சிவா
அதான் கொஞ்சம் பயந்துட்டேன்.. நீங்க எப்பவும் எதுலயும் தோற்க கூடாது னு அந்த ஈசன் கிட்ட நொடிக்கொரு தரம் இப்பதான் வேண்டி கிட்டிருந்தேன்... அதான் என்னாச்சுனு கேட்கலாம் னு... " என்று இழுத்தாள்...
அதை கேட்டு ஒரு நொடி அசந்து நின்றான்.. அவளை அப்படியே அள்ளி எடுத்து அணைத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது...
அவள் சொன்ன மாதிரி அது ஒரு அவனுக்கு சவாலான சர்ஜரி தான்.. கடைசி நொடி வரை போராடி தான் அவரை காப்பாற்ற முடிந்தது..
அதுவும் அவர் இதயம் சில நொடிகள் நின்று போனது... மீண்டும் வசீகரன் போராடிதான் அதை இயுங்க வைக்க முடிந்தது
ஒரு வேளை இவளின் பிரார்த்தனையும் கூட எனக்கு பாசிட்டிவ் வைப்ரேசனை கொடுத்ததோ??... எப்படியோ ஒரு உயிரை காப்பாற்றி ஆச்சு.. அதனால் ஒரு குடும்பத்தை காப்பாற்றி ஆச்சு..” என்று பெருமுச்சு விட்டவன்
“உன்னுடைய பிரார்த்தனையால் தான்
*******. ********
“
“ஏன் அத்தை, மம்மு கல்யாணம் பண்ண ஆசைப்படுறாங்க, நீங்க என்னடானா வேண்டாம்னு சொல்லுறீங்க” சஞ்சு
“சஞ்சு நீ சும்மா இரு, எப்ப கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு பெரியவங்க அவங்களுக்கு தெரியாதா” என்று அதட்டலுடன் முடித்தாள் தேவி
இந்தப் பேச்சு மேலும் தொடர்ந்தாள் தன் அம்மா அவரின் தங்கை மகளை சிவுக்கு பேசி முடித்தே விடுவார். சித்தியின் குணமோ, அவர் மகளின் நடத்தையோ அவ்வளவு சரியாக இல்லை என்பது தேவி
சஞ்சு அவளுடைய இறுதி ஆண்டு தேர்வை எழுதி முடித்திருந்தாள். அந்த விடுமுறையை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை ஏற்கனவே தந்தையுடன் ஆலோசித்திருந்தாள். மோகன், தான் முடிவு செய்து வைத்திருந்ததை தன் மகளிடம் கூறினார். சஞ்சுவின் தந்தைக்கு பிஸினஸை மகளும், மருமகனான சிவுவும் சேர்ந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் மிகுந்திருந்தது.
சிவுவுடன் அலுவலகத்திற்கு சென்று தொழிலைக் கற்றுக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார் மோகன். சஞ்சுவுக்கோ தொழிலின் மீது ஆர்வம் இல்லாமல் இருப்பினும் தனது மம்முவுடன் அலுவலகம் செல்ல மனமானது துடித்தது. வீட்டில் அனைவரிடமும் சென்று தன் முடிவைக் கூறினாள். சிவுவோ இந்த வாய்ப்பை தனதாக்கிக் கொள்ள முடிவு செய்தான்.
அடுத்த நாள் சஞ்சு ஆபிஸ் கிளம்புகிற நேரத்தில் அவளது தோழி அர்ச்சனா போனில் வாழ்த்து தெரிவித்தாள்.
1
வாழ்த்தைப் பெற்றுவிட்டு தன் மொபைல் வால் பேப்பரைப் பார்த்தவளின் இதழில் தன்னை மீறி ஒரு மென்னகைத் தோன்றியது. மகிழன் மது இருவரும் ஒரே வண்ணத்தில் உடையணிந்து தோள்கள் உரசும் படி நின்ற நிழற்படம் இருந்தது. ஒரு முறை அந்த புகைப்படத்தைப் பார்த்த அவளது தோழிகள் நல்ல ஜோடிப் பொருத்தம் என்றும் உனக்கு மாப்பிள்ளை வீட்டிலேயே இருக்கிறார் எனவும் கூறினார்கள். அது அவள் நினைவில் வந்து போனது...
அச்சு, “ஏய் மது நீங்க இரண்டு பேரும் செம்ம பேர்....பா, தெரியாதவங்க யாராச்சும் பார்த்தா லவ்வர்ஸ்னுதான் கண்டிப்பா நினைப்பாங்க"
இதைக்கேட்ட மதுவுக்கு இதயத்தை ஒட்டி பட்டாம்பூச்சி பட.... பட...வென அடித்துக் கொண்டது. இத்தனைக்கும் அந்த புகைப்படத்தில் அவ்வளவு நெருக்கமும் இல்லை எனிலும், அவர்களின் தோற்றம் அப்படிக் கேட்க வைத்தது. அதை சமாளித்தவாரே "எனக்கும் மம்முக்கும் எட்டுவருடம் வித்தியாசம் தெரியுமா?" என்று பதில் தந்தாள் மது
அக்காவுக்கும், மாமாவுக்கும் பத்து வருஷம் வித்தியாசம் இருக்குப்பா.. எட்டு வயசு தான, என்னமோ அறுபது வயசு வித்தியாசம் மாதிரி பேசுற, எங்க அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பதினைந்து வருடம் வித்தியாசம் தெரியுமா?” என்றாள் மற்றொரு தோழி,
இதை கேட்டுக் கொண்டு இருந்த திவ்யா, அச்சுவும் கூட தோழிகளுக்கு சாதகமாக பேசினார்கள்
“உனக்கும், உங்க மம்முக்கும் அப்படி ஒண்ணும் பெரிய வயசு வித்தியாசம் இல்ல மது, இப்பலாம் வயது மூத்த பொண்ணயே கல்யாணம் பண்றாங்க, ஜோடிப் பொருத்தம் உனக்கும் உன் மாமாவுக்கும் செமையா இருக்குப்பா" என்றாள் அச்சு.
“சஞ்சு சீக்கிரம் கிளம்பி வா. சிவு உனக்காக வெயிட் பண்றான்", என்று பத்மாவதி அழைத்த பிறகே தோழிகளின் உரையாடல் நினைவில் இருந்து மீண்டு சுயநினைவுக்கு வந்தாள். அதற்கு ஜான்சி ராணி கதையெல்லாம் கொஞ்சம் ஒவர்தான் என்று யோசித்தவாரே கிளம்பினாள்.
கீழே ஹாலில் சிவுவும் அவனது தாயரும் பேசிக்கொண்டு இருந்தனர். பத்மாவதி, சஞ்சு வருவதைப் பார்த்தவுடன் “வேகமா வா, உனக்காக சிவு காத்துக்கொண்டு இருக்கிறான்"
சஞ்சு வேகமாக உணவை முடித்து சமையல்கார ஆச்சியிடம் பூ கொண்டு வாங்க என்றாள். லட்சுமி ஆச்சி மல்லிகைப்
*******
முதல் முறையாக தங்கள் ஏற்றுமதி நிறுவனம் வந்த மதுவிற்கு ஆச்சரியம் இவள் வருவதை முன்பே கூறி வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தான்.
நிறுவனத்தின் நுழைவு வாயிலில் இருந்து கார் நிறுத்தம் வரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மதுவின் புகைப்படத்தோடு கூடிய வரவேற்புப் பதாகை அங்கு அலங்கரித்துக் கொண்டு இருந்தது. காரை விட்டு கீழே இறங்கியதுமே மதுவிற்கு கம்பெனியின் அலுவலர்கள் பொக்கே கொடுத்து இன்முத்தோடு வரவேற்றார்கள்.
“என்ன மம்மு வரவேற்பெல்லாம் தடபுடலா இருக்கு? எதுக்கு இதெல்லாம்?"
“என்னோட மது முதல்முறை ஆபீஸ் வரும்போது இதக்கூட செய்யாட்டி எப்படி? இந்த நிறுவனத்தின் உரிமைளார் நீ. உனக்கு எப்ப இங்கே வரணும்னு தோணுதோ, அப்பவெல்லாம் நீ வரலாம்"
“வாவ்.. ஆனாலும் இது உங்களோட கம்பெனி மம்மு. இது உங்களோட உழைப்பு,. இது எனக்கு எப்படி சொந்தமாகும்.
“வாவ்.. ஆனாலும் இது உங்களோட கம்பெனி மம்மு. இது உங்களோட உழைப்பு,. இது எனக்கு எப்படி சொந்தமாகும். மனைவிக்கு அதிகாரம் தரலாம்" ஆனால் இது கொஞ்சம் ஓவர்.
“அதனால தான் உனக்கும் இதில் சமஉரிமை இருக்கு" என்றான் அதன்பின் சுதாரித்துக் கொண்டு “வரப்போகிற அவளுக்கு உரிமை உண்டு என்றால் உனக்கும் உண்டு" என்று சமாளித்து வைத்தான். இதை ஆமோதிக்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் சஞ்சு தவித்தாள், சிவு அவளது தவிப்பை உணரத் தவறவுமில்லை.
அவள் வேண்டாம் என மறுத்தப்போதும் அவளை எம்.டி. நாற்காலியில் அமரவைத்து அழகு பார்த்தான் மாமன். “இல்ல மம்மு நீங்க உட்காருங்க” என அவள் எழ நினைக்க... "மே ஐ கம்மின் சார்" என குரல் வர, அவன் சஞ்சுவிடம் கைகாட்டி அங்கே அமரச் சொல்லிவிட்டு சஞ்சுவின் எதிர்நாற்காலியில் அமர்ந்து “எஸ்..” என அனுமதி தந்தான்.
உள்ளே நுழைந்தவள் சிவுவின் பி.ஏ. மது, அவளின் உடைகளைக் கண்டவுடன் சஞ்சுவுக்கு ஏதோ நெருடலாக இருந்தது. மது அவளுக்கு கொடுத்த மரியாதையில் அந்த நாற்காலியின் மதிப்பை உணர்ந்து கொண்டாள் சஞ்சு. இதை யோசித்து விட்டு திரும்புகையில் சிவு மீது உரசிக்கொண்டு நின்றாள் மது.
