அப்பா மகள்
"ஏய்! அப்பத்தா, காலங்காத்தாலேயே லொள்ளு பேசுறியா, எங்க அப்பாவை கூப்பிட்டு அடிக்க சொல்லட்டுமா?..
ஏன் சொல்லேன், எனக்கு என்ன பயமா? என்றபடி அவளிடம் டீயை நீட்டிய அன்னபூரணி.. மாப்பிள்ளை எழுந்துட்டாரா? எனக்கேட்க..
இல்லம்மா, அவர் நல்லா தூங்கிட்டு இருக்காரு,அவர் எழுந்து பிறகு டீ குடிக்கட்டும் என்றவள், டீயை குடித்து முடித்து விட்டு, அன்னபூரணியின் கன்னத்தில் முத்தம் வைத்து," டீன்னா அது எங்க அம்மா அன்னபூரணி போடற இஞ்சி டீ தான்! பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு! என சொல்லி சிரிக்க,அவளை முறைத்த அன்னபூரணி..
காலங்காத்தால கன்னத்தை எச்சில் பண்றா பாரு! கல்யாணம் ஆன பின்னாடி கூட கொஞ்சம் அடங்கி, அடக்க ஒடுக்கமா இருக்க மாட்டியா ?என கேட்க..
அவருக்குத் தெரியும், மகள் மகா குறும்புக்காரி என்றாலும், கூடவே அவள் மகா புத்திசாலி என்பதும், சிறுவயதில் அத்தனை குறும்பாக இருப்பவள், பொறுப்பும், துடிப்புமாக, இருப்பாள் கண்கூடாக கண்டு நெகிழ்ந்து போயிருக்கிறார், அவர்களின் மகிழ்ச்சியின் அடையாளம்..
*****************
கொஞ்ச நேரம் கழித்து பாரதியை கூப்பிட்ட அன்னபூரணி,அவள் கையில் தேநீரை கொடுத்து, "போய் மாப்பிள்ளையை எழுப்பு, பக்கத்துல இருக்கிற கோயிலுக்கு போயிட்டு வருவீங்களாம்! என்றாள்..
பாரதி அதை வாங்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்த போது, அவன் தூங்கிக்கொண்டுதான் இருந்தான், இப்ப இவனை எப்படி எழுப்ப என யோசித்தவள், அவனை நோக்கி குனிந்து, கன்னத்தில் தட்டி " ஏங்க, எந்திரிங்க !என எழுப்பினாள்,
*******
***********
********
மது தந்தை தோளில் சாய்ந்த படியே பேசிக் கொண்டிருந்தாள்.
“மது அப்பாவுக்கு கொஞ்சம் டயர்டா இருக்குடா நான் தூங்கப் போறேன்”, என்று எழுந்து சென்றார்.
ஓரளவு வேலைகள் முடிந்ததும் "நீ ரெஸ்ட் எடு குட்டிமா. மத்தது நான் பாத்துக்குறேன்", என்று தாமரை சொல்ல "சரி மா", என்று சொல்லி விட்டு வந்தவள் தந்தையை தான் காணச் சென்றாள்.
அவர் நல்ல உறக்கத்தில் இருக்க அவர் அருகே அமர்ந்து அவரையே பார்த்த படி இருந்தாள். தந்தை தன்னோடிருப்பதை எண்ணி அவளுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.
சிறிது நேரத்தில் அவருக்கு விழிப்பு வர எதிரே அமர்ந்திருந்த மகளைக் கண்டதும் "பாப்பா அப்பா ரொம்ப நேரம் தூங்கிட்டேனா டா?", என்று கேட்டார்.
"இல்லை பா, தூங்குங்க", என்றவள் அவர் காலருகே அமர்ந்து அவர் காலை எடுத்து மடியில் வைத்து பிடித்து விட ஆரம்பித்தாள்.
"வேண்டாம் குட்டிமா, என்ன செய்யுற? விடு", என்று அவர் மறுக்க “எத்தனை நாள் எனக்கு செஞ்சீங்க? பேசாம படுங்க”, என்று அவள் அதட்ட சிறு சிரிப்புடன் படுத்திருந்தவர் மகளின் பேச்சைக் கேட்ட படியே மீண்டும் தூங்க ஆரம்பித்தார்.
அவர் தூங்கியது தெரிந்தாலும் தந்தையின் கால்களை பிடித்து விட்டுக் கொண்டே இருந்தாள். இத்தனை வருடம் செருப்பு இல்லாமல் நடந்த கால்கள் வெடிப்பு விழுந்து இருக்க அதைக் காணும் போதே மகளுக்கு கஷ்டமாக இருந்தது. பழைய விஷயம் நினைவு வந்தது.
ஜானகி கல்லூரி இரண்டாம் வருடம் படிக்கும் போது ஒரு நாள் ஜானகி சோபாவில் படுத்திருக்க அவளுக்கு கால் அமுக்கி விட்டுக் கொண்டிருந்தார் மோகன்.
"நீங்க எதுக்குங்க இதெல்லாம் செய்றீங்க?", என்று சொன்ன தேவகி மகளை முறைக்க "என் செல்ல குட்டிக்கு நான் செய்யாம யார் செய்வாங்களாம்?", என்று கேட்டார் மோகன்.
Comments
Post a Comment