மது மகிழன் - 6

காலையில் மது எழும்போது மாமன் அருகில் இல்லை அன்றைக்குப் மது வெகுவாகச் சலித்துப் போனாள். வெளியே சிறிது தூரம் நடந்துவிட்டு வந்தவள். குளித்து முடித்து யமுனா வீட்டுக்கு வந்தாள், காலை எட்டு மணி மஹா நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தாள். யமுனா சமையலில் இருக்க

"அத்தை நான் இந்த வெங்காயத்தை வெட்டவா' என்று அங்கே இருந்த கத்தியை எடுக்க..

"அதெல்லாம் எதுவும் வேண்டாம் டா.. அத்தை பார்த்துக்குவேன்' உனக்கு டீ போட்டு தரவா?  என்று யமுனா முடிக்கும் முன்

"அம்மா டீ" என்று தூக்கம் களையாமல் வந்து நின்றாள் மஹா, சமையல் அறையில் மதுவை பார்த்ததும், "ஹாய் செல்லம்' என்று அவளை கட்டிப்பிடித்தாள். யமுனா கரண்டியால் இரண்டு அடிபோட்டு குளிக்க விரட்ட, மதுவையும் இழுத்துக்கொண்டு தன் அறைக்குள் ஓடினாள். 

குளித்து முடித்து வந்த மஹாவுடன் உணவு மேசையில் இருந்தாள் மது, உடன் மஹாவின் தம்பி கௌதம். மஹா சேலையில் இருந்தாள், வடிவமைப்பு மது. அவர்கள் இருவரின் கவனமும் உணவில் இருக்க, மதுவின் எண்ணம் முழுவதும் மாமான் நிறைந்திருந்தான். சாப்பாட்டில் மனம் ருசிக்கவில்லை. 

"அம்மா இது அக்காவுக்கு ஆறாவது தோசை' என்றான் கௌதம்

தம்பியை எட்டி அடித்த மஹா "ம்மா இதோட நாளுதாம்மா' என்று இன்னொரு தோசையை எடுத்துக் கொண்டாள்.

தன்னை சுற்றி நடக்கும் எதிலுமே கவனம் இல்லாமல் இரண்டு தோசையை பிய்த்து போட்டு விரால்களால் விளையாடிக் கொண்டிருந்த மதுவையே பார்த்துக்கொண்டு இருந்தார் யமுனா..

"மது என்னடா... சாப்பிடு' 

"அத்தை எனக்கு பசியே இல்லை' இதை வீட்டுக்கு எடுத்துட்டு போய் லேட்டா சாப்பிடவா..?

யமுனாவிற்கு அவள் ஏக்கம் புரிந்தது. திருமணமத்திற்கு பிறகு முதல் முறையாக கணவனை பிரிந்திருக்கிறாள். மனது ஒருநிலையில் இல்லை.

"சரிடா' என்று தட்டை வாங்கி  தோசைகளை டிபன் பாக்சில் போட்டு அவள் கையில் கொடுத்தார். இரண்டு குடும்பத்திலும் உணவை வீணாக்குவது யாருக்கும் பிடிக்காது.

வீட்டுக்கு வந்தவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. டீவி பார்க்கும் பழக்கமும் இல்லாததால் தனிமை மிகவும் படுத்தியது.

'அம்மாவோடு பேசலாம்' என்று கைபேசியை எடுத்து தாமரையை அழைத்தாள்.  தாமதிக்காமல் அவரும் அழைப்பை ஏற்றார்.

"மது...என்ன செய்ற?"

"இருக்கேன்." விரக்தியாக சுரத்தேயில்லாமல் மகளிடம் இருந்துவந்த பதில் தாய்க்கு அத்தனை நல்லதாகப் படவில்லை.

"என்னாச்சு மது?" என்றார் அவசரமாக.

"ஒன்னுமில்லை ம்மா."

“அப்ப ஏன் வாய்ஸ் டல்லடிக்குது? உடம்புக்கு முடியலையா என்ன?"

“அதெல்லாம் ஒன்னுமில்லை." அந்தக் குரலில் அத்தனை சலிப்பு.

"நீ முதல்ல வீடியோ கால் பண்ணு"
உன்னை நான் பார்க்கணும்" அம்மா கட்டளைப் போடவும் பெண் பணிந்தது. திரையில் தாமரைவின் முகத்தைப் பார்த்ததும் மதுவின் கண்கள் கலங்கிப் போனது.

