சாப்பிங்

காரை திருச்சியின் பிரசித்தமான அந்த ஜவுளி மாளிகைக்குள் நிறுத்தியவன்,

"இறங்கு மது, உனக்கு என்னெல்லாம் புடிக்குதோ " என்றான்.

"ம்..." மது தலையசைக்க, மலர்ந்த முகத்துடன் இருவரும் கடைக்குள் நுழைந்தார்கள்.

“மாமா, எனக்கு நீங்க செலெக்ட் பண்ணுங்க. நான் அத்தைக்கு செலெக்ட்
பண்ணுறேன், ஓ கே." என்றாள். சிரித்துக்கொண்டே தலை ஆட்டிய மகிழ, ஃபங்ஷனுக்கு கிரான்ட்டாக செஞ்சந்தனக் கலரில் அநார்க்கலி ட்ரெஸ் தேர்ந்தெடுத்தான். உடல் முழுவதும் நெட்டில் மெல்லிய இழையாக த்ரெட் வேர்க் இருந்தது. பார்டர், கை, கழுத்து என அனைத்து இடத்திலும் தங்க ஜரிகை வேலைப்பாடு கண்ணைப் பறித்தது.

"மாமா! சூப்பரா இருக்கு. என்ன இப்படி அசத்துறீங்க?” என்றாள் ஆச்சரியமாக. புடவை செக்ஷ்னுக்கு சென்றவன், குங்குமக் கலரில் ஒரு பட்டுப் புடவையை தேர்ந்தெடுத்தான்.

"ஐயோ மாமா! எதுக்கு இவ்வளவு காஸ்ட்லியா எடுக்குறீங்க?" அவள், அவன் காதைக் கடிக்க, முறைத்துப் பார்த்தவன், அவன் நினைத்ததை சாதித்தான்.

குங்குமப் பூ கலரில் இருந்தது புடவை. பெரிய தங்க நிற சூர்யகாந்திப் பூக்கள் ஹெட்பீஸை அலங்கரிக்க, ஹெட்பீஸின் முடிவில் மயில் கண்கள் வரிசைகட்டி நின்றன. உடல் முழுதும் தங்கப் புள்ளிகள் கோலம்போட, போர்டர் நெடுகிலும் பாதி சூர்யகாந்திகள் அணிவகுத்து நின்றன.மது ஒரு கணம் புடவையை பார்த்து சொக்கிப் போனாள்.

புடவைப் பிரிவில் வேலைக்கு நின்ற பெண்ணை அழைத்தவன், ப்ளவுஸ் தைப்பதற்கு அங்கு வசதிகள் இருக்கின்றதா என விசாரித்து அதற்கும் ஆர்டர் பண்ணினான். கேள்வியாக மது பார்க்க,

"இன்னைக்கு ஈவ்னிங் இந்த புடவையை கட்டிக்க மது." என்றான். அவள் ஆச்சரியமாகப் பார்க்க, லேசாகச் சிரித்தவன்,

"இந்தப் புடவையில நீ எப்படி இருப்பேன்னு பாக்கத் தோணுச்சு." என்றான். இவர்கள் பேச்சைக் குலைப்பது போல அந்த சேல்ஸ் கேர்ள் 
ப்ளவுஸ் டிசைன்களோடு வர

"இதை நீயே செலெக்ட் பண்ணிடு மது, எனக்கு எப்பிடி செலெக்ட்
பண்ணுறதுன்னு தெரியாது. ஆனா அன்னைக்கு மாதிரி ஜன்னல், கதவெல்லாம் இருந்துது, எனக்கு கெட்ட கோபம் வரும், சொல்லிட்டேன்." இவன் சத்தமாகச் சொல்ல, அந்த சேல்ஸ் கேர்ள் வாய்மூடி சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

மாமா, மானத்தை வாங்காம கொஞ்ச நேரம் அத்தைக்கு புடவை செலக்ட் பண்ணுங்க, ப்ளீஸ்." என்றாள் பற்களைக் கடித்தபடி. அவளை முறைத்தபடியே மயில்க் கழுத்து நிறத்தில் ஒரு புடவையை குந்தவிக்காக தெரிவு செய்தான்.

"ஒரு டூ அவர்ஸ்ல ப்ளவுஸ் ரெடியாகிடும் சார்." அந்தப் பெண் சொல்ல, தலையாட்டியவன் பில்லை பே பண்ண நகர்ந்தான். அவன் கைகளை பற்றி நிறுத்தியவள்,

"மாமா, உங்க பாட்டிக்கு ஒன்னும் வாங்கலையே?" என்றாள். ஒரு கணம் அவன் கண்களில் வர்ணிக்க முடிய. ஒரு பாவம் வந்து போனது. அவள் யை லேசாக அழுத்தியவன், 

"போகலாம் மது." என்றான். இருவரும் கடையை விட்டு வெளியேறி ஒரு ஹோட்டலுக்கு போய் மதிய உணவை முடித்தார்கள்.

