரை மணி நேரம் கடந்தும் மகிழன் வரவில்லை. மணிக்கட்டைத் திருப்பி பார்த்தாள் மது. இன்னும் பதினொன்றாவதற்கு ஐந்து நிமிடம் இருந்தது.
"உங்க அண்ணன் பெரிய கலெக்டர் சொன்ன டைமுக்கு தான் வருவாரு போல' என்றாள் மது.
"எங்க அண்ணன் உனக்கு யாரு' என்னறாள் கார்த்திகா
மது கண்களில் தன்னவனை பார்க்க போகும் மகிழ்ச்சி பிராவகமாய் ஊற்று எடுத்து இருந்தது. அவள் மனது ஒரு நிலையில் இல்லை. கார்த்திகா பேசுவது கூட அவள் காதில் விழவில்லை. அவள் இதழ்களில் எப்போதும் ஒட்டி இருக்கும் புன்னகை இன்று ஏனோ பெரியதாக விரிந்து இருந்தது.
இருக்காதா பின்னே? எத்தனை வருடத் தவம், கனவு, ஆசை..
உள்ளுக்குள் பொங்கிய மகிழ்ச்சியில் அவள் அருகில் இருந்த கார்த்திகாவை கிள்ளுவதும், அடிப்பதுமாய் படுத்தி எடுத்தாள், அவள் துன்பத்தை எல்லாம் தங்கி நின்ற தோழி அவள் மகிழ்ச்சி தரும் தொல்லைகளையும் தாங்கினாள்.
கனவுலகில் மது திளைத்திருக்க.....
"ம்ஹூம்" என்கிற சத்தத்தில்
கவனம் கலைய மது நிமிர்ந்து பார்த்தாள்.
அகன்று விரிந்த தோளோடு, கண்களில் குறும்போடு அவளையே பார்த்திருந்தான் மகிழன். திடீரென மாமனை பார்த்த இன்ப அதிர்ச்சியில் உடல் சிலிர்த்து மதுவுக்கு, கண்களில் அவனுக்கான காதல் கசிந்தது. சட்டென முகத்தை திருப்பி மறைத்துக் கொண்டாள்.
முந்தைய நிகழ்வுகளின் தாக்கத்தில் இருவருமே பேசவில்லை. யாராவது ஒருவர் இறங்கி வந்தால் தானே பேச முடியும். இருவருமே மௌனமாக இருந்தார்கள். கார்த்திகாவைத் திரும்பிப் பார்த்தான் மகிழன்.
"ஹாய்..அண்ணா" என்று புன்னகைத்தாள்.. அவனும் பதிலிற்குச் சிரித்தான்
"சாரி.. ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா?"என்றான்.
"இல்ல இப்போ தான் வந்தோம்' என்று கார்த்திகா சிரிந்துக்கொண்டே சொல்ல
மது அவளை பார்த்து முறைத்தாள். அவன் பக்கம் திரும்பியே பார்க்க வில்லை
"மது" என்றான் மகிழன்.
"மது' என்ற அழைப்பு அவள் உயிர் வரை தீண்டிச்சென்றது. அவள் கண்கள் ஓடும் தண்ணீரை வெறித்திருக்க அமைதியாக இருந்தாள்.
கோபத்தையும் தாண்டி அவனுக்காக தன் உடலின் ஒவ்வொரு அணுவும் ஏங்குவதை, அவனை அணைத்துக் கொள்ள துடிப்பதை அவளால் உணர முடிந்தது. அவனை அப்படியே கட்டிக்கொள்ள தோன்றியா ஆசையை அடக்கிக் கொண்டு, கோபமா இருப்பது போல் முகத்தை திருப்பிக் கொண்டாள். கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு.
"மது, பேசமாட்டியா?"
"நீங்க பேசினீங்களா மாமா? எத்தனை வருசம், நீங்க ஒரு தரமாவது பேசினீங்களா?" கண்களில் கண்ணீர் கோடாக இறங்க அவனைத் திரும்பிப் பார்த்தாள் மது.
அவள் கன்னங்களைப் பற்றியவன் தன் பெரு விரல்களால் அவள் கண்ணீரைத் துடைக்க போக, அவன் கையை தட்டி விட்டாள் கோபமாய் ...
மகிழன் சட்டையைப எட்டிப் பிடித்தவள் அப்படியே அவன் மார்பில் சாய்ந்தாள், அழுதாள்... அழுதாள் ஐந்து வருடம் தேக்கி வைத்த வலியை மொத்தமாக அழுது தீர்த்தாள்.
கார்த்திகாவிற்கு தன் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. சுற்றி இருந்த மக்கள் அனைவரும் அவர்களையே பார்க்க மெதுவாக மதுவை அவனிடமிருந்து பிரித்தாள், மது அவன் சட்டையை பிடித்திருந்த பிடியை மட்டும் விடவே இல்லை.
"மது ப்ளீஸ் எல்லோரும் பார்கிறங்க கண்ரோல் யுவர்' என்று செல்லி முடிக்கும் முன்பே, அவள் கையை உதறிவிட்டு மீண்டும் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
“ஏன் மாமா என்னை பார்க்க வரலா?"
"ஏன் மாமா என்னை பார்க்க வரலா? என்று திரும்ப திரும்ப கேட்டபடி இருந்தது அவள் உதடுகள். கண்ணீர் இன்னும் நிற்கவில்லை.
பேச்சுக்களற்ற மௌனம் அங்கு கண்ணீராய் உறைந்தது
"நீங்க தான் எனக்கு எல்லாமே", என்று சொல்லும் போதே அவள் கண்களில் நீர் வழிந்தது.
சிறிது நேரம் அவளை அழ விட்டவன் "மது அழாத.. எனக்கு கஷ்டமா இருக்கு", என்று சொல்லி கொண்டே அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.
“நீங்க என்னை வெறுத்துடீங்கள்ல?" என்று சொல்லி விலகி நின்று அவன் முகம் பார்த்தாள்.
"உன்னை எப்படி மது நான் வெறுப்பேன்.
"அப்ப எதுக்கு இத்தனை வருசமா என்கிட்ட பேசலை. எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா" குழந்தையாய் மாறி இருந்தது அவள் குரல்.
அவளை நெருங்கி அவள் கைகளை பற்றிக் கொண்டான் மகிழன்.
"உன்ன எப்படி டா வெறுப்பேன்..
"அப்புறம் ஏன் இத்தனை நாள் என்கிட்ட பேசலையாம்? என்னை பாக்க கூட வரலா", என்று சிணுங்களாக சொன்னாள்.
அவள் சிணுங்களில் தன்னை தொலைத்தவன் அவளை தன்னை நோக்கி இழுத்தான். அதற்காகவே காத்திருந்தவள் போல அவன் நெஞ்சில் மீண்டும் சாய்ந்து கொண்டாள். அவளை அணைத்தவன் கண்களும் கலங்கி இருந்தது.
