எனக்கு பிடித்த கவிதை
-------------------------------------------
"உங்கள் திருமணத்தன்று
நான் எங்கிருந்தேன்?"
மகளின் கேள்விக்கு
விடைகூற முயன்றேன்...
"அந்தத் தீயின்
நடுச்சுடராக ஒளிர்ந்திருந்தாய்...
எம் தலைமீது தூவப்பட்ட
அட்சதையில்
ஒரு மணியாக இருந்தாய்...
சூடிய மாலை நறுமணத்தில்
இருந்ததும் நீதான்....
தாத்தா பாட்டியரின்
கண்களில்
நீர்துளியாக நீ திரண்டு நின்றாய்...
உன் தாயை கரம் பற்றிய
என் உள்ளங்கைக்குள்
வெப்பமாக இருந்ததும்
நீயே..
கவிஞர் மகுடேசுவரன்
"ஞாயிற்றுக்கிழமைகளை வாங்கித்தரும் தந்தை
*** *** *** *** *** *** *** *** *** *** *** *** ***
வேலை நாட்களில் வந்துவிடும்
விடுமுறையற்ற குட்டிக் குட்டிப்
பண்டிகைகளுக்கு அழுதபடியே
அப்பாவிடம் விடுமுறை கேட்கும்
பள்ளி செல்லும் மகள்களுக்கு
மறுப்பேதும் சொல்லாமல்
இனிப்போடு சேர்த்து விடுமுறையை வழங்கி
ஞாயிற்றுக்கிழமைகளையும் வாங்கித் தர
அப்பாக்களால் மட்டுமே முடிகிறது."
Comments
Post a Comment