மது
" சந்தேகமாக,
"அக்கா.. அவ ஒழுங்கா சாப்பிடறாளான்னு பார்க்கறீங்களா? இல்ல நீங்க கொடுத்துட்டு அந்தப் பக்கம் போனதும், அதை வெளியே சாப்பிடாம கொட்டிறாளா? ஏன் அவளுக்கு வெயிட் போடவே இல்ல... அதே வெயிட்ல இருந்தா கூட ஓகே... எப்படி குறையுது? ஒழுங்கா ரெஸ்ட் எடுக்கறாளா? இல்ல தூங்காம டிவி பார்த்துட்டு இருக்காளா?" புகழ் கேள்விகளை கேட்டுக் கொண்டே வர,
"அய்யா சாமி நீயே உன் பொண்டாட்டியா பார்த்துக்க என்னால முடியதுப்பா, ஆடியும் வேணாம், நீங்க ரெண்டு பேரும் பிரிந்து இருக்கவும் வேண்டாம். நீ அவளை வந்து கூட்டிட்டுப் போப்பா..
அவங்க முதல்முறை வந்ததுக்கும் இப்போ இருக்கறதுக்கும் நிறைய வித்தியாசம் தெரியுது.. கொஞ்சம் பார்த்துக்கோங்க... இப்படியே போனா டெலிவரி ரொம்ப கஷ்டமாக சான்சஸ் இருக்கு.. கவனமா பார்த்துக்கோங்க.. அவங்களை மனசைத் திறந்து பேச வைங்க.. அது டெலிவரியைப் பத்தின பயமா இருந்தாலும் பிரச்சனை இல்ல... அவங்களுக்கு எக்ஸ்ப்ளைன் பண்ணிக்கலாம்... ஒருவேளை வேற எதைப்பத்தியாவது யோசிச்சு குழப்பிக்கறாங்களோன்னு தோணுது
"இல்லையே மாப்பிள்ளை.. நான் அவளுக்கு எதைக் கொடுத்தாலும் குடிக்க வச்சிட்டுத் தானே வரேன்... முதல் தடவ டாக்டர் சொன்ன போதே, எனக்கு சந்தேகம் வந்து, அவளை தனிய விடறதே இல்லையே.. கூடவே இருந்து தானே சாப்பிட வைக்கிறேன்... இதுக்கும் மேல என்ன செய்யறது?" புகழிடம் குழப்பமாக பதில் சொன்னவர்,
"ஏய் மனசுல ஏதாவது ஆசையை வச்சிட்டு இருக்கயா சிவா... சொல்லு.. என்ன வேணும்னாலும் வாங்கித் தர்றோம்... இந்த நேரத்துல எல்லாம் மனசுல ஆசையை வச்சிக்கிட்டு மறுகக் கூடாது.. சொல்லேண்டி... இப்படி எங்களை குழப்பத்துல சுத்த விடறதுல உனக்கு என்ன இருக்கு?" காலம் காலமாக அந்த நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் ஆசைகள் நிறைவேறாமல் போனாலும், இது போல ஆகலாம் என்று சொல்லி கேள்விப்பட்டிருந்த சசி, ஷிவானியிடம் கேட்க, புகழ் அவளை யோசனையோடு பார்க்க, ஷிவானி புகழைப் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டு,
"ஒண்ணும் இல்லம்மா... என்னால முடிஞ்ச அளவுக்கு வெயிட் போட எக்ஸ்ட்ராவா சாப்பிட்டுப் பார்க்கறேன்..." என்று பதில் சொல்லிவிட்டு, கண்களை மூடிக் கொண்டாள்.
“ஆமா... வணி ரொம்ப அமைதியாகிட்டா. நான் ஒரு வார்த்தை பேசினா பதிலுக்கு நாலு வார்த்தை பேசுவா..... இப்போ கேக்கற கேள்விக்கு பதில் சொல்லறத கூட அளந்து இல்ல பேசறா" முதல்முறையாக புகழுக்கு ஷிவானியின் அமைதி உறுத்தத் துவங்கியது.
"எப்போலேருந்து அவ இவ்வளவு அமைதி ஆனா?" புகழ் யோசித்துக் கொண்டே காரை வீட்டிற்குச் செலுத்தினான். வீட்டின் முன்பு அவன் காரை நிறுத்தவும், ரஞ்சிதா அவன் அருகே வந்து ஷிவானியைப் பற்றி விசாரிக்க, அவளுக்கு பதில் சொல்லிவிட்டு, வீட்டின் உள்ளே சென்றவனுக்கு இத்தனை நாட்களை விட, இப்பொழுது ஷிவானி இங்கு இல்லாதது அதிகம் தாக்கியது.