கார்த்திகா இடையில் வந்து அண்ணா நாம போகலாம், எல்லோரும் நம்மலையே பார்கிறாங்க. மகிழனும் சூழ்நிலை உணர்ந்து அவளை விட்டு கொஞ்சம் விலகி நின்றான்.
"வயசு முப்பது ஆச்சு. இனி என் வாழ்க்கையிலே காதலெல்லாம் வருமான்னு நினைசேன், ஆனா சின்ன பசங்க மாதிரி இப்படி பொது இடத்தில் கட்டி பிடிக்க வைச்சிட்ட மது' என்று சொல்லி சிரித்தான்
அவன் பேசப் பேச தலை குனிந்து மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தாள் மது. அவள் புறமிருந்து எந்தப் பதிலும் வராமல் போகவே கார்த்திகா
திரும்பிப் பார்த்தாள். கண்களில் உருண்டு திரண்ட இரு மணித்துளிகள் அவள் உள்ளங் கைகளில் பட்டுச் சிதறியது.
"ஹேய் மது! என்னாச்சு? எதுக்கு இப்போ மறுபடியும் அழற?" என்றாள் கார்த்திகா
அவளை பார்த்தான் மகிழன்
“என்னாச்சு!. நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா?"
அவசரமாய் "இல்லை' எனத் தலை ஆட்டினாள்.
"அப்போ எதுக்கு அழுற?"
"தெரியால.. அழுகை அழுகையா வருது." அழுதுகொண்டே சிரித்தாள்
அவள் செயலில் கார்த்திகாவும், மகிழனும் சிரித்துக்கொண்டார்கள்.
"மது, ஏதோ கோபத்துல இருந்துட்டேன். விடுடா. இப்போ வா நம்ம வீட்டுக்கு போகலாம்."
அவள் முறைத்தாள்..
"இப்ப எதுக்கு இப்படியொரு லுக்கு?" என்றான்.
"நீங்க வருச கணக்கா கண்டுக்காம இருப்பிங்க திடீரென பாசம் வந்து கூப்பிட்டதும் நாங்க நாய்க்குட்டி மாதிரி ஓடி வரனுமா?"
“சாரிடா நான் செய்தது தப்புதான், பழச எல்லாம் பேச வேண்டாம் மது, இப்ப நான் என்ன பண்ணனும்' "ப்ளீஸ்டா. மது" மாமன் கெஞ்ச.. அவளால் கோபமாக இருப்பதாக நடிக்கக் கூட முடியவில்லை, மனசு உருகியது...
அவன் பேசும்போது அவள் கண்களில் ஒரு குறும்பு தெரிந்தது. ஏதோ ஒரு பிடிவாதம் அந்தக் கண்களில் தேங்கி நின்றது. வாய்விட்டுச் சிரித்தாள்.
"சரி இப்ப வா வீட்டுக்கு போகலாம். உன்னை பார்த்த அம்மா சந்தோஷ படுவாங்க
மது கார்த்திகாவை பார்த்தாள்.
"நீ போ மது, நான் ரூம் போறேன். நீ வரும்போது அண்ணா கூட வந்திரு என்றாள்.
****************
ஏன் மாமா என்னை இத்தனை வருசமா பார்க்க வரலா?" மது மீண்டும் தொடங்க.. மகிழன் எதுவும் பேசவில்லை.
காருக்குள் கொஞ்ச நேரம் எந்தச் சத்தமும் இல்லை. மது பிடிவாதமாய் அவனையே பார்த்திருக்க, இப்போது மகிழனின் முகம் சிந்தனையைக் காட்டியது.
“உனக்கு எப்படிப் புரிய வைக்குறதுன்னு எனக்குத் தெரியல்லை மது." அது முடிஞ்சு போன விஷயம்.
இப்போ நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலை."
"உங்க அப்பாவுக்கு நம்ம கல்யாணத்தில் விருப்பம் இல்ல மது'
"இப்ப எதுக்கு அப்பாவை இழுக்கிறீங்க?"
"அப்போ உன்னை இழுக்கட்டுமா?"
"ஆமா... இவர் என்னை இழுத்திட்டாலும்...!"
தலையை வெளிப்புறமாகத் திருப்பி வாய்க்குள் முணுமுணுத்தாள் மது. அவளின் முணுமுணுப்பு மகிழனுக்கு நன்றாகவே கேட்டது. அப்போதுதான் அவளை கவனித்தான். வெயில் பட்டு பளபளத்த மஞ்சள் சேர்ந்த வெண்ணிற மேனி முதன்முறையாக மகிழனை என்னவோ செய்தது.
குழந்தையாக தூக்கி சுமந்திருக்கிறான் வளர்ந்தவர்கள் ஆகியும் சேர்ந்து விளையாடி இருக்கிறார்கள். பருவக் குமரியாக அவள் நின்ற போதும் அன்பை தவிர வேறு எதுவும் அவளிடம் தோன்றியதில்லை. இத்தனை காலமும் அந்த அன்பு முகம் அவனுக்கு ஆறுதல் தந்தது. அதை எப்போது பார்ப்போம் என்று ஏங்கி தவித்திருக்கிறான் ஆனால் இன்று தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் பெண், அவனுள் பல இரசாயன மாற்றங்களை உண்டு பண்ணினாள். இதுவரை அவளை பார்த்திராத பார்வை இப்போது பார்த்தான் மகிழன். அதற்கு மேல் பயணித்த கண்களுக்கு கஷ்டப்பட்டு கடிவாளம் இட..
"சீக்கிரம் காரை எடுங்க மாமா, என்ன பண்ணுறீங்க?" என்று மகிழனை பார்த்தவள், அவன் பார்வையின் தன்மை புரிந்ததும் தலையை குனிந்து கொண்டாள்.
மது.." கிறக்கமாக வந்தது அவன் குரல், தலைகுனிந்து அமர்ந்திருந்தவள் மெதுவாக நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
மகிழன் முகத்தில் காதலா, ஆசையா, மகிழ்ச்சியா எதுவெனப் பிரித்தறிய முடியாத உணர்ச்சிகள் கொட்டிக் கிடந்தது. பெண்ணுக்கு இப்போது பேச்சு வரவில்லை. ஒரு புன்னகையோடு மீண்டும் குனிந்து கொண்டாள். தன் காதலனின் கண்கள் ஆசையோடு பார்க்கும் முதல் பார்வை, தன் பெண்மைக்கு நேர்ந்த முதல் தாக்குதல்.
"எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா? இப்பவே அள்ளிக்கிட்டு போயிடலாமான்னு தோணுது மது." அவன் குரலில் போதை ஏறி இருந்தது. அந்தக் குரலில் விக்கித்தவள்,
"மாமா எனக்கு உங்க கூட வீட்டுக்கு வரவே பயமா இருக்கு..'
"ஏய் என்னாச்சு மது'
"உங்க பார்வையே சரியில்லை'
"உண்மைதான் மது என்னால் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை "இப்பவே உன்னை கல்யாணம் பண்ணிக்கலாம்னு தோணுது."
"ஆஆ' என அவனை அதிர்ச்சியாக பார்த்தாள் மது.
