கனவுகளை சுமந்த கண்களுக்கு பல கதைகளை சுமப்பதென்ன கடினமாகுமா...

நாம் நம் மனதிற்கு இனியவரை காதலித்திருக்கலாம்...
அவர்களுடனே நமது கடைசிக் காலம் வரையும் பயணிக்க வேண்டும் என்றும் நினைத்திருக்கலாம்...

ஆனால் துரதிஸ்டவசமாக அவர்களின் நேசத்தை விட்டு நாம் விலகியும் இருக்கலாம்...
அதற்குக் காரணமாக நமது திருமணங்கள் கூட அமைந்திருக்கலாம்...
 
இதனால் இந்தத் திருமண வாழ்க்கையில் நீங்கள் அதிருப்தியடைந்து, 
சஞ்சலப்பட்டு கடந்த காலத்தின் நினைவிற்கே திரும்பியுமிருக்கலாம்..
அது ஆராத வடுக்களை ஆற்றியும் இருக்கலாம்...

இதனால் ஏன் இந்த வாழ்க்கையை நாம் அடையத் தவறிவிட்டோம் என நூற்றுக்குத் தொன்னூற்றொன்பது முறை நாம் வருந்தியுமிருக்கலாம்....

ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...
தூரத்தில் இருக்கும் நிலவு அழகாகத்தான் இருக்கும்..
நம்மை ஈர்ப்பவையாகத் தான் இருக்கும்...

உண்மையில் அதனோடு 
பயணிக்க நாம் நினைத்திருந்தால்.. 
மேடு பள்ளங்களைக் கடந்து தான் பயணித்திருக்க வேண்டும்..

அதே போன்று தான் கைகூடாத காதலும் கூட...
தூரத்தே இருந்து ரசிப்பதற்கு சுகமாகத் தெரிந்திருக்கலாம்...
காலப்போக்கில் அதுவும் கைகூடி இருந்திருந்தால்.. 
எமக்கு சுமையாகக் கூட மாறியிருக்கலாம்...

ஆதலால் கடந்தவையை நினைத்து ஏங்குவதை விட்டு...
நடந்து கொண்டிருப்பதை நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்...

காரணம் சொல்லி கடந்து போகும் உறவுகளை விடவும்...

காரணமே சொல்லாமல் பிரிந்து போகும் உறவுகள் கிடைக்கப்பெற்றவர்கள் எல்லாம் வரமானவர்கள் தான்...

ஏனென்றால் பின்னொரு நாளில் நாம் நினைத்து உருகுவதற்கு அவர்களின் எந்தக் காரணங்களும் நம்மை அவ்வளவில் காயப்படுத்தி விடப்போவதில்லை...

ஆதலால் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள்..

#வாழ்வு..............

அழியும் என்று தெரிந்தும்,
போடும் வண்ணக் கோலம் அது...

கரையும் என்று அறிந்தும்,
கட்டும் மணல் வீடு அது...

தேயும் என்று புரிந்தும்,
ரசிக்கும் வெண்ணிலா அது...

அணையும் என்று உணர்ந்தும்,
ஏற்றி வைக்கும் தீபம் அது...

வலிகள் என்று தெரிந்தும்,
தேடிச்செல்லும் பாதை அது....

பிரியும் என்று புரிந்தும்,
கூட்டிக்கொள்ளும் உறவு அது...

மொத்ததில் தேடலும், மோதலும்
நிறைந்த மாயாஜால விந்தை அது...

எனக்கு எந்தவொரு நேசத்தையும் கொண்டாடித் தீர்ப்பதற்கு நேரம் இல்லை...
நான் தினங்களையே கொண்டாட விரும்புகின்றேன்...

ஏனென்றால் நேசம் என்பது தற்போதெல்லாம் நாகரீகமாக
தினங்களையே கொண்டாடித்தீர்க்கிறது...
அந்த தினங்களிலே உயிரும் வாழ்கிறது...

#கண்ணீரை #சுடும் #தனிமை...

ஒரு மௌனத்தின் மொழியில்
நான் உன்னை எழுதிக் கொண்டிருக்கின்றேன்...
நீ அசைந்தால்
நானும் அசைய நினைக்கின்றேன்...
நீ சிரித்தால்
நானும் சிரிக்க நினைக்கின்றேன்...
நீ அழுதால்
நானும் அழ நினைக்கின்றேன்...
ஆனாலும் நீ பிரிந்தாலும்
என் மனம் பிரிய நினைக்கவில்லை...
உன்னுடன் சேர்ந்து வாழவே
நினைக்கின்றது...

ஒரு அழகான பொழுதில்
என்னோடு கதை பேசிதிரிந்த
நாட்கள் கண் முன்னே
கனவாய் நகர்கின்றதே...
நீ அவையிடம் வினவினாயா?
ஏன் நினைவிற்கு வருகின்றாய் என்று...
ஆனாலும் நான் வினவினேன்...
ஏன் நினைவிற்கு வந்தாய்
என்றல்ல...
நிரந்தரமாய் என்னை விட்டு
ஏன் கடந்து சென்றாய் என்று....

குயில் பாட்டு கேட்டிருப்பாய்
அந்த கணம்களில்...
நீ கூறுவாய் குயிலோடு
சேர்ந்து பாடுவதும் ஒரு சுகம் என்று...
இன்றும் கூட மரக்கிளையில்
குயில் தனியாய் கூவிக் கொண்டு தான்
இருக்கின்றது...
சேர்ந்து இசைக்கத்தான் யாரும் இல்லை...

காற்று என் முகம் வருடிக்கொண்டு
செல்லும் திசையெல்லாம்
உன்னை உணர்ந்து
தேடிப் பார்ப்பதும் உண்டு...
என் தேடல்கள் தினம் பொய்பித்துக்
கொண்டே திரும்புகின்றது....

