மது மகிழன் - 5
அந்த நான்கு கார்களும், இரண்டு பேருந்துகளும் திருச்சி நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. தாமரையின் சொந்தங்கள், சந்திரனின் சொந்தங்கள் என உறவினர்கள் அன்பில் நிரம்பியிருந்தது பேருந்து. காலையிலேயே புறப்பட்டு விட்டார்கள். இரவு மண்டபத்தில் நிச்சயதார்த்தம், மறுநாள் காலையில் முகூர்த்தம் என நேரங் குறிக்கப்பட்டிருந்தது.
மது அமைதியாக அவர்களின் காரில் பின் சீட்டில் அமர்ந்தபடி வெளிப்புறத்தை ரசித்துக் கொண்டிருந்தாள். அருகில் தாமரை, முன் சீட்டில் இளமாறன்.
திருச்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது' எனும் பதாகை தொங்க. எண்ணங்கள் பின்னோக்கிப் போனது. முதன் முதலாக மாமானைத் தேடி திருச்சி வந்த நாளை அசை போட்டது. உடம்பு லேசாக புல்லரிக்க கண்கள் கலங்கியது மதுவிற்கு.
காதலை மனதில் சுமந்து கொண்டு, அது நிறைவேறுமா? நிறைவேறாதா? எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் மாமன் இருக்கும் ஊரில் இருந்தால் போதுமென்று தான் திருச்சி வந்தாள். காதல் மேல் வைத்த நம்பிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு அம்மாவை எதிர்த்து, அப்பாவிடம் மறைத்து என எத்தனை வேதனைகள். துன்பங்கள். இன்று அந்த காதல் கைகூடும் நேரம். ஆனாலு உள்ளுக்குள் மகிழ்ச்சி இல்லை. ஆழமான ஒரு மூச்சை இழுத்துவிட்டாள்.
திருச்சிக்குள் நுழையும்போதே அவன் வாசத்தை அவள் நாசி உணர்ந்து கொண்டது. அவள் உதடுகளில் புன்னகை நெளிந்தது. அந்த உணர்வு தந்த சுகத்தில் கண் மூடிக் கொண்டாள். சட்டென்று வர்சினி முகம் கண்ணில் வந்து போனது.
"உங்க கல்யாணம் நடக்காது, நடக்க விட மாட்டேன் என்று அன்று அவள் ஆங்காரமாக சொன்னது காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
■■ ■■■ ■■
திருச்சியில் தான் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே ஒரு பிரமாண்டமாண மண்டபத்தை தேர்ந்தெடுத்திருந்தான் மகிழன், மண்டபத்திலேயே உயர்தரமான இருபது தங்கும் அறைகள் இருந்தது. அருகில் இருந்த தங்கும் விடுதியிலும் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தான். யாருக்கும் எந்தவித சங்கடமும், குறைகளும் நேராமல் அன்பு செய்ய நண்பர்களிடம் தனித்தனியாக பொறுப்புக்களை பணித்திருந்தான்.
மண்டப வாசலில் "மகிழன் இணை மதுநிலா' தங்க நிற எழுத்துக்கள் அரக்கு நிற வெல்வெட் துணியில் மின்னிக் கொண்டிருந்தது. மேளமும், நாதஸ்வரமும், மங்கள இசையாய் அந்தப் பகுதியை இனிமையாக்க.., பொருள் தேடும் ஓட்டத்தில் ஊர் ஊராகப் பிரிந்து சென்ற உறவுகள் எல்லாம் ஒரே இடத்தில் கூடும், மகிழ்ச்சியாய் நிரம்பி வழிந்தது மண்டபம்.
அழகாக பட்டு வேட்டி, சட்டையில் முகம் முழுக்க சிரிப்புடன், மனமேடையில் அமர்ந்திருந்தான் மகிழன். காதல் கை கூடிய மகிழ்ச்சியும். உறவுகள் கூடிநின்று வாழ்த்தும் இரட்டிப்பு இன்பமும் அவன் முகத்தில் தெரிந்தது.
மணமகள் அறையையே பார்த்துக் கொண்டு இருந்த அவன் விழிகள். அவளை எப்போது பார்ப்போம் என்று ஏங்கியது...
"எப்பு! கழுத்து சுளுக்கிடப் போகுது, கொஞ்சம் நேர உட்காருங்க, உங்க பொண்டாட்டிய யாரும் தூக்கிட்டுப் போயிட மாட்டாங்க." காதில் முணுமுணுத்தார் கோகிலா.. அவரைப் பார்த்து அசடு வழிய சிரித்தான் மகிழன்.
"உங்க லவ்வு ஊருக்கே தெரிய வேண்டாம் கொழுந்தனாரே, கொஞ்சம் அடக்கி வாசிங்க, நீங்க வடிக்கிற ஜொள்ளுல மண்டபமே நனைஞ்சிடும் போல இருக்கே'...
“அத்தனை அப்பட்டமாவாத் தெரியுது ?"
"எழுதி ஒட்டாததுதான் பாக்கி."
"கல்யாண புடவைல மதுவை பாத்திங்களா மதினி ?"
"எங்க, இந்த கவிதா யாரையும் உள்ள விட்டாதானே, கதவு பூட்டியேதான் இருக்கு. அலங்காரம் முடிய இன்னும் கொஞ்சம் நேரமாகுமாம்"
"இன்னுமா?'என்று மகிழன் இழுக்க,
"முகூர்த்தத்திற்கு இன்னும் நேரம் இருக்கு... ரெம்ப பறக்காதிங்க' என்று கையில் பூந்தட்டுடன் படியிரங்கி கீழே போனார் கோகிலா.
அவர்கள் பேசிக்கொண்டு இருந்ததை காதில் வாங்கிய சந்திரன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே மனைவியை தேடினார்.
தாமரை... சீக்கிரம் போய் மது ரெடியான்னு பாரு... அப்பறம் எல்லாத்துக்கும் லேட்டாகிடும்...” என்று அவசரப்படுத்த, தாமரை வேகமாக மணப்பெண்ணின் அறையை நோக்கி விரைந்தார்.
மணமகள் அறை வாசலில் பெண்கள் கூட்டம் நின்றிருக்க, கதவைத் தட்டி கவிதாவை அழைத்தார்.
"சித்தி இன்னும் மேக்கப் முடியல..
"சீக்கிரம் எல்லாம் ரெடி
பண்ணுங்கம்மா... முகூர்த்த நேரம் வந்துடப் போகுது... கொஞ்சமும் லேட் ஆகாம எல்லாம் சரியான நேரத்துல நடக்கணும்.
"இப்ப முடிஞ்சிரும் சித்தி'
"நீ கொஞ்சம் கதவைத் திற'
பட்டுச்சேலை கட்டிக் கொண்டு, தன்னை கண்ணாடியில் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்த மது, திரும்பி கவியதாவைப் பார்க்க,
"நல்லாத் தாண்டி இருக்க... இன்னும் எத்தனை நேரம் கண்ணாடியையே பார்ப்ப.. நேரம் ஆகுது பார்.. உட்காரு மேக்கப் போடணும் என்று கூறிக்கொண்டே கதவைத் திறந்து தாமரையை உள்ளே அனுமதித்தாள்.
மெல்லிய கொடி இடையில் ஒட்டியாணம் மின்ன சிறு பெண்ணாய் நினைத்த மகள் இன்று மணப்பெண்ணாய் பட்டுப்புடவையில் தேவதையாக ஜொலித்துக் கொண்டிருந்தாள், மதுவைப் பார்த்த தாமரையின் கண்கள் மகிழ்ச்சியில் நிறைந்தது, இது அவள் அழகினால் வந்த மகிழ்ச்சியும் பூரிப்பும் அல்ல. ஒவ்வொரு பெண்ணைப் பெற்ற தாய்க்கும் மகளைக் கல்யாணக் கோலத்தில் பார்க்கும் போது வரும் மகிழ்ச்சி.
சற்று நேரத்திற்கெல்லாம் பெண்கள் சேர்ந்து மணப்பெண்ணை மேடைக்கு அழைத்து வந்தார்கள்.
அவன் கனவுகளை எல்லாம் அலங்கரித்த தேவதை, அவன் அருகே, மகிழன் உள்ளம் மகிழ்ச்சியில் குதித்தது. அருகில் அமர்ந்தவளைத் திரும்பிப் பார்த்தான்.
குங்குமநிற பட்டுத்தி இருந்தாள், பெரிய பார்டர், அலங்காரம் எளிமையாக இருந்தது. தலை நிறைய மல்லிகைப்பூ ஆனால் அந்தக் கண்கள் மட்டும் அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. கொஞ்சம் ஏமாற்றமாக உணர்ந்தான் மகிழன்.
மகிழன் பெரியப்பாவும், பெரியம்மாவும் தாலியைத் தொட்டு அவன் கைகளில் கொடுக்க அதை வாங்கியவன் அவள் கழுத்தருகே கொண்டு வந்து நிறுத்தினான். மதுவின் பார்வை சட்டென்று உயர அந்தக் கண்களோடு தன் கண்களைக் கலந்தவன். இமைகள் மூடாமல் அவள் விழிகளை பார்த்தான். தாலி கட்டும் போது அந்த விழிகளில் தெரியும் பரவசத்தை ரசித்துக்கொண்டே புன்னகையுடன் மது கழுத்தில் தாலியைக் கட்டினான் அந்த காதலன்.
ஏழேழு ஜென்மத்திற்கும் இந்த பந்தம் நிலைக்க வேண்டுமென கடவுளை வேண்டிக் கொண்டாள் பெண். அவன் கைகள் கழுத்தில் உரச மதுவிற்கு லேசாக உடல் சிலிர்த்தது. நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்கும் போதும், மாலை மாற்றும் போதும் மகிழன் கொஞ்சம் அதிகமாக நெருக்கத்தைக் காட்டினான். அவன் குறும்பில் மது கொஞ்சம் திணறிப்போனாள்.
மஹாவை கண்களால் அழைத்த மது அவள் அருகில் வந்ததும் காதில் ஏதோ முணுமுணுத்தாள். வாய் விட்டுச் சிரித்தாள் மஹா.
"சித்தப்பா! எல்லாரும் பார்க்கிறாங்களாம். உங்களைக் கொஞ்சம் அடக்கி வாசிக்கட்டாம்."
"ஏன்? அதை எங்கிட்ட அவங்க சொல்ல மாட்டாங்களாமா?" என்று மதுவைச் சீண்ட அவள் அவனை முறைத்துக் கொண்டு நின்றாள். அவளின் கோபத்தை உள்ளுக்குள் ரசித்தவன் அமைதியாகிப் போனான். திருமண நிகழ்வுகள் நிறைவான பின்னர், விருந்தினர் உபசரிப்பில் மது கொஞ்சம் இயல்பாகத் தெரிந்தாள்,
மகிழ்ச்சியை மஞ்சளாய் குலைந்து பூசியது போன்று மலர்ந்த முகமாய் நிற்கும் மகளையும், அவளுக்கு சற்றும் குறைவில்லாத அழகோடு கம்பீரமாய் நிற்கும் மகிழனையும் தம்பதிகளாக இணைத்துப் பார்த்ததில் கண்கள் மட்டுமல்லாது மனமும் நிறைந்தது தாமரைக்கும், சந்திரனுக்கும்.