***********
தனக்கு முன்னால் ஜோடியாக நின்றிருந்த மகனையும், பேத்தியையும் வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தார் பார்வதி. சற்று நேரத்திற்கெல்லாம் அவர் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக கொட்டியது.
"அம்மாச்சி! என்னாச்சு அம்மாச்சி? ஏன் அழுறீங்க? உங்களுக்கு பிடிக்கலைன்னா எதுவும் வேணாம் அம்மாச்சி. நீங்க அழாதீங்க, நீங்க அழுதா ." மது பதற ....
கேள்வியாக தன் அம்மாவைப் பார்த்தான் மகிழன்,
அதற்கு மேல் தாயால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. "உங்கமேல எனக்கு எந்தக் கோபமும் இல்லைடா மது. எம்மேலதான்... எம்மேலதான் எனக்கு அத்தனைக் கோபமும்." சொன்னவர் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர்
நான் தான்டா தப்பு பண்ணிட்டேன் என்று அவர் அழத்தொடங்க.. திகைத்து நின்றனர் இருவரும்.
"அம்மாச்சி! என்ன இது?" மது எவ்வளவு தடுத்தும் அந்த தாயின் கண்ணீரை அவளால் கட்டுப்படுத்த இயலவில்லை. சட்டென்று மகிழன் தன் அம்மாவின் கரத்தைப் பிடித்துக் கொள்ள மகனின் மேல் சாய்ந்து அழுதார் பார்வதி.
உங்க ரெண்டு பேரையும் நான் இத்தனை வருசமா பிரித்துவிட்டேனே...
மகிழன் நெகிழ்ந்து போனான். தவறே செய்யாமல் தவறு செய்ததாய் குற்ற உணர்வில் தவிக்கும் தாயை என்ன சொல்லி தேற்றுவது, அவன் கை தானாக அம்மாவின் தலையை வருடிக் கொடுத்தது.
"அப்படி எல்லாம் எதுவும் இல்லம்மா,
"எம் புள்ளை உன்ன பிரிந்து எவ்வளவு தூரம் துன்ப பட்டன் தெரியுமா மது..
“அம்மாச்சி.. " தவித்துப் போனாள் மது
மகிழனுக்கு மதுவ பேசலாமா சித்தின்னு முதன் முதலா உன் அம்மா எங்கிட்ட கேட்டபோது, உங்க ரெண்டு பேருக்குள்ள இருந்த அன்பு எனக்கு தெரியாதுடா மது, மகிழன் அப்பத்தான் வேலைக்கு போக தொடங்கி இருந்தான், பெரிய அளவில் வருமானம் இல்ல, எங்களுக்கு சொந்த வீடு இல்லை. ஊர்ல நில, புலன்கள் இல்ல. . ஆனா தாமரை அப்படிக் கேட்டபோது எனக்கு கண்ணு கலங்கி போச்சு. அவ பாசக்கார அக்கா.
ஒத்த பிள்ளையா நின்னு தம்பி தனிச்சு போயிர கூடாதென்று தான் அவ கேட்கிறன்னு எனக்கு புரிஞ்சது, அவளுக்கு தம்பி பாசம் கண்ணை மறைக்குதுன்னு நெனச்சேன். தன்னோட செல்ல பொண்ண இப்படி ஒரு இடத்தில் கொடுக்க உன் அப்பாவுக்கு மனசு வருமா சொல்லு? அதனால தான் நான் உன் அம்மாவிடம் இது சரிவராது வேண்டாம் என்று சொன்னேன்.
அம்மாச்சி, இங்கப்பாருங்க. ஏதோ நடந்து போச்சு. மறந்திடுங்க. அதான் நான் வந்துட்டேன் இல்ல, நம்ம வீட்டுல இனி சந்தோஷம் மட்டும் தான்.
பார்வதியின் கழுத்தை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தம் வைத்தாள் பேத்தி
அடி குட்டிக் கழுதை எப்படி பேசுது பார்." கல்யாணம் ஆகி இங்கேயே வந்தவிட்டது மாதிரி, கண்களில் கண்ணீர் வழிய வாய் விட்டுச் சிரித்தார் பார்வதி.
“என் ஆசை நிறைவேறிடிச்சு மதுக்குட்டி, இனி எனக்கு என்ன ஆனாலும் கவலை இல்லை, அவனை பார்த்துக்க நீ இருக்க..
அய்யோ... என் செல்ல அம்மாச்சி இப்படி எல்லாம் பேசக்கூடாது என்று கழுத்தை கட்டிக்கொண்டு தொங்கினாள் பேத்தி.
"நீங்க தான் அம்மாச்சி அம்மாகிட்ட பேசணும், இந்த மாமாக்கு என்மேல அக்கரையே இல்லை'
இது விளையாட்டு இல்லைடா மது, இத்தனை வருஷமா என் மனசுல இப்படி ஒரு ஆசை இருந்தும் நான் ஏன் அதை வெளியே சொல்லல்லை தெரியுமா?
"இப்போ ஏன் இப்படி பேசுறீங்க?"
"காரணமாத்தான், இந்தக்
கல்யாணத்துக்கு உங்க அப்பா சம்மதிப்பார டா."
'ஓ... அதைச் சொல்றீங்களா? அதை நான் பாத்துக்கிறேன்." அம்மாச்சி என்றாள் மது
"என்னடா, இவ்வளவு ஈசியா சொல்லிட்டே!"
"அதான் நான் சொல்லுறேன் இல்லை அம்மாச்சி. அப்பாவை நான் சம்மதிக்க வைக்கிறேன். நான் தான் அப்பவோட செல்ல பொண்ணாச்சே நான் சொன்ன அங்க நோ கிடையாது.
வற்புறுத்தி வர்ற உறவு மகிழ்ச்சி தராது மது, எக்காரணத்தைக் கொண்டும் உன் அப்பாவோட மனசு வருத்தப்படக் கூடாது. உங்க கல்யாணம் எல்லோருக்கும் மகிழ்ச்சியா இருக்கணும்.
இந்த பதிலில் திருப்தியடையாத மது கழுத்தை மேலும் கட்டிக் கொண்டு " அம்மாச்சி நான் கேட்டது இப்பவே நடக்கணும், அதை மட்டும் பண்ணுங்க. கொஞ்சியவளின் கைகளைப் பிடித்து முன்னே இழுத்தார் பார்வதி.
அவளது முகத்தை வாஞ்சையாகப் பார்த்தவர் முன்னே விழுந்த அந்த கற்றை முடியை கோதிவிட்டு " இந்த வீட்டுக்கு நீதாண்டா எப்போதும் மகாராணி. " என்று நெற்றியில் முத்தமிட்டுவிட்டு வாழ்த்த மதுவின் முகத்தில்
ஆனந்தமாக தன் அம்மாச்சி கன்னத்தில் முத்தத் தடத்தைப் பதித்துவிட்டு வெளியே வந்தாள்.
