வர்ணனை
அவனைப் பற்றி நினைப்பதே இந்த ஆறு மாதங்களில் அவள் வாடிக்கையாகி போயிருந்தது. அவள் அழைத்த போதெல்லாம் மறுக்காமல் ஓடி வந்து கனவில் தரிசனம் கொடுத்தது அந்த முகம்.
கட்டுமஸ்தாக இருந்தான். பளீரென்ற நிறம். குளிர்நாட்டில் பிறந்து வளர்ந்த மலர்ச்சி அந்த முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
அவ்வப்போது நெற்றியில் துளிர்த்த வியர்வையை நாசூக்காக அவன் துடைத்துக் கொண்ட அழகை மயூரி கவனிக்கத் தவறவில்லை.
இரண்டொரு முறைதான் அவளை நிமிர்ந்து பார்த்தான். அந்தக் கண்களில் காந்தம் இருக்கும் போலும். அவன் அவளைப் பார்த்த போதெல்லாம் மதுவின் நாக்கு பேச்சென்பதையே மறந்து போனது.
"
அன்று குடும்பத்தில் ஒரு திருமண விழா. நெருங்கிய உறவுமுறை திருமணம் என்பதால் மகிழனால் மறுக்க முடியவில்லை. சரி போகட்டும் என்று தயாராகி கொண்டிருந்தாள்.
ஆஃப் ஒயிட் நிறத்தில் தங்க நிற வேலைப்பாடுகள் கொண்ட பட்டுப்புடவை சிங்களவர்களின் பாரம்பரிய முறையில் சேலையை உடுத்தி இருந்தாள் பெண். ...
தலையைக் கொண்டைப் போட்டு அதில் இரண்டு செவ்வலறி பூக்களைச் சொருகி இருந்தாள்.
கழுத்தில் செம்பவளங்களை இடையிடை(d) கோர்த்த தங்க மாலை நீண்டு கிடந்தது.
கை, காது எங்கிலும் செம்பவளங்கள் மின்னின. லேசான ஒப்பனையோடு மகள் அறையை விட்டு வெளியே வந்த போது அன்னையின் கண்களில் ஆனந்தம் தெரிந்தது.
ஹாலில் உட்கார்ந்திருந்த ஆச்சி பேத்தியை ஆராய்ச்சியாக ஒரு முறை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரைப் பார்த்தார்.
அவர் முகத்தில் தெரிந்த திருப்திக்கான அர்த்தம் அப்போது மயூரிக்கு பிடிபடவில்லை. e
“என்னோட உடம்புல இருக்கிற ஒவ்வொரு செல்லும் அவளுக்காக ஏங்கணும் கேப்டன்." அனுபவித்துச் சொன்னான் இளையவன்.
"அப்போ... இது வரைக்கும் இதெல்லாம் உனக்கு நடக்கவே இல்லையா?!"
“இல்லையே! நடந்திருந்தாத்தான் இந்நேரம் கல்யாணம் பண்ணி இருப்பேனே."
"ஓஹோ! அப்பவும் நீ கல்யாணந்தான் பண்ணுவே?”
"யெஸ் கேப்டன்."
“நீயெல்லாம் திருந்தவே மாட்டே விபி, உங்கூடச் சேர்ந்தா நானும் கெட்டுப் போயிடுவேன், ஆளை விடு." அவசர அவசரமாக டேபிளை விட்டு எழுந்த கேப்டனை இழுத்து உட்கார வைத்தான் வருண்.
"கேப்டன், டைரி கதையைப் பாதியில விட்டுட்டுப் போறீங்களே."
"அட ஆமா இல்லை! அம்மா அப்பாவோடது லவ் மேரேஜ் ன்னு சொன்னே விபி."
“ம்... ஏன்னோட பாட்டிக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்லையாம்."
19:10
5 62%
ப்பேன், சொல்ல வந்ததைச் சொல்லு விபி."
"ஒரு பொண்ணைப் பார்த்தா அவ நம்ம நினைப்புல அப்பிடியே பசைப் போட்டு ஒட்டிக்கணும் கேப்டன்."
"ம்..." தலையை ஆட்டியபடி சிரித்தான் டாமினிக்.
"எந்த வேலை பண்ணினாலும் பேக்ரவுன்ட் மியூசிக் மாதிரி நம்ம மனசை அவ நினைப்பு ஆட்டிப் படைக்கணும்." வருணின் கண்கள் கனவில் மிதந்தன.
"அட!" மேசை மேல் கையால் தட்டினான் கேப்டன்.
"இப்பவே... இந்த நிமிஷமே அவளைத் தொடணுங்கிற வெறி வரணும்." இப்போது குரல் லேசாக கிறங்கியது.
"சூப்பர்!"
"கனவுலயே பாதி குடும்பம் நடத்தணும் கேப்டன்."
"ஏய்யா இப்பிடியெல்லாம்? நிஜமாவே நடத்தலாமே?!"
“என்னோட உடம்புல இருக்கிற ஒவ்வொரு
Comments
Post a Comment