"ஹாஸ்டல்ல சாப்பாடு எப்பிடி இருக்கும் மது?"

"ம்... குறை சொல்ல முடியாது அத்தான். சில சமயம் நாக்கு செத்துப் போச்சுன்னா எல்லாரும் ஹோட்டல் போய் சாப்பிடுவோம்."

"ம்..." இருவரும் சாப்பிட்டு முடித்து தியேட்டர் போனார்கள்.

"மாமா, இங்கிலீஷ் மூவி எனக்கு பிடிக்காது. தமிழ்ப்படம் பாக்கலாம் மாமா" என்றாள் கெஞ்சலாக.

"ஏன் பிடிக்காது?"

"படம் பாக்க டைமெல்லாம் கிடைக்காது மாமா. எப்போதாவது ஒரு சான்ஸ் கிடைக்கும் போது யாராவது அதைப் பாப்பாங்களா?" அவளைப் பார்த்து சிரித்தவன், 'சீமராஜா' வுக்கு இரண் 0 டிக்கெட்டுகள் எடுத்தான்.



†**************



ஏண்டி இப்படியே மாமனை சைட்டடிச்சுட்டு இருந்தா, புடவையெல்லாம் எப்ப எடுக்கறதாம்?
என்றாள் மல்லிகா

 ம்ம்ம்.." என புருவம் உயரத்தி கண் சிமிட்டியவனைப் பார்த்தவள், சுயம் உணர்ந்து சட்டென விலக முற்பட, அவளால் முடிந்தால் தானே.

"மாமா விடுங்க ப்ளீஸ்...." சிணுங்கிய குரல் அவனைக் கிறங்கடிக்க,

"இப்படி ரொமான்டிக்கா கூப்பிட்டா நான் எப்படி விடுறதாம்?"

"ப்ளீஸ் மாமா! அத்தை யாராவது தேடி வந்துறப் போறாங்க. வாங்க சாரி எடுக்க போலாம்." அவளது கரங்களை விடுவித்தவன்,

"தாலிகாட்டுற முகூர்த்தத்துக்கு மட்டும் நீங்க செலக்ட் பண்ணுங்க. அடுத்த முகூர்த்தத்துக்கு நான் செலக்ட் பண்ணிக்கறேன்."

"அடுத்து என்ன முகூர்த்தம்? அதைப்பத்தி அம்மா, அத்தை யாரும் எதுவும் சொல்லலியே?" அவள் யோசனையாகக் கேட்க,

"சின்னப்பிள்ளை கிட்ட சொல்லக் கூடாதுன்னு விட்டுருப்பாங்க." விஷமப் புன்னகையோடு கூறியவனின் பார்வையில் இருந்த குறும்பில்,

"யாரு நான் சின்னப் புள்ளையா? எனக்குத் தெரியாம அப்படி என்ன முகூர்த்தம்?" சிலிப்பிக் கொண்டவள், சற்று யோசிக்க, சட்டென...

"அடப்பாவி. ஃப்ராடு மாமா." என்றாள் முகம்

"அப்பாடா! பல்பு எரிஞ்சுருச்சு."

"மாமா ஏடாகூடமா எடுத்து வைங்க... நான் போடவே மாட்டேனாக்கும்."

"மது... பாத்தியா... மாமனுக்கு ரொம்ப வேலை வைக்கக் கூடாதுனு எவ்வளவு முன்யோசனையா இருக்க?" குரலில் குறும்பு கூத்தாட,

"அடச்சே... இனிமே உங்ககிட்ட
எதைப்பேசுனாலும் சென்சார் பண்ணிட்டுதான் பேசனும். எல்லாத்தையும் டபுள்மீனிங் ஆக்குறீங்க. முதல்ல வெளியே போங்க!" என்று அவனைப் பிடித்து வெளியே தள்ளினாள்.





"
அவளது கிண்டலில் திரும்பி, ஆதியா தன்னவனை முறைத்துப் பார்வைக்கணை வீச, அவனோ அதை கண்சிமிட்டி எதிர்கொண்டான்.

'வீட்டுக்குப் போறவரைக்கும் திரும்பியே பாக்கக்கூடாது!' நினைக்க மட்டுமே முடிந்தது அவளால். ஒவ்வொரு உடைக்கும் ஒப்புதல் கேட்டு அவன் பக்கம்தான் பார்வை திரும்பியது.


"இப்படியே எவ்வளவு நேரம் நிக்கறதா உத்தேசம்?"

படுக்கையறைக் கதவில் தாழ்வைத்துவிட்டு, உள்ளே வந்தவன், வெளிமாடத்திற்கு செல்லும் வாசலில் சாய்ந்து கையைக் கட்டிக் கொண்டு நின்றவாறு, மாடத்து ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு காலில் வேரோடியவளாக நின்றவளைப்பார்த்து வினவ... அவள் திரும்பியும் பார்க்கவில்லை.