அன்று அந்த வீடு ஒரு சொர்க்கத்தை பார்த்தது
**************
படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள் மது. மனதில் மகிழ்ச்சி வெள்ளம்.. கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இன்றைய விடியல் தனக்கு இத்தனை மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்குமென்று. மாமா மேல் அத்தனை பாசம் இருந்தது. மாமா தான் அவள் ஹீரோ. கிடைக்காதா என ஏங்கிய காதல் இன்று கிடைத்துவிட்டது, அவனின் சின்ன சின்ன தீண்டல்களை நினைத்துப் பார்க்க அவளுக்கு உடல் சிலிர்த்தது தவையணைக்குள் முகம் புதைத்துக்கொண்டாள் மது. இதுவரை உணர்ந்திராத உணர்வு அவளை ஏதோ செய்தது. கார்த்திகா வேறு திடீரென ஊருக்கு சென்றுவிட்டாள், தனிமை வேறு... மாமனின் காதலும், அணைப்பும் கிடைத்த பிறகு வந்திருக்கும் தனிமை.
மணி பனிரெண்டை நெருங்கியும் தூக்கம் வரவில்லை, புரண்டு புரண்டு படுத்தாள், போன் சிணுங்கவே எடுத்துப் பார்த்தாள். மாமா என்றது.
"சொல்லுங்க மம்மு."
"என்னடா பண்ணுற?"
"தூங்குறேன் ."
"ஐயோ மது! உனக்கு தூக்கம் வருதா?"
"ம்... சும்மா கண்ணைக் கட்டுது. நீங்க தூங்கலையா?" சிரிப்பை அடக்கிக்கொண்டு பேசினாள் மது.
"ம்ஹூம், வரலைடா."
"ஏன் மாமா?" வேண்டுமென்றே சீண்டினாள் மது.
"தெரியலை மது, ஒரு குழந்தை முகம் அடிக்கடி வந்து தொல்லை பண்ணும். ஆனா இன்னைக்கு..."
“இன்னைக்கு என்னாச்சு மம்மு?" அவள் குரலும் குழைந்து போனது.
“தெரியலை மது, என்னென்னவோ பண்ணுது..என் கண்ணுக்குள்ள வந்து நின்னுகிட்டு ஒரு பொண்ணு ரொம்பத் தொல்லை பண்ணுறா." அடிக்குரலில் அவன் சிரித்த சிரிப்பு, அவள் உயிரின் ஆழத்தை தீண்டியது. தன்னை மறைத்துக் கொண்டவள்,
"யாரு மாமா அந்தப் பொண்ணு?'
"மது, இன்னைக்கு நான் எவ்வளவு மகிழ்ச்சியா இருந்தேன் தெரியுமா? இத்தனை நாளும் உன்னோட பேசாத ஏக்கமெல்லாம் தீர்ந்து போய், ஏதோ சாதிச்ச மிதப்புல இருந்தேன். தூங்கினா தூக்கமே வரலை. இப்பவே உன்னைப் பாக்கணும் போல இருந்தது. அதான் கால் பண்ணினேன்”
நான் இப்ப மொட்டை மாடியில் தான் படுத்திருக்கேன்'
"ஐயோ மாமா பனி பெய்யுது' முதல்ல உள்ளே போய் படுங்க..
"இல்ல மது இந்த இடம் இன்னைக்கு எவ்வளவு அருமையா இருக்கு தெரியுமா?. மல்லிகை பந்தலில் இருந்து வர்ற வாசமும், நீ இப்போ பக்கத்தில் இருந்தா எப்படி இருக்கும் தெரியுமா?"
"எப்படி இருக்குமாம்" வேண்டுமென்று வம்பு வளர்த்தாள்.
"ரொமாண்டிக்கா இருக்கும்."
“இத்தனை வயசுக்கு மேலே எனக்கு லவ்வெல்லாம் வராதுன்னு ஒருத்தர் எங்கிட்ட சொன்னாரே! அவரை நீங்க பாத்தீங்களா மாமா?" ஆழ்ந்த குரலில் சிரித்தவன்,
"அவனைத் தான் நானும் தேடுறேன் மது, ஆனா காணல்லையே"
"ஓ... ரொம்ப வருத்தப்படற மாதிரி தெரியுது."
"இல்லையா பின்னே, சும்மா இருந்தவனை சீண்டி வி. என் நிலமையை பாத்தியா. எல்லோரும் நிம்மதியா தூங்குற . நான் இந்தப் புல்லு மேல வானத்தை பாத்து படுத்துக்கிட்டு அம்மணி இப்போ இங்கே இருந்தா நல்லா இருக்குமேன்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்." அவள் மெலிதாக சிரிக்க,
“ஏய் பட்டு, இன்னைக்கு நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன் தெரியுமா?"
"ஏனாம்?"
"ரொம்ப நாள் கழிச்சு அம்மணியை பாத்தது, என்னமோ அப்படியே எனர்ஜி ஏறின மாதிரி இருக்கு?"
"ம்..."
"அதுக்கப்புறம்..." அவன் குறும்பாக இழுக்க,
"மாமா, நீங்க பண்ணுற கூத்தையெல்லாம் சொன்னா கார்த்தி நம்ப மாட்டேங்குறா." என்று சிரித்தாள்
"ஏய்! என்னத்தை அவங்ககிட்ட சொல்லித் தொலைச்ச?" என்றான்.
"நீங்க பார்க்கத்தான் முரடு ஆனா ரொம்பவே ரொமாண்டிக்னு சொன்னேன் மாமா." குழந்தையாய் சிரித்தாள் மது.
"ஐயோ மது! இதெல்லாம் போய் அவங்ககிட்ட பேசுவியா? மானத்தை வாங்காத மது,
"ஏன் மாமா' அவ என் பிரண்ட் மாமா, என்னோட இன்னொரு உயிர்..
"அதுக்காக எல்லாம் சொல்லுவியா..
"ம்ம்' என்றாள் உற்சாகமாக..
மகிழன் தலையில் அடித்துக் கொண்டான்.
"மஹா சொன்னது சரியாதான் இருக்கு'
"என்ன மாமா'
"நீ இன்னும் ஸ்கூல் பொண்ணு மாதிரி தான் நடந்துகிறீயாம்! ரெண்டு டிகிரி முடிக்க போற பொண்ணு மாதிரி தெரியலையாம்!?
"உண்மை தான் மாமா' நான் இன்னும் ஸ்கூல் பொண்ணு தான்!. என் மாமா அங்க தான் என்னை விட்டுட்டு போனார். அவர் என்னை தேடி வருவார்னு நான் அங்கேயே நிக்கிறேன். அவள் குரல் உடைந்து வந்தது ..
"ஏய் மது' அழுறியா?..
"ம்ம்'
"என்னாச்சு டா?
"எனக்கு இப்பவே உங்களை பார்க்கணும் போல இருக்கு'
**************
ஹாய் மது, வாட் அ சர்ப்ரைஸ், யார் கூட டி வந்த...
"மாமா கூட' என்றவள் முகம் செக்க சிவந்த வானமாகியிருந்தது.