நீ என் அருகில் இல்லாது
இந்த பிரபஞ்சமே
வெறிச்சோடி கிடக்கின்றது
என்றால் நம்புவாயா....
போடி பைத்தியக்காரி
என்பாய்....

தனிமையை உணர்ந்து பார்...
நாம் சேர்ந்து கேட்ட பாடல்
நினைவிற்கு வரும்...
அப்போது உன் கண்களையும்
கண்ணீர் சுடும்...
இதில் நான் மட்டும் என்ன
விதிவிலக்கா....

உருகி உருகியே பேசிக்
கொன்றாயடா...
இன்று உன் பேச்சு இல்லாமலே
கொலைசெய்யப்பட்டு
கொண்டிருக்கின்றேன்...
அதை அறிவாயோ...
என்னைத் தீண்டிய 
இந்தத் தனிமை
உன்னையும் தீண்டிப்
பார்க்கும்
என்பதில் ஐயமில்லை சகியே...
கடந்து வந்துவிடு 
பழையபடி...

இது வரையில் நமக்கு வரமாய் இருப்பதாக ஒவ்வொருவரும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்...

ஆனால் உண்மையில்.. 
நாம் தான் அவர்களுக்கு வரமாய் அமையப்பெற்றவர்கள் என்பதை மறந்தே விடுகிறார்கள்..

#வேதனை...

ஆசைகாட்டி
ஆசீர்வதிக்கப்பட்ட சொற்களால் தான் அணு தினமும் வேலிகளால் பயிர்கள் மேயப்படுகின்றன...
தடை என்று எங்கும் உதிப்பதில்லை...
மீறி உதித்தாலும் சூரியனாய் அஸ்தமித்து இருளால் வேயப்பட்டே கடந்து போகின்றது...
நீதிகள் எல்லாம் இன்னும் தூங்கிக் கொண்டே தான் இருக்கின்றது...
தட்டி எழுப்பி விடத்தான் யாரும் இல்லை...

வேதனை தான்...
வேதனை தான்....
இன்னும் இன்னும் வேதனைதான்...
பெண்ணாய் பிறந்ததை சாபமாக எண்ணட்டுமா...
இல்லை சாணக்யமாக எண்ணட்டுமா...
பேழையில் துயில் கொள்ளும் சிட்டுக்குருவிகள் தான் நாங்கள்...
ஏன் இன்னும் மொத்தமாய் சுட்டுப் போடாமல் கொஞ்சம் கொஞ்சமாய் கதை முடிக்கின்றீர்கள்...

எம் மீது முன் பின் சாபங்கள் உண்டோ...
இல்லை கோபங்கள் தான் உண்டோ...
கயவர்களாய் உங்களைக் காட்டிக் கொள்ள எங்கள் மேனிகள் தான் தென்பட்டதா...
சொல்லுங்கள்...
பாசக்கார அண்ணன்மார்களே...
வேசக்கார வேந்தர்களே....

உன்னை கருவில் அவள் சுமக்கும் போது கரைத்திருந்தால்...
உனக்குத் தாய்ப்பால் ஊட்ட மறுத்திருந்தால்....
உன்னை மடியில் போட்டு கொஞ்ச மறந்திருந்தால்....
உன்னைத் தொட்டுத் தாலாட்ட வெறுத்திருந்தால்...
உன் நிலை தான் என்ன....?
கூறு... கல்நெஞ்சு படைத்த வேட்டைக்காரனே....
கூறு...

ஆடுங்கள்....
நன்றாக ஆடுங்கள்....
நெருப்பாய் பத்தி எரியும் எங்கள் வாழ்க்கையில் ஆடுங்கள்...
ஆடுவோர் ஆட ஆட்டம் காணுமாம் பூமி..
அடியோடு என்றோ ஒருநாள் புதைந்து போவீர்கள்...
நெருப்பாய் சுட்டெரிக்கும் தரைகளும் உண்டு..
அங்கு தங்க நிறமாய் கொதிக்கும் கிடங்குகளும் உண்டு....
மறந்துவிடாதீர்கள்....

அழியாத சோகங்கள் ஆழியாய்
வந்தாலும்...
கண்ணீரால் கரைத்து விடுங்கள்...
கவலைகளும்,கஷ்டங்களும்
கண்ணீரோடு கரைந்து போகட்டும்....

அதற்காக காலம் பூராக அழுது கொண்டிருக்க
சொல்லவில்லை...
நெஞ்சை அடைக்கும் சோகம் இருந்தால்
தனிமையில் அழுது கொள்ளுங்கள்...
சாய்ந்து கொள்ள தோளை தேட வேண்டாம்...
நாளை அதுவே நமக்கு சுமையாக மாறிவிடலாம்...

மனதில் சிக்குண்ட கவலைகளை...
ஏக்கங்களை ஒரு படி மேலே உயர்த்தி கூட
பார்க்க வேண்டாம்..
எப்போதும் இறக்கி விடவே எதிர்பாருங்கள்..

மூச்சை நிறுத்தும் அளவுக்கு யாருக்கும்
கஸ்டங்களோ, கவலைகளோ வந்து சேருவதில்லை..
அதை நம் மூச்சை நிறுத்தும் அளவுக்கு
நாமே தீனி போட்டு வளர்த்து கொள்கிறோம்...

கவலையா...
ஓரமாய் இருந்து அழுதுகொள்ளுங்கள்..
மனசு இலகுவாக்கப்படும்...
சோகங்கள் இலகுவாக்கப்படும்...
மனது அமைதி கொள்ளும்...
அதனோடு அழுகையை முற்றுப்பெற
வைத்து விடுங்கள்....