"மது, என்னாச்சுடா? எதுக்கு இப்போ கண் கலங்குற?" மகி எங்கடி? தாய் அங்கே பதற கண்களில் வழிந்த நீரைத் துடைத்தபடி

"மாமா என்னை தனியா விட்டுட்டு போய்ட்டார்" என்றாள் குழந்தையாய்

"என்னடி சொல்ற?" தாமரை பதறினார்.

 "நான் நல்ல தூங்கிட்டேன்மா, என்னை எழுப்பி கூட சொல்லாம, காலையிலேயே உன் தம்பி பாண்டிச்சேரி போய்ட்டாங்க,

"ஏன் உன்கிட்ட சொல்லலையா?

"நைட்டு சொன்ன மட்டும் போதுமா?" மகளின் குரல் தம்பியை குறை சொல்லவும் தாமரை இப்போது நிதானித்தார்.

"போன் பண்ணிப் பேசேன்."

"கூப்பிட்டுட்டேன், எடுக்கலா, சைலண்ட்ல போட்டிருக்காங்க..

"ஓ.." மகளின் பிரச்சனை என்னவென்று புரிய இப்போது தாமரை மனதுக்குள் சிரித்துக் கொண்டார்.

"தனியாக விட்டுட்டு போயிருக்கான், எப்பிடியும் இன்னைக்கு நைட்டுக்குள்ள வந்திருவான்டா?"

"ம்... ம்.... போம்மா" ஏதோ தாமரைதான் அவள் கணவனை பாண்டிச்சேரிக்கு அனுப்பியது போல சலித்துக் கொண்டாள் மது.

"என்னடா? பச்ச புள்ள மாதிரி அழுதுட்டு இருக்க"

"ம்ப்ச்..."

"நீ ஏதாவது சாப்பிட்டியா மது?"

"தோசை சாப்பிட்டேன்."

"மதியம் என்ன பண்ணப் போறே?"

"நீங்க ஏம்மா தொண தொணக்கிறீங்க? இப்ப நான் சமையல் பண்ணி இங்க யாரு சாப்பிடப் போறா?" அம்மாவின் மேல் சட்டென்று பாய்ந்தாள் பெண்.

"அதற்கு மேல் பொறுக்க முடியாமல் குலுங்கி அழுத பெண்ணை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் தாமரை அமைதியாக இருந்தார். மகள் அழுவது கவலையாக இருந்தாலும் அம்மாவின் மனது நிறைந்து போனது. தம்பி தன் மகளை நன்றாகப் பார்த்துக் கொள்கிறான் என்பது அவருக்கு ஏற்கனவே தெரியும். ஆனால்... எத்தனை அன்னியோன்யம் அவர்களுக்குள் இருந்தால் இந்தச் சிறு பிரிவிற்கு மகள் இவ்வளவு வேதனைப்படுவாள்!

"எங்கடி போய்டான் அவன்?" இந்த இருக்கு பாண்டிச்சேரி' தாய் பேச்சை மாற்றவும் பெண்ணும் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

"அம்மா இனி நீ மாமாவை அவன் இவன்னு பேசக்கூடாது" அது என்ன ஒரு மாப்பிள்ளையை மரியாதை இல்லாமல் பேசுறது.

"ஏண்டி... நீ கட்டுறதுக்கு முன்னாடியே அவன் எனக்கு தம்பி டி, இப்ப என்ன புதுசா ரூல்ஸ் எல்லாம் போடுற..

அப்பாவே இப்ப எல்லாம் வாங்க, போங்கன்னு மரியாதையா பேசுறார், நீ என்ன அவன், இவன்னு

"சொல்லுவடி...சொல்லுவ' சரி எதுக்கு பாண்டிச்சேரி பேனான். சித்தியை அழைச்சிட்டு வரவா..

"இல்லம்மா அவர் பிசினஸ் சம்மந்தப்பட்ட முக்கியமான யாரையோ பார்க்கனும் போல"

"அதானே... இல்லைன்னா உன்னைத் தனியா விட்டுட்டுப் போயிருக்க மாட்டானே.

"அப்பவும் நீயும் கூடவா மது ன்னு கூப்பிட்டாங்க." சிரித்தாள் பெண்.

"போயிருக்கலாமே மது."