"என்னது?” என்றவளின் குரலில் அவ்வளவு ஆச்சரியம்!
"அதான் உங்க சித்தப்பா...” என்றவளின் குரல் குழையோ குழையென குழைந்திருக்க,
"ஹேய் மது... என்னடி சொல்ற." என்றவள், திரும்பி தன் சித்தப்பனை பார்க்க, அவன் அவளை பார்க்காமல் வேறு புறம் பார்த்தான்.
“அடப்பாவிகளா... நான் இல்லாத நாலு நாள்ல எத்தனை வேலை பார்த்து இருக்க?" வியப்பில் வாயை பிளந்தபடி..
"கிழவி இங்கே என்ன நடக்குதுன்னு உனக்கும் தெரியுமா? போன் பண்ணியாவது ஒரு வார்த்தை சொல்லி இருக்க கூடாதா? எனக்கு அதிர்ச்சியில் நெஞ்சு வலியே வந்துருச்சு...
ஏய் வாயாடி கொஞ்சினது போதும்... மதுவை சாப்பிட உட்கார வை..." என்று பார்வதி அழைக்க,
"போம்மா போ... உன் மாமியார் கூப்பிடறாங்க..." என்று சிரிப்போடு மதுவிடம் கிசுகிசுத்தாள் மஹா!
"ஏய் ஓட்டாதடி ப்ளீஸ்..." மது கெஞ்ச, மஹா நிமிர்ந்து நின்று கெத்தாக,
"அது நம்ம மூடை பொறுத்தது." என்று சிறிய குரலில் அவளுக்கு மட்டுமாக கேட்குமாறு கூற, அவளது முகம் இன்னமும் சிவந்து செங்கொழுந்தாகியது.
"ச்சீ போடி...” அவளது தோளில் அடித்துவிட்டு உணவு மேசை நோக்கிப் போனாள், பார்வதி கொண்டு வந்த பாத்திரங்களை அவசரமாக வாங்கி பரிமாற ஆரம்பித்தாள்.
"ஐயோ மது இவ்வளவு ஐஸ் வைக்காதடி.. எங்க அப்பத்தாவுக்கு மறுபடியும் குளிர் ஜுரம் வந்துர போகுது" என்று மஹா அவளது கிண்டல்களை தொடர, மது முகம் வெட்கத்தில் சிவந்தது.
,"ப்ளீஸ் மது... ரொம்ப ஓட்டாதடி அம்மாச்சி வேற இருக்காங்க.." என்று கெஞ்சினாள்.
"அடிப்போடி..... உங்க லவ்வுக்காக எனக்கும் கிழவிக்குமே டீல் ஓடிக்கிட்டு இருக்கு" என்று குனிந்தபடியே கிசுகிசுத்தான்!
"ம்ம்ம்... எனக்கு..." என்று யோசித்தவள்,
இருவரையும் மாற்றி மாற்றி பார்த்துவிட்டு, "ரொம்பல்லாம் பண்ணாதடி என்னால முடியல." என்று கண்ணடிக்க,
"மஹா... பேசாம சாப்பிடு..." என்றவர், மது புறம் திரும்பி, "என்னடா நீயும் உட்கார்ந்து சாப்பிடாம? இங்க கொடு... நான் பரிமாறறேன்..." என்று கையிலிருந்த கரண்டியை வாங்கவும்,
“குயில் தோட்டம் மகாஜனங்களே இங்க ஒருத்தி மாமியாரை கவுத்துட்டா..." என்று சத்தமாக கத்தினாள் மஹா..
அவளையும் மீறி, "ஓஓஹோஓஓ.." என்று மதுவை பார்வையிட்டபடியே கலாய்க்க, அத்தனையையும் பார்வையிட்டபடியே மனதுக்குள் சிரித்துக்கொண்டார் பார்வதி.
அம்மாச்சி நாளைக்கு நான் ஊருக்கு போறேன்.
***************
ஒருவாரம் கல்லூரி விடுமுறை. விளத்திக்குளம் வந்திருந்தாள் மது.
அவள் அப்பத்தா தான் வந்து கதவைத் திறந்தார். பாசமுடன் தலைவருடியவாறே "நல்லாயிருக்கியாடா? பட்டும்மா என இன்முகத்துடன் வரவேற்றவர். "இவ்வளவு மெலிஞ்சிட்ட ?" என பேத்தியை அணைத்துக் கொண்டார்.
பள்ளிக்காலம் முடியும்வரை எல்லாமே அவளுக்கு அப்பத்தா தான்.
"என்னயிருந்தாலும் நம்ம வீட்டு சாப்பாடு பக்குவத்துக்கு வராதுல்ல அப்பத்தா” என்றாள் மென்சிரிப்புடன்.
வீட்டில் இருக்கும் போதும் தாமரை மகளுக்கு பிடித்ததாக பார்த்துப் பார்த்து தான் சமைத்து கொடுப்பார். நன்றாக சாப்பிட்டாலும் அவளுக்கு எடை மட்டும் கூடாது. எப்போதும் ஒல்லியான தேகம் தான். அதில் தாய்க்கு கொஞ்சம் வருத்தம் உண்டு. இருந்தாலும் அதை ஈடு செய்துவிடும் அவள் அழகு முகம். இடைவரை நீண்டிருந்த கேசமும், அழகான புருவங்களும், அந்தக் கண்களும் போதும், அவள் அழகியென்று சொல்ல.
தன் அப்பத்தாவுடன் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்த மகளை பெருமை பொங்கப் பார்த்திருந்தார் தாமரை. பிறந்தபோது குட்டிக் குட்டி கை கால்களுடன் ரோஜாப்பூக்குவியல் போல தன் கைகளில் ஏந்திய மகள் இன்று எவ்வளவு அழகாக வளர்ந்து விட்டாள். வயதும் கூடிக்கொண்டே போகிறது. மகள் மனதில் என்ன உள்ளது என்று தாய்க்கும் தெரியும், அவள் திருமணத்தை பற்றிய கவலையே அவரை வாட்டி எடுத்தது.
அன்று முழுவதும் தாயுடனே ஒட்டிக்கொண்டு திரிந்தாள் மது, தாயிடம் பேச மூன்று மாதக் கதை இருந்தது. மகளுக்கு பிடித்ததை எல்லாம் தாமரை ஆசையோடு சமைக்க, வழக்கம் போல் கல்லூரிக் கதைகளை பேசியவாறு தாய்க்கு உதவி கொண்டுமிருந்தாள் மது.
மதிய உணவு முடிந்ததும் ஒழுங்குபடுத்துகிறேன் என்று வீட்டை தலைகீழாக்கியவள், இரவெல்லாம் உடம்பு வலியென்று பெற்றோர் அறையில் வந்து படுத்துக் கொண்டாள். மகளுக்கு முடியவில்லை என்றதும் சந்திரனும் தாமரையும் கை, கால்கள் பிடித்து விட அங்கேயே சுகமாக உறங்கிப் போனாள். களைப்பில் தாமரையும் உறங்கிவிட, சந்திரன் தான் பாவம். மடியில் தலை வைத்து உறங்கும் மகளின் உறக்கம் கலைந்துவிடக் கூடாது என்று நள்ளிரவு வரை விரைத்த கால்களுடன் அப்படியே அமர்ந்திருந்தார்.