இன்று ஒற்றைக்காலில் தலை நிமிர்ந்து
பெயர் போற்றப்படும் பெயர் தாங்கிகள்
கூட என்றோ ஓர் நாள் அவமானப்படுத்தப்பட்டவர்களும்....
அநாதையாக்கப்பட்டவர்களும் தான்...
அதற்காக முடங்கி விட வில்லை...

எல்லா கவலைகளுக்கும்...
போராட்டங்களுக்கும் முடிவு
தற்கொலை என எண்ணிக் கொள்ள வேண்டாம்..
அதன் வலி சாவின் விளிம்பில் சென்று
திரும்பி வந்தவர்களை கேட்கலாம்...

அழியாத சோகங்கள் ஆழியாய்
வந்தாலும்...
கண்ணீரால் கரைத்து விடுங்கள்...
கவலைகளும்,கஷ்டங்களும்
கண்ணீரோடு கரைந்து போகட்டும்....

அதற்காக காலம் பூராக அழுது கொண்டிருக்க
சொல்லவில்லை...
நெஞ்சை அடைக்கும் சோகம் இருந்தால்
தனிமையில் அழுது கொள்ளுங்கள்...
சாய்ந்து கொள்ள தோளை தேட வேண்டாம்...
நாளை அதுவே நமக்கு சுமையாக மாறிவிடலாம்...

மனதில் சிக்குண்ட கவலைகளை...
ஏக்கங்களை ஒரு படி மேலே உயர்த்தி கூட
பார்க்க வேண்டாம்..
எப்போதும் இறக்கி விடவே எதிர்பாருங்கள்..

மூச்சை நிறுத்தும் அளவுக்கு யாருக்கும்
கஸ்டங்களோ, கவலைகளோ வந்து சேருவதில்லை..
அதை நம் மூச்சை நிறுத்தும் அளவுக்கு
நாமே தீனி போட்டு வளர்த்து கொள்கிறோம்...

கவலையா...
ஓரமாய் இருந்து அழுதுகொள்ளுங்கள்..
மனசு இலகுவாக்கப்படும்...
சோகங்கள் இலகுவாக்கப்படும்...
மனது அமைதி கொள்ளும்...
அதனோடு அழுகையை முற்றுப்பெற
வைத்து விடுங்கள்....

இன்று ஒற்றைக்காலில் தலை நிமிர்ந்து
பெயர் போற்றப்படும் பெயர் தாங்கிகள்
கூட என்றோ ஓர் நாள் அவமானப்படுத்தப்பட்டவர்களும்....
அநாதையாக்கப்பட்டவர்களும் தான்...
அதற்காக முடங்கி விட வில்லை...

எல்லா கவலைகளுக்கும்...
போராட்டங்களுக்கும் முடிவு
தற்கொலை என எண்ணிக் கொள்ள வேண்டாம்..
அதன் வலி சாவின் விளிம்பில் சென்று
திரும்பி வந்தவர்களை கேட்கலாம்...

காதலுக்காக காதலைத் தேடுவதை விட...
இப்போதெல்லாம்...
வலிகளுக்காகவே காதலை தேடிக்கொள்கிறார்கள்...

கனவுகளை சுமந்த கண்களுக்கு பல கதைகளை சுமப்பதென்ன கடினமாகுமா...

#நெஞ்சில #பெருஞ்சலிப்பும்..
#நேரமெல்லாம் #ஓன் #நெனப்பும்...

நடு நிசி நொடிய கையில புடிச்சிக் கொண்டு கதவோரமாய் காத்திருக்கேன் நானும் மச்சான்...

நான் சாய்ந்து நிண்ட  கதவு நிலை கூட கூனிப்போச்சே என் ஆசை மச்சான்...

கடலோரக் காத்து வந்து காதுக்குள்ள கதை பேசுது மச்சான்..
நீங்க சுவாசிச்ச காத்தாச்சேன்னு சேலையில பத்திரமா முடிஞ்சிக்கிட்டேன் என் ஆசை மச்சான்...

படிச்சி  படிச்சி  சொன்னேனே மச்சான்...
பச்ச மண்ணு நீங்க கடவுச்சீட்டெடுக்காதீங்கன்னு...

காசிதான் புள்ள நாம வாழ வேணும்னு...
கைய காட்டி கண்ணத்த தொடச்சிகிட்டு போயிட்டீங்களே  ஏன் மச்சான்..

இப்பவெல்லாம் மாறாம இரவும்,பகலும் நீளுது ஏன் மச்சான்...
நீங்க வந்து சேர உலகம் உருளாம புதினம் பார்த்திட்டு நிக்குதே அது ஏன் மச்சான்...

உங்கள பார்க்க நினைக்கிறப்போவெல்லாம்...
நெஞ்சில பெருஞ்சலிப்பும் மச்சான்...
நேரமெல்லாம் ஓன் நெனப்பும் மச்சான்...

ஒழைச்சது போதும் மச்சான்...
காச்சிர கஞ்சில கால்வாசி கிடைச்சாலும் போதும் மச்சான்...
காலம் காலமா கைகோர்த்திருப்பம் வாங்க மச்சான்...

தொலைத்து விடப்பட்ட நேசங்களை
சற்றேனும் தாமதிக்காமல் 
தேடிக் கொள்ளுங்கள்...

நிச்சயமாக அவை உங்களை 
துடிக்கத் துடிக்க கொன்று விட்டு 
சென்றதாய் இருக்க முடியாது...

நிச்சயமாக அவை உங்களை 
பீதியில் ஆழ்த்தி விட்டுச் 
சென்றவையாக இருக்க முடியாது...