நேரம் மதியம் ஒன்றைக் கடந்திருந்தது, வெகுநேரம் நின்று கொண்டே இருந்த மதுவிற்கு கால் முகத்திலேயே அதை புரிந்து கொண்ட மகிழன்.
“கால் வலிக்குதாடா?"
"இல்லை மாமா.. நின்னுட்டே இருக்கிறதுனால ஒரு மாதிரி இருக்கு.." இந்த பட்டுசாரி வேற கசகசன்னு இருக்கு...
"இன்னும் கொஞ்ச நேரம் தான்.. பசிக்குதா?”
“ம்.” என்று குழந்தையாய் உதட்டை சுழித்துப் பாவனை செய்தாள், முகம் லேசாகச் சோர்ந்திருந்தது. இருவரும் காலையில் பழச்சாறு குடித்தது தான்.
மணமகள் அறைக்குள் நின்ற தன் அக்காவை அழைத்தான் மகிழன்.
“அக்கா பசிக்குது' என்றான்.
"ஆட்கள் வர்ரது கொஞ்சம் குறைஞ்சிருக்கு. அப்ப நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டிருங்க. சொல்லியபடியே இருவரையும் சாப்பிட அழைத்துச் சென்றார் தாமரை.
உணவு முடித்து வந்த போது கூட்டம் கூடி இருந்தது. மீண்டும் விருந்தினர்கள் ஒவ்வொருவராக வாழ்த்திச்செல்ல..
மது மிகவும் தளர்ந்து போனாள், நேரம் ஆக ஆக 'எப்போதடா எல்லாம் முடியும்?' என்றானது மதுவுக்கு.
"அம்மா புடவையை மாத்தவா' என்று தாயிடம் சிணுங்கினாள். தாமரை அவளை கோபமாக முறைத்தார்.
"அம்மா வேற ட்ரெஸ்சாவது மாத்தவா' என்றாள்.
கொஞ்சம் பொறுத்துக்க டா வீட்டுக்கு போய் விளக்கு ஏற்றாமல் முகூர்த்த புடவையை மாற்றக்கூடாது. என்று தாமரை கூறிக்கொண்டு இருக்கும் போதே...
மது முகம் பிரகாசமானது,
வந்தது அவளின் கல்லூரித் தோழிகள். இவ்வளவு நேரம் சோர்வாக நின்றவள், தன் தோழிகளை கண்டதும் மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து அவர்களை நோக்கிப் போனாள். ஹாய் மது!” அழைத்தபடியே ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டாள் நிகிலா.
அவர்களோடு மஹாவும் வந்து இணைந்து கொண்டு தங்கள் கல்லூரி தோழிகளை மகிழனுக்கு அறிமுகப்படுத்தி வைக்க அந்த இடமே கலகலப்பாகிப் போனது.
கார்த்திகாவும், ஜானகியும் நேற்று இரவே வந்திருக்க நிகிலாவையும் மற்ற கல்லூரித் தோழிகளையும் மது இப்போது தான் பார்க்கிறாள். கேக் வெட்டி, ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொள்ள, இளையவர்கள் கூட்டம் ஆர்ப்பரிக்க, ஒரு பெரிய கலவரத்திற்குப் பின் அந்த மணமேடை அமைதியானது. ஜானகியும், நிகிலாவும் மதுவை ஒரு வழி பண்ண, பெண்களின் கலாட்டாவில் மகிழனே மிரண்டு போனான், அவர்கள் பரிசுப் பொருட்களைக் கொடுத்துவிட்டு கீழே இறங்கிச் சென்றதும் மகிழன் மூச்சை இழுத்து விட்டான்.
திருமண சடங்குகள் முடிந்து மணமக்கள் இருவரும் மணமகன் வீடு புறப்பட்டனர். காரில் மதுவும் மகிழனும் அருகில் அமர்ந்திருக்க, மது கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்தாள். மகிழன் அவளை நெருங்கி அமர்ந்தான்.
"இவ்ளோ இடம் இருக்குல்ல? அப்புறம் ஏன் இடிச்சிக்கிட்டு உட்கார்ற மாமா? கொஞ்சம் தள்ளி உட்காரு" என அடிக்குரலில் மது சிணுங்க,
"இவ்வளவு அழகான பொண்டாட்டிய பக்கத்துல வச்சிக்கிட்டு, தள்ளி உட்கார்ந்தா என்னை பைத்தியம்னு சொல்ல மாட்டாங்களா?" குறும்பாக கேட்டான் மகிழன்.
மாம்மு எனக்கு கசகசனு டயர்டா இருக்கு, தலையும் வலிக்குது" எனக்கூறி கண்களை மூடி சீட்டில் சாய்ந்தாள்.. அவளைப் பார்த்த மகிழன் அதற்கு மேல் வம்பு செய்யாமல், இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டான். இரண்டு மூன்று நாட்கள் அவளுக்கு சரியான தூக்கம் இல்லை. அதுவும் நேற்று இரவு வந்த போன் காலுக்கு பிறகு மனதளவில் மிகவும் தளர்ந்து விட்டாள்.
வீடு வந்ததும் “மது," என மகிழன் தோளில் தட்ட... கண்களைத் திறந்த மது காரிலிருந்து இறங்கினாள்.
ஆரத்தி சுற்றி திருஷ்டி கழித்து வீட்டிற்குள் வரவேற்றனர், உள்ளே சென்றவுடன் மதுவை விளக்கேற்றச் சொல்ல, மது தீக்குச்சியை பெட்டியில் உரச, அது பற்றுவேனா என்றது. மகிழன் அவளின் கையைப் பிடித்து தீக்குச்சியை பற்ற வைத்து, விளக்கை ஏற்ற வைத்தான்.
மணமக்களுக்கு பாலும் பழமும்
கொடுக்கப்பட முதலில் மதுவுக்கு கொடுத்த பின்னரே தான் அருந்தினான். இடையிடையில் மஹாவின் கேலிகளும், நிகிலா, ஜானகியின் குறும்புகளும் அனைவரையும் சிரிக்க வைத்து, மதுவை சிவக்க வைத்தது.
மகிழன் மாடிக்குப் போய்விட்டான்
பெண்கள் கூட்டமாக மதுவைச் சுற்றி அமர்ந்துகொண்டு கதை பேச, அந்த இடமே சிரிப்பொலியால் அதிர்ந்தது. .
இத்தனை நாள் வெயிட் பண்ணினது எதுக்குன்னு இப்போ தான புரியுது." என்றார் ஒரு நடுத்தர வயது பெண்மணி
பாக்குற பொண்ணையெல்லாம் வேணாம்னு தட்டிக் கழிச்சுக்கிட்டே இருந்தாங்க உங்க ஹீரோ. இப்போதான் புரியுது, உலக அழகியைத் தேடிக்கிட்டு இருந்திருக்காங்கன்னு." அந்தப் பேச்சில் லேசாக வெட்கப்பட்டாள் மது
“அம்மாடி பொண்ணுங்களா... போதும் கதை பேசினது. மதுவுக்கு களைப்பாக இருக்கும். உங்க கதையை அப்புறமாப் பேசலாம், முதல்ல பொண்ணைக் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடுங்க." ஒரு அதட்டல் போட்டுவிட்டு மஹாவிடம் திரும்பினார் பார்வதி.
"மஹா... மதுவை மேல உன் ரூமுக்குக் கூட்டிட்டுப் போ." என்றார், மஹா மதுவைப் பார்க்கவும் அவளும் எழுந்து கொண்டாள், அலங்காரங்களைக் களைந்தால் போதும் என்றிருந்தது அவளுக்கு.
■■ ■■■ ■■
மகிழன் அறை.
அவன் அணைப்பிற்குள் இருந்தாள் மது. அவளைப் பிரிந்திருந்த ஏக்கம், அவளால் மட்டுமே தனக்குள் தூண்டி விடக் கூடிய உணர்வுகள் என இத்தனை நாளும் தன்னைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தவன் இன்று அத்தனையும் கரையுடைக்க அறைக்குள் தனிமையில் தன் காதல் மனைவியைப் பார்த்ததும், கொஞ்சம் தடுமாரித்தான் போனான் அவன் அணைத்த வேகத்தில் திணறிப்போனாள் மது.
அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தியவன், நெற்றியில் ஒரு முத்தம் பதித்தான், காதல் நிறைந்த ஆசையோடு முதல் முத்தம்! அவள் முதுகு தண்டில் சில்லென்று ஒரு உணர்வு.
ஒரு நிமிடத்தை மட்டுமே தனதாக்கிக் கொண்டவன் அவளை விடுவித்த போது, அவன் மார்பிற்குள் புகுந்து கொண்டாள் மது. இத்தனை நாட்களாக இருந்த ஏக்கம், எதிர்பார்ப்பு, காதல் எல்லாம் அவளுக்குள்ளும் தேடலாக மாறியிருந்தது, அவன் மேல் அவள் வைத்த அன்பு மட்டும் சாதாரணமானதா, அவள் உயிரே அவன் தானே.
"இன்னும் கோபம் போகலையா?" என்று அவளை இறுக்கி அணைத்தான்.
“கோபமா என்ன கோபம்?"
அவளின் பதிலில் புன்னகைத்தவன் “ஓ... அப்போ இன்னைக்கு பூரா விலகி நின்னதுக்கு காரணம்?”
அந்தக் கேள்வியில் கொஞ்ச நேரம் மௌனித்தவள், சற்றுத் தயங்கியே பதில் சொன்னாள்.
“என் நிலை எனக்கே புரியலை மாமா.”
"யாரோ ஒருத்திக்காக கிடைத்த காதலை ஏத்துக்கவும் முடியாம, மனசு ஆசைப்பட்டதை நெருங்கவும் முடியாம தவிக்கும் தவிப்பு எனக்கு புரியுதுடா"
ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள். அவன் அருகாமைக்காக ஏங்கியவள் தானே அவளும். தங்கள் திருமண வாழ்வு இப்படியொரு சூழ்நிலையில் ஆரம்பிப்பதா? இதுதானே அவள் கலக்கம்.
"இந்த நிமிஷத்துக்காக நான் எவ்வளவு கனவு வச்சிருந்தேன் தெரியுமா மாமா?" சொல்லிவிட்டு அவள் அழ அவளை இறுக்கி அணைத்தான்.
"என்னோட மதுக்குட்டி மனசு இந்த மாமனுக்கு புரியாத ” சொன்னவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“மது, வீட்டுல நாம மட்டும் இல்லை. பெரியவங்க எல்லாம் இருக்காங்க. நமக்குள்ள எல்லாம் இயல்பா இருந்தா தான் அவங்க நிம்மதியா இருப்பாங்க. உன்னோட ஒதுக்கும் அவங்களுக்கு தவறான அர்த்தம் தரும் அவன் பேச பேச அவள் கண்கள் அவனைக் காதல் உருகப் பார்த்தது.
"மகாராணிக்கு எப்போ மனசு வருதோ, அப்போ இந்த அடிமையை ஏத்துக் கிட்டாப் போதும். அதுவரைக்கும் நான் காத்திருக்கேன்.”
"சாரி மாம்மு.. சாரி மாம்மு.. என்று அவனை இறுக்கி அணைத்துக்கொண்டாள்.