"போன உடனே திரும்பனும், அதுக்கு இங்கேயே இருக்கலாமுன்னு நினைச்சேன், "மாமா இப்பிடிப் போனதே இல்லையா? அதான்... கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு." சிரித்தபடி அன்னையிடம் அசடு வழிந்தாள் பெண்.

"புரியுது மது."

"என்னை எந்த வேலையும் பெருசாப் பண்ண விடமாட்டாங்க, காலையில் எனக்கும் சேர்த்து அவங்களே டீ போடுவாங்க தெரியுமா?."

"ம்... ரெம்ப தாண்டி" இப்போது அம்மா சிரித்தார்.

"அம்மாச்சி பாண்டிச்சேரி போன பின்னாடி எல்லா வேலையிலும் மாமா எனக்கு ஹெல்ப் பண்ணுவார்.. அம்மா மாமா சூப்பரா சமைப்பார் மா!

"உன்கிட்ட மாட்டிக்கிட்டு பாவம்டி என் தம்பி. பெருமூச்சு விட்டார் தாமரை.

"தம்பி பாவம்னா நீ வந்து சமையல் பண்ணு'

"ஆமாண்டி உன்னை கட்டிக்கொடுத்து சமையல் வேலையும் நான் வந்து பார்த்து தர்றேன். அவனை ரெம்ப படுத்தாத மது. பாவம்டி அவன், சின்ன வயதில் இருந்தே தனிய கஷ்டப்பட்டு  வளர்ந்தவன்...

என் மாமாவை நான் நல்ல பார்த்துக்குவேன், நீ அப்பாவை பார்த்துக்க.. நேத்து போன் பேசும் போது இருமிக்கிட்டே இருந்தார். 

"சரி மது, அம்மா சமையலை பார்க்கணும், நீ தனியா இருப்பேன்னு எப்பிடியும் சீக்கிரமாத்தான் வரப் பார்ப்பான், "கவலைப்படாதே... மாமா வந்திருவாங்க."

"சரிம்மா?' 'மது அழைப்பை துண்டித்து விட்டு படியேறி தாங்கள் அறைக்குள் வந்தாள். 

அம்மாவிடம் பேசிய பிறகு மனது கொஞ்சம் லேசானது போல இருந்தது. ஆனால் இப்போது லேசாக வெட்கம் வந்தது. எதற்குக் காரணமே இல்லாமல் இப்போது அம்மாவிடம் எரிந்து விழுந்தோம்?! அம்மா என்ன நினைத்திருப்பார்கள்! ஒரு நிமிடம் முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள். சிரிப்பு வந்தது. வாய்விட்டுச் சிரித்தாள். பின் தங்கள் அறையில் இருந்த மகிழன் புகைப்படத்தை எடுத்து மார்போடு அணைத்து கொண்டாள்.

"எல்லாம் உங்களால வந்தது மாமா! என்னைப் பைத்தியகாரி மாதிரி வேலை பார்க்க வெக்கிறீங்க!" "இன்னைக்கு வீட்டுக்கு வாங்க, அப்புறம் இருக்கு உங்களுக்கு! ஒரு போன் கூட பண்ணலை!" அவன் புகைப்படத்தோடு கொஞ்சி கொஞ்சி பேசியபடியே படுத்திருந்தாள்

பகலுணவைச் சமைத்து கேரியரில் போட்டு எடுத்து வந்திருந்தார் யமுனா. காலையில் மது கொண்டு வந்த டிபன் பாக்ஸ் காலியாகி இருந்ததை பார்த்து உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டார்.  . 

"மது சாப்பிடலாமா' எனக்கு பசிக்குது

"அத்தை நான் லேட்டா சாப்பிடுறேன்' தயங்கி தயங்கி சொன்னாள்.

"உனக்கு பிடித்த மட்டன் பிரியாணிடா'
வா உட்காரு, 

"அத்தை இப்பதான் தோசை சாப்பிட்டேன்' நெளிந்தாள் பெண்.

உனக்காக அத்தை ஆட்டோ பிடித்து மார்க்கெட் போய் மட்டன் வாங்கியாந்து பார்த்து பார்த்து சமைத்திருக்கேன், வா நான் ஊட்டி விடுறேன் ரெண்டு வாய் சாப்பிடுடா..