நிச்சயமாக அவை உங்களை 
காதலித்து கைவிட்டுச் சென்றதாக 
இருக்க முடியாது...

நிச்சயமாக அவை நட்பெனும் 
பெயரில் போலி பாராட்டியவைகளாக 
இருக்க முடியாது...

சிறுவயதில் தொடரப்பட்டு தொடர்புகள் அற்று...
சூழ்நிலையால் கைதியான சிறந்த பாலர் காலத்து நற்புக்களாக இருந்தால் தேடிக் கொள்ளுங்கள்...

#பிரிவின் #சாட்சிகள்...

விடை கொடுக்கப்பட்ட நேசம் ஒன்றிற்காய்
வருந்துவதென்பது அளவிட முடியா
கொடுமை அது...

பாதை முழுக்க முட்களை பரப்பி விட்டு
வெறும் காலினூடே நடப்பதை போன்றது...
வேதனை என்னவோ மூளையை தொட்டு விட்டு
மனதினைத் தொடும்...
அதே போன்று தான் இந்த பிரிவின் வலியும்...

நினைவுகள் கடலாகவும்... 
விழிகள் மீன்களாகவும் மாறி நீந்திக் கொள்கின்றன...
எங்கேயோ தாயை தொலைத்த சேயைப் போல இதயம் பதறிக்கொள்ளும்...

கடந்த கால நினைவுகளை மாறி மாறி பூஜிக்க பூக்கள் எதற்கு...
சாயம் பூசப்பட்ட வார்த்தைகளே போதும்...
பின் தொடரப்பட்ட காயங்களே போதும்...
வெறுத்து ஒதுக்கப்பட்ட அந்த இறுதி நொடிகளுக்கு அப்பாற்பட்ட நிமிடங்களே போதும்...
யாவுமே பிரிவின் சாட்சிகளாக மாற்றப்படும்...

#அதிகாரமும், #மடமையும்...

ஆமாம்...
சிலரது அதிகாரங்கள் எல்லாம் நம்மீது
திணிக்கப்பட்டவையாகவே இருக்கன்றன...
அது சிறகில்லா ஆகாயத்தை இரு கரங்களால் தூக்கி உயர்த்தி விடுவதைப் போன்று
கடினமானவையே...

எவை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதவையோ...
அவையே நமக்கு அடிக்கடி கட்டளை இடப்படுகின்றன....
பின்பற்றவும்  பின்னால் இருந்து உந்தப் படுகின்றன...

ஆமாம்...
நமது இயலாமையும்...
நமது இயலுமையும் யாராலும் நிர்ணயிக்கப்படக் கூடாது....
அதற்கு இடமளித்தலும் கூடாது...

எதையும் எதிர்த்து துணிந்து நிற்றல் என்பதே
நம் உயிரின் இருப்பிற்கான ஆதாரமாகும்...
மடமை என்பது நம் அறியாமை கிடையாது...
அடுத்தவர் நம்மை வைத்து ஆடுகின்ற ஆட்டமாகும்...
நாம் தான் அதில் சிக்கிக் கொள்ளாமல் 
வெளியேறி விடல் வேண்டும்...


#தந்தையர் #தினத்திற்காய்...

தாய்மைக்கு தாய் தான்
என்று யார் சொன்னார்கள்...
அறியாத ஒரு உறவை மனைவியாக
ஏற்று...
அவளுக்கு உணவூட்டி...
உடுக்க உடை கொடுத்து...
உறங்க உறையுள் கொடுத்து...
பாதுகாப்பு அரணாய் தன்னை 
நிலை நாட்டி...
ஓய்வில்லாமல் உழைத்து...
தன் உயிரை சுமக்கும் பாக்கியம் அளித்து
தாய்மையை உணர செய்யும்
மற்றுமொரு ஜீவனடா தந்தை...

அவள் ஐயிரு மாதங்கள்
சுமந்திருப்பாள் கருவில்...
ஆனால் கரம் பிடித்த நாள் முதல்
கண்ணின் மணியாக காத்து
தன் மண்ணறை தாண்டியும்
சுமந்திருக்கும்,சுமக்கவும் தூண்டும்
ஏகாந்தமான 
ஜீவனடா தந்தை...

தந்தை சொல் மிக்க மந்திரம் 
இல்லை என்பார்கள்...
அது சுவர்க்கம் கிடைக்க போற்றும்
மந்திர சொல் தான் தந்தை...

நான்..
தந்தையை என்னைவிட்டு 
என் சுய நலத்திற்காய் தூரமாக்கி
கொண்டவள் தான்...
ஆனாலும் என் தந்தையை 
மனதில் சுமக்காத நாள் இல்லை..

வெளிநாடு சென்று 
வேதனையை தாங்கி கொண்டு
வியர்வையை பணமாக்கி 
கொண்டிருக்கின்ற ஜீவன் தான் 
என் தந்தையும் கூட...

இதுவரை...
அவர் கலியாண தினமும்..
என் பிறந்தநாள் தினமும்...
அவர் பிறந்தநாள் தினமும்...
ஒரு தந்தையர் தினமும்
எனது ஹீரோவுடன் 
கொண்டாடியதில்லை...
அதற்காக ஏங்காத நாளும் இல்லை...

நாகரீகம் ஏதோ வளர்ந்துவிட்டது...
நாணயம் தேடி இழந்து விடுகிறார்கள்
ஒவ்வொரு அப்பாக்களும், குழந்தைகளும்
சந்தோசத்தை...
ஆனாலும் தொலைபேசியில்
மட்டும் இன்னும் புலம்பி 
கொண்டிருக்கின்றோம்...
உணர்வுகளை அதற்கு காணிக்கையாக்குகின்றோம்...