வீட்டின் வெறுமை முகத்தில் அறைய, தங்களது திருமண ஆல்பத்தை எடுத்துப் பார்த்தவன், அதில் ஷிவானியின் கண்களில் நிரம்பி வழிந்த குறும்பையும், நாணத்தையும் ரசித்துக் கொண்டே அதைப் பார்த்து முடித்தவன்,
"அம்மா இருக்கும் போது இந்த சேர் இங்க
அப்போவே எனக்கு சந்தேகம்.. அவ கண்ணுல உன்னைப் பார்க்கும் போது எப்போதும் இருக்கும் சந்தோஷமும் சிரிப்பும் காணோம்டா... உன்னைப் பார்க்கும்போது எல்லாம் பேசற கண்ணும் இப்போ வெறுமையா இருக்கு புகழ்... இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பேசாம அமைதியா ஜடமா இருப்ப? நாளைக்கு உன் குழந்தை வந்தாலும் இப்படியே தான் இருக்கப் போறியா? இப்படியே பேசாமையே அமைதியா இருந்தா வாழ்க்கையே போர் அடிச்சிடும்... கொஞ்சமாவது உன்னோட கூட்டுல இருந்து வெளிய வாடா... ஷிவானிக்காக... உன் குழந்தைக்காக." என்ற விக்ரம், ஷிவானியின் இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்று தெரியாமல், ஏதோ கோபத்தில் தொடங்கி அங்கலாய்ப்பில் முடிக்க, புகழ் அவனுக்கு எந்த பதிலையும் சொல்லாமல், தனது இடத்தில் சென்று அமர்ந்தான்.
அவனது முகம் யோசனையைக் காட்டவும், விக்ரம் அதற்கு மேல் எதுவும் பேசாமல், தனது வேலையைப் பார்க்கச் சென்றுவிட, "என்னால தான் சிவா இப்படி இருக்காளா? நான் தான் அவளுக்கு பொருத்தம் இல்லாம, அவளோட உணர்வுகளையே கொன்னுட்டேனா?" என்று யோசிக்கத் தொடங்கி, தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்தான்.
கண்களில் ஜீவனே இல்லாமல் வெறுமை மட்டுமே நிறைந்திருக்க, தன் அருகே நின்றவளைப் பார்க்கப் பார்க்க புகழின் நெஞ்சம் வலித்தது. தான் அவளது வாழ்வையே பாழடித்து விட்டோம்... தன்னை விடுத்து அவள் வேறொருவரை திருமணம் செய்திருந்தால் நிம்மதியாக சந்தோஷமாக பட்டாம்பூச்சி போல சுற்றிக் கொண்டிருப்பாள் என்று நினைத்தவனின் காதல் கொண்ட மனது,
"அப்படியே அறிவு வழியுது போ... அவளை இப்போவும் கூட பழையபடி பட்டாம்பூச்சியா மாத்தலாம். ஏன் நீ நினைச்சா முடியாதா? அதெப்படி அவளை 'வேற ஒருத்தருக்கு மனைவியாகி இருந்தா'ன்னு யோசனை பண்ணுவ... அறிவே... போய்.. அவளை, அவ ஆசைகளை புரிஞ்சிக்காம sபோன உன் மடத்தனத்துக்கு முடிவு கட்டிட்டு சந்தோஷமா இரு... உன்னோட வணியை உன்னால் சந்தோஷமா வச்சிக்க முடியும்..." என்று திட்டத் தொடங்க, காபியை குடித்து முடித்து, அவள் கொடுத்த சிற்றுண்டியை எடுத்துக் கொண்டு அறைக்குச் செல்ல, ஷிவானி சோபாவிலேயே அமர்ந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"சிவா... மாப்பிள்ளை சீக்கிரமா வேற வந்திருக்கார்... ஏதோ யோசனையா இருக்கற மாதிரி இருக்கு... என்னன்னு போய் கேளு..." சசி விரட்ட,
“கடையை பத்தித் தான் யோசிச்சிட்டு இருப்பார்ம்மா... வேற என்னத்தை அவர் யோசிக்கப் போறார்.." என்று சலித்துக் கொண்டே, உள்ளே சென்றவள், கட்டிலில் சென்று அமர்ந்தாள்.