“அம்மு, அதுக்காக என்னை ரெம்பவும் ஏங்கவைக்கக் கூடாதுடா." சிரித்தபடியே சொன்னவன் “ட்ரெஸ் மாற்றிக்கொள், கொஞ்ச நேரம் தூங்கு உன் முகம் ரொம்ப டயர்டா தெரியுது. அறையை விட்டு வெளியே போய் கதவைச் சாத்தினான். அவன் செய்கைகள் அத்தனை இதமாக இருந்தது அவளுக்கு.
தன் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்தாலும், அவன் தன் காதலை விட்டுக் கொடுக்கவும் இல்லையென்று அவளுக்கு நன்றாகப் புரிந்தது. கண்ணாடி முன் நின்று அவன் இதழ் ஒற்றிய நெற்றியை தடவிப் பார்த்தவள். புன்னகையுடன் ஒரு சுடிதாரை எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டாள்.
■■ ■■■ ■■
மாலை ஐந்து மணி மது எழுந்து வெளியே வர, வீடே அமைதியாக இருந்தது. உறவினர்கள் அனைவரும் பேருந்தில் புறப்பட்டுவிட இரண்டு கார்கள் மட்டும் புறப்பட தயாராக வாசலில் நின்றது.
மகிழனும் சந்திரனும் உரையாடிக் கொண்டு இருந்தார்கள் மது குரல் கேட்க, சட்டென திருப்பினார்கள் இருவரும். அருகே வந்த மது, தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
'என்னப்பா நீங்களும் போறீங்களா?
மகளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவள் தலையை தடவிக்கொண்டே மென்மையாக சிரித்தார் தந்தை.
"ரெண்டு நாள் இருந்து போகலாம்பா..'
"வேலை இருக்குடா' உனக்கு தெரியாததா செல்லம்.
"இப்பவே போகனுமா? என்றவள் கண்கள் லேசாக கலங்கி இருந்தது
பிரிவை எண்ணி அவர் கண்களும் கலங்க, மெல்ல அவள் கையை தடவிக் கொடுத்தார்.
தந்தையை டைமுக்கு சரியா சாப்பிடணும். நான் தினமும் போன் பண்ணி விசாரிப்பேன் சரியாப்பா? திருமணம் முடித்த ஒரே நாளில் தன் மகள் இத்தனை பக்குவமாக மாறிவிட்டாளா! என வியந்து நோக்கினார்.
முகம் மலர்ந்து சிறித்தவள், "என்னப்பா...?" என்க,
"இல்லை நீயும் உடம்பை பார்த்துக்கணும். விளையாட்டுத்தனத்தை எல்லாம் விட்டுடணும், தினமும் போன்
பண்ணனும் என்ன ?"
மதுவின் கண்கள் நீரை வடிக்க தொடங்கியது..
ஏய் எதுக்குடி இப்ப அழுது வடிக்கிற.. ஐந்து வருஷமா நீ தனியா தான இருந்த இப்ப ஹாஸ்டலுக்கு பதில் மாமா வீட்டுல இருக்கப் போற.. அவ்வளவு தானே தாய் ஆறுதல் கூற மதுவின் அழுகை அதிகமானது..
நெடுநேரம் சமாதனம் செய்த பின்பே அவள் அழுகை மட்டுப்பட்டது.. மதிய விருந்து முடிந்து, திருச்சிக்கு புறப்படும் ஏற்பாடு நடந்துக் கொண்டிருந்தது..
புறப்படும் முன் மதுவை அழைத்து ஏகப்பட்ட அறிவுரைகள் வழங்கிவிட்டே சென்றார் கோகிலா..
■■ ■■■ ■■
ஐந்து ஆண்டுகள் ஓடாத தன் வாழ்வியல் கடிகாரம் இன்று திடீரென ஒரே நாளில் அதிவேகமாக சுற்றுவது போன்றிருந்தது. சுகமான நொடிகள் மட்டும் விரைவாக கடந்திடுமோ என்னவோ!.
புதிய இடத்தில் இருக்கிறோம் என்று பதட்டமோ, படபடப்போ மதுவுக்கு இல்லை இயல்பாக இருந்தாள். பெண்களுக்கு புகுந்த வீடு புது இடம், புது மனிதர்கள் என்ற மிரட்சியைத் தரும். ஆனால் அவளை இங்கே அதிகாரம் செய்யவோ, கேள்வி கேட்கவோ யாரும் இல்லை. இப்படி நடந்து கொள்ள வேண்டும், அப்படி செய்யக்கூடாது என்று அறிவுரைகளும் அவளுக்கு தேவைப்படவில்லை, திருமணம் முடிந்த பெண்ணின் மனதிற்கு இதைவிடப் பெரும் ஆறுதலாக என்ன இருந்துவிடப் போகிறது.
சந்திரன் உறவினர்களை அழைத்துக்கொண்டு ஊருக்கு திரும்பிவிட. கவிதாவை துணைக்கு வைத்துக்கொண்டு. தாமரை தம்பி வீட்டிலேயே தங்கிவிட்டார்.
மது குளித்து காட்டன் புடவைக்கு மாறியிருந்தாள். கீழ் அறையில் தன் தாயிடம் நீண்ட நேரம் உரையாடியவள் தாய் மல்லிகைப் பூவைத் தலையில் வைத்துவிட்டு அவளை அணைத்து உச்சி முகர்ந்த போது லேசாக வெட்கப்பட்டாள். அவள் முகத்தில் தெரிந்த குழப்பத்தை, சின்ன பெண்ணின் பயம், பதட்டம் என்று எடுத்துக்கொண்டார் தாய்,
"அவனுக்கு நீதான்டா உசுரு' என்றார் பார்வதி
"சிரித்தாள், அதற்கு மேல் வெட்கத்தில் என்ன பேசுவதென்று அவளுக்கும் தெரியவில்லை.
" சரி நீ மாடிக்கு போம்மா." என்று பார்வதி சொல்லவும் தலையாட்டியபடி மேலே வந்துவிட்டாள். கையில் பால் சொம்பு கூட இல்லை.
படியேறி மாடிக்கு வந்தாள், அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழையவும் இதமான மனம் ஒன்று சுவாசத்தில் கலந்தது.
அறை எளிமையாக இருந்தது, திரைப்படங்களில் பார்ப்பதைப் போல எதுவும் இல்லை, புது விரிப்பு விரிக்கப்பட்டு மல்லிகைப்பூவும் ரோஜா இதழ்களும் உதிரியாகத் தூவப்பட்டிருந்தது.
குளியலறையில் தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டது. மகிழன் உள்ளே இருக்கிறான் என்று புரிந்து கொண்டாள். துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டே வெளியே வந்தவன். மதுவை பார்த்ததும் அப்படியே நின்றான்.
அவள் மனது கனியும்வரை காத்திருக்கும் மனநிலையில்தான் இருந்தான் அவளை தன்னருகில் காணும் வரை... அழகுப் பதுமையாக நின்றவளைப் பார்த்த போது அவள் வேண்டும் என்று தவிக்கும் மனதை என்ன செய்து அடக்குவது என்று அவனுக்கும் தெரியவில்லை.
திருமணமானவுடன் பெண் தன்னோடு ஒன்றி விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று மகிழனுக்கு தெரியும்...அவனது கட்டுபாட்டை அவன் அறிவான். ஆனால் அவளை தனிமையில் பார்க்கும்போது அறிவு வேலை நிறுத்தம் செய்து விடுகிறது.
உன்னை புடவையில் பார்க்கும் போது மனசு என்னமோ பண்ணுது?" இதுவரை அந்தக் கண்களில் தெரிந்த உறுதி போய் இப்போது குறும்பு குடியேறி இருந்தது.
அவளைப் பின்னோடு அணைத்துக் கொண்டான். ஓர் அதிர்வு அவளிடம் தெரிந்தாலும், அவனை அனுமதித்தாள். அவனை எந்த விதத்திலும் காயப்படுத்தி விடக்கூடாது என்பதில் அவளும் கவனமாக இருந்தாள்.
இன்னும் நெருங்கியவன் "ரொம்ப வாசமா இருக்க" என்று கூற,
மதுவுக்கு நாக்கு உலர்ந்தது.
"மாமா எனக்கு தூக்கம் வருது" என திரும்பி பார்க்காமலேயே திக்கித் திணற...
"ம்... தூங்கு, ஆனா திரும்பி என் முகத்தைப் பார்த்து சொல்லு" என்றான் மகிழன்.
இவள் திரும்பி நின்று மீண்டும் கூற,
“ம்ஹூம், நீ என் முகத்தைப் பார்க்கல" என்றான்.
மது சிரமப்பட்டு தலை நிமிர்ந்து அவனை பார்க்க,
"இப்ப சொல்லு" என்றான்.
"தூக்கம் வருது" என மெல்லிய குரலில் சிரமப்பட்டு மது சொல்ல, இரு கைகளாலும் அவளை தூக்கிச் சென்று படுக்கையில் விட்டவன். அவளை அணைத்து கொண்டு படுத்தான். மகிழன் கை வளைவுக்குள் மதுவின் இடை இருந்தது.
"தூங்கு மது. குட் நைட்" அவள் நெற்றியில் முத்தமிட்டு சொன்னவன், கொஞ்ச நேரத்திலேயே தூங்கிவிட,
மதுதான் தவித்தாள், தான் சம்மதித்திருந்தால் இங்கே அழகானதொரு இல்லறம் ஆரம்பித்திருக்கும் என்று அவள் மனசாட்சி மல்லுக்கு நின்றது. எண்ணங்களின் கனம் தாங்க முடியாமல் உறங்கும் மாமனையே பார்த்தாள்.
'இப்பிடி ஒட்டிக்கிட்டே தூங்கினா எப்பிடித் தூக்கம் வருமாம்?' மனதுக்குள் சலித்துக் கொண்டவளுக்குத் தெரியாது, சற்று நேரத்திலேயே அவளும் உறங்கிப் போனது.
"மகிழன் கண் விழித்தபோது அவன் கையணைப்பிற்குள் தான் இருந்தாள் அவன் அழகி. அவள் உறக்கம் கலையாமல் மெதுவாக எழுந்தான், நேரம் நான்கு முப்பத்தைந்து காட்டியது. அவளையே பார்த்திருந்தான்.
ஒருக்களித்து அவள் படுத்திருக்க, அவள் கழுத்திலிருந்த தாலி தலையணையின் மேல் கிடந்தது. கலைந்திருந்த கூந்தலும், களைத்திருந்த முகமும், கழுத்துத் தாலியும் அவனை ஏதோ செய்ய, ஒரு பெருமூச்சோடு அறையை விட்டு வெளியேறினான்.
உடற்பயிற்சி முடித்து வந்த மகிழன் குளித்து விட்டு வெளியே வர நல்ல தூக்கத்தில் இருந்தாள் மது. நேற்றைய திருமணம கொண்டாட்டம், இடைவிடாத நிகழ்வுகளால் உடம்பில் ஏற்பட்ட சோர்வும் சேர்ந்து விடிந்தது கூடத் தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தாள்.