சஞ்சு கோபத்துடன் எழுந்து சிவு அருகில் வந்தாள், “ஹலோ மிஸ். மது, உங்களுக்கு சத்தமா பேச வராதா? பக்கத்தில் வந்து நின்னு இப்படி பேசற வேலை எல்லாம் வேண்டாம். எது சொல்லனும்னாலும் தள்ளி நின்னு சத்தமா பேசுங்க. அதுசரி என்ன டிரஸ் இது? இங்க என்ன கிளப் பார்ட்டி எதுவும் நடக்குதா? நாளைக்கு ஆபீஸ்ல டிரஸ் கோட் அறிவிப்பு தர்ரேன், அதயுடி எல்லோரும் நடத்துக்கோங்க நவ்
சத்தமா பேச வராதா? பக்கத்தில் வந்து நின்னு இப்படி பேசற வேலை எல்லாம் வேண்டாம். எது சொல்லனும்னாலும் தள்ளி நின்னு சத்தமா பேசுங்க. அதுசரி என்ன டிரஸ் இது? இங்க என்ன கிளப் பார்ட்டி எதுவும் நடக்குதா? நாளைக்கு ஆபீஸ்ல டிரஸ் கோட் அறிவிப்பு தர்ரேன், அதுபடி எல்லோரும் நடத்துக்கோங்க. நவ் யூ கேன் கோ" என்று அதிகாரத்தை வெளிப்படுத்தினாள்.
தலையை குனிந்துக் கொண்டு அமைதியாக வெளியே சென்றாள் மது.
“என்ன மம்மு அப்படி பார்க்குறீங்க, நான் சொன்னது சரிதான?"
“ஆமா மேடம், இந்த கம்பெனியோட எம்.டி மேடம் சொன்னா சரியாதான் இருக்கும் மேடம்" மென்னகையுடன் கூறினான்.
அவன் வாய் வாய்க்கு மேடம் என்று சொல்ல அவளுக்கும் சிரிப்பு வந்து இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.
“மம்மு, நான் என்ன வேலை செய்ய?"
“அதான் ஆல்ரெடி ஸ்டார்ட் பண்ணிட்டியே!"
சிறிது யோசித்தவள்... “மம்மு அது வேலை இல்ல, என் மம்முவோட கற்ப காப்பாத்தி னேன்"
“அடிப்பாவி.. என்ன கற்பா? இப்படி லேசா உரசினதுக்கா?" என்றான் அதிர்ச்சி மேலோங்க
"மம்மு தப்பு சின்னதா இருந்தாலும் சரி, அதிகமா இருந்தாலும் சரி தப்பு தப்புத்தான்” அவளின் பேச்சை ஆமோதித்து அதற்கு இருவரும் முற்றுப்புள்ளி வைத்தனர்.
சிவு வேலை செய்யத் தொடங்கியவுடன் சஞ்சு அவனைத் தொந்தரவு செய்யாமல் அங்கு இருந்த புக்கை எடுத்து பார்க்க ஆரம்பித்தாள். அதுவும் சற்று நேரத்தில் அவளுக்கு சலிப்பைத் தர போனில் கேம் விளையாடினாள். அவ்வப்பொழுது சிவவைவாரிக்கான்னோட
சிவு வேலை செய்யத் தொடங்கியவுடன் சஞ்சு அவனைத் தொந்தரவு செய்யாமல் அங்கு இருந்த புக்கை எடுத்து பார்க்க ஆரம்பித்தாள். அதுவும் சற்று நேரத்தில் அவளுக்கு சலிப்பைத் தர போனில் கேம் விளையாடினாள். அவ்வப்பொழுது சிவுவை பார்த்து ரசித்தாள், இது என்னோட சிவு மம்மு என பூரித்துப் போனாள்.
“சஞ்சுமா உனக்கு ஏதவது குடிக்க கொண்டு வரச்சொல்லவா?"
"இப்போதாவது கேட்டிங்களே, இப்பவே லைட்டா பசிக்குற மாதிரி இருக்கு மம்மு”
“எம்.டி. மேடம் என்ன வேணும்? தாங்கள் உத்தரவிட்டால் சேவை செய்வதற்கு இந்த அடியேன் தயாராக உள்ளேன்" என்று பவ்வியமாகக் கூறினான்.
"மம்மு... யூ ஆர் சோ ஸ்விட்” என்று அவன் கன்னத்தைக் கிள்ளினாள்
“ஏய்.. ஸ்வீட்னு சொல்லி கன்னத்தைக் கடிச்சிடாத"
"மம்மு.. கடிக்க மாட்டேன். ஆனால் பிச்சு சாப்பிடுவேன். அவனது கன்னத்தை பிய்த்து அப்.. அப்.." என்று வாயை அசைத்தாள்.
அவளுக்குப் பிடித்த சிற்றுண்டிகளைக் கொண்டு வரச்செய்து சாப்பிட வைத்தான். அதன் பின் சிவு தனது வேளையில் கவனம் செலுத்தினான்.
மதிய வேளை வர, “சஞ்சு நீ போய் சாப்பிடு எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு"
“எனக்கும் தான் வேலை இருக்கு மம்மு”
அவளைக் கண்டு யோசனையாக “உனக்கு என்ன வேலை, நான் எதுவும் வேலை சொல்லவில்லையே?"
“நீங்க சொல்லல, ஆனால் எனக்கு வேலை இருக்கு, உங்களை கவனித்துக் கொள்ளும் வேலைதான். சரி.. சரி.. நீங்க வேலையைப் பாருங்க"
ப்யூனை அழைத்துக் கொஞ்ச நேரத்திற்கு உள்ளே யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று கூறிவிட்டு வந்தாள்.
"மம்மு நீங்க வேலையைப் பாருங்க நான் ஊட்டிவிடுறேன்" என்று தட்டில் உணவுகளை வைத்துக்கொண்டே கூறினாள். “இல்ல சஞ்சு, இருக்கட்டும் உனக்கு ஏன் சிரமம்?" என்றானேத் தவிர அதற்கு ஆசைப்படத்தான் செய்தான்.
அவனுக்கு ஊட்டிவிட்டுக் கொண்டே அவளும் சாப்பிட்டாள், இருவரும் சாப்பிட்டுக் கொண்டு வேலையை முடித்தனர், “எனக்கு பிஸினஸ் டீல் விஷயமா ஒரு மீட்டிங் இருக்குடா, நான் கான்பிரன்ஸ் முடிச்சுட்டு கொஞ்ச நேரத்தில் வந்துடறேன்" என்று அவளிடம் சொல்லி விடைபெற்றான். அவன் சென்ற பிறகு டேபில் படம் பார்த்துக்கொண்டு இருந்தவள் தூங்கிவிட்டாள். சிவு மீட்டிங் முடித்து வந்த பார்த்தது தூங்கிக்கொண்டு இருந்த சஞ்சுவைதான். ப்யூனை அழைத்து உள்ளே யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்றான். அவள் தூங்கும் அழகை பார்த்து பார்த்து ரசித்தான். சற்று நேரம் சென்றது, கோடி முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கச் சொல்லிக் கொண்டே
கோடி முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கச் சொல்லிக் கொண்டே இருக்கிறாய் என்னவளே....! பிறகு அலுவலக வேலையில் மூழ்கிப் போனான். நேரம் செல்ல செல்ல அவள் சோபாவில் அசௌகரியமாக படத்திருப்பதால் உடல் நோகுமோ என்று எண்ணி அவளை எழுப்பினான். அவளை எழுப்பி "நீ வீட்டிற்கு கிளம்பு சஞ்சு, நான் மாலை வந்திடறேன்" அவளோ அரைத் தூக்கத்தில்,” இல்ல மம்மு நானும் உங்க கூடவே வர்ரேன் என முனங்கினாள்", "நீ வீட்டிற்கு போய் தூங்குடா, எழுந்திரு.." என உசுப்பினான்
“இல்ல மம்மு” என்று முளித்தவள், முகத்தைக் கழுவி அவன் அறையைவிட்டு வெளியே வந்தாள். இளம் வயதினர் இருந்த பகுதிக்கு சென்றாள் “ஹைய் நான் சஞ்சு.. சஞ்சனா.." என்று கைகுலுக்கினாள்
“ஹலோ மேடம், நான் தீபா, இவங்க..” என அங்கு உள்ள ஆண், பெண் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தாள்.
அனைவருக்கும் ஹலோ சொல்லி சஞ்சு பேச ஆரம்பித்தாள், "நான் உங்களை தொந்தரவு செய்றதா நினைக்க வேண்டாம், உங்க ஒர்க் பற்றி பேசிக்கிட்டு
அனைவருக்கும் ஹலோ சொல்லி சஞ்சு பேச ஆரம்பித்தாள், “நான் உங்களை தொந்தரவு செய்றதா நினைக்க வேண்டாம், உங்க ஒர்க் பற்றி பேசிக்கிட்டு இருக்கலாம்" என்று பேசும் போது மற்றவர்கள் இவளுக்கு கம்பெனியின் உரிமையாளருக்குக் கொடுக்கும் மரியாதையைக் கொடுத்து பேசிக்கொண்டு இருந்தனர். அவ்வப்பொழுது நண்பர்களாக பேச சொல்லுவோமா என்று எண்ணினாள். ஆனால் சிவு கொடுத்த எம்.டி. உரிமையை உதாசீனப்படுத்த விரும்பவில்லை. ஆகையால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையைப் பற்றி மட்டும் பேசிக்கொண்டு இருந்தாள்.
எதுவும் கூறாமல் முகத்தை கழுவிக்கொண்டு சென்றவள். எங்கு, எதற்கு சென்றாள்? என்பதை மேஜையில் உள்ள கணினி மூலம் பார்வையிட்டான் சிவு. அலுவலர்களுடன் அவள் சகஜமாகப் பழகுவதை பார்த்து நிம்மதியடைந்தான். ப்யூனை அழைத்து சஞ்சு இருக்கும் இடத்திற்கு தேநீர் கொண்டு போகும்படி கூறி முடித்த சிவு அவனது வேலைகளை கவனிக்க தொடங்கினான்.