எல்லா வசதிகளுடனும் கூடிய பெரிய வீடுதான். மொத்தம் நான்கு படுக்கை அறைகள் கீழே இரண்டு, மேலே இரண்டு, கீழேயிருந்த முதன்மை அறையை சந்திரனும், தாமரையும் உபயோகப்படுத்த, மற்றொன்று மது அப்பத்தாவிற்கு. மேலே இரண்டு அறைகளும் மதுவும், இளமாறனும்.
மாலை நேரம் பாட புத்தகத்தோடு ஹாலில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள் மது. வேலை முடிந்து சந்திரன் வர, புத்தகத்தை மூடிவைத்து விட்டு அவருக்கு தேநீர் போட்டு எடுத்து வந்து கொடுத்தாள். வாங்கிக் கொண்டவர் மகளையும் அருகே அமர்த்திக் கொண்டார்.
"என்னப்பா?" என்று தந்தை மீது சாய்ந்து கொண்டாள்.
"எக்ஸாம்ஸ் முடிய இன்னும் எவ்வளவு நாளாகும்டா?"
"இன்னும் ஐந்து மாசம் தான்ப்பா" என எண்ணிச்சொல்ல,
சிறிது யோசித்தவர் பின்
“குட்டிம்மா, நம்ம குருமூர்த்தி மாமா போனவாரம் ஒரு பையன் போட்டோ காட்டினார், எனக்கும் மனசுக்கு நிறைவா இருந்தது, பக்கத்து ஊருதான், அம்மா, அப்பா இங்க தான் இருக்காங்க. பையன் சென்னைல வேலை, நான் விசாரிச்ச வரைக்கும் நல்ல பையன், அப்பாவுக்கு பிடிச்சிருக்கு. உனக்கு சம்மதம்னா சொல்லு மேல பேசலாம் மகளை ஆழ்ந்து பார்த்தார் தந்தை.
இப்படியொரு நிலை வரும் என அவள் நினைத்தது தான், ஆனால் இவ்வளவு விரைவில் வருமென அவள் எண்ணவில்லை.
"அப்பா நான் படிப்பு முடிச்சிட்டு வேலைக்கு போகணும். இன்னும் ஒரு ரெண்டு வருசம் போகட்டும்பா' என்று தந்தையின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலையை குனிந்து கொண்டு சொன்னாள்.
"சரிடாம்மா.. உன்னோட சந்தோஷம் தான் அப்பாவுக்கு முக்கியம்' என்று அவள் தலையை தடவிக்கொடுத்தவர் எழுந்து அவர் அறைக்குள் சென்றுவிட்டார். மதுவுக்கு நெஞ்செல்லாம் படபடவென அடித்துக் கொண்டது.
மது வெளியே எங்கேயும் செல்லப் பிடிக்காமல் பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் பாட்டியின் அறைக்குள் விளையாடிக் கொண்டிருந்தாள். குழந்தைகளோடு குழந்தையாக மாறி தன்னை மறந்து அவள் விளையாடிக் கொண்டிருந்த நேரம்
“என்ன மேடம் எங்களை எல்லாம் பார்க்க வரவே கூடாதுன்னு முடிவெடுத்துட்டீங்களா?” என்று குரல் ஒலித்ததும் மது திரும்பி பார்க்க அங்கே கவிதா தன் இடுப்பில் கை வைத்து அவளை முறைத்துப் பார்த்தபடி நின்றாள். அவள் சுடிதாரை பிடித்தபடி மகள் கயல்விழி.
அந்த குட்டி தேவதையை பார்த்ததும் உலகமே மறந்துவிட்ட மதுவுக்கு தன் தமக்கையின் கேள்வியா ஞாபகத்தில் இருக்கும். கவிதாவுக்கு பதிலேதும் சொல்லாமல் மகளை வாரி அணைத்துக் கொண்டாள்.
புன்னகை முகமாக அவளின் அருகில் வந்து அவளது தோளில் தன் கரத்தை போட்டுக் கொண்ட கவிதா “என்னடி ஆச்சு உனக்கு? இரண்டு, மூணு மாசமா வீட்டுக்கே வரல?” என்று கேட்க.
உதட்டை சுழித்து ஒன்றுமில்லை என்று பாவனை செய்தவள் முகத்தில் அப்படி ஒரு குறும்பு, கயல்விழி கன்னத்தில் முத்தம் வைததவள் அவளை தூக்கி தட்டாமாலை சுற்றினாள்.
அவளையும் அறியாமல் அவளது கன்னங்களில் வெட்கப் பூப்பூக்க, அவளை ஆச்சரியமாகப் பார்த்தாள் கவிதா! கவிதாவுக்கு ஏதோ ஒன்று புரிந்தது.
"ஏய் மது' நீ மகி மாமா வீட்டுக்கு போனியா என்ன?
கவிதாவின் புறம் திரும்பி “இங்கே எதுவும் பேச வேண்டாம் மாடிக்கு போகலாம்" என்று அவளது கைப்பிடித்து அழைத்துக் கொண்டு தனது அறைக்கு ஓடினாள்.
*************
மெதுவாக இருள் பரவ ஆரம்பித்திருந்த மாலைப்பொழுது. அழகான காவேரிக்கரை. மங்கிய வெளிச்சத்தில் காவேரிப்பாலம் தேவலோகமாக காட்சியளித்தது. கரையோரத்தின் நீரின் சலசலப்பும், மெல்லிய தென்றலும் அந்த பகுதியை காதலர் பூங்காவாக மாற்றி இருந்தது.
வளர்பிறையின் இருள் போர்த்திய வெளிச்சம். மக்களின் சத்தமில்லாத சிரிப்புச் சத்தம், வாகன இரைச்சலும் கூட சங்கீதமாக கேட்டது மதுவின் காதல் பொங்கும் மனதுக்கு. லேசான குளிர், கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு அந்த ஈரக்காற்றை ஆழ்ந்து சுவாசித்தாள்.
மது ஊரிலிருந்து திரும்பி வந்து ஒருவாரம் ஆகியிருந்தது, ஆனால் இன்றுதான் மகிழனை நேரில் பார்க்கிறாள். அவன் வேலை வேலையென்று ஓடிக்கொண்டே இருக்கிறான். சண்டை போட வேண்டும் என்று நினைத்திருந்தாள், எல்லாம் அவனை காணும் வரைதான், அவனை பார்த்தவுடன் அப்படியே உருகிப் போகிறாள்.
சுற்றிலும் காதல் இணையர்களின் எல்லை தாண்டா சின்ன சின்ன குறும்புகள். அந்தப் பாலம் முழுவதும் காதல் நிறைந்து வழிந்தது. அவன் கரங்களும் தன்னை அணைக்காத என்று ஏங்கிய அவள் காதல் உள்ளம் "மங்குனி மாமாவுக்கு லவ் பண்ண கூட தெரியல' என்று மனதுக்குள் திட்டி தீர்த்தாது.