மது.” மகிழன் அவள் கன்னத்தைத் தட்டி எழுப்ப, தன் கன்னத்தில் உணர்ந்த குளிர்ந்த கையின் ஸ்பரிசத்தில் லேசாகக் கண்களைத் திறந்தாள். எதிரில் மகிழன் நின்று கொண்டிருக்க
"ம்ப்ப்ச்ச்... தூங்க விடு மாமா." என்று மீண்டும் போர்வைக்குள் சுருண்டள்,
"மது' என்று மீண்டும் அழைக்க
டயர்டா இருக்கு மாமா. இன்னும் கொஞ்ச நேரம்" என்றாள். அந்த 'மாமா' என்ற கொஞ்சல் வார்த்தையில் ஒரு கணம் உறைந்து நின்றவன். அவள் விட்ட தூக்கத்தை தொடர, அவள் தூங்கும் அழகை இமைக்க மறந்து பார்த்திருந்தான். இப்போது போர்வைக்குள் குட்டி மதுவை பார்த்தான்
"மணி எட்டாகுது குட்டி . மஹா வந்து மானத்த வாங்கறதுக்குள்ள, குளிச்சிட்டு கீழபோன ரெண்டு பேருக்கும் நல்லது..." என்று முடிக்க,
பட்டென்று கண்விழித்தவள், எழுந்து அமர்ந்ததும் புன்னகையுடன் "குட் மார்னிங் மாமா." என்றாள்
தூக்கம் களையக் களைய இரவின் நிகழ்வுகள் நினைவில் வந்தது, முதலிரவில் ஒரு மனைவியாக தான் நடந்து கொள்ளவில்லை என்று அவள் காதல் மனது கேள்வி கேட்டது. நேற்று இரவு நடந்துகொண்டது அதிகமோ என்று இப்போது எண்ணம் வர. அவனிடம் மன்னிப்பு கேட்க வாய்வரை வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டாள்.
"ப்ரஷ் பண்ணுற ஐடியா இல்லையா?" அவளையே பார்த்திருந்தவன் கேட்டான்.
"இதோ...” சட்டென்று எழுந்து விட்டாள். எதிரில் நிற்பவனை நிமிர்ந்து பார்க்கத் தயங்கி. வேகமாக குளியலறைக்குள் போனாள். நிதானமாக நாற்காலியில் அமர்ந்தான் மகிழன்.
அவள் குளித்து முடித்துவிட்டு சுடிதாரில் வெளியே வந்தபோது கையில் புத்தகத்தோடு அமர்ந்திருந்தான் அவன். தலையைத் துவட்டி அதே டவலை சுற்றிக் கொண்டவள்.
"மகிழன் ஐந்து மணிக்கே உடற்பயிற்சியை முடித்துவிட்டுக் குளித்துவிட்டான். இருந்தாலும் கீழே போகவில்லை. திருமணமான அடுத்த நாளே தன் மனைவி தூங்கிக் கொண்டிருக்க அவன் கீழே போவது அத்தனை அழகாகத் தெரியவில்லை அவனுக்கு.
புத்தகத்தை மூடி வைத்தவன் அவளோடு கீழே இறங்கி வந்தான்.
பார்வதியும், தாமரையும் சமயலறையில் இருந்தார்கள்.
"வாடா மதுக்குட்டி! குளிச்சுட்டியா? சாமியறையில் போய் விளக்கேத்திட்டு வாம்மா! காபி கலந்து வைக்கிறேன்." பார்வதி பேத்தியை அணைத்து முத்தமிட்டார்.
விளக்கேற்றி நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டு வந்தவள், சமையல் அறைக்குள் நுழைய,
"மது! தலைய நல்லா துவட்டு. இன்னும் ஈரம் சொட்டுது பாரு." தாமரை கூற,
"மதுவுக்கு நல்ல முடி. அவளால் எப்படி தனியாக துவட்ட முடியும்" நீ போய் அவளைப் பாரு தாமரை என்றார் பார்வதி.
ஆமா நான் இங்கேயே தங்கி இவளுக்கு தலை தேய்த்து விட்ட, என் புருஷனையும் பையனையும் யார் பார்க்கிறது?
"இதுக்கு தான் அம்மாச்சி எனக்கும் எங்கம்மாவுக்கும் சண்டை வரும். இவ்வளவு முடி இருந்த நான் தனியா என்ன பண்ண முடியும். நான் முடிய வெட்டப்போறேன்னு சொல்லுவேன். அவங்க உடனே கரண்டியத் தூக்கிட்டு வருவாங்க." சிரித்துக் கொண்டே அவள் கூற, மூவரும் சேர்ந்து சிரித்தார்கள்...
சமையற்கட்டில் அவள் நிற்பது தெரிந்ததும். ஹாலில் இருந்து மகிழன் எட்டி எட்டிப் பார்க்க... மகனின் தலைத் தெரியவும் பேத்தியிடம் டீயைக் கொடுத்துவிட்டார் பார்வதி.
தேநீரை வாங்கிய கையோடு மகிழனுக்கு ஏதோவொரு அழைப்பு வர அலுவல் அறைக்குள் நுழைந்து கார் சாவியை எடுத்தவன் வேகமாக வெளியே வந்தான்.
"வெளியே போகணுமா மாமா?” மனைவியின் முகத்தில் தெரிந்த ஏக்கம் மகிழனை அங்கிருந்து நகரவிடாமல் கட்டிப் போட்டது. அவள் கண்களையே சில நொடிகள் பார்த்தபடி நின்றிருந்தான். பெண்ணும் இமைக்க மறந்து கணவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"ஆபீஸ்ல இருந்து போன், சின்ன பிரச்சினை." நான்போய் தான் ஆகனும்.
"வர லேட்டாகுமா மாமா?''
“ஏன்... சீக்கிரமா வரணுமா?" அந்தக் கேள்விக்குள் ஆயிரம் அர்த்தங்கள். மது எதுவும் பேசவில்லை. தலையைக் குனிந்தபடி திரும்பி நடக்கப்போனாள். ஆனால் மகிழன் விடவில்லை. அவள் கையைப் பிடித்திருந்தான்.
அவர்கள் இருவரும் நின்றிருந்தது வீட்டின் வரவேற்பறை. பெண் இப்போது படபடத்துப் போனாள். மிரண்ட விழிகள் சுற்றும்முற்றும் அவசரமாக யாரும் இருக்கிறார்களா என்று ஆராய்ந்தது. மகிழன் கண்களில் இப்போது புது ஆவல் பிறந்தது.
மனைவி கைகளை இழுத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டுமென்றே அந்தச் சின்ன மணிக்கட்டை இன்னும் இறுக்கிப் பிடித்தான். அவளின் அழகான அவஸ்தையைப் பார்க்க அவனுக்கு அத்தனை ஆனந்தமாக இருந்தது. அவள் அணிந்திருந்த வளையல்களோடு சில நொடிகள் விளையாடினான் மகிழன்.
"கைய விடுங்க... மாமா" அவள் கெஞ்சினாள். ஆனால் அவனுக்கு அது கொஞ்சலாக இருந்ததிருக்கும் போல. மறுகையால் அவன் கையைத் தன் கையிலிருந்து விலக்கியவள் கணவனை நிமிர்ந்தும் பார்க்காமல் மாடிப் படிகளுக்குப் போனாள்.
விலகி வந்தவளுக்கு அவன் விலகிப் போவதுவும் பிடிக்கவில்லை.
படியேறியபடியே அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். அங்கேயே நின்றிருந்தான் மகிழன். மறுபடியும் அழைப்புவர பேசிக்கொண்டே வேகமாக நடந்து காரில் ஏறினான்.
மேலே வந்த மதுவிற்கு சலிப்பாக இருந்தது. கட்டிலில் படுத்துக்கொண்டாள்
காலையில் போனவன் மதிய உணவுக்கும் வீடு வரவில்லை.
இடையில் யாருடனும் போனில் கூட பேசவில்லை. இவர்கள் தொடர்பு கொள்ள மகிழன் போனில் அரவிந்த் பேசினான். மீட்டிங்கில் கொஞ்சம் பிஸியாக இருப்பதாக மட்டும் தெரிப்படுத்தினான். வீட்டில் யாருக்கும் அந்த பதிலில் திருப்தி இல்லை.
மூன்றுமணிக்கு மேல் மகிழன் வீடு வந்தான். தவிர்க்க முடியாத முக்கிய வேலையென்று காரணம் சொல்லி மன்னிப்புக் கேட்டான்.. தாமரை தம்பியின் நிலையை புரிந்து கொண்டார். தாய் தன் திட்டித்தீர்த்து விட்டார், எப்பப்பாரு இவனுக்கு மட்டும் வேலை வேலை.. ஊரில் இவனைத் தவிர யாருமே தொழில் செய்யவில்லையா? ஒரு நல்லநாள் பார்கிறானா. நேத்து கல்யாணம் யாராவது இப்படி போவங்களா? பெரியவங்க இத்தனை பேர் வீட்டில் இருக்கோம், யாரிடமாவது கேட்டானா? சொன்னனா? இனி நீதான் அவனை கண்டிக்கணும் மது! சொல்லிவிட்டு பார்வதி போய்விட்டார். மது கலங்கிப் போனாள்.
மகிழன் சாப்பிடவும் இல்லை மாடிக்கு வந்துவிட்டான். மிகவும் சோர்வாக தெரிந்தான். "கொஞ்சம் டயர்ட்டா இருக்குடா குட்டி.." என்று கொட்டாவி விட்டவனை பார்க்கும் போது கவலையாக இருந்தது அவளுக்கு தேவையா இவருக்கு? எதற்காக இப்படி ஓடியோடி உழைக்கிறார்? தன்னால் தானா? தனக்காக தானா? அவளது மனதில் எப்போதும் தோன்றும் கேள்வி இது.
அவள் சிந்தனையில் ஆழ்ந்திருக்க அவன் மதுவின் மடியில் படுத்து கண்களை மூடிக் கொண்டான். மதுவுக்கு குறுகுறுப்பாக இருந்தது. முதலில் தயங்கியவள் பின் மெல்ல அவன் தலையை வருடிக் கொடுக்க ஆரம்பித்தாள். அவளையே அணைத்து கொண்டு அப்படியே உறங்கிவிட்டான். தன் மாடியில் உறங்கும் மாமனையே பார்த்து ரசித்திருந்தாள் மது. கனவுபோல் இருந்தது அவளுக்கு.
உயரத்திற்கு ஏற்ற உடலுடன், நல்ல உடல் கட்டுடன் சற்று கடுமையானவன் என்று மற்றவர்கள் நனைப்பது போன்ற தோற்றம்தான் மகிழன். ஆனால் உள்ளம் குழந்தை போன்றது என எண்ணிக் கொண்டாள்.
மகிழன் இரவு மிகவும் தாமதமாகவே வீடு வந்தான்.
தலையணையை அணைத்தவாறு தூங்கி இருந்தாள் அவனின் பேரழகி. நைட்டி அணிந்திருந்தாள். முதன் முதலாக அவளை நைட்டியில் பார்க்கிறான், அதன் ஏற்ற இறக்கங்கள் அவனை இம்சை செய்ய.. கட்டிலில் சாய்ந்து மனைவியை அணைத்தவனுக்கு அவளின் பிரத்தியேக வாசமும், மல்லிகை வாசமும் போதை ஏற்ற கன்னத்தில் முத்தமிட எட்டியவன் காதில் முத்தமிட்டான்.
தூக்கத்திலும் கணவனை உணர்ந்து கொண்ட மதுவின் மேனி சிலிர்த்தது. அதை உணர்ந்து கொண்டவன் அவள் தூங்குவது போல் நடிக்கிறாள் என்று நினைத்து மேலும் மேலும் முத்தம் வைக்க, தூக்கம் களைய பட்டென்று கண்களை திறந்த மது, கணவனை கண்டு இதயம் தடதடக்க சுவர் கடிகாரத்தில் நேரத்தை பார்த்தாள். அது 12.45 என்றது.