"மேடம்
எம் டி சார் டீ கொடுக்கச்
“மேடம்..... எம்.டி. சார் டீ கொடுக்கச் சொன்னாங்க” என ப்யூன் வந்து நிற்க
“சார் டீ குடீச்சிட்டாங்களா?" சிவுவை பற்றி விசாரித்தாள்
“இல்லைங்க மேடம்” அப்போதும் பவ்வியமாக பதில் தந்தான் ப்யூன்
“சரி, இவங்க எல்லோருக்கும் கொடுங்க" அவர்கள் அனைவரையும் டீ குடிக்கச் சொல்லிவிட்டு, அங்கு இருந்து விடைப்பெற்றாள் சஞ்சு
சிவுவின் கேபின் நோக்கி சென்றாள், "மே ஐ கம் இன் சார்?” “வாங்க மேடம், என்னை விட்டுட்டு டீ குடிக்கமாட்டேன்னு நினைச்சேன் வந்துட்ட" என்றான்
“அச்சோ மம்மு நீங்க டீ குடிக்கலையா..! ஆனால் நான் அவங்களோட பேசிக்கிட்டே டீ குடிச்சிட்டேனே..."
அவனின் பார்வை ஏக்கத்தை காட்ட,"
மம்மு சம்மா சம்மா சொன்னேன் " என்று
வீடு வந்தவுடன் வாட்ச்மேனிடம் சென்று ஏதோ கூறி விட்டுப் போனாள் சஞ்சு.
“அத்தை நான் வந்துட்டேன்" குதித்துக் கொண்டே உள்ளே சென்றாள்.
“வா...டீ தங்கமே.. உனக்காகதான் காத்திக்கிட்டு இருந்தேன். இன்னைக்கு ஆபீஸ் எப்படி இருந்துச்சு?" அக்கறையாக விசாரித்தவாரே, அங்கிருந்த சோபாவில் அவளை அமரச் செய்து தானும் அமர்ந்தார்
“ரொம்ப நல்லாயிருந்துச்சு அத்தை” பத்மாவதியின் கழுத்தோடு கட்டியணைத்தாள்
சஞ்சு பேசியதை கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான் “ஆமா அம்மா,
குறட்டை சத்தம் தான் வரல" என்று சிவு அவளுக்கு கண் சிமிட்டி ஹஸ்யம் செய்தான்.எப்போதும் போல் அம்மா, மகனின் வம்பு பேச்சு சஞ்சுவை வைத்தே நாடகம் ஆரம்பம் ஆனது.
“ஏன்டா, அப்படி சொல்ற?” என்ற
“ஏன்டா, அப்படி சொல்ற?” என்றார் பத்மாவதி
“என்கிட்ட கேளுங்க அத்தை, என்ன நடந்துச்சுனு, ஆபீஸ்ல தனியா விட்டுட்டு மம்மு பிஸினஸ் டீல் விஷயமா போயிட்டார் அத்தை, போர் அடிச்சுச்சு நான் அங்க வேற என்ன செய்ய? அதான் கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்" விளக்கம் அளித்தாள்
“அதான என் மருமகள் என்ன சோம்பேறியா? அவளமாதிரி யாரும் வேலை செய்ய முடியாது, நீ சும்மா சஞ்சுவ குறை சொல்லாத" தன் மகனை செல்லமாக கடிந்து கொண்டார்
“இப்ப சொன்னிங்களே, இது கரெக்ட், இவள மாதிரி யாரும் ஆபீஸ்ல வந்து தூங்குற வேலை செய்ய முடியாது” தாய் கூறியதை வைத்தே மடக்கி அவள் பக்கமாக திருப்பினான்
சும்மா.. சும்மா.. என்ன கலாய்க்க வேண்டாம். சொல்லுங்க அத்தை” என்று சிணுங்கினாள்.
"சும்மா.. சும்மா.. என்ன கலாய்க்க வேண்டாம். சொல்லுங்க அத்தை” என்று சிணுங்கினாள்.
“நீ தூங்குன... அதான் சொன்னேன், இவள தனியா வேற கலாய்க்கிறாங்க"
“ஒ.. அப்படியா... இருங்க, அத்தைக்கிட்ட உங்க பி.ஏ. பற்றி சொல்றேன்?” அவனை வம்பு இழுக்க வென்று பேச்சைத் தொடர்ந்தாள்
"சொல்லிகோ... உங்க அத்தைக்கு என்னைப் பற்றி நல்லாத் தெரியும்" பெயருக்குக் கூட எங்க அம்மா என்று சொல்லி அவளை புண்படுத்த விரும்பவில்லை, அம்மா என்கிற உரிமையைக்கூட அவன் மனம் கவர்ந்தவளுக்காக விட்டுக் கொடுத்து விட்டான்.
“இவங்க ஆபிஸ்ல மதுன்னு ஒர் பொண்ணு, அந்த பொண்ணு டிரஸ் பார்த்தீங்கன்னா அத்தை, அந்த டிரஸ போட்டுக்கிட்டு உட்காரவும் முடியாது, குனியவும் முடியாது, அப்படி ஒர் டிரஸ்"
"இவங்க ஆபிஸ்ல மதுன்னு ஒர் பொண்ணு, அந்த பொண்ணு டிரஸ் பார்த்தீங்கன்னா அத்தை, அந்த டிரஸ போட்டுக்கிட்டு உட்காரவும் முடியாது, குனியவும் முடியாது, அப்படி ஒர் டிரஸ்" சஞ்சு முடிப்பதற்கு முன்,
"அதுக்குப் போய் இவ டென்ஷன் ஆனதும் இல்லாம, அந்த மதுவ வேற திட்டிட்டாமா" என மெல்லிய புன்னகையை உதிர்த்தான், அந்த புன்னகை எதற்கு என்றால்? அவளின் பொசசிவை கண்டு கொண்டு விட்டானே...!
“நீ ஏம்மா டென்ஷன் ஆன?” பத்மாவதி
“நான் ஏன் டென்ஷன் ஆககூடாது” என சிவுவை பார்த்தவாரே கேட்டு பின் அவள் அத்தையிடம் “ஆபீஸ்க்கு போடுற டிரஸ் லட்சணம்னு ஒண்ணு இருக்குல்ல அத்தை. அது கூட பரவாயில்லை விடுங்க, அடுத்து பார்த்தா மம்முவ உரசிக்கிட்டே வேற நின்னா பார்க்கணுமே, ஐயோ என்னால முடியல, எனக்கு பிடிக்கவும் செய்யல. அதான் ஆபிஸ்ல இருக்கிற எல்லோருக்கும் டிரஸ் கோடு சொல்லிருக்கேன் அத்தை”
பிரம்பைக் கண்டவன் கண்கள் விரிய “நான் ஏன் வருத்தப்பட போறேன், சீ..ச்.. சீ.. நீ ஏதோ தப்பா நினைக்கிற சஞ்சு"
பிரம்பை கையில் வைத்துக் கொண்டே, “என் முன்னாடியே இப்படின்னா நான் இல்லாட்டி..? சரியில்ல மம்மு” என கண்டிக்கும் பாவனையில் கேட்டாள்
“உன் முன்னாடி அப்படி என்ன பண்ணிட்டாங்க?, நீ சொல்றத பார்த்தா பெரிசா ஏதோ தப்பு பண்ண மாதிரி இருக்கு" என வாயில் கை வைத்தான்
“அந்தப் பொண்ணு வந்து உங்கள ஒட்டிக்கிட்டு நிற்கிறா, நீங்க ஏன் சத்தம் போடல மம்மு?"
“நான் வெளிநாட்டுல இருந்தப்ப இதெல்லாம் அங்க சகஜம். நான் போய் ஒரு பொண்ணுக்கிட்ட அப்படி இருந்தேனா?அது மட்டுமில்ல, அந்த பொண்ணுக்கிட்ட எப்படி இதை சொல்லுவேன்? இது அவ்வளவு பெரிய தப்பு இல்ல டா"
“நம்புவேன் மம்மு, நான் சும்மா விளையாட்டுக்கு தான் உங்களை வம்பிழுத்தேன். என் மம்முவப் பத்தி எனக்குத் தெரியாதா?” என கூறிக்கொண்டே அவன் கைபிடியில் இருந்து விலக எண்ணினாள். அவள் உடலை அசைக்க அவன் மேலும் தன்னவளை இறுக்கவும், அவன் பக்கமாக உடலை திரும்பிக் கொண்டாள், இருவரின் கண்களும் மோதிக் கொள்ள, வண்ணத்துப்பூச்சியின் மென்மையை ஒத்த இதழ் பரிசத்தை தந்தான். அதில் உடல் சிலிர்க்க அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
"காதல் விழியால் நோகடிப்பாள் காதல் மொழியால் பட்டிமன்றம் நடத்துவாள் காதலின் அனைத்து பரிமாணத்தையும்
உணரவைப்பாள்,
அந்த
மூன்று எழுத்தை மட்டும்
சற்று நிமிடம் செல்ல, விலகி நின்று குனிந்த தலையுடன் “மன்னிச்சுருங்க மம்மு, நான் அந்த மாதிரி தப்பா நினைச்சு சொல்ல, ஏதோ விளையாட்டாக நான் ஆரம்பிச்சது, உங்க மனச கஷ்டப்படுத்தினதுக்கு மன்னிச்சிருங்க” என மறுபடியும் மன்னிப்புக் கோரினாள்.
“இந்த நம்பிக்கை இப்ப இல்ல, நீ கிழவி ஆகி உன் பல் விழுகிற வரைக்கும் இருக்கணும்" அவளது முகவாயை பிடித்துக் கேட்டான்.
“நான் கிழவி ஆகிறப்போ நீங்க கொள்ளுத் தாத்தா ஆகிருப்பீங்க”
“ஏய் உன்னை விட ஆறு வயசு தான் பெரியவன், அதுக்குப் போய் என்னைய கொள்ளுத் தாத்தா ஆக்கிட்ட, அவ்வளவு ஒண்ணும் நமக்கு பெரிய வயசு வித்தியாசம் இல்ல"
சந்தேகமாக கேட்டாள் “இது பெரிய வயசு வித்தியாசம் இல்லையா மம்மு?”
அடுத்த நாளைக்குத் தேவையானதை தன் மனதளவில் தயார் செய்தாள் சஞ்சு. மதுவிடம் கடுமையாக நடந்து கொண்ட விதத்திற்கு முதலில் மன்னிப்புக் கேட்க வேண்டும். கம்பெனியின் ஒவ்வொரு பிரிவினைப் பற்றியும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும், அந்தந்தப் பிரிவு அலுவலர்களிடம் தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும், எல்லா விஷயத்துக்கும் மம்முவை தொந்தரவு செய்வது கூடாது எனத் தீர்மானம் எடுத்தாள். 'மம்மு சொல்லிக் கொடுத்து வேலையைக் கற்றுக்கொள்வதில் என்ன சிறப்பு இருக்க முடியும், அவர் உதவி இல்லாமல் நம்மால் இயன்றதை கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் மம்மு என்னை நினைத்துப் பெருமைப் பட முடியும்'.
