அம்மு." இயல்பாக அவளை அணைக்க வர. லேசாகத் தடுமாறியவள் ஜன்னலோரம் போய் நின்று கொண்டாள். அவன் நெருங்கினால் தான் கோபம் எல்லாம் பறந்துவிடும் என்னும் பயம் அவளுக்கு. மாமன் தோளில் சாய விரும்பியவள் அவனோடு ஒன்ற முடியாமல் தவித்தாள்.
அவள் விலகல் கண்டு அவன் கண்கள் லேசாகச் சுருங்கிப் பின் தன்னை மீட்டுக் கொண்டது.
"நான்... உங்ககிட்டப் பேசணும் மாமா." அவள் பதட்டம் அவனுக்குக் கொஞ்சம் குதூகலமாகத்தான் இருந்தது.
"என்ன புதுசா யாரோ மாதிரி பேசுற." என்றான் கேலியாக
"எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க மாமா?" குரோதமாக வந்தது அவள் கேள்வி. மகிழன் லேசாகச் சிரித்தான்.
"இதென்ன கேள்வி மது? பத்து வருடம் காத்திருந்து கிடைத்த வரம் நீ, என் காதல். உனக்கும் என்னை ரெம்ப பிடிக்கும் பண்ணிக்கிட்டேன்."
"எனக்கு உங்களை ரெம்ப பிடிக்கும் மாமா, உண்மையிலேயே என்ன உங்களுக்கு பிடிக்குமா மாமா?" வீம்பான கேள்வியில் மகிழனை காயப்படுத்தினாள்.
"பிடிக்காமப் போறதுக்குக் காரணம் இருக்காடா, என்ன பேசுற அதுவும் இந்த நேரத்துல?” அவன் குரல் கலக்கமாக வந்தது.
"உங்களுக்கு என்ன பிடிக்கல மாமா." உங்களுக்கு என்மேல காதல் இல்லை. சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக என்னைக் கட்டிக்க சம்மதம் சொல்லிட்டிங்க..
"என்ன மது? ." அந்தக் குரலில் இருந்த வலி அவளுக்கு புரியத்தான் செய்தது. ஆனாலும் அவள் கோபம் அவள் காதல் மனதை வென்றது.
நிச்சயம் முடிஞ்ச பின்னர் நீங்க என்ன கண்டுக்கவே இல்ல, எனக்கு எவ்வளவு வலியா இருந்துச்சு தெரியுமா." கல்யாணம் பண்ணப் போற பொண்ணு எவ்வளவு ஆசையோடு இருப்ப ஒரு ரெண்டு வார்த்தை என்னோடு பேச நேரம் இல்லையா உங்களுக்கு,
மது சாரிடா...நான்தான் சொன்னேன் இல்ல, வேலை முடிக்கனும், அப்பத்தான் உன் கூட இருக்கலாம் என்று சமாதானம் செய்ய முயன்றான்.
தன் தோள் தொட்ட கணவனின் கரத்தைப் படக்கென்று தட்டிவிட்டாள் மது. இப்போது மகிழன் நெற்றி மேலும் சுருங்கியது.
"தொடாதீங்க மாமா
"சீறினாள் மது.
"இப்ப எதுக்கு இந்த கோபம்?"
"அவள் முறைத்தாள்."
யார் அந்த வர்சினி, அவ கூட திருமணம் செய்ய ஏற்படு எல்லாம் கூட நடந்திருக்கு.
"இப்ப எதுக்கு அந்த பேச்சு'.
"எனக்கு தெரியணும்',
"இப்படி எரிச்சல் பட்டிருக்க வேண்டாம் மது" என சொல்லிவிட்டு அவன் கட்டிலில் போய் அமர்ந்தான்.
அவன் காயம்பட்ட வார்த்தைகள் அவளுக்குள் ஏதோ செய்தது. மனதுக்கு பிடித்திருந்தாலும் அவனிடம் இணக்கம் காட்ட முடியாமல் தவித்தாள். இத்தனை குழப்பவாதியா நான் என அவளை அவளே நொந்து கொண்டாள். அவளுக்கே புரியவில்லை, நான் ஏன் இப்படி இருக்கிறேன்.
"ரெண்டு பேருமே களைச்சுப் போய் இருக்கோம். நீ தூங்கு மது காலையில பேசிக்கலாம்." சொன்னவனைக் கேள்வியாகப் பார்த்தாள். "தூவியிருந்த மலர்கள் அவனைக் கேலியாகப் பார்த்துச் சிரித்தது. ஜன்னலோரம் நின்றிருந்தவளுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொண்டான். சற்று நேரத்தில் அசதி மேலிடத் தூங்கியும் போனான்.
ஆனால் மது தூங்கவில்லை.யோசித்த படி ரூமிற்குள் நடைபயின்றாள். ஆசைப்பட்டு மணந்த மாமன் தான் ஆனாலும் அவளுக்கு அவனோடு முழுதாக கொஞ்சம் நாட்கள் தேவைப்பட்டது, இன்று எதுவும் வேண்டாம் என்று சொன்னால் சிரமப்படுவான் என்றுதான் எதிர்பார்த்தாள். இப்படியான ஒரு குழப்பத்தை அவள் எதிர்பார்க்கவில்லை.
Comments
Post a Comment