ஒவ்வொரு அப்பாக்களும்
ஒவ்வொரு ஹீரோக்கள் தான்...
ஆனால் நீங்கள் ஹீரோவாஹும் போது
அவர்களை தள்ளி விட்டி விடாதீர்கள்
முதியோர் இல்லத்தில்...

முதுமொழி ஒன்றும் உண்டு...
நூறு குழந்தைகளை பெற்று ஒரே மாதிரி
காப்பார்களாம் பெற்றோர்கள்...
ஆனால் அதில் ஒரு குழந்தையேனும்
அவர்களை காப்பாற்ற 
 பின்வாங்கி விடுமாம் என்பார்கள்..

இனிய தந்தையர்தின நல்வாழ்த்துகள்
என் ரியல் ஹீரோ...

#விழி #வலி #நீர் #சிந்தல்...

விழி நீர் சிந்தாமல்
அடிக்கடி அழும் போது
சிரிக்க முயலுகின்றேன்...
என் முயற்சிகள் யாவும்
கைகூட மறுக்கின்றன...

புதிதாக உள்ளத்தை
மாற்றிவிட்டு புது யுகம்
காணத் தேடலில் மூழ்கிக்
கொண்டிருக்கிறேன்...
முத்து வரவில்லை...
என் வடுக்கள் சிற்பியிக்குள்
முத்தாய் உறங்கிக் 
கொண்டிருக்கின்றன...

மனது ஒரு பஞ்சாய்
போனது...
சுமைகளை விழி நீராய்
சுமக்கிறது...
அது கனத்து விடவே
இதயம் வெடித்து இரத்தம்
சிந்துகிறது....

புது போர்வையாக 
நினைத்து வாழ்க்கையை
மூடி உறங்கி கொள்ள 
நினைக்கின்றேன்...
போர்வையே சூறாவளியால்
அடித்துச் செல்லப்படுகிறது...

சிரிப்பதாய் நினைத்து
கடந்து விட வேண்டாம்..
கண்ணீருடன் கரைவதாய்
நினைத்து என்னை 
ஆற்றுப்படுத்த உதவுங்கள்...

#என் #மரணத்தின் #பின்னான #வாழ்க்கை...

இறந்துவிட்டேன் நான்...
இறந்துவிட்டேன்...
இன்றோடு நான் இறந்து கன நாட்களாகி விட்டது...
கடைசி கிரிகை எல்லாம் அசத்தலாக செய்து விட்டார்கள்...
இதில் என்ன கவலை வேண்டி இருக்கிறது எனக்கு ஆனந்தத்தை தாண்டி...

மரணத்தை ஆரத்தழுவியதில் எனக்கு மட்டற்ற
மகிழ்ச்சி தான்...
எனக்கான விடுதலை அல்லவா அது...
எனக்கான சுதந்திரப் போராட்டம் அல்லவா அது...
இதுவரை காலமும் நடை பிண்டமாய் 
அலைந்து திரிந்ததை அடுத்து 
இப்போது தான் அதிக நிம்மதி என்னை ஆற்பரித்துக் கொள்கிறது...

ஆஹா... எதார்த்தமான உணர்வுகள்...
என் கடந்த கால ஆசைகள் எல்லாம் இன்று யாரின்
தடை இன்றியும்...
யாரின் தலையீடு இன்றியும் நிகழ்த்தப்படுகிறது...
இதைவிட வேறு என்ன சந்தோசம் எனக்கு பரிசாய் அமையப் போகின்றது...

ஆமாம்...
என்னை முகநூல் பயன்படுத்த தடை விதித்தார்கள்..
என் எழுத்துக்களை அதில் அஞ்சல் செய்ய மறுப்பு தெரிவித்தார்கள்...
என்னை வட்ஸ்அப் பயன்படுத்த தடை விதித்தார்கள்...
இன்ஸ்டா பாவணைக்கு முரண்டு பிடித்தார்கள்..
என் புது அறிமுக நண்பர் நண்பிகளை வீட்டிற்கு வரவேற்பதை தடுக்க போராட்டம் நடத்தினார்கள்...

வட்ஸ்அப்பில் என் நண்பிகளுடன் சிரித்துப் பேச நேரம் அறிவித்தார்கள்...
உறவினர் வீட்டுக்கு செல்ல வரையறை செய்தார்கள்...
பள்ளி நண்பர்களை காண்பதை தடை செய்தார்கள்...
நான் என் எழுத்துக்களை சுதந்திரமாய் கிறுக்க முட்டுக் கட்டையாய் இருந்தார்கள்...
என் கல்விக்கு தடை விதித்தார்கள்...
முடியவில்லை...
இன்னும் அவை எதுவும் முடியவில்லை...

புதிது புதிதான கட்டளைகள்...
தடுப்பு சுவர்கள் எல்லாம் என் சிரிப்பை பறித்து விட்டன...
என் நிம்மதியைத் தொலைத்து விட்டன...
என் ஊண், உறக்கத்தை மறக்கடிக்கச் செய்து விட்டன...
ஆனாலும் இறைவன் பொருந்தி ஏற்றுக் கொண்டான்...

என்னைப் படைத்தவன் அல்லவா அவன்..
எப்படி என்னை கஷ்டத்தில் மூழ்க விடுவான்...
அதனால் நான் இன்று உயிருடன் இல்லை...
என் ஆத்மா உயிருடன் இருந்த போது அனுபவிக்க முடியாததை இன்று சுதந்திரமாய்...
ஒரு பீனிக்ஸ் பறவையைப் போன்று அனுபவித்துக் கொள்கிறது...
எவ்வளவு அலாதியான இரட்டிப்பு மகிழ்ச்சி...