அவள் யோசிக்காதது ஒன்று தான்... அவனுக்குப் பிடித்ததை பார்த்துப்
அவள் யோசிக்காதது ஒன்று தான்... அவனுக்குப் பிடித்ததை பார்த்துப் பார்த்து தான் ஏன் செய்ய வேண்டும்? என்பதை மட்டும்தான். அடுத்து வந்த நாட்களில் இருவரும் சேர்ந்தே ஆபிஸ் சென்று வந்தனர். அவளுக்காக தினமும் ரோஜாவுடன் தரிசனம் தந்தான் சிவு. அவன் தந்த பூவை அவனுக்காக அவனை எண்ணியே சூடினாள் சஞ்சு.
நாட்கள் செல்ல செல்ல அலுவலகத்தில் உள்ள அனைவரிடமும் சகஜமாக பழக ஆரம்பத்தாள் சஞ்சு. அவள் கூறிய டிரஸ் கோடும் கூட நடைமுறைக்கு வந்து விட்டது. இன்டீரியர் டிசைன் செய்து மொத்த அலுவலகத்தையும் மாற்றினாள். சிவுவின் அறையை தனி கவனம் எடுத்து அவன் விரும்பும் விதத்தில் அலங்கரிக்கச் செய்தாள். அவன் இருக்கைக்கு எதிரில் பத்மாவதி அமர்ந்து இருக்க அவரின் தோளில் ஒருபுறம்
விரும்பும் விதத்தில் அலங்கரிக்கச் செய்தாள். அவன் இருக்கைக்கு எதிரில் பத்மாவதி அமர்ந்து இருக்க அவரின் தோளில் ஒருபுறம் சஞ்சுவும், மறுபுறம் சிவுவும் சேர்ந்து கழுத்தை அணைத்தவாறு இருந்த புகைப்படத்தை மாட்டினாள்.
இருவரின் மனதுக்கும் நெருக்கமான புகைப்படம் அது. சில தொழில் சம்பந்தமான வேலை நுணுக்கங்களை சிவுவின் உதவியுடன் கற்றாள். பல வேலைகளை அவன் உதவியின்றி தானாக கற்று அதற்கான பாராட்டையும் அவனிடம் இருந்து பெறத் தவறவுமில்லை.
“மம்மு, நான் உங்ககிட்ட ஒண்ணு சொன்னா கோவப்படுவீங்களா?" என்று பேச்சை ஆரம்பித்தாள்
“என்ன...ம்மா.. புதுசா பொடி வச்சுப் பேசுற?"
“பொடி வச்சுப் பேசுறேனா? அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல” என சொன்னவளின் கண்கள் நர்த்தனம் ஆடியது
“எனக்குப் பிடிக்காத எதையோ சொல்லப்போற? கரெக்டா?” அவள் நாடியை சரியாகப் பிடித்தான்
“என் மனதைப் படிக்கும் பூதக்கண்ணாடி கண்கள்"
“இங்கே வேலை பார்க்கும் அனைவரும் என்னை விட வயதில் பெரியவங்களா இருக்காங்க?, படிப்பிலும் என்னவிட அதிகம் படிச்சவங்க?" அவனின் பதில் எப்படி இருக்கும் எனத் தெரிந்தும் கேட்டவளால் அதை முழுமையாக கேட்க முடியவில்லை
“இங்கே வேலை பார்க்கும் அனைவரும் என்னை விட வயதில் பெரியவங்களா இருக்காங்க?, படிப்பிலும் என்னவிட அதிகம் படிச்சவங்க?" அவனின் பதில் எப்படி இருக்கும் எனத் தெரிந்தும் கேட்டவளால் அதை முழுமையாக கேட்க முடியவில்லை
“அதனால் என்ன?” தன் புருவங்களை உயர்த்திக் கேட்டான்
“என்னைய முழுசா பேசவிடுங்க மம்மு இடையில் எதுவும் பேசாதீங்க?"
"சரி.. சரி... நீ சொல்ல வந்ததை சொல்லி முடி"
“என்னைவிட நம்ம ஆபிஸ் ஸ்டாப் எல்லாருமே சீனியர்ஸ், சோ அவங்க என்னை மேடம்னு கூப்பிடும் போது
எல்லாருமே சீனியர்ஸ், சோ அவங்க என்னை மேடம்னு கூப்பிடும் போது கொஞ்சம் சங்கடமா இருக்கு மம்மு"
“அதுக்கு...! என்ன செய்யலாம்னு யோசிச்சிருக்க? அதையும் நீயே சொல்லிரு"
“நீங்க குறுக்க குறுக்க பேசுறீங்க, அப்புறம் நான் சொல்ல வந்த விஷயத்தை முழுசா எப்படி சொல்லி முடிக்கிறது”
"ம்... “ என்று கைகளால் சைகை செய்து சொல்லு என்றான்
“ஆபீஸ் ஸ்டாப் எல்லோரையும் என் பெயரை சொல்லிக் கூப்பிட சொல்..ல..வா” என்று தான் கேட்க வந்ததை கேட்டு முடித்தாள் 个
“இப்ப நான் பேசவா? அந்தத் தவறை
மட்டும் எப்பவும் செஞ்சுறாத, நீ இந்த
கம்பெனியின் இன்னொரு எம்.டி,
இங்க வேலை செய்றவங்க உனக்கு
மரியாதை தரத்தான் வேண்டும்”
என்றவனின் பார்வையில்
தீர்மானம் தெரிந்தது.
"உன் பெயரை சொல்லிக் கூப்பிடத் தொடங்கினாலே அவங்க பார்க்கிற வேலைல அலட்சியம் வந்த்திடும் சஞ்சுமா. என்னைய விடவும் இந்த கம்பெனியில நிறைய பேரு சீனியர்ஸ்தான், வேலை நல்லபடியா போகனும்னா ஒரு சில விஷயங்கள்ல நாம நம்மள காம்ப்ரமைஸ் பண்ணிக்கதான் வேணும்” நிதர்சனத்தை எடுத்து கூறினான்.
“நான் வயசுல ரொம்ப சின்னப் பொண்ணு அதான் சங்கடமா இருக்கு மம்மு, அதோட நான் இப்பதான் கல்லாரிப் படிப்பையே
“நான் வயசுல ரொம்ப சின்னப் பொண்ணு அதான் சங்கடமா இருக்கு மம்மு, அதோட நான் இப்பதான் கல்லூரிப் படிப்பையே முடிச்சு இருக்கேன்”
“உனக்கு ஒர் விஷயம் சொல்றேன் கேட்டுகோ, ஒரு நாட்டோட ராஜா போரில் இறந்த பிறகு அந்த நாட்டோட நலனுக்காக இறந்த மன்னரோட மகனை அரியணையில் அமர்த்துவாங்க. சில சமயம் அவனுக்குப் பத்து வயசு தான் இருக்கும், அவனுக்கு விருப்பமா இல்லையா அப்படியெல்லாம் யாரும் கேட்க மாட்டாங்க?, அந்நாட்டில் பல வருஷமா அங்க மன்னருக்கு சேவை செஞ்ச மந்திரி, தளபதி தான் இப்ப அவனுக்கு கீழே வேலை பார்ப்பாங்க, அந்த சிறுவனை எல்லோரும் ராஜான்னுதான் கூப்பிடவும் செய்வாங்க, அந்த மாதிரி நீ நாட்டை இல்ல இந்த கம்பெனிய கட்டி ஆளணும்” அவள்
மாதிரி நீ நாட்டை இல்ல இந்த கம்பெனிய கட்டி ஆளணும்” அவள் அமைதியாக இருக்க சிவுவே பேச்சை தொடர்ந்தான்.
“அதைவிடு நாளைக்கு என் வருங்கால மனைவியை இந்த ஆபீஸ்ல இருக்கிறவங்க எப்படி கூப்பிடனும்னு நினைக்கிற?"
அவன் வருங்கால மனைவி என்றவுடன் மனதில் ஏதோ வெறுமை உணர்வு வந்து, விரக்தியாக காட்சி அளித்தது
“மேடம் தான்.. “ என்று பேச்சை " இழுத்தாளின் முகத்தில் தெளிவின்மை தெரிந்தது
“என்னாச்சு.. சஞ்சு?, ஏன் ஒருமாதிரி இருக்க?"
“அது.. அது.. “அவள் பேச்சை விட்டாள், “நீ இழுக்கிறத பார்த்தா, ஏதோ ஒரு விஷயம் இருக்கிற மாதிரி தெரியுதே?"
“ம்..ம்.." என தலையை ஆட்டியவள் “தேவி அக்காவோட அம்மா, ஒரு தடவ என்கிட்ட சொன்னாங்க?”
ஏதோ வில்லங்கம் இருக்கும் என எண்ணி சற்று குரலை தளர்த்தி “என்ன சொன்னாங்க?" கேட்டான்
"தேவி இருக்கப்போய் உன்னைய இந்த வீட்ல விட்டு வச்சிருக்கா..! நாளைக்கு சிவு தம்பிக்கு கல்யாணம் ஆனா வரப்பொற பொண்ணு சும்மாயிருப்பாளா? திடீர்னு அவங்க அப்படி சொன்னது ஞாபகத்துக்கு வந்துருச்சு”
மெல்லியதாய் நகைத்தவன் “அதற்குப் பேசாம நீயே என்னை கல்யாணம் பண்ணிக்கோ" சீண்டலோடு சேர்த்துத் தன் காதலையும் தந்தான்
“உங்களுக்கு எப்ப கிண்டல் பண்றதுன்னேத் தெரியல மம்மு, உங்களுக்கேத் தெரியும் நம்ம ரெண்டு பேருக்குமே எவ்வளவு வயசு வித்தியாசம்னு?”
'இவளுக்கு வயசுல சின்னவள் என்கிற எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும்' என்று தான் மனதில் முடிவு செய்தான்.