அவளது வருகைக்காக காத்திருந்தவன், "நீ சாப்ட்டியா சிவா... உங்க அம்மா செய்தது நல்லா இருக்கு... நீயும், இதெல்லாம் எப்படி செய்யறதுன்னு கத்துக்கோ..” என்று சொல்லவும்,
'என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்திருக்கீங்க? அதுவும் கடையை விட்டுட்டு... இன்னைக்கு சேல்ஸ் இல்லையா?" ஷிவானி நக்கலாகக் கேட்க,
"இல்ல.. என் பொண்டாட்டியைப் பார்க்க வந்துட்டேன்... சரி சொல்லு... எனக்கு இது போல செய்துத் தருவியா?" புகழ் கேட்க, ஷிவானி உதட்டைப் பிதுக்கினாள்.
"அப்போ... செய்து தர மாட்டியா?" மீண்டும் புகழ் கேட்க,
"எதுக்கு?" ஷிவானி பதிலுக்கு கேட்க, அவளது வாயைப் பிடுங்குவதற்காகவே
"உங்களுக்கு நான் பேசறதை நின்னு கேட்க நேரம் எல்லாம் இருக்கா என்ன?" கேள்வியாக நிறுத்தியவள்.... புகழ் பதில் ஏதும் சொல்லாமல் அவளைப் பார்த்துக்கொண்டு இருக்கவும்...
"நீங்க சாப்பிட வர நேரம் சொல்லலாம்ன்னு இருந்தேன்.. போன்ல பேசலாம்ன்னாலும்.. உங்க போன்ல கஸ்டமரைத் தவிர யாராவது கூப்பிடலாமா என்னன்னு தெரியல.. கூப்பிட்டாலும் பதில் வராதே.. அது தான்..." அடுத்த சவுக்கடியை ஷிவானி நாவினால் வீச, அவளுக்கும் இன்று ஏதோ கோபமாக பேச வேண்டும் போல இருப்பதை நினைத்து, புகழ் சந்தோஷப்படுவதா, தன்னை நினைத்தே வருந்திக் கொள்வதா, என்று புரியாமல் தடுமாறி, அவளது கையை எடுத்து தனது கைக்குள் வைத்துக் கொள்ள முயல, ஷிவானி தனது கையை உருவிக் கொண்டாள்.
"நான் போகத் தான் போறேன்... உங்களோட எந்த சமாதானத்தையும் நான் கேட்க விரும்பல.." ஷிவானி வெடுக்கென்று சொல்ல, 'வணி' புகழ் அதிர்ந்து கூவினான்.
"ஆமா... வணியாம் வணி... அந்த பேரை நீங்க கூப்பிட்டு எத்தனை காலம் ஆச்சுன்னு உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்கு காரியம் ஆகணும்ன்னா மட்டும் இந்த பேரைக் கூப்பிட வேண்டியது. நான் வேலைக்கு போகத் தான் போறேன்.
நான் வேலைக்கு போகத் தான் போறேன். இனிமேலும் நீங்க எப்போ வருவீங்கன்னு பார்த்து, காத்துக்கிட்டு இருக்க முடியாது... சலிச்சு போச்சு இனியன்... ரொம்ப ரொம்ப சலிச்சு போச்சு... என்னடா வாழ்க்கை இதுன்னு எனக்கே சலிப்பா தான் இருக்கு.. ஏன் எனக்கு மட்டும் பெண்டாட்டியை முதன்மையா நேசிக்கிற கணவன் இல்லன்னு சலிப்பா தான் இருக்கு..
என்ன செய்தா, உங்களுக்கு என்னோட முக்கியத்துவம் தெரியும்ன்னு நானும் யோசிச்சு யோசிச்சு பார்க்கறேன்.. எனக்கு ஒண்ணுமே புரியல... உங்களுக்கு கடை தானே அவ்வளவு முக்கியம். அப்போ நான் வேலைக்கு போனா என்ன? எங்க இருந்தா என்ன?" கோபமாக அவள் கத்த, அவளது குரலைக் கேட்ட பாஸ்கரும், சசியும் பதறிக் கொண்டு அவளது அறைக்கு ஓடி வந்தனர்.
