ஐந்து வருடங்களுக்கு முன்... எட்டையபுரத்தில் இருந்து விளாத்திக்குளம் நோக்கி பயணித்த பேருந்தில் இருந்தான் மகிழன். இருள் முழுமையாக விலகாத காலை நேரம். சற்றுமுன் பெய்த மழை சாரலின் ஈரமும், கரிசல் மண்வாசமும் காற்றில் கலந்து வர அந்த சுகந்தத்தை ஆழ மூச்செடுத்து ரசித்தது அவன் மனம். "புளியஞ்சோலை' பெயர்ப் பலகையை பார்த்ததும் மகிழன் மனதில் ஒரு மென்மையான இதம் பரவியது, தாய் பிறந்த ஊர், எட்டையபுரத்தில் இருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது அந்த கிராமம். முதன்மை சாலையில் இறங்கி உள்ளே இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். "ஏப்பா ஓட வந்துருச்சு இறங்கறவங்க வெரசா இறங்குங்க! என்ற நடத்துனரின் குரலுக்கு முன்பே, படிக்கு அருகில் இருந்தான் மகிழன். பேருந்து நிறுத்தத்தில் சேது நின்றிருந்தான், மகிழன் இறங்கி வருவதை பார்த்தவன். "மகிழ! என பாசத்தோடு ஓடிவந்து அணைத்துக் கொண்டான், அம்மா எங்கடா? "அம்மா நாளைக்கு மதினி கூட வருவாங்க' என்னண்ணா இந்த நேரத்தில இங்க இருக்க? யாரு வாரங்க? என்று கேட்க.. "தாமரை அ...
07-08-2008 என்னும் நாட்காட்டியின் தாளைக் கிழித்துக் கொண்டிருந்தார் தேநீர் கடை உரிமையாளர். நடை பயிற்சியை முடித்துக்கிக்கொண்டு நான்கு பெண்கள் படியேறினார்கள். மதுநிலா நமது கதையின் நாயகி. அவளின் தோழிகள் கார்த்திகா, நிகிலா, ஜானகி நடைபயிற்சி முடித்து விட்டு தேநீர் கோப்பையுடன் ஹாலில் அமர்ந்திருந்தார்கள் தோழிகள் நால்வரும். நிகிலா ஏதோ ஒன்றைப் பேச அதற்கு பதிலாக ஜானகி வேறு ஒன்று பேச அந்த வீடே அவர்களது பேச்சில் கதிகலங்கிப் போனது. வழக்கமாக இவ்வாறு ஏதாவது நடக்கும் போது மதுவும் அவர்களுடன் இணைந்து கொண்டு மேலும் வம்பிழுப்பாள். ஆனால் இன்று அவளிருந்த மனநிலையில் அவை எவற்றிலும் தன் கவனத்தைச் செலுத்தாமல் இருக்க அவளை விசித்திரமாக பார்த்த நிகிலா “என்ன ஆச்சு டி? ஏன் டல்லா இருக்க? உடம்புக்கு எதுவும் முடியலடா?” அக்கறையுடன் அவளது நெற்றியில் கை வைத்து பார்த்துக் கேட்கவும் சிறு புன்னகையுடன் அவளைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவள் “ஒண்ணும் இல்லை டி! நான் ரூமுக்கு போறேன்" என்று விட்டு அங்கிருந்து எழுந்து சென்று விட அவளோ கார்த்திகாவிடம் ஜாடையாக என்னவென்று வினவினாள். மது திருச்சி வந்து ஒன்றரை வருடங...
கல்லணை. மதுவும், கார்த்திகாவும் வந்து அரை மணி நேரம் கடந்தும் மகிழன் வரவில்லை. மணிக்கட்டைத் திருப்பி பார்த்தாள் மது. இன்னும் பதினொன்றாவதற்கு ஐந்து நிமிடம் இருந்தது. "உங்க அண்ணன் பெரிய கலெக்டர் சொன்ன டைமுக்கு தான் வருவாரு போல' என்றாள் மது. "எங்க அண்ணன் உனக்கு யாரு' என்னறாள் கார்த்திகா மது கண்களில் தன்னவனை பார்க்க போகும் மகிழ்ச்சி பிராவகமாய் ஊற்று எடுத்து இருந்தது. அவள் மனது ஒரு நிலையில் இல்லை. கார்த்திகா பேசுவது கூட அவள் காதில் விழவில்லை. அவள் இதழ்களில் எப்போதும் ஒட்டி இருக்கும் புன்னகை இன்று ஏனோ பெரியதாக விரிந்து இருந்தது. இருக்காதா பின்னே? எத்தனை வருடத் தவம், கனவு, ஆசை.. உள்ளுக்குள் பொங்கிய மகிழ்ச்சியில் அவள் அருகில் இருந்த கார்த்திகாவை கிள்ளுவதும், அடிப்பதுமாய் படுத்தி எடுத்தாள், அவள் துன்பத்தை எல்லாம் தங்கி நின்ற தோழி அவள் மகிழ்ச்சி தரும் தொல்லைகளையும் தாங்கினாள். கனவுலகில் மது திளைத்திருக்க..... "ம்ஹூம்" என்கிற சத்தத்தில் கவனம் கலைய மது நிமிர்ந்து பார்த்தாள். அகன்று விரிந்த தோளோடு, கண்களில் குறும்போடு அவளையே பார்த்திருந்தான் மகிழன். திடீரென மாமனை பார்...
Comments
Post a Comment