"இவ்வளவு நேரம் பேக்டரியில் என்ன பண்ணுனீங்க?" என்றவாறே அவள் எழுந்துகொள்ள மகிழனும் எழுந்தமர்ந்தான். இரவு விளக்கின் மங்கலான ஒளியில் அவளின் அழகு இன்னும் கூடுதல் அழகை வெளிக்காட்ட இமைக்காமல் அவளையே பார்த்திருந்தான் அவள் கேட்ட கேள்விக்கு பதில் வராமல் போகவே" என்னாச்சு மாமா உங்க முகமே சரியில்லை என்று அவன் கன்னம் தடவினாள் பெண்.
அவள் கை பட்டதும் சட்டென்று சுதாரித்தவன்.. கல்யாண வேலையில் இந்த அழகியை பேக்டரியை கவனிக்காமல் வேலையை கவனிக்காமல் கொஞ்சம் குளறுபடி என்றான்
கணவனின் பதிலில் ஏதோ ஒன்றை புரிந்து கொண்டவள் மனதில் நிம்மதி
பரவ இதயத்தின் படபடப்பும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது. காலையில்
மேலே வந்தவளுக்கு தூக்கமே வரவில்லை.
மது எதுவும் பேசவுமில்லை. அவன் செயலை எதிர்க்கவுமில்லை. அமைதியாக கண்மூடி இருந்தாள். அவளும் தான் எத்தனை நாள் அவனை தவிர்ப்பாள்? என்றோ ஒருநாள் கணவனை தனிமையில் சந்திக்க நேரிடும் என்று அறிந்து தானே இருந்தாள். இப்பொழுது கூட அவன் அடுத்த கட்டத்துக்கு முன்னேறினால் மறுக்க மாட்டாள்.
கண் மூடி படுத்திருந்த மனைவியையே பாத்திருந்த மகிழன் அவள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதே அவளின் பிறவி குணம் என்று உணர்ந்தவன் அவளின் முகத்தில் விழுந்திருந்த முடிகளை அவளின் காதோரம் ஒதுக்கியவாறே
" ஏய் அம்மு கண்ண திறந்து என்ன பாக்க மாட்டியா?" காதல் கொஞ்சும் குரலில் கெஞ்ச கண்களை திறந்து அமைதியாக கணவனையே பாத்திருந்தாள்.
" கண்ணை பார்த்தவாறே சொல்ல அவள் கண்களில் இருந்து கண்ணீரை துளி முணுக்கென்று எட்டிப் பார்த்தது.
"இனி இப்படி பண்ணாதீங்க மாமா' என்றாள்.
மனைவியின் முகம் பார்த்து மூக்கோடு மூக்கை வைத்து உரசியவன் குறும்பாக அவ்வளவு தானா? ஒரு பெரிய யுத்தம் நடக்கும் தயாராக இருக்கவும்
அவளின் கைகளை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துப் பிடித்துக் கொண்டவன் "தேங்க்ஸ் டி குட்டிமா. !என்றவன் அவளின் கைகளில் முத்தமிட அவனை வியப்பாக பாத்திருந்தாள் .
"என்ன மாமாவை இப்படி சைட் அடிக்கிற? என் விம்பத்தை உன் கண்ணுல தேக்கி வைக்கும் திட்டமோ!"
"உங்களுக்கு இப்படியெல்லாம் பேச
வருமா?"
"நீங்க இதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டீங்க" என்றவள் கண்ணடிக்க அவளை அறியாமல் செய்த செயலை இரவு விளக்கொளியில் கண்டவன் சொக்கி நிக்க
மது உள்ளே வர, புத்தகம் ஒன்றை வெகு தீவிரமாக வாசித்தவாறு கட்டிலில் அமர்ந்திருந்தான் மகிழன். சில நொடிகள் கடந்த பின்னும் அவன் நிமிர்ந்து பாராது போக, அவள் மனம் வாடியது.
லக்கேஜ் பேக்கை எடுத்தவள் தனது உடைகள், உடமைகளை அடுக்கத் தொடங்கினாள். ஓசை எழும்படி அனைத்தையும் தட் தட்டென்று எடுத்து வைக்க, அதில் கவனம் கலைந்தவன் நிமிர்ந்துப் பார்த்தான்.
“ஹே மது எப்போ வந்த? நான் கவனிக்கவே இல்லை" என்றவாறு மகிழன் புத்தகைத்தை மூடி வைத்துவிட்டு எழ, "இப்போ தான் வந்தேன்" என்றவள் தன் வேலையை கவனிப்பது போலே திரும்பிக் கொண்டாள்.
எண்ணங்களோடே மாடி ஏறி வந்தவன், தோட்டத்தில் நின்ற தன் மனைவியைப் பார்த்து விட்டு அங்கே சென்றான். வீடே அமைதியாக இருந்தது.
கடல் வண்ணத்தில் ஒரு பட்டுப்புடவை உடுத்தி இருந்தாள். மெல்லிய ஊதா வண்ண பார்டரும், அதே நிறத்தில் ப்ளவுஸும் கனகச்சிதமாகப் பொருந்தி இருந்தது. ஆபரணங்கள் எதையும் களையாமல், கூந்தலை மட்டும் அவிழ்த்து விட்டிருந்தாள். இடையைத் தழுவி நின்ற அந்த மெல்லிய ஒட்டியாணம் அபியின் பொறாமையை தூண்டி விட்டது.
சமையல் முழுவதையும் பார்வதியே பார்த்துக் கொள்வார். நாட்கள் போக போக, மதுவுக்கு அந்த வாழ்க்கை பழகிப் போனது.
அவன் ஐந்தரை மணிக்கெல்லாம் எழுவதை வழக்கமாக கொண்டிருக்கிறான் என்பதையே கொஞ்ச நாட்கள் கழிந்த பின் தான் உணர்ந்தாள்.
காலையில் அவனது முதல் வேலை வீட்டுக்கு அருகிலிருந்த ஜிம்முக்கு போவதுதான் என்பதையும் தாமதமாகவே தெரிந்து கொண்டாள். மது எழ ஏழாகிவிடும். எழுந்து, கொஞ்சம் யோகா செய்துவிட்டு கையில் காபியோடு தோட்டத்தை சுற்றி வரும் போதுதான் மகிழன் ஜிம்மிலிருந்து வருவான்.
ஒரு மனைவியாக அவனுக்கு தன்னை கொடுக்கவில்லை என்ற குற்ற உணர்வு நாளாக நாளாக வலியாக மாறியது, அவனிடம் அவள் பேச யோசித்ததெல்லாம் கூட நடந்தது.
ஆனால் அவன் அப்படி விடாமல், ஜிம்மிலிருந்து வந்த கையோடு,
"குட் மார்னிங் மதுக்குட்டி..” என்று எப்போதும் போல ஆரம்பித்து,
"நல்லா தூக்கம் போல என்று கண்ணாடித்துக் கேட்க. முதலில் கொஞ்சம் தயக்கம் இருந்தது.
என்னடா அமைதியா இருக்க?" என்று கேட்க,
"ஒண்ணுமில்ல மாமா.." என்பதையே அத்தனை தயக்கத்தோடு தான் கூறினாள்.
"கேசுவலா இருடா..." என்று அவளது தலையைப் பிடித்து ஆட்டிவிட்டு வீட்டுக்குள்ளே சென்றான்.
உள்ளே சென்ற மகிழனையே பார்த்துக் கொண்டு நின்றாள் மது. இவரால் எப்படி இவ்வளவு எளிதாக எடுத்துக்க முடியுது?
காலையில் கொஞ்சம் பேச்சு, இரவு அவன் வீட்டிற்கு வந்ததும் கொஞ்சம் பேச்சு. ஏழரை மணிக்கு அவன் வந்தானென்றால்,
அந்த அடமும் பிடிவாதமும் கோபமும் சில நேரங்களில் மகிழனால் சமாளிக்க முடியாத அளவுக்குப் போகும்.
ஆனால் மகிழனுக்கும் மதுவுக்குமான திருமண உறவில் எந்த முன்னேற்றமும் இல்லாதிருந்தது... இருவரும் நல்ல தோழமையோடு இருந்தனர், இணைந்து வெளியே செல்வது, விருந்துக்கு போவது என்று ஜோடியாக சேர்ந்தே வலம் வந்தாலும், கணவன் மனைவிக்கான நெருக்கம் இல்லை.
மகிழன் கலகலப்பாக இருப்பது போல வெளிப்பார்வைக்கு தெரிந்தாலும் உள்ளுக்குள் அவனது ஏமாற்றமும் வலியும் யாருமே உணராத வண்ணம் மிகத்திறமையாக மறைத்து வந்திருந்தான்...
சொல்லி இருந்தால் நிச்சயமாக அவள் புரிந்து கொண்டிருப்பாள். இருந்தாலும் அவனுக்குச் சொல்லப் பிடிக்கவில்லை.
பேசிப் புரியவைத்து, சமாதானப்படுத்தி தன் தாம்பத்ய வாழ்கையை தொடங்க அவனுக்கு விருப்பமில்லை.
“
பல நாட்கள் இரவில் மகிழன் வரும் முன்பே மது உறங்கிவிடுவாள்
அவள் கோபமாக இருப்பதை உணர்ந்தவன், அவளை விடுவித்தான்.எழுந்து சென்று பால்கனி கதவருகே நின்றவன்,கைகளைக் கட்டிக் கொண்டு மனைவியை ஆழமாய்ப் பார்த்தான்.
நடு ஜாமத்தில் கண்விழித்த மகிழன், தன்னருகில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பார்த்தபடி இருந்தான். அவள் நிலையை நினைத்த போது கொஞ்சம் வேதனையாக இருந்தது. தடாலடியாக நடந்த நிகழ்வுகள் அவளை எத்தனை தூரம் பாதித்திருக்கும் என்று அவனுக்குப் புரிந்தது. வீட்டை விட்டு, வீட்டு மனிதர்களை விட்டு திடீரென்று இன்னொரு வாழ்க்கைக்குள் தள்ளிவிட்டால், பாவம் அவளும் தான் என்ன செய்வாள்?
அவள் இழந்த அத்தனையையும் தன்னொருவனால் ஈடுகட்ட முடிந்தும், அவள் தயக்கத்திற்கு மதிப்பளித்தே விலகி நின்றான். ஆனால் அந்த இடைவெளி அதிகமாவதை அவன் விரும்பவில்லை. முடிந்தளவு தன் காதலை, தன் தேடலை அவளுக்கு உணர்த்த நினைத்தான்.
“எங்கிட்ட எதையாவது சொல்ல முடியாமால் உன்னை நீயே கஷ்டப்படுத்துற?" அவளிடமிருந்து மெதுவாக விடுபட்டு அந்தக் கண்களை இமைக்காமல் பார்த்தான் மகிழன்.
"எதுவும் இல்லை மாமா, எந்த விஷயமாவது என்னோட மாமாவை காயப்படுத்தினால் அது உங்க வரைக்கும் வர வேணாம்னு நினைக்குறேன், சில விஷயங்கள் உங்க காது வரைக்கும் வர தகுதி இல்லாம போகுதே, அதை நான் என்ன பண்ண?"