ஆனால் மகிழன் அத்தனைச் சீக்கிரத்தில் அன்றைக்கு வீடு வந்து சேரவில்லை. பிற்பகல் நான்கு மணி போல போன் பண்ணினான்.

"மாமா."

"மது வர கொஞ்சம் லேட்டாகும் போல இருக்குடா."

"சாப்பிட்டீங்களா?"

"நீ சாப்பிட்டியா மது?"

"ம்ம்' அத்தை பிரியாணி பண்ணி தந்தங்க, "மட்டன் பிரியாணி சூப்பரா இருந்துச்சு."

"நல்ல சாப்பிடியா'

"ம்ப்ச்' நீங்க இல்லாம என்னால சாப்பிட முடியல மாமா." அத்தை தான் ரெண்டு வாய் ஊட்டி விட்டாங்க..

“அடிதான் வாங்கப் போறே, முதல்ல ஒழுங்கா உட்கார்ந்து சாப்பிடு மது, ஏழு மணிக்குள் நான் வந்திடுவேன், பயப்பிடாதே ."

"ம்...." அத்தோடு மகிழன் பேச்சை முடித்துவிட்டான். சாப்பிடவும் பிடிக்காமல் தூக்கமும் வராமல் மது திண்டாடிப் போனாள். மகிழன் மேல் அவளுக்கு அளவுகடந்த காதல் இருந்தது உண்மைதான். ஆனால்... ஒரு பொழுது அவனைப் பார்க்காவிட்டால் தான் இத்தனைத் தூரம் வேதனைப்படுவோம் என்பது அவளுக்கு அன்றைக்குத்தான் புரிந்தது. ஐந்து வருடங்கள் அவனை மனதில் மட்டும் சுமந்து வாழ்ந்தவளால், இன்று அரைநாள் பிரிவை தங்க முடியவில்லை.

மகிழன் வீடு வந்து சேர்ந்த போது இரவு எட்டு மணி தாண்டி இருந்தது. மாடியிலிருந்து வீதியையே பார்த்திருந்த மது அவன் கார் வருவதை தூரத்தில் வரும் போதே பார்த்துவிட்டாள். இது நேரம் வரை சோர்ந்து போய் கிடந்தவளுக்கு,  அவனைப் பார்த்த கணம் அனைத்தும் மறந்து போனது. எங்கிருந்து தான் அந்த வேகம் வந்ததோ வீதிக்கே ஓடிவந்து விட்டாள்  

காரை உள்ளே பார்க் பண்ணுவதற்காகத் திருப்பிய மகிழன் 
மனைவியைப் பார்த்து விட்டு சட்டென்று காரிலிருந்து இறங்கினான். அவனிடம் காட்டாற்று வெள்ளம் போல ஓடி வந்த பெண் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டது. மகிழன் ஒரு புன்னகையோடு மனைவியை இறுக்கிக் கொண்டான். அன்றைக்கு முழுவதும் அவளைப் பாராதது அவனுக்குமே எதையோ இழந்தது போலதான் இருந்தது.

"ஏய் அம்மு...” அவன் எதையோ பேச ஆரம்பித்த போதும் அவள் அதைக் கருத்தில் கொள்ளவில்லை. அவனை அணைத்தபடி அப்படியே நின்றிருந்தாள்.

"மது நாம ரோட்டில நிக்கிறோம்" அவன் சொல்லிய பிறகே உணர்ந்தவள் மெதுவாக விலகி உள்ளே போனாள். மகிழன் காரை ஷெட்டில் பார்க் பண்ணிவிட்டு உள்ளே வந்தான். பிரியாணி வாசனை மூக்கைத் துளைத்தது. 

"மாமா, சாப்பிடுறீங்களா?"

"இல்லைடா, குளிச்சிட்டு வந்திடுறேன்." வாடிப் போய் நின்றிருந்த மனைவியின் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு மாடிக்குப் போய்விட்டான் கணவன். சற்று நேரத்தில் குளித்து முடித்து விட்டு மகிழன் கீழே வந்த போது டைனிங் டேபிளில் அனைத்தும் தயாராக இருந்தது.

"சாப்பிடுங்க மாமா."

"நீயும் உட்காரு மது."