“இந்த ஆபீஸ்ல உள்ள அனைவரும் மேடம்னுதான் உன்னைய கூப்பிடுவாங்க! அதை ஏற்றுக்கொள், இன்னொன்று எங்களை விட அம்மா உன் மேல
எங்களை விட அம்மா உன் மேல் அதீத பாசம் வச்சிருக்காங்க, அவங்க எப்பவும் உன்ன விட்டுக் கொடுக்க மாட்டாங்க, தேவி அண்ணியோட அம்மா பற்றிதான் நமக்குத் தெரியுமே, அவங்க பேசினத பெரிய விஷயமா நினைக்காத, அப்புறம் நம்ம வீட்டோட ராணியே நீ தான், உன்ன மீறி நம்ம வீட்டுல எதுவும் நடக்காது. உன்னோட சின்ன சின்ன ஆசையை கேட்கிறதுக்கும் சரி அந்த ஆசையை நிறைவேற்றவும் சரி எப்பவும் உன் கூடவே நான் இருப்பேன், ஆனா இந்த அலுவல் விஷயத்தில் மட்டும் என்னோட பேச்சைக் கேளு உனக்கு இங்க கண்டிப்பா மரியாதை தேவை, எனக்காக டா.. புரிஞ்சுக்கோ"
“ஓகே மம்மு நீங்க சொல்றத நான் கேட்டுக்கிறேன். ஆனால் என்னைய் வருத்தப்பட வேண்டாம்னு சொல்லிட்டு நீங்க ஏன் இவ்வளவு வருத்தப்படுறீங்க?” அவனைத
“அப்படியா மேடம், சரி வேலையை பார்ப்போமா?” என வேலை செய்யத் தொடங்கினார்கள்
சஞ்சுவுக்குதான் வேலையில் நாட்டம் செல்லவில்லை, அவள் நினைவு அனைத்தும் சிவுவை பற்றியும் சிவுவின் வருங்கால மனைவி பற்றியும் யோசித்துக் கொண்டே இருந்தது.
'நானே மம்முவ கல்யாணம் செஞ்சுக்கவா? என மனதில் பலமுறை யோசித்தாள், சீ.. நமக்காக யோசிச்சு அவர் வாழ்வை ஏன் கெடுக்க வேண்டும், எனக்கு மம்முவைப் பிடிக்கும், ஏதோ முறைப் பெண் என்கிற முறையில் கிண்டலுக்கு கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று கூறுகிறார், அதைப்போய் தீவிரமா யோசிக்கிறோமே, என்னால மம்முவை காதலிக்க முடியும்.
ஆனால் அவர் மனதில் காதல
மம்முவ நான் திருமணம் செய்வதால் எந்தப் பிரச்சனையும் இல்ல, என்னோட ப்ரெண்ட்ஸ் சொல்ற மாதிரி ஆறு ஆண்டுகள் பெரிய வித்தியாசம் இல்லாமல் இருக்கலாம்! எனக்கும் மம்முக்கும் மெச்சூருட்டி லெவல் சரியான விதத்தில் தான் இருக்கும், ஒர் ஆணின் புத்திக்கூர்மையை விட பெண்ணிற்கு எப்போதும் எதையும் கணிக்கும் திறன் விரைவாக வளர்ச்சி அடைந்துவிடும், அதனால் தான் எப்போதும் ஆணைவிட பெண்ணிற்கு வயது வித்தியாசத்தில் திருமணம் நடக்கும்.
ஆனால் நாங்கள் எப்போதும் ஒத்த கருத்து உள்ளவர்களாக இருந்தும் இருக்கிறோம், மம்மு கிண்டல் செய்கிறார் என்பதுக்காக கல்யாணம் பண்ணமுடியாது, இப்படி முறைப்பெண்ணை கேலி செய்வது கூட சகஜம் என்று தேவி
இப்படி முறைப்பெண்ணை கேலி செய்வது கூட சகஜம் என்று தேவி அக்கா கூறியிருக்கிறார், அதை பெரிது படுத்தக் கூடாது. பூஜாக்கிட்ட ஏற்கனவே மம்மு சொல்லிட்டாங்க அவரவிட நான் சின்ன பொண்ணு அதனால அவர் மனசுல காதல் இருக்க வாய்ப்பு இல்ல!
வீட்டில் யாரும் திருமணப் பேச்சை எடுத்ததேயில்லை, ஒருவேளை வீட்டில் யாருக்கும் விருப்பம் இல்லாமல் இருக்குமோ? அவங்களுக்கு விருப்பம் இருந்த போதுமா? என்னோட லவ் பார்முலாவ என்ன பண்றது என மாற்றி மாற்றி யோசித்துத் தலைவலி வந்தது தான் மிச்சம்!
அவளின் லவ் பார்முலாவை யோசிக்க ஆரம்பித்தாள்.. ‘அவனைப் பார்க்காத நாட்கள் நான் நானாவே இருக்கக் கூடாது,
இருந்திடலாம் அப்படின்ற அளவுக்கு வார்த்தைகளுக்கு அவ்வளவு தட்டுப்பாடா இருக்கணும், அவன் இல்லாத தனிமை அனைத்து பக்கமும் என்னை சுட்டுக் கொண்டே இருக்கணும், அதன் பின் பிரிந்து இருந்த நாட்களுக்கு பிறகு அவனைப் பார்த்தாள் தீடீர் மழையில் நனைந்தால் தோன்றக் கூடிய குளுமையும், புத்துணர்வும் எப்படி இருக்குமோ அப்படி இருக்கப்ப நானே போய் அவனோட கண்களைப் பார்த்து என்னோட காதல சொல்லுவேன் என தன் மனதின் அனைத்து மூலையிலும் பட்டியலிட்டுக் கொண்டாள், அவனும் தன்னோட உணர்வுப் பூர்வமான மொத்தக் காதலையும் எனக்குத் தர்றவனா இருக்கணும்'
காதல் ஃபார்முலாவை எந்த விதத்தில் யோசித்தாலும் சிவு தன் மனக்கண்ணின் முன் வந்து போவதை உணரத் தவறவில்லை சஞ்சு.
"ஹலோ அண்ணி, எப்படி இருக்கீங்க?"
"நாங்க நல்லா இருக்கோம், அங்க சஞ்சு, அத்தை எப்படி இருக்காங்க?” சிவுவை விடுத்து அனைவரையும் நலம் விசாரித்தாள் தேவி
“ஏன் அண்ணி போன் பண்ணா முதல்ல பேசுறவங்கள எப்படி இருக்கீங்கன்னு கேட்பாங்க? அப்புறம் வீட்டில் உள்ள மற்றவங்களை நலம் விசாரிப்பாங்க, நீங்க என்னடான்னா போன் எடுத்த உடனேயே முதல்ல வீட்டில் இருக்கிறவங்களை விசாரிக்குறீங்க? இது என்ன நியாயம் அண்ணி? என்னைய எப்படி இருக்கன்னுகூட கேட்க மாட்டீங்களா அண்ணி?”
“இப்போதான் சஞ்சு உங்கள கூடவே இருந்து பார்த்துக்கிறாளே, அப்ப கண்டிப்பா நலமாதான் இருப்பீங்க....” சஞ்சு அவனை அக்கறையாக கவனித்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் தாம் சிவுவை விடுத்து வீட்டினரை நலம் விசாரித்ததாக சொன்னாள்
“அதுக்கு நான் பிரிஞ்சு போனா சரியா ஆயிருமா அண்ணி, என்ன சொல்றிங்க?" பிரிவைப் பற்றிப் பேசவும் சற்று கடுப்பைக் காட்டினான்
சிவு பேச்சில் உள்ள கடுப்பை உணர்ந்தவள், அவள் கூறிய காரணத்தை தெளிவுப்படுத்த தொடங்கினாள் “இப்ப சஞ்சு உன்னவிட்டுப் பிரியாம இருக்கா, ஆபிஸ், வீடு எல்லா இடத்திலும் ஒண்ணாவே இருக்கீங்க, இந்த நேரத்தில் சில தினங்கள் நீ அவளைவிட்டு பிரிஞ்சு இருந்தா, உன்னப்பத்தி யோசிப்பா, உன்னோட நினைப்பு அடிக்கடி வர வாய்ப்பு இருக்கும். அவளுக்கு உன் மேல உள்ள காதல் புரியனும்னா அவளுக்கு கண்டிப்பா அந்த ஸ்பேஸ் வேணும் சிவு”
“இந்த யோசனை நல்லா தான் இருக்கு அண்ணி, ஆனா ஐந்து நாள் அவளை பார்க்காம எப்படி இருக்க முடியும்?” காதல் சேரும் என்கிற எண்ணம் இருந்தாலும், பிரிவு அவனை ஏனோ நோகச் செய்தது
“இந்த ஐஞ்சு நாள தியாகம் செய்ய யோசிச்சா, உன் காதல் அம்பேல்தான், காலம் முழுக்க நீ பிரியாம மட்டும் இருந்தா
“இந்த ஐஞ்சு நாள தியாகம் செய்ய யோசிச்சா, உன் காதல் அம்பேல்தான், காலம் முழுக்க நீ பிரியாம மட்டும் இருந்தா போதுமா, பிரிவு தான் காதலை மெருகேற்றும். இல்ல நான் சஞ்சுவ விட்டு பிரிய மாட்டேன்னு நீ சொன்னா, உன் காதலுக்கு விடை கொடுக்க வேண்டியதுதான்...!”
"ப்ளீஸ் அண்ணி பேச்சுக்கு கூட அப்படி சொல்லாதீங்க?"