அயர்ந்து தூங்கும் தன் மனைவியைத் திரும்பிப் பார்த்தான் அபி. நேற்றைய இரவு கண்முன் நிழலாடியது. அவன் ஆசைகள் அனைத்திற்கும் மறுப்புச் சொல்லாமல் அடிபணிந்திருந்தாள். அத்தனை சுலபத்தில் தன் மனையாள் தன்னோடு கை கோர்ப்பாள் என்று அபி எதிர்பார்த்திருக்கவில்லை. சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போனான்.
அந்தப் பெண்ணின் மேல் தனக்குக் காதல் இருப்பது போல, அவளுக்கும் தன்பால் ஒரு ஈடுபாடு உண்டென்று அபிக்குத் தெரியும். அந்த ஈடுபாடு காதலாக மலரு முன்னமே அவளைக் கைப்பிடித்தது தான் அவளின் ஆதங்கம். அந்த ஆதங்கத்தை நிவர்த்தி செய்ய, தான் ரொம்பவே போராட வேண்டி இருக்கும் என்று அபி கவலைப் பட்டிருந்தான்.
ஆனால், அவன் கவலை அனாவசியம் என்று சொல்லாமல் சொல்லி விட்டாள் கீதாஞ்சலி. 'அவளின் மேல் தனக்கு இத்தனை பித்தா?' என்று நேற்று வரை அபியும் அறிந்திருக்கவில்லை.
அன்றைக்கு இரவு உணவின்போது அத்தனைப் பேரும் டைனிங் டேபிளில் கூடி இருந்தார்கள். அன்றைய பொழுது முழுவதும் அக்கா தம்பியிடம் பேசவில்லை. மகிழனுக்கு தன் அக்காவின் கோபம் புரிந்தாலும் எதுவும் பேசாமல் அமைதி காத்தான். இப்போது எது பேசினாலும் தேவையில்லாத மனஸ்தாபமே விளையும்.
பார்வதியும் அமைதியாக இருந்தார், அதை கண்ட மகிழன், "நாளைக்கு நாங்க திருச்சி போறோம்..." என்றும் அறிவிக்க,
"இதெல்லாம் உனக்கே நல்லாருக்காடா தம்பி?" என்று கேட்டார் தாமரை
"இதுல என்னக்கா நல்லா இல்ல?"
மறுவீட்டு அழைப்பு முடிஞ்சதும் உடனே கிளம்பி போன இதென்ன உனக்கு பிடிக்காத சம்மந்தி வீடா?" சொந்த பந்தம் எல்லாம் என்ன நினைப்பார்கள்.
"சொந்தங்களை எல்லாம் அழைத்து கறிவிருந்து போடணும்... குலதெய்வ கோவிலுக்கு போய் பொங்க வைக்கோனும்... அழைப்பு விடுத்த பங்காளிங்க வீட்டுக்கு எல்லாம் நீங்க விருந்துக்கு போவணும்.. தாமரை தொடர்ந்தார்
"ஐயோ.. இதெல்லாம் முடிய ஒரு வாராத்துக்கு மேல ஆகுமே?"
"ஒரு வாரத்துல எப்படி தம்பி முடியும்? ஒரு பத்து நாள் வீட்ல இருந்து மதுவ அங்கயிங்க கூட்டிட்டு போப்பா..." என்று அவர் பொறுமையாக எடுத்துக் கூறுவதாக நினைத்துக் கொள்ள,
அதுவுமில்லாமல் மது எடுக்கும் முடிவு தான் தன் முடிவு என்கிறானே... அவளுக்கு இதில் என்ன முடிவெடுக்க தெரியும் என்ற குழப்பம் அந்த இருவருக்கும்.
விதி விட்ட வழி... என்று பெருமூச்சு விட்டவர்கள், அதற்கும் மேல் எதுவும் பேசவில்லை.
பத்து நாட்களில் அனைத்து விசேஷங்களையும் முடித்துக் கொண்டு பதினோராவது நாள், மதுவையும் அழைத்துக் கொண்டு திருச்சி சென்று விட்டான், உடன் வர இருந்தவர்களையும் மறுத்து விட்டு!
திருமணம் முடிந்து ஒரு மாதம் கழிந்த நிலையில் மது சூழ்நிலையோடு பொருந்திக் கொள்ள துவங்கினாள்.
நாட்கள் போக போக, அவளுக்கு அந்த வாழ்க்கை பழகிப் போனது.
அவன் ஐந்தரை மணிக்கெல்லாம் எழுவதை வழக்கமாக கொண்டிருக்கிறான் என்பதையே கொஞ்ச நாட்கள் கழிந்த பின் தான் உணர்ந்தாள்.
காலையில் அவனது முதல் வேலை வீட்டுக்கு அருகிலிருந்த ஜிம்முக்கு போவதுதான் என்பதையும் தாமதமாக தான் தெரிந்து கொண்டாள்.
சுற்றிலும் தோட்டத்தோடு கூடிய அழகான வீடு. மது எழ ஏழாகி விடும். எழுந்து, கொஞ்சம் யோகா செய்துவிட்டு கையில் காபியோடு தோட்டத்தை சுற்றி வரும் போதுதான் பார்த்தி ஜிம்மிலிருந்து வருவான்.
ஆரம்பத்தில் அவள் பேச யோசித்ததெல்லாம் கூட நடந்தது.
ஆனால் அவன் அப்படி விடாமல், ஜிம்மிலிருந்து வந்த கையோடு,
"குட் மார்னிங் மதுக்குட்டி..." என்று எப்போதும் போல ஆரம்பித்து,
"நல்லா தூக்கம் வந்துச்சா? மாத்திரை ஒழுங்கா சாப்ட்றியா? கிளாஸ்லாம் எப்படி போகுது?" என்று வரிசையாக கேட்பான். முதலில் கொஞ்சம் தயக்கம் இருந்தது. வாய்ப்பூட்டு திறவாமல் சண்டித்தனம் செய்தது.
அதற்கும், "மது... இது நீயா? ஒரு செக்கண்ட்க்கு நூறு வார்த்தை பேசுவ... இப்ப என்னடா இப்படி அமைதியா இருக்க?" என்று அதற்கும் கிண்டலாக கேட்க,
"ஒண்ணுமில்ல மாமா..." என்பதையே அத்தனை தயக்கத்தோடு தான் கூறினாள்.
அவன் எகிறியது எல்லாம் தாயிடமும் அவனது தமக்கையிடமும் மட்டும் தான். அவளிடம் ரொம்பவும் பார்த்து பார்த்துத்தான் பேசுகிறான் என்பதும் அவளுக்கு புரிந்தது.
"கேசுவலா இருடா..." என்று அவளது தலையைப் பிடித்து ஆட்டிவிட்டு வீட்டுக்குள்ளே சென்றான்.
உள்ளே சென்ற மகிழனையே பார்த்துக் கொண்டு நின்றாள் மது.
காலையில் கொஞ்சம் பேச்சு, இரவு அவன் வீட்டிற்கு வந்ததும் கொஞ்சம் பேச்சு. ஏழரை மணிக்கு அவன் வந்தானென்றால்,
"ம்ம்.. இன்னைக்கு என்ன மேடம் நடந்தது?" இரவுணவை எடுத்துக் கொண்டு சோபாவில் அவளருகே அமர்ந்து, அன்று நடந்த அத்தனையும் ஒப்பிக்க செய்து விடுவான்.
"
மேஜை மேல் ஹாட்பாக்ஸை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவள், அதை விடுத்து, அவனருகில் வந்து, "உடம்பு சரியில்லையா?" என்று கேட்டபடி அவனது நெற்றியில் கை வைத்துப் பார்க்க, அவளது கையை விலக்கி விட்டான்!
"ஒண்ணுமில்ல மது... ஜஸ்ட் கொஞ்சம் டயர்ட்... அவ்வளவுதான்..." என்று கூற, அவனை முறைத்துப் பார்த்தாள் மது!
"ஏன்? இப்ப நான் தொட்டுப் பாக்க கூடாதா?" அவளது கையை விலக்கிய அவனது செய்கையை கண்டு அவளுக்கு கோபமாக இருந்தது.
புன்னகைத்தான்.
"நீ கவலப் படற அளவுக்கு எல்லாம் பெரிய விஷயமில்ல... போய் டிபன் எடுத்து வை மது... பசிக்குது..." என்று அவளை அனுப்ப முயல, அவனை முறைத்தபடியே மேஜையை நோக்கிப் போனாள்.
"ஏன்? நான் தொட்டுப் பார்த்தா என்ன? காய்ச்சலா இருக்கான்னு தான பாக்கறேன். ரொம்ப பண்ணாதீங்க மாமா..." தொம் தொம் மென்று பாத்திரத்தை வைத்தபடியே கத்த,
‘அடப்பாவி... என்னது?' ஜெர்க்கானது அவனுக்கு! பேசாமல் புன்னகையோடு மேல் பார்வையாக அவளை பார்த்தபடி, இன்னொரு கண்ணை ஸ்க்ரீனில் வைத்திருக்க, அவளது எரிச்சல் இன்னும் கொஞ்சம் அதிகமானது.
"கத்திட்டு இருக்க நான் என்ன லூசா?"
"அது எனக்கு எப்படி தெரியும் மதுக்குட்டி?" கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் கூற, கரண்டியை எடுத்துக் கொண்டு அவன் முன்னால் வந்து நின்றாள் காளி தேவியாக!
"அடியே... நான் ஒழுங்கா தான இருக்கேன்?" என்று வலியில் கத்த,
"லொள்ளு பேச மாட்டேன்னு சொல்லுங்க..." இன்னும் கொஞ்சம் சேர்த்து ஆட்ட, சட்டென, மதுவின் கையை இறுக்கமாக வளைத்துப் பிடித்தவன், முதுகொடு இழுத்து அணைத்தபடி அவளது கைகளை சிறை செய்தான்.
ஒரே நொடியில் நிகழ்ந்து விட்ட இந்த நிகழ்வில் அதிர்ந்தாள் மது!
வம்பிழுப்பதும், வழக்காடுவதும்
திருமணத்துக்கு பின் எப்போதும் நிகழும்
நிகழ்வென்றாலும் இந்த நெருக்கம் புதிது.
அதிர்ந்து விழித்தவளின் கண்களை பார்த்தவன், அவளது கைகளை விட்டுவிடாமல்,
“இப்ப என்ன சொல்ல வர்ற?" என்று கேட்க, உடல் நடுங்க எச்சிலை விழுங்கினாள் மது.
"இ... இல்ல... எ... என்ன சொல்ல?" திணற, அவளது அந்த திணறலை ரசித்துப் பார்த்தான்.
"என்னமோ சொல்லிட்டு இருந்த?" அவளை
"என்னமோ சொல்லிட்டு இருந்த?" அவளை விடாமல் கேள்வி கேட்க, அவன் என்ன கேட்கிறான் என்பதே மறந்து போனது மதுவுக்கு!
“என்ன?” என்று சத்தமாக யோசித்தாள். எதற்காக அவனிடம் கத்திக் கொண்டிருந்தோம் என்பதே மறந்து போய் இருந்தது.