"ம்ஹூம்... நீங்க முதல்ல சாப்பிடுங்க." சொல்லிவிட்டு அவனுக்கு அருகில் நின்றபடியே பரிமாறியது பெண். முதலில் மகிழன் அதைக் கவனிக்கவில்லை. பாதி சாப்பாடு தீரும் போதுதான் அதை உணர்ந்தான். மனைவியின் இடது கை அவன் தோளை லேசாக உரசிய படி இருந்தது. அன்றைக்கு ஏனோப் புடவைக் கட்டி இருந்தாள். மகிழன் வலது புறமாகத் தன் தலையைத் திருப்பிய போது சேலை மறைக்காத அந்தச் சிறுத்த இடை அவன் கண்ணைக் கவர்ந்தது.

இவை எதையும் கவனிக்காமல் அவன் அருகாமை ஒன்றே போதும் என்பது போல அவனை உரசிக்கொண்டு நின்றிருந்தாள் மது. மகிழன் புன்னகைத்தான்.

"மது..."

"ம்... என்ன வேணும் மாமா, இன்னும் கொஞ்சம் பிரியாணி போடவா?"

"ம்ஹூம்... நீயும் வந்து உட்கார்ந்து சாப்பிடு." மனைவியை இன்னொரு நாற்காலியில் உட்கார வைத்தவன் அவளுக்குப் பரிமாறினான்.

“சாப்பிடு, இன்னைக்கு என்ன ஆச்சுதுன்னா...” என்று பேச ஆரம்பித்து அவள் உண்டு முடிக்கும் வரை அவள் கவனம் அங்கே இங்கே சிதறாமல் பார்த்துக் கொண்டான்.

"ஐயையோ! போதும்."

"இன்னும் கொஞ்சம் சாப்பிடு. அவள் இன்றைக்கு முழுவதும் பெரிதாக எதுவும் உண்டிருக்க மாட்டாள் என்று தெரிந்திருந்ததால் மகிழன் அவள் ப்ளேட்டை இன்னும் கொஞ்சம் நிரப்பினான்.

"போதும் போதும், இதுக்கு மேல முடியாது." சட்டென்று எழுந்துவிட்ட மது இருவரது ப்ளேட்டையும் எடுத்துக்கொண்டு சின்க்கிற்கு நகர்ந்து விட்டாள். அவள் கை கழுவி முடிக்கும் நேரம் மகிழனும் பின்னோடு வந்து அவளை உரசியபடி தன் கையைக் கழுவினான்.

கை கழுவி முடித்துவிட்டு டேப்பை மூடியவன் அவள் சேலைத் தலைப்பால் அவன் கையைத் துடைத்துக் கொண்டான். மறந்தும் அவளை விட்டு இம்மியளவும் நகரவில்லை. மது இப்போது அவளாகவே அவனை நோக்கித் திரும்பினாள். மகிழன் பெண்ணை அமைதியாக வேடிக்கைப் பார்த்தபடி நின்றிருந்தான்.

"மாமா" அவள் உயிரிலிருந்து வந்த வார்த்தை அது. தாபத்தையும் மோகத்தையும் சம விகிதத்தில் கலந்து வந்தது. மகிழன் கண்கள் இப்போது பளபளத்தது, கைகள் பரபரத்தது. ஆனாலும் அமைதியாகவே நின்றிருந்தான். மனைவியின் தொடுகைக்காகக் காத்திருந்தான்.

மது காலதாமதம் செய்யவில்லை. அவன் கழுத்தை வளைத்துத் தன்னை நோக்கி இழுத்தவள் அவன் இதழ்களில் முத்தம் வைத்தாள். 
மென்மையான தன் மனைவியின்
முரட்டுத்தனமான முதல் முத்தத்தை ஆழ்ந்து அனுபவித்தபடி அப்படியே நின்றிருந்தான் மகிழன். ஒரு சில நிமிடங்கள் அந்த சுகத்தில் திளைத்திருந்த பெண் அதற்கு மேல் தாங்க மாட்டாது தொய்ந்து போனது. அவள் கால்கள் துவள ஆரம்பிக்கும் போது மனைவியைக் கைகளில் அள்ளிக் கொண்டான் மகிழன். மாடிக்குப் போகும் வரைப் பொறுத்திருக்க முடியாமல் அவன் உதடுகள் இப்போது மனைவியின் கழுத்து வளைவில் புதைந்தன.