ஆமாம்..
யாரும் வாழ்க்கையில் விரக்தி கொள்ள வேண்டாம்...
இருப்பதை, நடப்பதை பொருந்திக் கொள்ளவும் வேண்டாம்..
பொறுமையாய் கடந்து வாருங்கள்...
என்னைப் போன்று நீங்கள் நினைத்து கனவு கண்டவை எல்லாம் ஒரு நாள் கைகூடும்...
உயிர் இருப்பு வரைக்கும் தான் தடை போட முடியும் யாராலும்...
கொஞ்சமாய் புன்னகைத்து கடந்திடுங்கள்...

#பூச்சிய #விரும்பி #நான்...

நம்மை பூச்சியமாக்க நினைத்து
பல தடைகளையும், வரம்புகளையும் போட்டு
முயற்சிப்பவர்களிடம் நாம் பூச்சியமாகவே மாறி விடுவோம்...
அந்த திருப்தியாவது அவர்களுக்கு கிடைக்கட்டும்.

அடிக்கடி அவர்களின் வார்த்தைகள் நம்மை குத்தி காயப்படுத்த வேண்டிய தேவைகள் இல்லை...
அடிக்கடி நம் கண்களும் கண்ணீருக்கு இடம் கொடுக்க வேண்டிய தேவையில்லை...
நாம் பூச்சியமாகவே மாறி விட்டால்...

அறிந்தது, அறியாதது என்ற பிரச்சினை தேவையில்லை...
எதுவுமே தெரியாது என்ற ஒற்றை வார்த்தை போதும்...
மௌனமாய் கடந்து விடுவோம்...
அவர்கள் தான் முயற்சிக்கிறார்கள் இல்லையா..
நம்மை பூச்சியமாக்க..
ஆதலால் பூச்சியமாகவே நம்மை காட்டிக் கொள்வோம்...

திறமைகள் இருக்கிறதா உங்களிடம்...
அதற்கு அவசியமே இல்லை..
அவற்றை ஓரம் கட்டி விட்டு அமைதியாகவே இருப்போம்...
அடக்கமாகவே இருப்போம்...
இங்கு நாம் உயிருடன் இருப்பதை மட்டுமே பலர் விரும்புகிறார்கள்...
நாம் அறிவாளியாய் இருப்பதை அல்ல...

எவ்வளவு பேச்சாற்றல் இருந்தாலும் அதற்கு இங்கு அவசியமில்லை...
நம்மை ஊமையாய் இருக்கவே விரும்புகிறார்கள்...
சாய்ந்து கொடுத்து...
வலைந்து கொடுத்து நம் உயிர் இருக்கும் காலமெல்லாம் உயிரோடு மட்டும் இருந்து விட்டு கடந்து விடலாம் என்று நானும் நினைக்கிறேன்...
நீங்களும் முடிந்தால் முயற்சித்துப் பாருங்கள்...

#எழுதத்  #தோணுகின்றது...

எழுதத் தோணுகின்றது...
நிறையவே எழுதத் தோணுகின்றது....
எங்கிருந்து ஆரம்பித்து எங்கே முற்றுப் பெற வைப்பது என்று மட்டும் புரியவில்லை...
ஏனென்றால் முற்றுப் பெறாத நிதர்சனங்கள் மட்டும்
குவிந்து கிடக்கின்றது...

நீ இன்று என்னுடன் இல்லை என்பதை எழுதுவதா...
நான் என்றும் உன் நினைவில் என்பதை எழுதுவதா...
நீ ஊமையானதை எழுதுவதா...
நான் இன்னும் ஊமைக் கனா கண்டு கொண்டிருப்பதை எழுதுவதா...

எச்சங்களாய் நான் மிச்சம் வைக்காமல் வடித்துக் கொண்டிருக்கும் கண்ணீரை சுமக்கும் தலையணை கூட தளரந்தே விட்டது...
நீ் இல்லை இப்போது என்றதை உணர்ந்து...

ஒரு இருண்ட வெளியில் ஒரு விளக்கின் ஒளி கொண்டு முழு நீளப் பாதையையும் கடந்து விடும் போது ஏற்படும் அச்சம்....
மூளையின் நரம்பை சற்று உசுப்பி விடும்...
அது போன்று தான்...
என் இதய நாடியின் துடிப்புக் கூட யோசிக்கிறது...
இயங்குவதற்கு... 

உலகமே வெறுமையாய் தோணுகின்றது...
உறவுகளே சுமையாய் தோணுகின்றது...
என் இருப்பை பூச்சியத்தால் பெருக்கிக் கொள்கிறேன் இது வரையில்...

#கடந்து #விடலாம்...

கைகளை அகல விரித்து 
பெரும்மூச்சு விட்டு மனதை 
அமைதிப் படுத்தவே நினைக்கின்றேன்...
அமைதியை விரும்பாத உலகினிலே நான் மட்டும் அமைதி விரும்புதல் நடக்குமன்றோ....

இவ்வாறு தான் அடிக்கடி முயன்று தோற்றுப் போகின்றேன்...
வாசம் வீசும் பூக்களை யாரும் வெறுப்பதில்லை...
மாறாக அன்பாய் வாசனை வீசும்
பெண் பூக்களை வெறுக்கிறார்கள்...

உயிராய் நேசிக்கும் உறவுகளை
சற்று உதறி விடவே விரும்புகிறார்கள்...
அதன் வலி யாரையும் இதுவரை விட்டு
வைத்ததில்லை...

ரெயில் பாதை முற்கள் குத்துவதில்லை 
ரெயிலிற்கு...
ஆனால் அதிகமாகவே ரெயில் சினேகிதம் போல் தொடருகின்ற உறவுகள் குத்தி விடுகிறார்கள்...