அவள் கண்களோ தான் நெகிழ்ந்திருக்கும் இத்தருணத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளாமல், பொது இடத்தில் தன் கண்ணியம் காத்து நிற்கும் மாமனை பெருமை பொங்க ஆழ்ந்து பார்த்தது.
ஒரு பெண் என்மீது இருக்கும் நம்பிக்கையில் இந்த இரவில் என்னோடு இருக்கிறாள். என் மரியாதைக்குரிய உறவு, மரியாதைக்குரியது காதல், அவளை எந்த இடத்திலும் தவறாக சித்தரிக்கக் கூடாது என்று நினைக்கும் ஆண்மையின் அழகோடு நின்றான் மகிழன்.
அவன் செயல்கள் அவளை இன்னும் இன்னும் அவன்மீது காதல் கொள்ள வைத்தது. அவனையே கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
"என்ன மது அப்படி பார்க்கிற'
"என்னை பைத்தியம் மாதிரி ஆக்கிட்ட மாமா' உன்மேல் அவ்வளவு கோபம் இருந்தது. ஆனா என்னால உன்கிட்ட சண்ட கூட போட முடியல...
"அப்படி எங்கிட்ட என்ன இருக்கு மது, நீ இப்படி மயங்குறதுக்கு!” அவன் ஆழமான குரலில் கேட்க, சிரித்தவள்...
"என்ன இல்லை மாமா உங்ககிட்ட?" அந்தக் கேள்வியில் லயித்தவன், அவள் அருகில் வந்து அவள் கையோடு தன் கையை கோர்த்து கொண்டான்.
"இந்தக் காதலை, உயிர் வரைக்கும் தீண்டுகிற இந்த அன்பை, நான் என் கடைசி மூச்சு வரை அனுபவிக்கனும் மது."
அன்றைக்கு முழுவதும் அவனோடு இருந்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது பெண்ணுக்கு. சிறுவயதில் ஒன்றாக இருந்தார்கள்தான். ஆனால் காதல் என்ற உணர்வு வந்தபிறகு இதுதான் முதல்முறை. அவன் கையோடு கை கோர்த்து தோள் உரச நடப்பது பரம சுகமாக இருந்தது அவளுக்கு.
இந்த நொடி இப்படியே நின்று விடக்கூடாதா, உறைந்து போகக் கூடாதா என்று மனது ஆசைப்பட்டது.
போகலாம் மது." அவன் போவதிலேயே குறியாக இருந்தான்.
"நீங்களும் நானும் சின்னப்பசங்களா என்ன? எதுக்குப் பயப்பிடுறீங்க?"
“இது பயமில்லை மது, உனக்கு அதெல்லாம் சொன்னா புரியாது." மனமே இல்லாமல் எழுந்தவன் அவளையும் எழுப்பி விட்டான்.
நகரப்போன பெண்ணின் கரத்தைப் பிடித்து இப்போது நிறுத்தினான் அவன். என்ன என்பது போல அவள் திரும்பினாள்.
“இன்னைக்கு உனக்கு கொஞ்சம் அழகு கூடுன மாதிரி மனசு ஏதோ." மது அவன் குரலில் தெரிந்த தவிப்பில் விக்கித்து நின்றாள்.
ஸ்தம்பித்து நின்ற பெண்ணின் அருகில் ஒரு புன்சிரிப்போடு வந்தவன் அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டவன் சட்டென்று கொள்ளப்போனான். பெண் அவனைத் தடுத்தாட்கொண்டது.
"போகலாம் மது." இப்போது அவன் அவசரப்பட்டான். உண்மையிலேயே தன் மனதிற்கினியவளைத் தனிமையில் சந்திக்க ஆர்வம் காட்டும் ஆண்களுக்கு அத்தனைத் தைரியம் இருப்பதில்லை.
அதே தனிமையைப் பார்த்து அச்சப்படுபவர்களும் அவர்கள்தான். அது அவர்களின் பொறுப்புணர்ச்சி! அந்த பெண் மேல் அவர்கள் வைத்திருக்கும் மரியாதையின் இன்னொரு வடிவம்!
“என்ன அவசரம்?" இப்போது தான் எட்டு மணி என்றாள் .
"மது... வேணாம், சொன்னா கேளும்மா... போயிடலாம், நான் அத்தனை நல்லவனெல்லாம் கிடையாது."
"ஏய்குட்டி புருஞ்சுக்க! என்னால இன்னும் இருக்க நானென்ன ?"
பேச்சற்ற மௌனம்தான் வழி நெடுகிலும் இருந்தது. ஆனாலும் அதை மது விரும்பினாள். அவன் அருகாமையை, அவனுக்கே அவனுக்கான அந்த வாசனையை அவள் வெகுவாக ரசித்தாள்.
உள்ளமும் உடலும் இப்போது அவன் ஒற்றை அணைப்பிற்காக ஏங்கியது. வெளியே சொல்ல முடியாத ஆசையோடு மீண்டும் வீடு வந்து சேர்ந்தார்கள்.
காரை ஹோட்டலின் முன்பாக நிறுத்தினாள் மயூரி. நேரம் இரவு பத்து மணி. ஹோட்டல் வளாகம் கொஞ்சம் அமைதியாகவே காணப்பட்டது.
“நாளைக்கு எத்தனை மணிக்கு ஃப்ளைட் அத்தான்."
"மார்னிங் சிக்ஸுக்கு ஏர்போர்ட்ல நிக்கணும்."
“ஓகே... தான்க் யூ அத்தான்." அவள் முகம் புன்னகையைக் காட்டினாலும் அதில் வலி தெரிந்தது.
"நான் சொன்னதுக்காக எங்கூட வந்ததுக்கு ரொம்ப தான்க்ஸ்." மீண்டும் ஒரு சிரிப்பு. ஏமாற்றம், வலி, நிராசை என ஏதேதோ உணர்ச்சிகள் அந்தச் சிரிப்பிற்குள்.
எதையோ பேச வாயெடுத்தவள் சட்டென்று நிறுத்தினாள். மகிழன் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான். உதடு வரை வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டு அவள் திரும்பிய போது மகிழன் அவள் கைப்பிடித்து நிறுத்தினான்.
********
காரில் மென்மையாக பாடல் ஒலிக்க, அமைதியாக காரை செலுத்திக் கொண்டிருந்தான் மகிழன். பக்கத்தில் மது. அவள் தங்கியிருக்கும் தில்லைநகர் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது கார்.
"மாமா." மறுபடியும் எப்ப?
“மது.. இதை ஒரு பத்துத் தரம் என்கிட்ட கேட்டுட்ட, நானும் பதில் சொல்லிட்டேன்,' என்றவன் சிரித்தான்.
"உங்களுக்கு என்னைப் பார்க்காமல் இருக்கிறதைப் பத்தி கவலையே இல்லையா மாமா? நான்தான் கிடந்து புலம்புறேன்." அவள் முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள,
"நீ இன்னும் சின்னப் பொண்ணு இல்லைடா!. சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் இப்படி அப்செட் ஆகக்கூடாது?"