தைமாதப் பனிமூட்டமும், சாளரத்தில் விழுந்த முழுநிலவொளியும் மங்கையவளை மோகச்சித்திரமாய் மாற்றியிருக்க,

சிவப்பு வண்ண ஷிஃபான் புடவை சந்தனமேனியைத் தழுவி இருக்க, ரவிவர்மன் ஓவியமாய் ஒயிலாக நின்றவளை அவன் பார்வை விழுங்கிக் கொண்டிருந்தது.

ஊஞ்சலுக்கும் படுக்கையறைக்கும் இடையில் பத்தடி தூரம் தான் இருக்கும். அதுவே அவளுக்கு பெரிய மலையைக் கடப்பது போல் இருக்க, மலைத்துப் போய் நின்றாள். முதன்முதலாக அலுவலகத்தில் அவனை சந்தித்தவேளையில், ஃபைலை இறுகப் பற்றிக் கொண்டு படபடத்து நின்றவளது தோற்றமும் கூடவே நினைவு

து அவனுக்கு. தன்னவனைக்கண்டு அன்று அவள் அதிர்ந்து நின்றதும், தன்னவள் என்று அறியாமலே அன்று இவன் மயங்கி நின்றதும் நினைவில் நிழலாட, சிறு புன்னகை இதழில். மறந்தாலும் மரத்துப் போகாத உணர்வது என்று இன்று தோன்றியது.

"இப்ப... எனக்கு அங்க வந்து உன்ன அப்படியே அள்ளிக்கிட்டு வரனும்னு தோனுது. ஆனா உனக்கு தான் அது பிடிக்காதே." என்றான், அன்று மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்தவளை தூக்க முற்பட்டபோது மறுத்ததை நினைவில் கொண்டு கூற,

"அன்னைக்கி... பிள்ளைகளும்

பெரியவங்களும்... நம்மல சுத்தி இருந்தாங்க... அதனால ஒரு மாதிரியா இருந்துச்சு..." என்று வார்த்தைகள் உள்ளே வெளியே விளையாட திக்கித்தினறி சொல்லி முடித்தாள்.

இதையே தான் அன்று புடவை எடுக்கும் பொழுதும் அவளவன் கூறினான். அடுத்த முகூர்த்தத்திற்கு நானே தேர்வு செய்கிறேன் என அவளைச் சீண்டியவன், அவளை அமைச்துச்சென்று தேர்ந்தெடுத்நிலப்ப

தயே தான் அன்று புடவை எடுக்கும் பொழுதும் அவளவன் கூறினான். அடுத்த முகூர்த்தத்திற்கு நானே தேர்வு செய்கிறேன் என அவளைச் சீண்டியவன், அவளை அழைத்துச்சென்று தேர்ந்தெடுத்தது, சிவப்பு வண்ணத்தில் ஆங்காங்கே சிறுகற்களுடன் கூடிய ஷிஃபான் புடவையைத் தான். அவள் மெச்சுதலாக அவனைப் பார்க்க... "என்ன... அம்மணி வேறமாதிரி ட்ரெஸ்ஸ எக்ஸ்பக்ட் பண்ணீங்களாக்கும்?" என வினவ,

"ம்கூம்.... ம்ம்ம்..". என ரெண்டுங்கெட்டானாக தலையை ஆட்டி வைத்தாள்.

“அதெல்லாம் நம்ம தனியா ஹனிமூன் போறப்ப..." என்று கூறி கண்சிமிட்டியவன்,

"எப்படியும் அன்னைக்குன்னு லஷ்மியம்மா, அம்மா, பிள்ளைக எல்லாம் இருப்பாங்கள்ல. நானும் குடும்பஸ்தனாக்கும். எங்களுக்கும் இங்கிதம் தெரியும்." என்றவனை காதல் பொங்க பார்த்து வைத்தாள் கன்னியவள். எந்தச் சூழ்நிலையிலும் தன்னவளை சங்கடப்படுத்திப் பார்க்க விரும்பவில்லை. ஆனால் அந்த புடவைக்கு அவன் கொடுத்த விளக்கம் தான் அவளை சிரிக்க வைத்தது. சின்ன வயதில் தாத்தாவுடன் அமர்ந்து அடிக்கடி பார்த்த வசந்தமாளிகையின்


டப்படுத்திப் பார்க்க விரும்பவில்லை. ஆனால் அந்த புடவைக்கு அவன் கொடுத்த விளக்கம் தான் அவளை சிரிக்க வைத்தது. சின்ன வயதில் தாத்தாவுடன் அமர்ந்து அடிக்கடி பார்த்த வசந்தமாளிகையின், 'மயக்கமென்ன... பாடலின் தாக்கம் தான் இந்தச் சிவப்பு புடவை மோகம் என்று கூற, வெகுநாட்கள் கழித்து வாய்விட்டு சிரித்து விட்டாள்.





Comments

Popular posts from this blog

மது மகிழன் - 2

mm1

மது மகிழன் - 3