“ஏன் சிவு.... வனவாசம் போக சொன்ன மாதிரி இவ்வளவு வருத்தப்படுற, வெறும் ஐஞ்சு நாள் தான், வேறு வழியில்ல போயிட்டு வா"
"ம்ம்... நீங்க சொன்ன மாதிரி ஆந்திரா போயிட்டு வர்ரேன், நிச்சியமா நல்ல செய்தி இருக்கும்ல அண்ணி” சின்ன சந்தேகம் அவனுக்குள் இருக்கத்தான் செய்தது
“நீ மனசப் போட்டு குழப்பிக்காத, எல்லாம் நல்லபடியா முடியும். இன்னும் ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ. உன் காதல்
பிஸினஸ் ட்ரிப் பற்றிக் கூறினான் சிவு. தானும் உடன் வருவதாகக் கூறினாள். ஆனால் தேவி சொன்ன தியாகம் என்கிற வார்த்தை மனதில் பதிந்து விட்டதால் அடுத்த முறை அழைத்துச் செல்வதாகக் கூறி சமாதனம் செய்தான். சஞ்சுவிற்கு ஆழ்மனதில் சஞ்சலத்தைக் கொடுத்தது அவன் பிரிவு. இருப்பினும், அவனுக்கு வேண்டிய பொருட்களை பேக் செய்வதில் உதவினாள். பிறகு சிவுவும் ஆந்திரா கிளம்பிச் செல்ல அடுத்த நாள் ஆபிஸ் தனியாக சென்றாள். ஏதோ அங்கு தனிமை அவளை வாட்டியது. மம்மு இல்லாமல் எவ்வளவு கஷ்டமா இருக்கு எனத் தோன்றியது. சற்று சோர்வாக இருந்ததால் இரண்டு கப்பில் டீ ஊற்றினாள், கப்பை கையில் எடுக்கும் போது தான் கவனித்தாள், இரண்டு கப் எதற்கு என்று? பின்னர் டீ அருந்தும் எண்ணமும் இல்லாமல் போனது, சிவு இல்லாமல் அரைப் பொழுது கடக்கவே சிரமாக இருந்தது, அலுவலகத்தில் இருந்து இடையிலே வீட்டிற்கு கிளம்பி வந்தவள், தனது அறையில் தஞ்சம் புகுந்தாள்.
அந்திவேளை பத்மாவதி வம்பாக கோவிலுக்கு அழைத்துச் சென்றார். ஏதேனும் வேண்டுதல் இருந்தால்தானே வேண்டுவதற்கு என்ற எண்ணம் மனதில
அந்திவேளை பத்மாவதி வம்பாக கோவிலுக்கு அழைத்துச் சென்றார். ஏதேனும் வேண்டுதல் இருந்தால்தானே வேண்டுவதற்கு என்ற எண்ணம் மனதில் தோன்றினாலும் தனது அத்தைக்காக கோவிலுக்கு சென்றாள். கோவிலுக்கு சென்றவளின் மனதில் தோன்றிய வேண்டுதல் சிவுவை என்றும் எப்போதும் பிரியக்கூடாது என்பது மட்டுமே, கடவுளிடம் அதே கோரிக்கையை வைத்தாள். ஆனால் அவள் எப்போதும் குடும்பத்தில் அனைவரின் நலத்திற்காக மட்டுமே வேண்டிக் கொள்வாள், தனக்கு என்று எதுவும் வேண்டமாட்டாள், வேண்டுதலைப் பற்றி கேட்டாள் கூட சுருக்கமாக பொது நலத்தில் சுயநலம் என்பாள். இன்று சிவுவைப் பிரியக் கூடாது என்று எண்ணி தனக்காக கடவுளிடம் வேண்டியதை நினைத்து அவளுக்கே ஆச்சரியம் தான்.
விடிந்த அடுத்த நாளும் அலுவலகத்திற்கு சென்று அமர்ந்தவளுக்கு, அவளின் எதிர்திசையில் தனது அத்தையின் தோள்களை அவளும், சிவுவும் சுற்றி வளைத்திருந்த புகைப்படம் கண்ணில் பட்டது. அதில் அனைவரையும் விடுத்து சிவு மட்டுமே தெரிந்தான். கண்களை
விடிந்த அடுத்த நாளும் அலுவலகத்திற்கு சென்று அமர்ந்தவளுக்கு, அவளின் எதிர்திசையில் தனது அத்தையின் தோள்களை அவளும், சிவுவும் சுற்றி வளைத்திருந்த புகைப்படம் கண்ணில் பட்டது. அதில் அனைவரையும் விடுத்து சிவு மட்டுமே தெரிந்தான். கண்களை மூடினாலும், திறந்தாலும் அவளின் மம்முவின் சிரிப்பும் அவனின் குதூகலமான பேச்சும் மட்டுமே தோன்றிக் கொண்டே இருக்க.. என்னாச்சு மம்முவை இவ்வளவு உன்னிப்பா கவனிக்கிறதும், அவரது அழகை ரசிக்கிறதும் புதுசா இருக்கே. மம்முவைப் பார்க்காமல் இனி இருக்க வேண்டாம், பார்க்காத நாட்கள் வேண்டவே வேண்டும் என ஏன் மனசு அடிச்சுக்குது? இதுக்கு காரணம் என்ன? அப்படின்னா நான் மம்முவை காதலிக்கிறேனா..? இப்ப எனக்கு காதல் உணர்வு வந்திருச்சா? அதுவும் மம்மு மேல, நான் ஏங்குன காதல், என்னோட ஆசை எல்லாமே நடக்குது... இந்த உணர்வு மம்மு ஊருக்குப் போனதுக்கு அப்புறம் வந்ததா? இல்லை முன்னாடி இருந்தே இருக்கா? அப்படி இருந்தா எனக்குத்தான் தெரியலையா? ஆனா மம்மு என்னை காதலிப்பாரா? எனத் தெரியவில்லையே... வயது வித்யாசம்? இந்தக் கேள்விகள் எல்லாம் அவளைப் படாதபாடாய் படுத்தி எடுத்தே விட்டது. அவன் காதலிப்பானா? என்கிற எண்ணம் அவளை வேதனைபடச்
இல்லை முன்னாடி இருந்தே இருக்கா? அப்படி இருந்தா எனக்குத்தான் தெரியலையா? ஆனா மம்மு என்னை காதலிப்பாரா? எனத் தெரியவில்லையே... வயது வித்யாசம்? இந்தக் கேள்விகள் எல்லாம் அவளைப் படாதபாடாய் படுத்தி எடுத்தே விட்டது. அவன் காதலிப்பானா? என்கிற எண்ணம் அவளை வேதனைபடச் செய்தது. பலமுறை மம்முவின் கல்யாணம் பற்றி பேசும் போது அந்தத் தனிமை என்னை எவ்வளவு பாதித்தது, அதற்குக் காரணமும் மம்முவை காதலிப்பதால் வந்த உணர்வா!
காதல் உணர்வுகளை படித்து அறிந்து கொள்ள முடியாது, அதை அனுபவித்துதான் உணர வேண்டும். இந்த உலகில் இயற்கை நமக்கு வாரி வழங்கிய தலைசிறந்த வரம் காதல்...! அதை எவரும் தடுக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது.
அவன் தன்னைக் காதலிப்பானா? தனது காதலை எப்படி அவனிடம் கூறுவது? எப்பவும் தான் அவனுடன் இருக்க வேண்டும் என்கிற உணர்வு.. இந்த மனப்போராட்டதுக்கு பதில் அளிக்க இயலாமல் வீட்டிற்கு கிளம்பியவள், மேனேஜரிடம் அலுவலகத்தை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு வீட்டிற்கு
“ஹலோ சஞ்சு மா..”
அவன் குரலைக் கேட்டவுடன் “மம்மு.. ஐ மிஸ் யூ" என இங்கு இவள் உருக, அவள் உருகலில் கரைந்தவன் “ஐ டூ மிஸ் யூ டா சஞ்சுமா என கொஞ்சலாய் சொன்னான்... ஆமா உன் உடம்புக்கு என்னாச்சு மா?"
“ஒண்ணுமில்லையே... ஏன் மம்மு?”
“நீ ஏன் ஆபீஸ்ல இருந்து காலையிலேயே வீட்டுக்கு வந்துட்டயாமே? மேனஜர் போன் பண்ணார், அத்தோடு உன் முகம் வேறு வாட்டமாக இருந்தாக சொன்னார். எதுவும் பிரச்சனையில்லையே?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை மம்மு... நீங்க இல்லாம ஆபீஸ்ல இருக்கப் பிடிக்கல அதான் வந்துட்டேன்" சில உண்மையை மறைத்து சில உண்மைகளை மட்டும் கூறினாள்
“ஓஹோ, வேற ஒண்ணும் இல்லையேடா?" கேட்டான
'இல்ல மம்மு, சாப்பிட பிடிக்கவில்லை' என நினைத்தாள், ஆனால் அதை மறைத்து “சாப்பிட்டாச்சு மம்மு” என பொய் கூறினாள். “நீங்க சாப்பிட்டிங்களா மம்மு?”
“இல்லமா, இனிமேல் தான் மீட்டிங் முடிச்சுட்டு போய் சாப்பிடணும். சரிடா, உடம்பு பார்த்துக்கோ, டேக் கேர்"
“மம்மு சீக்கிரமா வாங்க உங்களை பார்க்கணும் போலவே இருக்கு"
“என்ன சஞ்சுமா தனியா இருக்க முடியலையா? சரி.. நான் சீக்கிரம் வர பார்க்கிறேன்.. பை மா, நீ லோன்லியா பீல் பண்றன்னு நினைக்கிறேன், பேசமா நீ அச்சு வீட்டுக்கு கூட போயிட்டு வா"
வீட்டில் தனியாக இருக்க பிடிக்காமல் அர்ச்சனாவின் வீட்டிற்கு சென்றாள். சஞ்சு சென்ற அந்நேரம் அச்சு வீடே சொந்தபந்தத்தில் நிரம்பி இருந்தது, தனிமையை வெறுத்து இங்கு வந்தவளுக்கு இந்த கூட்டம் கூட அவளை வாட்டியது, அனைவரும் சஞ்சுவை நலம் விசாரித்தனர்
அர்ச்சனா பேசுவது எதுவும் அவள் காதில் விழுந்த பாடில்லை. ஏதோ பிரச்சனை என எண்ணியவள் “சரி வா.. தோட்டத்திற்கு போய் பேசலாம்” இருவரும் சேர்ந்து தோட்டத்திற்கு சென்று அங்கு உள்ள மரப்பலகையில் அமர்ந்தனர்.
அச்சு, “என்னாச்சு உன் முகம் ஓரே சோர்வா இருக்கு?, உடம்பு எதுவும் சரியில்லையா?"
“அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை அச்சு" என்றவளின் முக வாட்டத்தை கவனித்தாள் அச்சு
“அப்புறம் ஏன் நீ ஆபீஸ் போகல?"
"அதுவா? மம்மு இல்லாம ஆபீஸ் போக பிடிக்கல, வீட்டில் கூட இருக்க கஷ்டமா இருக்கு"
“ஓ... அதான் என்னைய பார்க்க வந்தியா? இல்லாட்டி என்னய நினைச்சு கூட பார்க்கமாட்டயே?”