இதுவரை ஷிவானி கலகலத்து பேசி இருக்கிறாள் தான்.. அப்பொழுது கூட இந்த அளவிற்கு அவளது குரல் ஓங்கி ஒலித்தது கிடையாது. இப்பொழுது அவள் கோபமாக கத்தவும், அவளைப் பெற்றவர்கள் பயத்துடன் ஓடி வர, ஷிவானி எங்கோ பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க, அவர்களது கலக்கம் புரிந்த புகழ், அவர்கள் அருகில் சென்று,
"ஷிவா... நம்ம பழைய ஷிவாவாத் தான் ரூம்ல இருந்து வெளிய வருவா...
"ஷிவா... நம்ம பழைய ஷிவாவாத் தான் ரூம்ல இருந்து வெளிய வருவா... எங்களுக்குள்ள சண்டை எதுவுமே இல்ல.. எங்களுக்குள்ள காதல் நிறைய இருக்கு... ஆனா.. புரிதல் போதல... அது தான் பிரச்சனையே... இத்தனை நாளா புரியாம இருந்தது இப்போ புரிஞ்சிடுச்சு... நான் சரி பண்ணிடறேன்.." அவர்கள் இருவரையும் பார்த்து சொன்ன புகழ், அவர்கள் சென்றதும், கதவை அடைத்துவிட்டு, ஷிவானியின் அருகே வந்து தரையில் அமர்ந்துக் கொண்டான்.
என்ன பேசுவது? எப்படித் தொடங்குவது என்று புரியாமல் தடுமாற்றத்துடன் ஒரு சில நிமிடங்களைக் கடத்தியவன், தன்னுடைய அறியாமைத் தவறை திருத்தியே ஆக வேண்டும் என்ற முடிவுடன், தொண்டையைக் கனைக்க, அப்பொழுதும் ஷிவானி அமைதியாக அமர்ந்திருக்கவும், கையைத் தொடச் சென்றவன், அவள் இழுத்துக் கொள்வாளோ என்ற தயக்கத்துடன், அந்த அறையைச் சுற்றி பார்வையை ஓட்டியவனின் கண்களில் அவன் வாங்கி வந்திருந்த டெட்டிபியர் கவர் பட்டது. சைடு டேபிளின் மீது வைத்திருந்த அந்தக் கவரை எடுத்தவன், அதை அவள் முன்பு நீட்டிக் கொண்டு அமர்ந்தான்.
சில நிமிடங்கள் வரை தனது பார்வையை அதில் பதிக்காமல் பிடிவாதமாக இருந்தவள், "என் செல்லக்குட்டிக்கு என்ன
சில நிமிடங்கள் வரை தனது பார்வையை அதில் பதிக்காமல் பிடிவாதமாக இருந்தவள், “என் செல்லக்குட்டிக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன்னு பார்க்க மாட்டியா?..." என்று கேட்கவும், மெதுவாக ஓரக் கண்ணால் அதைப் பார்த்தவள், இதயத்தை ஏந்திக் கொண்டு ஒரு அழகான டெட்டி இருக்கவும், நிமிர்ந்து புகழை வெற்றுப் பார்வை பார்த்தாள்.
அவளது பார்வையை கவனிக்காதவன் போல், “இது என்னோட செல்ல வணியாம்... உன் கையில இருக்கற ஹார்ட் இனியனோடதாம்... அதை கையில வச்சிக்கறதா... தூக்கிப் போடறதான்னு நீ தான் சொல்லணும்.. ஆனா... இனியன் பாவமில்ல..." டெட்டியிடம் அவன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தவள், உச்சுக்கொட்டிவிட்டு திரும்ப நினைக்க, பட்டென்று அவன் பேசியது ஷிவானிக்கு உறைத்தது.
“என்ன? என்ன சொன்னீங்க?" தன் காதுகளில் கேட்டது சரிதானா என்பதை உறுதி செய்துக் கொள்ள ஷிவானி கேட்கவும்,
"அது வந்து வணி... இந்த டெட்டி என்னோட செல்ல வணியாம்.. உனக்குத் தெரியுமா?" என்று கேட்டுக் கொண்டே அவள் அருகில் பெட்டின் மீது ஏறி அமர்ந்தான்.