கடந்து விடலாம்....
இதுவரை தொடர்ந்து நம்மை விட்டு விலகிவிட
நினைக்கும் உறவுகளை...
காலம் யாருக்கும் பதில் சொல்ல மறுப்பதில்லை...
அதில் ஒரு பக்க நியாய பதில்களை அது சொல்லிவிடுவதுமில்லை...
கடந்து விடலாம்...
நம்மை வேணாம் என்று விலகுபவர்களை...

#காலம் #கடத்தும் #காத்திருப்புக்கள்...

யாரிடமாவது கேள்வியை தொடுத்து விட்டு
அவர்களின் பதிலுக்காய் காத்திருக்காதீர்கள்...
அவர்களின் நேரம் வரும் போதே நமக்கான
பதிலை அவர்கள் அளிக்க நினைத்திருக்கலாம்...

நமக்கு பிடித்தமான உறவிடம் அதிக அன்பை செலுத்தி விட்டு...
அவர்களின் அன்பிற்காய் காத்திருக்காதீர்கள்...
ஏனென்றால் நம்மை விட வேறு யாராயினும்
அவர்களுக்கு முதன்மையானவராக இருக்கலாம்...

ஒற்றை வார்த்தையை நம்பி யாருக்காகவும்
காத்திருக்காதீர்கள்...
அந்தக் காலம் காத்திருப்பதில்லை...
உங்களை காத்திருக்க சொன்னவர்களே
காலத்தால் சில நேரம் மன மாற்றத்திற்காகலாம்...

யாருக்காயினும் உதவியை செய்து விட்டு
அவர்களால் நமக்கேற்படும் பலனுக்காய் காத்திருக்காதீர்கள்...
அது பயனே இல்லாமல் போய்விடலாம்...

எவருக்கேனும் கஷ்டம் வரும் போது ஆறுதல் சொல்லிவிட்டு... 
அதை சொல்லிக்காட்ட காத்திருக்காதீர்கள்...
இந்நிலை உமக்கு ஏற்பட பெரிதான காலம் தேவைப்படாது...

கல்வியை கற்று விட்டு தொழிலுக்காய் காத்திருக்காதீர்கள்...
கற்றுக் கொண்டே இருங்கள்...
தொழில் உங்களைத் தேடி வரும்...

எப்போதோ இடம்பெற்ற அவமானத்திற்காக
முன்னோக்கி நகர மறுக்காதீர்கள்...
மாற்றம் உங்களில் இருந்தே தான் ஆரம்பிக்க வேண்டும்...

குற்றம் குறை கண்டால் தட்டிக் கேளுங்கள்...
உங்களால் கூட நியாயங்கள் நிலை நாட்டப்படலாம்...

எந்த வேலையாயினும் இன்றே
தொடங்கி விடுங்கள்...
ஏனென்றால் காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை....

எதற்காகவும் காலத்தை மட்டும் கடத்தி விட்டு
காலம் காத்திருக்கவில்லை என்று
அதன் மேல் பழி போட முடியாதல்லவா...

#இயற்கை #மீதுள்ள #காதல் #நிச்சயமாய் #இறைக்காதலைக் #காட்டும்..

இறைவனை அதிகம் அதிகம் நேசிக்கத் தோணுகின்றது...
அவன் எவ்வளவு அழகானவனாக இருக்க வேண்டும்...
அழகை ரசிக்க கூடியவனாக இருக்க வேண்டும்...
எவ்வளவு பெரிய படைப்பாளனாக இருக்க வேண்டும்...
அவன் ரசணையையும்...
அவனின் அழகான படைப்புக்களையும் நோக்கும் போது..
நான் என்ன...
யாராக இருப்பினும் விழுந்து விடுவார்கள்..
கற்பனையாளன் அவன்...
அறிவானவன் அவன்...
அன்பானவன் அவன்.....

இந்த இயற்கையை ஒரு சிற்பியை விடவும்
உயிரோட்டமாய் எப்படி செதுக்கி இருக்கிறான்...
அணு அணுவாய் அவன் ரசித்து இந்த மலைகளைக் கூட குடைந்துள்ளான்..
அதனூடு பாய்ந்தோடும் அருவியைக் கூட அழகாக்கி விட்டான்...

அவை சல சலவென எழுப்பும் ஓசைகளை காதில் கேட்டால்
மனிதனின் இசையை விட 
அத்தனை இயற்கை இசைகளும் முதன்மையே...
அவன் அதிபதி அல்லவா...
அரசன் அல்லவா...
மரங்களையும்...
மலர்களையும் ரசித்து விட்டால் போதுமா...
நம் பிறப்பு.....

மனித பிறவியில் கூட மணிக்கணக்காய் யோசித்தாலும் அர்த்தம் புரியாத அளவிற்கு படைத்து விட்டான்...
கூட்டினுல் ஓடித் திரியும் உயிர் கூட அதிசயம் தான்... ஞானி அவன்...
கோடி கணக்கான விஞ்ஞானிகள் சேரந்தால் கூட அவன் அளவு கண்டு பிடிக்க முடியுமா எதையும்..
அவனை நேசித்துப் பாருங்கள்...
நிச்சயமாய் மூழ்கியே போவீர்கள்...
வெற்றியில் திளைத்தே போவீர்கள்...
இறைக்காதல் அல்லவா அது....
நிம்மதியை மாத்திரம் தேடித் தரும்...


#விதிமுறை #இல்லா #நியதிகள்...

யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்...
அது அன்பாய் இருப்பினும் சரியே...
அவர்களால் உண்மையாகவே நோகடிக்கப்படுவீர்கள்...