"அப்படி இல்ல அச்ச உள்கிட்ட எப்
“அப்படி இல்ல அச்சு உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியலை" கைகளை விரித்துக் காண்பித்தாள் சஞ்சு
“என்கிட்ட என்னப்பா ரகசியம்?”
“ரகசியம் ஒண்ணுமில்ல, எப்படி சொல்றது தெரியல, எனக்கே என்ன பீல்னு தெரியல?.. இது சரியான்னு கூட தெரியல?..."
அர்ச்சனா புரிந்து கொண்டாள், உயிர்தோழி அல்லவா... இருப்பினும் சஞ்சுவின் வாய்வழியாக கேட்க எண்ணி அமைதி காத்தாள்.
“எனக்கு மம்முவ பார்க்கணும் போலவே இருக்கு? அவர் கூடவே இருக்கணும் போல இருக்கு, ஆனா என்ன பண்றது தெரியல அச்சு?"
சஞ்சு கைகளை ஆதரவாகப் பிடித்து கொண்டே அச்சு கேட்டாள். “சரி வேறு என்ன தோணுது?”
“நான் மம்முவ லவ் பண்றேன்னு நினைக்கிறேன்" இதை சொல்லும் போது அவளின் முகத்தில் மகிழ்ச்சியும் அதே சமயம் வேதனையும் ஒரு சேர தோன்றியது
“நினைக்கிறயா? இல்ல லவ் பண்றயா?" அவளிடம் இருந்து வார்த்தைகளை பறிக்க முயன்றாள்
"நூறு சதவீதம் லவ் பண்றேன் அச்சு” சஞ்சுவின் கண்களில் அபரிதமான காதலை கண்டாள்
“அது எப்படி சொல்ற? உன்னோட காதல் பார்முலா வச்சா?"
"ம்ம்ம்.." என தன் தலையை மேலும் கீழும் ஆட்டினாள். “என் மனசு முழுக்க மம்மு இருக்காருனு இங்க.. இங்க சொல்லுச்சு” என மனசை தொட்டு காண்பித்தாள்
இதழ்களில் புன்னகையுடன் அச்சு, “என்ன சொல்லுச்சு? எப்ப சொல்லுச்சு?"
“இப்ப இல்ல..” அழுகையுடன் பேசினாள் “ரொம்ப நாளாவே காதலிக்கிறேன். ஆனா எனக்கு தான் தெரியல, இப்ப இந்த காதல் எல்லைய தாண்டி போயிருச்சு பா, மம்மு பக்கத்தில் இல்லாததால் அந்தக் காதலை என்னால் உணர முடியுதுன்னு நினைக்கிறேன்”
“இதை சிவு அண்ணாகிட்ட சொல்லிட்டியா?"
“இல்ல அச்சு, உன்கிட்ட தான் முதல்ல சொல்றேன். மம்முக்கிட்ட எப்படி சொல்றது? அவரும் என்ன காதலிக்கணுமே என் மேல விருப்பம் இல்லாம இருக்கிறப்ப? எப்படி என்னோட காதலை சொல்வேன்?"
"சிவு அண்ணா உன்ன காதலிக்கலைன்னு சொன்னாரா?"
"இல்ல"
“அப்புறம் எப்படி சிவு அண்ணா உன்ன காதலிக்க மாட்டாருன்னு சொல்ற?”
“என்ன எப்படி லவ் பண்வாரு? இதுவரைக்கும் அந்தமாதிரி என்கிட்ட சொல்லவே இல்லையே”
அவள் கழுத்தை நெறிப்பதுப் போல் போனவள்.. “அடி போடி, உன்ன மட்டும் தான் சிவு அண்ணா காதலிக்கிறார், அவரோட மனசு முழுக்க இருப்பவளே நீதான்.. நீ மட்டும் தான்"
சந்தேகமாக, “அப்புறம் ஏன் அவர் காதல என்கிட்ட சொல்லல?” விசும்பலுடன் தொடர்ந்தாள்
“உன்னோட காதல் பார்முலா நிறைவேற அண்ணா எவ்வளவு கஷ்டப்பட்டுடாரு தெரியுமா?" சிவுவின் காதலைப் பற்றி விளக்கம் தந்தாள்
"உனக்கு எப்படி தெரியும்?" என்றாள் சஞ்சு
"அன்னைக்கு உங்க வீட்டுல ப்ரோஜக்ட் ஒர்க் பண்ணோம்ல அப்பதான் சிவு அண்ணாகிட்ட கேட்டேன்"
"என்ன கேட்ட? மம்மு என்ன சொன்னாங்க? என்கிட்ட ஏன் எதுவும் நீ சொல்லல?" சிவு தன்னை காதலிக்கிறான் என்பதில் ஆச்சரியப் பட்டவள் படபடவென கேள்வியை அடுக்கினாள்.
"படபடவென இப்படி கேள்வியா கேட்டா நான் எப்படி பதில் சொல்ல?"
"ஏய் சீக்கிரம் சொல்லுபா ப்ளீஸ்" பொறுமையின்றி பரிதவித்தாள்
அன்று வீட்டில் நடந்தவற்றையும் சிவு தன் காதலை காதலிக்காக இதயத்தில் வைத்து பூட்டினான் என்பதையும் அறிந்து சந்தோஷத்திற்கும் வேதனைக்கும் இடையே சஞ்சு தத்தளித்தாள். சற்று நேரம் எதுவுமே பேசவில்லை, அவளின் அமைதியை கலைத்தாள் அச்சு “ என்னபா யோசிக்கிற?"
"நீ ஏன் முதல்லயே என்கிட்ட சொல்லவில்லை அச்சு?" அழுகையை நிறுத்தி கேட்டாள்
"உன்னோட ஆசையை நிறைவேற்ற நானும் அவருக்கு சிறு அணில் போல் உதவி செஞ்சேன். உண்மையில் இந்த உலகத்தில் கொடுத்து வைத்த அதிர்ஷ்சாலி பெண் யார் என்றால்? அது நீ மட்டும் தான் சஞ்சு. காதலர்களாக ஆன பிறகு ஆசையை நிறைவேற்ற நினைக்கலாம், காதலர்களா ஆவதற்கு முன்பே காதலி ஆசையை நிறைவேற்றி வைக்க நினைக்கிற இப்படி ஒருத்தர் கிடைக்க யூ ஆர் சோ லக்கி சஞ்சு. எப்படி... பிறக்கும் போதே கடவுளிடம் வரம் வாங்கி வந்தியா என்ன?"
அச்சு பேசுவதைக் கேட்ட சஞ்சுவுக்கு வெட்கம் வர "அச்சு.. நான் கிளம்புறேன், நீயும் லக்கியஸ்டு பொண்ணுதான்" என அவள் கன்னத்தை கிள்ளி விடைப்பெற்று சென்றாள்
அங்கு இருந்து கோவிலுக்குச் சென்று கடவுளுக்கு நன்றி தெரிவித்தாள், அங்கு இருந்தே சிவுக்கு போன் செய்தாள்.
"மம்மு எப்ப வருவீங்க?" கொஞ்சலாக கேட்க...
"இன்னும் வந்த வேலை முடியல, அப்புறம் எப்படி வரமுடியும்?"
"ஒ.. அப்புறம் உங்க இஷ்டம்" அவளின் பேச்சில் அதிகாரம் கலந்திருந்தது
"என்ன மிரட்டல் எல்லாம் பயங்கரமா இருக்கு?"
"ஆமா, அப்படிதான் மிரட்டுவேன், சீக்கிரம் வந்தா உங்களுக்குத் தேவையானது கிடைக்கும்!"
"சரி... சரி.. இரண்டு நாள்ல வர பார்க்கிறேன்"
"சரிங்க மம்மு, உங்கள ரொம்ப தொந்தரவு பண்றேன்னு தெரியுது, பட் நீங்க சீக்கிரம் வரப் பாருங்க, ஏதோ எனக்கு தனியா இருக்கிற மாதிரி தெரியுது" அவனை எண்ணி வருந்துவதை நாசுக்காக வெளிப்படுத்தினாள்
போனை வைத்தபின்பு யோசித்தாள்
போனை வைத்தபின்பு யோசித்தாள் போனில் தன் காதலை சொல்லி இருக்கலாமோ! இல்லை, தன் காதலை சொல்லாமல் மம்மு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாரு, அதில் சின்ன வலியை நான் சுமந்து தான் ஆகணும்
சிவு போனை கட் செய்தவுடன் தனது அன்னைக்கு போன் செய்தான், சில விவரங்களை சொல்லி சஞ்சு வந்ததும் தனக்கு தெரிவிக்குமாறு கூறி தான் காலையில் வந்துவிடுவதாகவும் சஞ்சுவிடம் தெரிவிக்க வேண்டாம் என்றும் கூறிவிட்டான். வீட்டிற்கு சென்றவளை பத்மாவதி வலுக்கட்டாயமாக இரவு உணவை உண்ண வைத்தார்.
சிவுக்கு தன் காதல் தோல்வி அடையும் என்று எப்போதும் ஐயம் எழுந்தது இல்லை. ஆனால் காதலுக்காக காத்திருந்த நேரம் ஏனோ அவனை இம்சை செய்தது, தனக்கானவளை அருகில் வைத்துக் கொண்டு அவளை நெருங்கவும் முடியாமல், காதலில் ஆளுமையும் செய்யாமல் அவ்வப்போது இதயத்தை ஊசியால் துளைக்கும் ரணத்தையும் பொருத்து அவளின் காதலுக்காக காத்திருந்த தருணத்தில் அடைந்த வேதனையை புறம் தள்ளி காதலிக்காக
அவனின் காதல் ஆகாயத்தில் பறக்கவும் செய்தது, அதே சமயம் அவனின் தியாகம் சஞ்சுவின் இதயத்தை கசக்கி எடுக்கும் அளவுக்கு வேதனையும் படுத்தியது. ஒவ்வென்றாக யோசித்துப் பார்த்தாள், முதல் முறையாக சேலை கட்டிய போது இடையை தாங்கியது, கார்த்திகை அன்று தாவணியில் தீப்பற்றியப் போது அந்த அணைப்பு, அவனின் தவிப்பு, அவனின் மீது தான் கொண்டுள்ள நம்பிக்கையை பற்றி அன்று காதில் உரைத்த போது ஏற்பட்ட அந்த குறுகுறுப்பு இன்றும் அவளின் உடலை சிலிர்க்க செய்தது. எத்தனை முறை கல்யாணம் பற்றி கேட்டும் அதை தான் மறுத்தபோது, ஐயோ மம்மு எவ்வளவு வேதனைபட்டாரோ அனைத்தையும் மீறி என் மீது கோபம் கொள்ளாமல் ஏன் சிறு முகச்சுளிப்பு கூட இல்லாமல் தனக்கு வேண்டியதை பார்த்து பார்த்து செய்ததும் இந்த அன்புக்கு நான் என்ன செய்தாலும் ஈடாகாது.