"என்ன... என்ன?" வேண்டுமென்றே தான் அவளிடம் வம்படித்துக் கொண்டிருந்தான். அவனது கேலி புரியவும், தன்னை சுதாரித்துக் கொண்டு,
"ஒண்ணுமில்ல..." என்று உதட்டை வளைக்க,
"ஒண்ணுமில்லாமயா இவ்வளவு நேரம் கத்தின?" என்று புன்னகையோடு சற்று நிறுத்தியவன், "பொண்டாட்டி..." என்று முடிக்க,
"அடடா... அதிசயம் தான்.." இப்போது கேலி செய்வது அவளது முறையாயிற்று, அதுவும் அவனின் கைவளைவில் நின்று கொண்டு தான்.
“என்ன அதிசயம்?"
“இல்ல... என்னை உங்க பொண்டாட்டின்னுலாம் ஞாபகம் வெச்சு இருக்கீங்கல்ல.. பெரிய விஷயம் தான் மாமா..." உண்மையில் அவளுக்கு சற்று வருத்தம் தான். அவனது மனைவியாக கடமையை செய்ய வேண்டும் என்ற உறுத்தல் சில நாட்களாக அதிகமாக இருந்தது. அதற்கு காரணம் அவளது தாயும் கூட!
"அதனால தான் வெப்பன்ஸ தூக்கிட்டியா?" என்று சிரித்தபடி கேட்டவன், அவளை தன்னிலிருந்து பிரித்தபடி,
"சாப்ட்டுட்டு போய் சீக்கிரம் படுடி.. லேட்டாகுது..." என்று தட்டை நோக்கிப் போக, அவனை எரிச்சலாக பார்த்தாள்.
“அது எனக்கு தெரியும்...” கடுகடுவென்று கூறியவள், அதே கடுப்பில் இரவு டிபனை முடித்து விட்டு அறையை தஞ்சமடைந்தாள்..
தங்தங்கென்று அதிர்ந்து நடந்தபடி சென்ற அவனது மனைவியை பார்க்கையில் அவனுக்குள் ஏதோவொரு சொல்ல முடியாத உணர்வு. அதிலும் அவனது கைவளைவிற்குள் நின்றவளை பார்த்தபோது அந்த உணர்வு உச்சத்தை எட்டியிருந்தது.
*************
"அப்ப எல்லாம் உன்னை ரொம்ப தேடும் மது. மனசும் உடம்பும் உனக்காக தவிக்கும். உன்னை நேர்ல பாத்த உடனே எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா. வாழ்க்கையிலே அப்படி நான் சந்தோசமா இருந்ததே இல்லை டி. உன்னை பாக்க அப்படி துடிச்சேன். நீ எங்க இருக்கன்னு கூட எனக்கு தெரியாது. அவ்வளவு பெரிய திருச்சியில் நான் எப்படி தேடுவேன். கடைசி வர உன்னை பாக்க முடியாது, உன்னோட நினைப்புல வாழனும் தான் முடிவு பண்ணி வச்சிருந்தேன்.
உன்னை பாத்ததும் என் கண்ணையே என்னால நம்ப முடியலை தெரியுமா", என்றான்.
"மஹாவுக்கு எப்படி தெரியும் மாமா?"
"ஹ்ம்ம் ஒரு தடவை என்னை அறியாமலே சொல்லிருக்கேன் போல? அவ தான் அன்னைக்கு ஹோட்டளுக்கு உன்னை பாக்க பிளான் பண்ணி கூட்டிட்டு வந்தா"
“மஹா சரியான வாலு மாமா, "
"ஹ்ம்ம் ஆமா நிறைய பண்ணுவா. உன் போட்டோவெல்லாம் சுட்டுட்டு வருவா"
"அவளுக்கு இருக்குற ஆசை கூட உங்களுக்கு இல்லை போங்க"
"என்னோட ஆசையோட அளவை என் கண்ணு உனக்கு சொல்லலையா?
தெரியுது தெரியுது திருட்டுத்தனமாக பார்க்கிறது
நினைவு இல்லையாடி”, என்று கேட்டவனின் உதடுகள் அவள் கழுத்தில் ஊர்வலம் போனது. அவன் தொடுகையில் சிலிர்த்தது அவள் தேகம்.
"இப்படி எல்லாம் உன்னை நெருங்கி இருக்கணும்னு தோணும் டி. ஆனா நீ என்ன மன நிலைல இருக்கன்னு தெரியாது, அதனால தான் விலகியே இருந்தேன்", என்று சொல்லி கொண்டிருந்தவனை அவளும் இறுக்கி அணைத்து கொண்டாள்.
அவள் மேனியில் பதிந்த அவனுடைய கை எல்லை மீற ஆரம்பித்த போது "அத சொன்ன மகிழனின் வாயை விரலால் மூடினாள் மது.
அவள் கையை விலக்கி விட்டு "அன்னைக்கு வேற மாதிரி இருந்த. ஆனா இப்ப எல்லாமே வேற மாதிரி இருக்க்..", என்று சொன்னவனின் உதடுகள் அவள் உதடுகளால் சிறை பட்டது.
அதில் அவன் வேகமும் கூடியது. மொத்தமாக அவளை ஆக்கிரமித்து விட்டு தான் விலகினான். களைப்புடன் அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளின் நெற்றியில் முத்தமிட்டான் மகிழன்.
“நீங்க மட்டும் என்னவாம்? பெரிய மீசை எல்லாம் வச்சு, அழகா கம்பீரமா மாறிட்டிங்க. சரியான முரடு ", என்றாள் மது.
அவனை பார்த்து முறைத்தவள் "இன்னும் அதிகமா டீல் பண்ணா தாங்காது பாஸ். அப்புறம் என்னை மறுபடியும் பாத்த அப்புறம் நான் தான்னு கண்டு பிடிச்சிடீங்களா?", என்று கேட்டாள்.
"அது எப்படி மது கண்டு பிடிக்காம பேன். உருவம் மாறலாம். ஆனா உன் முகம் எப்படி மறக்கும். அப்ப
சாரிடா மது என்னால ரொம்ப கஷ்ட பட்டிருப்பல்ல. உன் வாழ்க்கையையே கெடுத்துட்டேன். என்னால நீ தான் அத்தை மாமா கிட்ட அசிங்க பட்டிருப்ப.?"
"இல்லை, அழுதுட்டே இருப்பேன். செத்துரலாம்னு இருக்கும். அம்மா கொஞ்ச நாள் ஆறுதலா இருந்தாங்க. அம்மாக்கு என் மனசு தெரியும் இத்தனை வருசம் நான் தைரியமாக இருக்க காரணம் அம்மா தான். "ஒரு நிமிடம் மாமா' என்று எழுந்து சென்றவள் நிலைமாடம் திறந்து ஒரு பேனாவை எடுத்து வந்தாள்.
"இந்த பேனா நினைவு இருக்க மாமா
மகிழன் இல்லை என்று உதட்டை சுளித்தான்.
நான் டென்த் படிக்கும் போது நீங்க வாங்கி கொடுத்தது. உங்க மேல ஆசை வந்தபின் வாங்கித்தந்த முதல் கிப்ட், அது நீங்க என் கூடவே இருக்குற மாதிரி இருக்கும்" உங்களுக்கு எதுவுமே நினைவு இல்லையா மாமா..
அவள் சிணுங்கி, செல்லம் கொஞ்சி ஆசை ஆசையாக சொல்லும் காதல் கதையை அப்பாவியாய் கேட்டு ரசித்த அந்த காதல் கள்வன்.அவளை இறுக்கி அணைத்து அவள் முகமெல்லாம் முத்தத்தை பதித்தவன்" மேலும் முன்னேற...சற்றென்று அவன் மூக்கை கடித்து வைத்தாள் அவள். அவனுக்கு வலித்துவிட சட்டென்று முகம் மாறியவன், பின் சிரித்து கொண்டே "ஏய் லூசு வாலிக்குதுடி" என்றான்.
ஏன் மாமா சின்ன வயசுல நடந்தது எதுவுமே உனக்கு நினைப்பு இல்லையா? வீட்ல தங்குறது, நாம சண்டை போட்டது, நான் முதன் முதலாக உங்களுக்கு டீ போட்டுத் தந்தது, அம்மாவுக்கு சமையலில் புதுசா நீங்க ஏதோ ரெசிப்பி சொல்லி கொடுத்தது.
அந்த தருணம் அழகானது மது, அதை என்னால எப்படி மறக்க முடியும். மறக்க கூடிய நாட்களா அது.
உங்க கையெழுத்து குண்டு குண்ட அழகா இருக்குன்னு நான் சொன்னதும். என்னையும் அதே போல எழுத வச்சது. இப்பவும் நீங்க சொல்லி தந்த எழுத்து வடிவம் தான் மாமா.
கலீல் ஜிப்ரான் "முறிந்த சிறகுகள்' புத்தகம் ஞாபகம் இருக்க
****************
காலையில் மது கண்விழித்த போது கணவன் அருகில் இல்லை. 'இத்தனை சீக்கிரமாக எங்கே போயிருப்பார்?'
யோசனையோடே குளித்து முடித்தவள்.
சமையல் அறை வந்தாள்.
"அம்மாச்சி?"
"வாடா. என்ன சீக்கிரம் எழுந்து வந்துட்ட, டீ வச்சி கொடுக்கட்டுமா?"
"மாமா எங்க?"
"அவன் காலையிலேயே கிளம்பிப் போய்ட்டானேம்மா!"
"போயிட்டாங்களா?"
"ஆமாண்டா. நீ அசந்து தூங்குற தொந்தரவு பண்ண வேணாம்னு என்கிட்ட சொன்னான்."
"ஓ..." பார்வதி கொடுத்த டீயை வாங்கிய மது சமையலறைக்குப் பக்கத்தில் இருந்த படிக்கட்டில் அமர்ந்து கொண்டாள்.
உண்மையிலேயே மாமா வேலையாகப் போயிருக்கிறானா? இல்லை... தன்னைத் தவிர்க்கிறானா? யோசனை மேலிட டீ இப்போது லேசாகக் கசந்தது. நேற்று இரவு தன் அருகாமையைக் கணவன் நாடி இருந்தாலும் தான் பேசிய வார்த்தைகள் அவனைக் காயப்படுத்தி இருக்கும் என்று மதுவிற்கு இப்போது புரிந்தது. அவள் அவனை வேண்டாம் என்று எப்போதும் சொல்லவில்லையே!
கணவனை உடனேயே பார்க்க வேண்டும் போல மனம் கிடந்து தவித்தது.
போதாததற்கு அந்த அம்மா வேறு சத்தம் போடுகிறார்கள். தலையைப் பிடித்துக் கொண்டாள் மது.
"மத்தியானம் சாப்பிட வருவாங்களா அம்மாச்சி?
"ஒன்னுமே சொல்லலையேடா"
±+++++++++++
ஹாலோ'
"சொல்லுடி புதுப்பொன்னு எப்படி இருக்க..
"ரெம்ப ரெம்ப நல்ல..
நேத்தே கால் பண்ண நினைச்சேன் அப்புறம் புதுப் பொண்ணு பிசியா இருப்பீங்க அதன் எடுக்கல..
"பர்ஸ்ட் நைட் எப்படி' போச்சு
"சீ போடி..
சீ சும்மா சொல்லுன்னா..
"ம்ஹூம்... இல்லை."
இல்லைன்னா புரியல
“நான் தூங்கிட்டேன்."
"என்னது!? தூங்கிட்டீயா!? அப்ப ஒன்னும் நடக்கல்லையா?"
"ஹா... ஹா... இல்லையா."