"ஆக... என்னோட ரோஸ் பெட்டலுக்குள்ளயும் ஒரு சுனாமி இருக்கு! அந்த சுனாமி என்னையே சுருட்டப் பார்க்குதே!" குறும்பாகச் சொன்னவன் மனைவியை முழுதாகச் சுருட்டித் தனக்குள் புதைத்தான்.

கலைந்து, கலைத்து, களைத்து சலிக்கும் வரை இரவு நீண்டது! அன்று அவர்கள் இருவரும் தூங்க நெடுநேரம் ஆனது!

இடையில் விழிப்பு வந்த மது அவனை பார்த்தாள்.

"என்ன மாமா தூக்கம் வரலையா?"

"சும்மா பழைய விஷயங்களை ம் நினைச்சு பாத்துட்டு இருந்தேன் மது.

"கொஞ்ச நாள் இந்த தோள்ல சாய மாட்டோமான்னு ஏங்கிருக்கேன் டா. ஆனா இப்ப இந்த தோளே எனக்கு தான் சொந்தமா ஆகிட்டு", என்று சிரித்து கொண்டே அவன் நெற்றியில் முத்தம் பதித்து விட்டு அவன் நெஞ்சிலே சாய்ந்து உறங்கி போனாள் மது.

காலையில் முதலில் மகிழன் தான் கண் விழித்தான். அவன் கைகளுக்குள் புகுந்து, இடுப்பை இறுக்கி அணைத்தபடி தன் காதலன் பரந்த மார்பில் முகம் புதைத்து நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தாள் மது.

தன்னை கட்டிக்கொண்டு சிறு குழந்தை போல் தூங்கும் மதுவை ரசித்தவன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

"பல்லு விளக்காம முத்தம் கொடுக்காத மாமா", என்று கண்களை மூடி கொண்டே சொன்னாள் மது.

"கள்ளி முழிச்சிட்டு தான் இருக்கியா? அப்புறம் என்ன சொன்ன பல்லு விளக்காமலா? நைட் நடு ராத்திரில என் உதட்டை கடிச்சு வைக்கும் போது தெரியலையோ பல்லு விளக்கலைனு"

"ச்சி போ மாமா, அது நைட்டு"

ஏய் பொண்டாட்டி..” இன்னமும் அவன் மேல் மயக்கமாக சாய்ந்திருந்தவளை கிசுகிசுப்பாக அழைத்தான் மகிழன்.

"ஹும்ம்..." பேச முடியவில்லை அவளால்

"ஏய் பட்டுக்குட்டி" என்றான் மகிழன்.

"என்ன புதுசா பட்டுக்குட்டி?"

"ம்.... நீ ரொம்ப சாஃப்ட் அது நேத்து நைட்டு தானே தெரிஞ்சுகிட்டேன்" எனக்கூறி மகிழன் கண்சிமிட்ட,

"ச்சசீ... போ மாமா" அவனை தள்ளி விட்டு விலக முயல, அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான் மகிழன்.

"அப்புறம் நீ என் செல்ல பூனைக்குட்டி..!

பூனைக்குட்டி ஏன்

"பூனைதான் இப்படி பிராண்டி வைக்கும்" என தன் தோளில் இருந்த காயத்தை காட்ட, அடுத்து என்ன சொல்லப் போகிறான் என்பதை கணித்த மது, அவன் வாயை தன் கையால் மூடி, "பேசாத எனக்கு தூக்கம் வருது" என கண்களை மூடிக்கொண்டாள்.

"ம்ஹூம்.... அப்படியா? எங்க என்னை பார்த்து சொல்லு" என மகிழன் சிரித்துக்கொண்டே கேட்க, கண்களைத் திறக்காமலே மதுவும் சிரித்தாள்.

ஏய் பொண்டாட்டி..” இன்னமும் அவன் மேல் மயக்கமாக சாய்ந்திருந்தவளை கிசுகிசுப்பாக அழைத்தான் மகிழன்.

"ஹும்ம்..." பேச முடியவில்லை அவளால்

நீ இவ்வளவு அழகா இருந்த நான் என்ன தாண்டி பண்ண.

"ம்ம்' அவனை இன்னும் இறுக்கி கட்டிக் கொண்டு கண்களை திறக்காமலே பதில் சொன்னாள்.

"எங்கயாவது வெளிய போகலாமா?"

"ம்ம்'  எங்க?

"நீயே சொல்லு..'

"நீங்க பேக்டரி போகலையா?"