அதைக் கேட்டவளின் கொதிப்பு பல மடங்கு உயர, “என்ன? டாக்டர் சொன்னதையும், எங்க அம்மா சொன்னதையும் வச்சிட்டு ரொம்ப யோசிச்சு, விக்ரம் அண்ணா கிட்ட ஐடியா கேட்டு இதை எல்லாம் வாங்கிட்டு வந்தீங்களோ?" நக்கலாக அவள் கேட்கவும்,
"இல்லையே.." புகழ் பதில் கூற,
"உங்களுக்கா இதெல்லாம் எங்க தோணப் போகுது... இன்னும் இன்னும் கடைக்கு எப்படி கஸ்டமரை வர வைக்கலாம்... எந்த இடத்துல கடையைத் திறக்கலாம்ன்னு தானே யோசிப்பீங்க... அதைத் தவிர வேற எண்ணம் எல்லாம் வரும்ன்னு நீங்க சொன்னா, அதை நம்ப நான் என்ன கேனையா? போய் எங்க அம்மா அப்பாகிட்ட கதை சொல்லுங்க... அவங்க நம்புவாங்க..." இன்னமும் நக்கலும் கோபமும் குறையாமல் அவள் பேச, புகழ் தலைகுனிந்து அமர்ந்திருந்தான்.
"இவருக்கு மட்டும் தான் எப்போப் பாரு கடை நினைப்பு... இவரோட பார்ட்னர்ஸ்ன்னு கூட இருக்கறவங்க எல்லாம் நார்மலா திங்க் பண்ணிக்கிட்டு சந்தோஷமா தான் இருக்காங்க.. இவருக்கு மட்டும் தான், கடையே உலகம்... பெண்டாட்டி எல்லாம் ராத்திரிக்கு மட்டும் தான்.." முணுமுணுத்துக் கொண்டே அமர்ந்திருந்தவளின் சொற்கள்
அனைத்தும் புகழை குத்திக் கிழித்தது.
அந்த வலியை மென்று விழுங்க நினைத்து, அவளது முணுமுணுப்பிற்கு பதில் சொல்லும் விதமாக, "அவங்களோட லைஃப்ல கல்லும் முள்ளுமான பாதை இல்லையே... ஆண்டவன் அருளால அதெல்லாம் அவங்களுக்கு வேண்டாம்.." என்று பதில் கூற, ஷிவானி சட்டென்று நிமிர்ந்துப் பார்த்தாள்.
எங்கோ பார்வை பதிந்திருக்க அந்த பார்வை மொத்தமும் வலிகள் நிறைந்து இருக்க, "உனக்கு தெரியுமா வணி.. இந்தத் தொழிலை ஆரம்பிக்க, எனக்கும் சேர்த்து அவங்க தான் முதல் போட்டாங்க. அந்த முதல் போடக் கூட வக்கில்லாம தான் நான் இருந்தேன். எங்க அப்பா விட்டுட்டுப் போன கடனுக்கே.. நான் காலேஜ் படிப்போட, செல்ஃப் இண்டரெஸ்ட் எடுத்து கத்துக்கிட்ட அந்த ஹார்ட்வேர் சர்வீஸ் தான் உதவிச்சு. ஒரு கம்ப்யூட்டர் கடையில வேலைக்குச் சேர்ந்து, அதிலே கொஞ்சமா வந்த சம்பளத்தையும் கடன் அடைக்கத் தான் கொடுத்தேன்.
அப்பா குடிச்சிட்டு போய் ஆக்சிடென்ட் ஆனதுனால, அவரோட பென்ஷன், இன்சூரன்ஸ் எல்லாம் வாங்கறதுக்குள்ளேயே நொந்து போயிட்டேன்... அப்பறம் விக்ரமோட அப்பா உதவியோட அதை எல்லாம் வாங்கி, கடனை அடைச்சிட்டு நிமிர்ந்தா, இவங்க பிசினஸ் பண்ற பிளானைச்
சொன்னாங்க... நான் தான் இந்த மாதிரி பிசினஸ் பத்தி சொல்லி அவங்களை யோசிக்கச் சொன்னேன்... ஐடியா மட்டும் தான் என்னது... மீதி எல்லாம் அவங்க தான் செய்தாங்க..