“அடச்சீ! நல்லா ஏமாத்திட்ட. நானும் பெரிசா ஒரு ரொமான்ஸ் வரப்போகுதுன்னு நினைச்சிட்டன்."
“ரொமான்ஸ் எல்லாம் ஒன்னுமே இல்லை கார்த்தி.
××××××××××÷××÷÷÷
திருமணம் முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியிருந்தது.
திருமணம், விருந்துகள், குலதெய்வ வழிபாடு, கறிவிருந்து என்று ஒரு மாதம் போனதே தெரியாமல் பறந்தது.
இவற்றை தவிர அவர்களின் வாழ்வில் வேறு எந்த மாற்றமும் வந்துவிடவில்லை.
மது தனது கணவனை யாரிடமும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. மற்றவர்கள் முன் சிரித்துப்பேசி இணக்கம் காட்டியவள், தனிமையில் நெருக்கம் காட்ட முடியாமல் தவித்தாள்.
*******
உள்ளே வந்த மகிழன், அவளை கட்டிலில் படுக்க சொன்னவன், எப்பொழுதும் போல தரையில் படுத்துக் கொண்டான்.
'எல்லாத்தையும் கண்ணை பார்த்தே புரிஞ்சி செய்வார். இப்ப மட்டும் என்னவாம்? வாயைத் திறந்து சொல்லணும்னு நினைக்கிறாரா?
மக்கு மாமா.... போடா..... நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்' என மது முறுக்கிக் கொள்ள,
'கொஞ்சம் கொஞ்சமா இப்பதான் என்னை பார்க்கிறா. நான் அவசரப்பட்டு அதனால கோவத்துல விலகி போயிட்டா...... என்ன பண்றது? வேண்டாம். கொஞ்ச நாள் வெயிட் பண்ணுவோம்' என மகிழன் நினைத்துக்கொள்ள, இருவரும் ஒருவர் மனது மற்றொருவருக்கு ஆரம்பித்தாலும், தயக்கம் னும் மாய போர்வையால்
ஒரே ஒரு ஐஸ்கிரீம் வண்டி மட்டும் நிற்க, மகிழன் சென்று மதுவுக்கு பிடித்த ஐஸ்கிரீம் வாங்கி வந்தான். அவனுக்கும் ஒன்று வாங்கி வந்திருந்தான். தன்னுடையதை ஒரு வாய் சாப்பிட்டவள், அவனுடையதை பார்த்து “எனக்கு இதுவும் சாப்பிடணும் போல இருக்கு" என்றாள்.
"இரு வாங்கிட்டு வரேன்" என மகிழன் எழப் போக, அவனைத் தடுத்தவள் அவன் ஐஸ்கிரீம் வைத்திருந்த கையை பிடித்து, தன் வாய்க்கருகில் கொண்டு சென்று அவனது ஐஸ்கிரீமை சுவைத்தாள்.
சிறு சிரிப்புடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்த மகிழன், "எனக்கு கொஞ்சம் மிச்சம் வைக்கிறியா?" எனக் கேட்டான்.
உணவை முடித்துக்கொண்டு நீண்ட நேரம் ஹாலில் இருந்தவன், தாமதமாகவே அறைக்கு வந்தான். படுக்கச் செல்லாமல், மதுவையும் கண்டுகொள்ளாமல், ஒரு பைலை எடுத்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டான்.
அவனுக்கு அருகில் வந்த மது, குரலை செரும, நிமிர்ந்து பார்த்தவன் கண்டுகொள்ளாமல் மீண்டும் பைலில் மூழ்கினான்.
"மாமா" என மெல்ல அழைத்தாள் .
பதில் ஏதும் வராததால், மீண்டும் அவளே, "ஏன் மாமா இவ்வளவு நேரம்?" எனக்கேட்டாள்.
"கொஞ்சம் வேலைடா" என அவளை நிமிர்ந்து பார்க்காமலேயே பதிலளித்தான் மகிழன்.
"ஏன் என்னை அவாய்ட் பண்ணுரீங்க? என குரல் உடைந்து மது கேட்க அவளை நிமிர்ந்து பார்த்தான்.
கண்களிலிருந்து எப்போது வேண்டுமென்றாலும் கண்ணீர் கரையுடைக்க காத்திருந்தது.
"இரு நான் முகம் கழுவிட்டு வரேன்" என்று அவள் குளியலறை சென்று திரும்ப,
இவன் மீண்டும் பைலில் ஆழ்ந்திருந்தான்.
"என்ன திரும்ப வந்து இங்க உட்கார்ந்துட்ட?" எனக் கேட்டாள் மது.
"நாளைக்கு சைன் பண்ண வேண்டிய அக்ரிமெண்ட் பார்த்துட்டு வந்துடுறேன். நீ கு" என்றான் மகிழன்.
"என்ன பண்ற மாமா?" எனக்கேட்டாள்.
"உன் மனசுல என்மேல் நம்பிக்கை வர்ற வரைக்கும், நான் இங்கேயே படுத்துக்கிறேன்” என்றான்.
"நீ பெருசு பண்ற மாமா"
"நான் பெருசு பண்றேன்னா?" என கோபமாகக் கேட்டான் மகிழன்.?"
சிறிது நேரத்தில் தூங்கியும் விட்டான். நடு இரவில் கண் விழித்த போத, மது
அணைத்துக் கொண்டு படுத்திருந்தாள். இவன் அவனுடன் கீழேயே அசையவும் அவளும் உறக்கம் கலைந்து கண் திறந்தாள்.
அவள் கையை தன் மீதிருந்து பிரித்தெடுத்தவன் "மேலே போய் படு" என்றான்.
அவள், அவன் சொல்வதை சட்டை செய்யாமல் மீண்டும் அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு உறங்க முற்பட்டாள்.
"மது..... ப்ளீஸ் என்ன படுத்தாதே" என்றான் மகிழன்.
"என்ன படுத்துறேன்?" என கண்களை திறக்காமலேயே கேட்டாள் மது.
"நீ இப்படி படுத்தா எப்படி தூக்கம் வரும்?'
எனக்கு இப்ப எல்லாம் தனியாக படுத்தால் தூக்கம் வரல.
மது திரும்பி வந்ததிலிருந்து அவளிடம் காணும் மாறுதல்கள் ஏனென்று தெரியாது மகிழனை வதைத்தது. ஒரே அறையில் இருந்த போதும் காதல் இல்லாத ஒரு விலகளை உணரச் செய்தாள். அறைக்குள் மட்டுமல்ல வெளியிலும் அவள் தேவைகளை பார்த்து செய்தவள் இன்று விலகி விலகிச் சென்றாள். கடமையே என்று அவள் பரிமாறும் உணவு தொண்டை தாண்டி இறங்க மறுத்தது. மது அவனிடம் அதிகம் பேசுவதில்லை தான் ஆனால் இப்போது முற்றிலும் மௌனமாகி விட்டாள். அதிக நேரங்கள் அவன் தாயுடன் இருந்தாள்.
************
நான் இந்த ரொம்பவே பேராசைக்காரி மாமா. எனக்கு மட்டும் தான் என் மாமா.. மூச்சுமுட்ட எனக்கு உங்க காதல் வேணும்.
“என்ன பார்வை இது? உன் கண்கள் உயிரை அப்பிடியே உருவி எடுக்குதுடா.” தன் பேச்சில் தலைகுனிந்த பெண்ணை தன்னோடு இன்னும் சேர்த்தணைத்தவன்,
மது அனைத்தும் அதிவேகத்தில் நடப்பது போன்றே இருந்தது.
கதவை மனைவி திறக்க அதை எதிர்பார்க்காத மாதவன் திடுக்கிட்டுப் போனான். கூடவே அவள் நின்றிருந்த தோற்றம்! அவன் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. பல்லவி இதமாகப் புன்னகைத்தவள் எதுவும் பேசாமல் கிச்சனுக்குள் போய் விட்டாள்.
கையில் பால் கிளாஸோடு அவர்கள் ரூமிற்கு அவள் வந்தபோது கணவனின் கண்கள் அவளைக் கேள்வியாகப் பார்த்தது. குளியலை அப்போதுதான் முடித்திருந்தான். மது அவன் கண்கள்கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. அவன் பாலைக் குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தாள்.
அவன் முன்னுச்சி மயிர் லேசாக நனைந்திருக்க தன் புடவைத் தலைப்பால் அதை உரிமையாகத் துவட்டி விட்டாள். மகிழன் அந்தச் செய்கையிலேயே முழுதாகக் காலியாகிப் போனான்.
துவட்டி முடித்தவள் அந்த முகத்தைத் தன்னருகே இழுத்து முழுவதும் முத்தம் பதித்தாள். மகிழன் கிறங்கிப் போனான். மனைவி அத்தோடு நிறுத்த விரும்பவில்லை என்று தெரிந்த போது கள்ளுண்ட வண்டாகிப் போனான்.
****************
சகோதரிக்கு தங்கை குடும்பம் நடத்தும் அழகை பார்த்து கன்னாபின்னாவென கோபம்! கோபம் தாளாமல் மது தனிமையில் கடியோ கடியென்று கடிந்து வைத்தார்
"என்ன மது... உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா?" எடுத்த எடுப்பிலேயே அவர் இப்படி கேட்கவும், புரியாமல் பார்த்தாள்
இதெல்லாம் உனக்கே நல்லாவா இருக்கு?"
"க்கா.. சொல்றதை தெளிவா சொல்லு.."
"நீயென்ன சின்ன பிள்ளையா தெளிவா சொல்ல?"
"அய்யோ அக்கா ஒண்ணுமே புரியல
“நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணி தானே இந்த கல்யாணம் நடந்தது. அப்புறம் என்னடி பிரச்சினை?
என்ன மது... பதிலே பேச மாட்டேங்கிற?"
"கல்யாணத்துல கூட உம்முகம் அவ்வளவு சந்தோஷமா இல்லை. சித்திகூட நேத்து எங்கிட்டப் பேசினாங்க. உங்களுக்குள்ள எதுவும் நடந்த மாதிரித் தெரியலைன்னு." இப்போது திடுக்கிட்டு நிமிர்ந்தாள் மது.
கவிதா அவளையே கூர்ந்து கவனிக்க தலையை குனிந்தாள் மது.
"உங்க ரெண்டு பேருக்குள்ளும் ஒன்னுமே இல்லையா டி ?" தமக்கையின் கேள்விக்கு பதில் கூறத் தெரியாமல் விழித்தாள்.
"என்னடி ஆச்சு உனக்கு?
மது மௌனமாக இருந்தாள். வர்சினி தரும் மனஉளைச்சலை சகோதரியிடம் சொல்ல அவள் பிரியப் படவில்லை. அந்த நினைப்பே அவளுக்குக் கசந்தது. தன்னைத் தவிர யாரும் அவனை ஆர்வமாகப் பார்ப்பது கூட பிடிக்காதவள். ஒருத்தி மாமனை உயிராய் நேசித்து மரணம் வரை சென்று மீண்டுள்ளதை எப்படி சொல்லத் துணிவாள்.
"இல்லக்கா கொஞ்ச நாளைக்கு..
"பொய் சொன்ன கொன்னுருவேன், யாருக்கு கதை சொல்ற... மாமன் கேட்ட உயிரையே கொடுக்கிறவ நீ.. என்னடி ஆச்சு உண்மையை சொல்லு..?
Comments
Post a Comment