"நாளைக்கு போய்க்கிறேன் டா"

அவளருகில் நன்றாக சாய்ந்து படுத்தவன், "மது.." என்றழைத்தான்.

"அடேய்... நீ எதுக்கு இப்படி சுத்தி வளைச்சு கொண்டு போறன்னு எனக்கு தெரியும்..."

"விட்டா செய்வடி. அதுக்கு முன்னாடி உன்னை கண்டம் பண்ணிடறேன் இரு..." என்றவன், வேண்டுமென்றே அவளை சீண்ட,

“எப்பா சாமி... நான் எஸ்கேப்..." என்று எழுந்து தப்பிக்க முயன்றவளை இழுக்க, அவள் பூவாக அவன் மேலேயே விழுந்தாள்.

"ஷப்பா..." என்று வேண்டுமென்றே முகத்தை சுளித்தவன், "பாக்கத்தான்டி ஸ்லிம்மா இருக்க. செம வெயிட்டு..." என்று கூற,

“அப்படீன்னா, வெய்ட் கம்மியா ஒரு பொண்ண பாத்து கரெக்ட் பண்ணிக்கங்க மாமா.." என்றவள், எழ பார்க்க,

"உன்னை கரெக்ட் பண்ணவே பத்து வருடம் ஆகிப்போச்சு, இதுக்கு மேல இன்னொருத்திய நான் கரெக்ட் பண்ணி.... என்றவனின் குறும்பில், அவள் பித்தாகி தான் போனாள்


"அய்யோ மாமா டைம்ம பாரு. நான் குளிச்சிட்டு வரேன்"

"நான் முதுகு தேச்சி விட வரவா?"

"எதுக்கு? ஒரு மணி நேரம் பாத்ரூம் குள்ளேயே கிடக்கவா? கொன்னுருவேன். இங்கயே இருங்க"

"சரிங்க மகாராணி. போங்க"

அவள் குளியலறை போகும் போது அவனுக்கும் போன் வந்தது. எடுத்து பேசத்துவங்கியவன் அவள் குளித்து முடித்து துண்டைக் கட்டி கொண்டு வெளியே வரும்போது தான் முடித்தான். அவளை பார்த்து எப்போதும் போல் இப்பவும் மயங்கியவன் “அப்படியே செம பிகர் டி", என்று சொல்லி அவளிடம் ஒரு கொட்டு வாங்கி கொண்டு குளிக்க சென்றான்.

அவன் குளித்து முடித்து வெளியே வரும் போது புடவை கட்டி கொண்டிருந்தாள் மது.

"வெளிய போறோம்னு சொன்னேன்ல டி? சேலை கட்டுற?", என்று கேட்ட படியே அவளை பின்னால் வந்து அணைத்தான் மகிழன்.

அவன் தலையில் இருந்த நீர் துளிகள் அவள் கழுத்திலும், காதிலும் பட்டு அவளுக்கு சிலிர்ப்பை தந்தது.

"சும்மா இரு மாமா கூசுது"

"மாட்டேன்", என்றவனின் உதடுகள் காதில் பயணித்தது.

"அடங்க மாட்டியா மாமா நீ?"

“நீ தான் அடக்கேன்"

"அடங்கிட்டு தான் மறுவேளை பாப்ப. சரி நான் சேலை கட்டினா பிடிக்கும்னு சொல்லுவன்னு தான் கட்டினேன். வேண்டாமா?"

"இருக்கட்டும் இருக்கட்டும், அப்ப தான் கை அங்க அங்க பிரியா சுத்தும்" என்றவனின் கைகள் அவள் வெற்றிடையில் பதிந்தது"

அவன் தொடுகையில் மயங்கி நின்றாள் மது.

அவளிடம் இருந்து விலகிய மகிழன்

“உனக்கு பொறுப்பே இல்லை டி. கிளம்பனும்னு சொல்றேன்.

நீ அசையாம ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க?", என்று கேட்டு சிரித்தான்.

“நானா டா ஆரம்பிச்சேன். பன்னி ", ஆ படியே அவன் கன்னத்தை கடித்து வைத்தாள்.

 சேலைல வேற கும்முன்னு இருக்க? வெளியே எல்லாம் வேண்டாம். ரூம்கு போவோமா?"

**********

Comments

Popular posts from this blog

மது மகிழன் - 2

mm1

மது மகிழன் - 3