மொதல்ல வொர்க்கிங் பார்ட்னரா சேரறேன்னு சொன்னேன்.. நாலு பேரும் கேட்காம என்னோட பங்கையும் அவங்களே போட்டு இந்த தொழிலைத் தொடங்கினாங்க. அவங்க எனக்கு போட்ட மொதலை நான் உழைச்சு திருப்பித் தர வேண்டாமா சொல்லு... என் மேல எவ்வளவு நம்பிக்கை இருந்தா அவங்க எனக்குக் கடன் கொடுத்ததுக்கு ஒரு கையெழுத்து கூட வாங்காம செய்திருப்பாங்க... என்னோட லாபத்துல வந்த பைசாவை கொஞ்சம் கொஞ்சமா கொடுத்து கடனை அடைச்சேன்... இதுக்கு நடுவுல கல்யாண வயசுல அக்கா... அவங்க கல்யாணம்.... அம்மாவோட நிலைமை எல்லாம் இருக்கு" என்று தனது முள் பாதையை விவரித்தவன், அமைதியாக சிறிது நேரம், அந்த நேரத்து வலிகளை மென்று விழுங்கிக் கொண்டிருந்தான்.
“தப்பு தான்... நான் ஒரு சாதாரண மனுஷனா.. ஒரு சினிமாவுக்கு போறது, ஹோட்டல்ல சாப்பிடறது, பொண்ணுங்களை சைட் அடிக்கிறதுன்னு இல்லாம போனது தப்புத் தான். பசங்க எல்லாம் அதைச் செய்யும் போது எனக்கும்
எல்லாம் அதைச் செய்யும் போது எனக்கும் ஆசையா தான் இருக்கும்... ஆனா என்னோட சூழ்நிலை அப்படி இல்லையே. அந்த நேரத்து உணர்வுகளை எல்லாம், குடும்பம், முன்னேற்றம், கடன்ன்னு நினைச்சு நினைச்சே மூட்டைக் கட்டி வைச்சுட்டதனால, எல்லாமே மரத்துப் போச்சுன்னு நினைக்கிறேன்...
அதுக்காக உன் மேல காதல் இல்லன்னு அர்த்தம் இல்ல சிவா.. உன்னை நான், இது எல்லாத்தையும் விட அதிகமா விரும்பறேன்... எனக்கும் உணர்வுகள் இருக்குன்னு புரிய வச்சவ நீ தான்... நான் வாய்விட்டு சொல்லலையே தவிர என்னோட உயிரே நீதான் வணி... அது உனக்குத் தெரியுமா? நம்ம புனிதமான தாம்பத்யத்தை இப்படி கொச்சை படுத்திட்டியே.." வலியுடன் புகழ் கேட்டு நிறுத்திவிட்டு, அவளது சிஸ்டமை இயக்க, ஷிவானி கண்களில் கண்ணீருடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"அய்யோ கடவுளே... அவரைப் பத்தி தெரிஞ்சும், கோபத்துல என்ன வார்த்தை எல்லாம் பேசிட்டோன்.. எனக்கு அறிவே இல்ல... அவர் எவ்வளவு மனசு வருந்திப் பேசறார்?" என்று நினைத்துக் கொண்டவள், அவனது அருகில் சென்று நிற்க, சிஸ்டமை இயக்கியவன், அவளது புகைப்படங்கள் அடங்கிய போல்டரை எந்த தேடலும் இல்லாமல், தன்னுடைய சிஸ்டம் போல ஓபன் செய்ய ஷிவானி
"வெரி வெரி ஸாரி.... உங்கள பத்தி தெரிஞ்சும் உங்கள நோக வச்சுட்டேன் இனியன்.. என்ன என்னமோ ஏக்கம்... தனிமை எல்லாம் சேர்ந்து, உங்கள தப்பா நினைக்க வச்சுருச்சு... நீங்க என் மேல இவ்வளோ காதலா இருப்பீங்கன்னு எனக்கு தெரியாம போச்சு.. அதைப் புரிஞ்சிக்காம, மத்தவங்களோட வாழ்க்கையோட அதை கம்பேர் பண்ணி... இப்படி உங்களையும் வருத்திட்டேன் பாருங்க..." என்று வருத்தவும்,
"அதுக்கு எதுக்கு வணி இவளோ ஸாரி
சொல்லற... நானும் வேலை வேலைன்னு... உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ணாம் தான போனேன்.... நான் என்னோட காதலை உனக்கு புரிய வச்சு இருக்கணும்.. அதையும் செய்யல" என்று தன் பங்கிற்கு அவனும் வருந்தவும்,
"போதும் நம்ம சாரி கேட்டது" என்று கூறியவள் அவனது இதழ்களை தனது இதழ் கொண்டு மூட, புகழின் கைகள் அவளை மென்மையாக அணைத்துக் கொண்டது.