"இது சின்ன விஷயமா? இன்னும் மூனு நாளைக்கு உங்களை நான் பார்க்க முடியாது' சொன்னவள் முகம் வாடிபோனது.
"என்ன மது? இன்னைக்கு முழுசா ஒருநாள் உன்கூடத் தானே இருந்தேன். அதுக்கப்புறமும் இப்படி இருந்தா எப்பிடிடா?" அவன் கேட்கவும், நகர்ந்து அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.
அவள் தங்கி இருக்கும் இடம் நெருங்க நெருங்க மதுவின் முகம் இன்னமும் வாடிப் போனது, காரை பூங்கா ஓரமாக நிறுத்தியவன் கேள்வியாக மதுவைப் பார்க்க, அவள் இன்னும் அதிகமாக அவன் கைகளை இறுக்கி பிடித்துக் கொண்டாள்
"இப்படி இருந்தா நான் எப்படி அம்மு திரும்பப் போறது? என்றவன் மார்பில் முகம் புதைத்தவள் லேசாக விம்மினாள்.
"மது, என்னடா இது? எதுக்கு இந்த அழுகை?" அவளை லேசாக அணைத்தவன், தலையை மெதுவாக தடவிக் கொடுத்தான்.
"எனக்கு உங்களை விட்டுட்டு போறது ரொம்பக் கஷ்டமா இருக்கு மாமா..
"ஐந்து வருடம் இந்த மாமனை நீ பார்க்கவே இல்லையே மது?"
இல்லையே! அஞ்சு வருசமா என் மாமா எனக்குள்ளேயே என் கூடவேதான் இருந்தாரு.. இப்பத்தான் அவர் என்னை விட்டுட்டு ஓடி ஓடி போயிடுறார். சொல்லமாக சிணுங்கினாள்.
"எப்படி மது உன் கூடவே இருக்க முடியும்?!
"அது அப்படித்தான்!' என் மாமா எப்போதும் என் கூடவே இருக்கணும். என்னால் உங்களை இனிமேல் பிரிந்திருக்க முடியும்னு தோணலை மாமா." அவள் சொல்லி முடிக்க, அவன் அணைப்பு இறுகியது.
இன்னும் காலம் தாழ்த்த அவனாலும் முடியாது, அவள் படிப்பு முடிய இன்னும் மூன்று மாதங்கள் வரை இருந்தது. அவள் இன்னும் சிறு பெண்ணாகவே இருக்கிறாள் என்பது தான் அவன் தயக்கம்.
"மது! நான் மாமாவிடம் பேசட்டுமா?" என்றவன் அவளையே பார்த்திருக்க, அவளும் இமைக்க மறந்து அவனையே பார்த்திருந்தாள்... அவள் கண்களில் வந்துபோன உணர்வுகளை மகிழனால் புரிந்து கொள்ள முடியவில்லை
"இப்போது தான் உனக்கு இருபத்தி மூன்று, திருமணம் செய்ய இன்னும் வயது இருக்கு.. என்னோட சுயநலமாக நம்ம திருமணம் நடந்துவிடக் கூடாது. உன்னோட முழு சம்மதம் எனக்கு வேணும் மது."
தான் எடுக்கப்போகும் இந்த முடிவு சரியா?, தவறா? எதைப்பற்றியும் மது யோசிக்கவில்லை. மாமானை தன்னால் பிரிந்திருக்க முடியாது என்பது மட்டுமே மனம் முழுவதும் வியாபித்து இருந்தது. சம்மதம் தெரிவித்து விட்டாள்.
"நல்ல யோசித்து உன் முடிவைச் சொல்லு மது' என்று மகிழன் மீண்டும் கேட்க
"இல்ல மாமா எனக்கு சம்மதம்' நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.
"அப்ப வர்ற ஞாயிறு நாம ரெண்டு பேரும் ஊருக்கு போறோம்'. என்று அவன் முடிக்க, அவள் கண்களில் மகிழ்ச்சியின் உயிர்த்துளி.
°°°°°°°°
வெட்கச் சிரிப்புடன் அறைக்குள் நுழைந்த மதுவைப் பார்த்த ஜானகி.
"என்னடி சிரிச்சுகிட்டே வார? ஒரே ரொமான்ஸ்சா?" என்றாள். வெட்கத்தில் தடுமாறியவள் முகம் சிவந்து போனது.
ஐயோ மதுக்குட்டி நீ தானா இது, வாங்கிய முத்தத்தை எல்லாம் கொஞ்சம் துடைச்சிட்டு வரக்கூடாதா செல்லம், வயசு புள்ளைங்க இருக்கிற வீடு என்றாள் நிகிலா.
"சீ போங்கடி', என்று வேகமாக இரவு உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்றவள்.. தூய்மை செய்து, உடை மாற்றி முகம் கொள்ளா புன்னகையுடன் அறைக்குள் நுழைந்த மதுவைப் பார்த்த தோழிகள் மூவருக்கும் அவளின் மகிழ்ச்சியின் காரணம் புரிந்தது..
“என்ன மேடம் முகம் இவ்வளவு பிரகாசமா சார்ச் ஏறி இருக்கு.." எத்தனை முத்தம்?' என்று நிகிலா கிண்டலாகக் கேட்க
"ஐயோ ப்ளீஸ் டி.." என்றவள் வெட்கத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
"மது இன்னைக்கு என்ன ஸ்பெஷல்', என்றாள் ஜானகி.
"நானும் மாமாவும் வர்ற ஞாயிறு ஊருக்கு போறோம்" சொல்லும் போதே மதுவின் முகத்தில் அவ்வளவு உற்சாகம்.
"பார்டா.. என்ன எல்லாம் ஓகே ஆகிடுச்சா?'
“ம்” என்றவள் தோழிகளை நிமிர்ந்து பார்க்கவில்லை.. வெட்கத்தில் மீண்டும் சிவந்தது முகம்.
“ஜானு நீ கூட இவ்வளவு வெட்கப்படலையேடி. கத்துக்கோ என் செல்லத்துகிட்ட இருந்து.."
"சும்மா இருடி.." நிகிதாவிடம் கூறிய கார்த்திகா “அம்மாட்ட சொல்லிட்டியா மது?" என கேட்க
"ஐயோ.. மறந்துட்டேன்.." என்றவள் வேகமாக கைபேசியை எடுத்தாள்..
"பாருடி.. மாமாவை பார்த்துட்டு வந்ததுக்கே அம்மா, அப்பா, ப்ரெண்ட்ஸ் எல்லாரையும் மறந்துட்டா.. மேரேஜ் அப்பறம் நம்மல யாருன்னு கேட்பா போலையே..” நிகிலா கூற
"போங்கடி.." என்று போனை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தவள் தாயுடன் பேசிக்கொண்டே மாடிப்படிகளில் ஏறினாள்.
Comments
Post a Comment