நம்மை மரியாதையாக நடத்த தெரியாதவர்களிடம்
யாருக்கான மரியாதையையும் எதிர்பார்க்காதீர்கள்...
ஏனென்றால் அவர்களுக்கே புரியாத ஒன்று அது...

அவர்களது காரியம் ஆகும் வரைக்கும் அமைதியாய்
நாம் செய்வதற்கெல்லாம் தலை ஆட்டுவார்கள்..
அப்போது குறைகள் ஏதும் தென்படுவதில்லை...
அவர்களது காரியம் நடந்து முடிந்தவுடன் தொட்டதெற்கெல்லாம் குற்றம் குறை கூறுவார்கள்...
அது தான் நியதி..
அவர்களிடம் நீங்கள் அளவோடே இருந்து கொள்ளுங்கள்...

வாழ்க்கையில் துணை சரியில்லை என்று புலம்ப வேண்டாம்...
நடந்தது நடந்து முடிந்தது...
எப்படியோ கடந்து தான் ஆக வேண்டும்..
ஆதலால் வாழும் வரைக்கும் பொறுமையாகவே இருங்கள்..
உங்கள் பொறுமைக்கு நற்கூலி உண்டு...
நமது ஆயுள் ஒன்றும் ஆயிரம் வருடங்கள் இல்லையே...

உங்களிற்கு அழத்தோனும் போது அடுத்தவர் கரம் தேடாதீர்கள் கண்ணீரைத் துடைக்க...
அனுதாபம் காட்டுவது போல் அவர்களாலும் நடிக்க முடியும்...
ஏனென்றால் வலி என்பது காயப்பட்டவர்களுக்கே புரியும்...

#இயற்கை #ஒரு #மந்திர #சாவி...

இயற்கையின் அழகில் திளைத்துப் போய் விடாதவர்கள் இருந்தால் கொண்டு வாருங்கள்...
அவர்களை கொஞ்சம் கொஞ்சமாகவே இயற்கையை ரசிக்க விட்டு தன்னிலை மறக்கச் செய்திடுவோம்...

பச்சை போர்த்திய காடுகளுக்குள்ளும்...
வானவில் புகுத்திய மலர்களுக்குள்ளும்...
பாடிக் கடக்கும் பறவைகளுக்குள்ளும்...
தேனைத் தேடி வடிக்கும் தேனிகளுக்குள்ளும்...
வர்ணம் பூசும் பட்டாம் பூச்சிகளுக்குள்ளும்...
ஒரு நாள் புதைந்து வந்த வழி மறந்து
நித்தம் சுமை தளர்ந்து...
கொட்டித் தீர்க்கும் கண்ணீர் துறந்து...
வஞ்சனை போக்க வாசனை நுகரந்து...
மனதை இளைப்பாற அனுமதித்தால்...
இயற்கையை ரசித்து தன்னிலை மறந்து விடலாம்...

#இயற்கை #ஒரு #மந்திர #சாவி...

இயற்கையின் அழகில் திளைத்துப் போய் விடாதவர்கள் இருந்தால் கொண்டு வாருங்கள்...
அவர்களை கொஞ்சம் கொஞ்சமாகவே இயற்கையை ரசிக்க விட்டு தன்னிலை மறக்கச் செய்திடுவோம்...

பச்சை போர்த்திய காடுகளுக்குள்ளும்...
வானவில் புகுத்திய மலர்களுக்குள்ளும்...
பாடிக் கடக்கும் பறவைகளுக்குள்ளும்...
தேனைத் தேடி வடிக்கும் தேனிகளுக்குள்ளும்...
வர்ணம் பூசும் பட்டாம் பூச்சிகளுக்குள்ளும்...
ஒரு நாள் புதைந்து வந்த வழி மறந்து
நித்தம் சுமை தளர்ந்து...
கொட்டித் தீர்க்கும் கண்ணீர் துறந்து...
வஞ்சனை போக்க வாசனை நுகரந்து...
மனதை இளைப்பாற அனுமதித்தால்...
இயற்கையை ரசித்து தன்னிலை மறந்து விடலாம்...

நம்மை உருகி உருகி நேசிக்கும் அளவிற்கு உறவு கிடைத்தல் என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல...

நம்மை அளவுக்கதிகமாக நேசிக்கின்றார்கள் என்பதற்காக அவர்கள் ஒன்றும் கையால் ஆகாதவர்களும் அல்ல...

நாம் புறக்கணித்து ஒதுக்கும் போது எல்லாம் நம்மை நாடி வருகின்றார்கள் என்பதற்காக அவர்கள் கோமாளிகளும் அல்ல...

வார்த்தைகளால் அவர்களை குத்தி காயப்படுத்திய பின்பும் நம் அன்பிற்காகவும்...
நம் குரலின் ஓசைக்காகவும் ஏங்கித் தவிக்கின்றார்கள் என்றால் அவர்கள் மடையர்களும் அல்ல...

உண்மையில் நீங்கள் தான் கைசேதப்பட்டவர்கள்...
என்றோ ஒரு நாள் அவர்களின் வலிகளையும், வேதனைகளையும் நீங்களாய் உணர்ந்நு , புரிந்து கொள்ளும் போது நிச்சயமாய் உடைந்து போவீர்கள்...

அவர்களைத் தேடி நீங்கள் செல்லும் போது வேறு காரணங்களிற்காகவோ அல்லது...
சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்காகவோ நீங்கள், அவர்களால் புறக்கணிக்கப்பட்டால் நிச்சயமாக இறந்தே போவீர்கள்..
அது தான் நிதர்சனம்...


Comments

Popular posts from this blog

மது மகிழன் - 2

mm1

மது மகிழன் - 3