இருவரும் ஒருவரோடு ஒருவர் கரைந்து, இத்தனை நாள் பிரிவிற்கு ஈடு செய்யது முடித்து சில நிமிடங்களில், அவளிடம் இருந்து விலகியவன், "உனக்கு மூச்சு முட்டும்.." என்று சொல்ல,
"அப்படியே ஒண்ணும் தராத மாதிரி தான் பேச்சு... சின்னப் பிள்ள... போய்யா..." என்று குறும்புடன் பழிப்புக் காட்டியவளின் இதழ்கள் இப்பொழுது புகழின் வசம் சிக்கித் தவித்தது.
அவளது நிலை கருதி அவளை விடுவித்தவன், "உனக்கு என் மேல இருந்த கோபம் போச்சா?" பரிதாபமாகக் கேட்க,
"என் புருஷன் இவ்வளவு பேசினதே பெருசாச்சே... ஆண்டவா... அதுவும் கல்யாணம் பேசறதுக்கு முன்னயே என்னை இப்படி சைட் அடிச்சிருக்கேன்னு ஆதார பூர்வமா நிரூபிச்சதுனால வேற வழி இல்லாம கோபத்தை விட்டுட்டேன்... என்ன செய்யறது? எனக்கு இப்போ சந்தோஷத்துல குதிக்கணும் போல இருக்கு..." ஷிவானி சொல்லவும்,
"குதிச்சு கிதிச்சு வச்சிடாதே தாயே... எனக்கு உன்னை ரொம்ப ரொம்பப் பிடிக்கும் வணி.. பிடிக்காம வெறும் ஆசைக்கு உன்னை தொட்டேன்னு எப்படி நினைச்ச? என்னோட ஒவ்வொரு செயல்லையும் உன் மேல நான் காட்டற அக்கறையும் காதலும் புரியலையா?" ஷிவானியின் கன்னத்தை நிமிர்த்தி புகழ் ஆதங்கத்துடன் கேட்க, ஷிவானி அவனைப் பார்த்து விழித்துக் கொண்டு நின்றாள்.
அவளைத் தனது மடியில் தாங்கியவன், "உனக்கு என்னைப் பிடிக்கும் தானே..." என்று கேட்க, மது அவனை அணைத்துக் கொண்டு,
"ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.. உங்க கூடவே ரொம்ப நேரம் இருக்கணும்னு நிறைய கனவு கண்டு இருக்கேன்.. உங்க கையைப் பிடிச்சிக்கிட்டு, பார்க், பீச், சினிமான்னு சுத்தி வரணும்னு நிறைய ஆசை, ... இந்த இந்த படம் எல்லாம் உங்க கூட போகணும்னு பெரிய லிஸ்ட்டே போட்டு வச்சிருந்தேன்... உங்க கூட கதை பேசணும்னு மனசுல நிறைய கதைகளை யோசிச்சு வச்சிருந்தேன்... அதெல்லாம் இல்லை... கடை தான் உங்களுக்கு முக்கியம்ன்னு ஆனதும், முதல்ல எல்லாம் டேக் இட் ஈசியா எடுத்துட்டு போன என்னால, அத்தையும் ஊருக்கு போகவும், சுத்தமா அப்படி இருக்க முடியல....
"இந்த கோபத்தை எல்லாம் ஒரு ஓரமாக தூக்கிப் போட்டுட்டு ரெடியா இரு, உனக்கு வேற வழியே இல்ல..என்று அவளை இறுகத் தழுவிக் கொள்ள, மதுவும் அவனோடு ஒன்றிக் கொண்டாள்.
ஆசாபாசமே இல்லாமல் மரம் போல இருக்கிறான் என்று தான் நினைத்துக் கொண்டிருக்க, மௌனமும் ஒரு மொழி தான்... அந்த மொழியிலும் காதல் சொல்ல முடியும் என்பதை உணராமல் போன தனது மடத்தனத்தையும், கனவும் வாழ்க்கையும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பி, இரண்டு மாதங்களாக தன்னையும் வருத்திக் கொண்டு, மற்றவர்களையும் கவலைக்குள்ளாக்கிய தனது அறிவை எண்ணி ஷிவானி நொந்துக் கொண்டிருக்க,
Comments
Post a Comment