எனக்காக... தன் காதலை மறைத்து... என் காதலை முதலில் நான் கூற வேண்டும் என்பதற்காக தன் உணர்வுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தி... ஏன் மம்மு இப்படி... நீங்க முதலில் காதலை சொல்லியிருந்தாலும் நான் ஏத்திருப்பேன், ஆனாலும் நான் காதலை உணர வேண்டும்,
சாதவை பற்றிய என் கனவுகிறைவேற
ஆனாலும் நான் காதலை உணர வேண்டும், காதலை பற்றிய என் கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காக ஓரே வீட்டில் இருந்தும் அதை வெளிபடுத்தாமல் எவ்வளவு கஷ்டம் என புலம்பியவாரே அவளது அறையின் சோபாவில் அழுதுகொண்டே சிவு புகைப்படத்தை அணைத்தபடி உறங்கி போனாள்.
சிவு அதிகாலையில் வீட்டிற்கு வந்தவுடன் நேராக சஞ்சுவின் அறைக்குச் சென்றான். சோபாவில் அழுதவாரே உறங்கிப் போனவளை பார்த்துக் கொண்டே எதிர்திசையில் உள்ள படுக்கையில் அமர்ந்தான். எதற்கு தனது புகைப்படத்தை அணைத்துக் கொண்டு படுத்திருக்கிறாள். தனிமையில் இருக்க முடியாமல் தனக்கு போன் செய்தாக எண்ணினான். பின் அவள் பேசியவிதம் தான் காத்திருந்தது பற்றி அவள் கூறியது அண்ணி சொன்ன தியாகம் பற்றி யோசித்தாலும் அவளின் தனிமையை போக்குவது அவனின் கடமை என்றே தோன்றியது, உடனே கிளம்பி வந்துவிட்டான். இங்கு வந்து பார்க்கும் போதுதான் சஞ்சு தன் காதலை உணர்ந்து இருப்பாளோ என்கிற எண்ணம் வந்தது, அங்கு தற்செயலாக திரும்பிப் படுத்த சஞ்சுவின் பார்வையில் சிவு தெரிந்தான்.
அவள் எதிரில் தெரிவது சிவு என்று அறிந்து உடன் ஓடி சென்று அவனை அணைத்துக் கொண்டாள். சஞ்சு எழுவதை பார்த்து எழுந்து நின்றான், சஞ்சுவோ ஓடி சென்ற வேகத்தில் அவனின் மீது சரிந்தாள், தன் மீது கிடப்பவளின் இடையை தாக்கினான். அவளின் பார்வை அவனை ஏதோ செய்யக் கண்டறிந்தான், அவன் காத்திருந்த காதல் கிடைத்த பூரிப்பில் அவளோட ஒன்றிப் போனான். அவனை அணைத்துக்கொண்டவள் அதரங்கள் வழியாக காதலை மௌனமொழியில் காட்டினாள்.காதலின் அனைத்து பாஷையும் கற்றவன், இந்த மௌன மொழியையும் புரிந்துக் கொண்டான்.
பின் விலகிச் சென்றவள் அவனை அடித்தாள், கிள்ளினாள் சிணுங்கலுடன் கோபத்தைக் காண்பித்தாள். அவனும் சலைத்தவன் இல்லையே அவளை மேலும் சீண்டினான். “ஏன் சஞ்சுமா எனக்கு சரியா முத்தம் கொடுக்க தெரியவில்லையா?"
“ஓஹோ... இதுக்கு மேல வேற இருக்கா?" என்று உதடுகளை தொட்டுப் பார்த்துக் கொண்டாள்
“எதற்கு என் மேல கோபம், இப்ப சொல்லு?”
“என்னை அழவைத்ததற்கு உங்கள் காதலை என்னிடம் இருந்து மறைத்தற்கு, எதுக்கு மம்மு என்கிட்ட இருந்து மறைச்சிங்க?" அவளின் வதனம் சோர்வைத் தழுவியது,
“என் காதலை நான் மறைக்கவில்லை, பலமுறை கூறினேன், உனக்கு தான் புரியவில்லை, இப்போது கூட பார் நீ உன்
காதலை சொல்லி என் வாயை அடைத்தாய், எனக்கு நீ இந்தமாதிரி வாய்ப்பு கொடுக்கவில்லை, எவ்வளவு ஆசையா இருக்கு தெரியுமா?” ஏக்கங்களை தாங்கிய வார்த்தையின் வெளிப்பாடுகள்...
அவன் பேசி முடிக்க அந்த பாவையவளின் பார்வையில் தாங்கிய சம்மதத்தை உணர்ந்தவன். தன் மீது இருப்பவளை தன்னுள் சாய்த்துக் கொண்டான், அவளின் கைகள் தன்னவனின் தேகத்தைப் பற்ற அங்கு மவுன மொழி ஆளத் தொடங்கியது. அதன்பின் அவனின் காதலை அவளுக்கு உணர வைத்தான்.
அவர்களிள் நஎள்ளவன்
அவர்களின் காதலில் என்னவள், என்னவன் என்கிற அடையாளத்தை உணர்ந்து உரிமை பரிமாற்றாங்கள் முடிய, “ஏன் மம்மு நம்ம வீட்டுல எந்த பிரச்சனையும் வராதே? யாரும் எதிர்க்க மாட்டாங்களே?”
“அட லூசு, நம்ம வீட்டுல எல்லோரும் இந்த நாளுக்காகதான் எதிர்பார்த்துக் காத்திருக்காங்க, இந்த பிஸினஸ் டிரிப் யோசனை மட்டும் தேவி அண்ணி சொல்லாட்டி இன்னும் எத்தனை வருஷம் எல்லோரையும் காக்க வைச்சிருப்பியோ?"
“ஓ.. அப்படியா எல்லோருக்கும் தெரியுமா, அப்ப ஜாலிதான். நீங்க மட்டும்தான் எனக்காக காத்திருந்தீங்கன்னு பார்த்தா நம்ம குடும்பமே நமக்காக காத்திருந்தாங்களா?” என நகைத்தவள் “என் செல்ல மம்மு" என்று அவனை மீண்டும் அணைத்துக் கொண்டாள்.
பிரிவு இன்றி இருக்க அவனும் அணைத்துக் கொண்டான் 'இவள் என்னவள்' என்ற உரிமையோடு.
********×××
வாயிலில் நின்றிருந்த காவலாளி கதவைத் திறக்க அந்த ப்ளாக் ஆடி விரைந்து போய் அந்தக் கட்டிடத்தின் முன்பாக நின்றது.
அர்ஜூன் காரை விட்டு இறங்கி மளமளவென்று உள்ளே போனான். வேகம்... அர்ஜூன் என்றால் இன்றைய தொழில் வட்டாரத்தில் அனைவரும் அறிந்தது அவன் வேகம் தான். அதற்கு அவன் அசுர வளரச்சியே சாட்சி.
இன்றைக்கு அந்தத் தொலைக்காட்சி நேர்காணலில் கூட அந்தப் பெண் இதைத்தானே கேட்டாள்.
"சார்! 'பி.எம்'ன்னா என்ன சார்?"
"பார்த்தசாரதி அன்ட் மஞ்சுளா... அப்பா அம்மா பெயரோட முதலெழுத்துகள் தான் அந்த பி.எம்." அவன் சொல்ல இந்த உலகமே அதை நம்பிக் கொண்டிருக்கிறது.
ஆனல் அவன் மனச்சாட்சிக்குத் தெரியும், அதன் அர்த்தமே வேறு என்று. அவன் காபினுக்குள் போனவன் சாய்ந்து அமர்ந்து கொண்டான். ஒரு காஃபி குடித்தால் தேவலாம் போல இருந்தது.
“தம்பீ...” அழைத்தபடி உள்ளே வந்தார் வடிவேல். வேட்டி சட்டையில் இருந்தார் மனிதர். தலையில் முக்கால்வாசி வழுக்கையாகவே இருந்தது.
"சொல்லுங்க மாமா." இவன் அவரை அப்படித்தான் அழைப்பான். வயதில் மூத்தவர் என்பதையும் தாண்டி அவரின் தொழில் சுத்தம், கைச் சுத்தம் இவன் மதிக்கும் விஷயங்கள். நம்பிக்கையான மனிதர்.
"இதுல உங்க கையெழுத்து வேணும் தம்பி."
"இதுல உங்க கையெழுத்து வேணும் தம்பி." அவர் சொல்லவும் படித்தே பார்க்காமல் சைன் பண்ணினான் அர்ஜூன்.
"அடுத்த லோட் சாமான்கள் இன்னைக்கு ஷிப்புக்குப் போகுது தம்பி."
"சரி மாமா."
“என்னாச்சு தம்பி? கொஞ்சம் சோர்வாத் தெரியுறீங்க?"
"என்னன்னு தெரியலை மாமா. டயர்டா இருக்கு."
"பின்ன... இப்படியே ஓடிக்கிட்டு இருந்தா என்னத்துக்கு ஆகுறது? அது உடம்பா இல்லை மிஷினா?' உரிமையாக வடிவேல் கண்டிக்கவும் சிரித்தான் அர்ஜூன்.
"கொஞ்சம் ஓய்வெடுங்க தம்பி."
"சரி மாமா." தயவாக வடிவேல் சொல்லவும் சட்டென்று இறங்கி வந்தான் அர்ஜூன். அவர் சொல்லி எதையும் அவன் மறுப்பதில்லை.
"எங்கையாவது வெளியூர் போங்க தம்பி. ஃப்ளைட் வேணாம். ட்ரெயின்ல போங்க. லாங் ஜர்னியா. ராஜ்தானியில டிக்கெட் போடட்டுமா
Comments
Post a Comment