வர்ஷினி கதை

                               (1)

கெட்டிமேளம்.. கெட்டிமேளம் என்ற குரலுக்கு அட்சதை தூவிய பார்வதியின் கண்கள் மகனையே ஏக்கமாய் பார்த்தது. மேடையின் முன்வரிசையில் நண்பர்களோடு அமர்ந்திருந்தான் மகிழன். மனைவி, குழந்தைகள் என அவன் நண்பர்கள் குடும்பமாக அமர்ந்திருக்க, தனித்திருக்கும் மகனை ஏக்கமாக பார்த்தார் பார்வதி.
தன் மகனுக்கும் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடக்க வேண்டும் என்ற ஏங்கம் அந்தக் கண்களில்.  

மகிழன் முப்பத்தி இரண்டு வயது இளைஞன். ஆறடிக்கும் சற்று குறைவான உயரம், எழுபது கிலோ எடை,  தினசரி தவறாமல் செய்யும் உடற்பயிற்சியால் முறுக்கேறிய உடம்பு. சொந்தமாக ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை நிர்வாகம் செய்கிறான்.  "நிலா புட்ஸ்' கடந்த ஐந்து வருடங்களில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று இருந்தது. காரணம் மகிழன். அவனது கடின உழைப்பு, திருமண சடங்குகள் நிறைவுபெற மேடையில் இருந்து அவனையே பார்த்துக் கொண்டு கீழே இறங்கி வந்தார் பார்வதி. 

"என்ன மகிழன் ஊர்ப்பக்கம் ஆளையே பார்க்க முடியல.. சண்முகபாண்டியன் குரல் கேட்டு எழுந்து நின்றான் மகிழன்.

கோவில் கொடைக்கு கூட வரல போல?

"இல்ல மாமா. அந்த நேரத்தில கொஞ்சம் முக்கியமான வேலை வந்திருச்சி..

"என்ன வேலையோ போங்கப்ப  வருஷத்தில் ஒரு நாலுநாள் திருவிழாவிற்கு கூட உங்களால் வரமுடியாத' சண்முகபாண்டியன் சலித்துக் கொள்ள.. பார்வதியும் அங்கு வந்து சேர்ந்தார்.

"என்ன பார்வதி' எப்போ உனக்கு மருமகளைக் கொண்டுவரப் போறானாம்?'

"இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்னு சொல்றாண்ணா..

இப்பவே முப்பது இருக்குமே, இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கிறதா உத்தேசம்?'

மகிழன் மௌனமாக இருந்தான்.

'அதானே! நல்லாக் கேளுங்க தாத்தா வீட்டுல ஒரு கல்யாணம் நடந்தா எவ்வளவு ஜாலியா இருக்கும். சித்தப்பா ப்ளீஸ்... சீக்கிரமாக் கல்யாணம் பண்ணேன் மஹா இடையில் நுழைய, யமுனா மஹாவை முறைத்தார்

'உனக்கு ஜாலியா இருக்க நான் கல்யாணம் பண்ணணுமா வாலு?' 

'ஏன்? கல்யாணம் பண்ணினா என்ன? என் பிரண்ட்ஸ் எல்லாம் உங்களை விசுவாமித்திரர்னு சொல்லி கேலி பண்றான்க தெரியுமா? வேற பேர் வைக்கிறதுக்குள்ள கல்யாணம் பண்ணுங்க

"சரி பார்வதி' சீக்கிரம் ஒரு நல்ல செய்தி சொல்லு' சண்முகபாண்டியன் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

அவர் நகர்ந்ததும் மஹா முதுகில் சத்தமாக ஒரு அடிவைத்தார் யமுனா "அம்மா' என்று முதுகை தடவியவள் தாயை பார்க்க.

எத்தனை தடவைடி உனக்கு சொல்றது? பெரியவங்க பேசும் போது குறுக்க பேசாதேன்னு..

"போம்மா' என்று கோபித்துக் கொண்டு தோழிகள் இருந்த பக்கம் சென்று விட்டாள் மஹா.

முப்பது வயதைத் தொட்டுவிட்ட மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும்  என்ற தன் ஆசையை நிறைவேற்ற முடியாமல் தவித்தார் பார்வதி.  

சொந்தங்களில் அவனுக்கு முறைப்பெண்கள் இருந்தனர்.  அவர்களைப் பார்ப்போமா என்று மகனிடம் கேட்க, அதற்கும் 'வேண்டாம் என்றான். தேடிவந்த நல்ல இடங்களைக் கூட பெண்ணின் புகைப்படத்தையும் பார்க்கமால் மறுத்தான்.

மகன் காதலித்தால் கூட மறுப்பு சொல்லாமல் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளும் தாய்தான் பார்வதி. ஆனால் அவனுக்குள் ஒரு காதல் இருப்பது இன்னும் தாய்க்கும் தெரியாது. யாரிடமும் சொல்லிக் கொள்ளும் நிலையிலும் அவன் காதல் இல்லை.

"யாரையாவது விரும்பியவது தொலையெண்டா! பார்வதி இயலாமையை சொல்ல

"பையன் கிட்டையே வந்து யாரையாச்சும் லவ் பண்ணுடான்னு சொல்லுறீங்க.." 

“பின்ன என்னடா.. ஒன்னும் சரியா அமைய மாட்டுது.. உனக்கு கல்யாணம் செஞ்சுட்டா உன் குழந்தையைக் கொஞ்சிக்கிட்டு இருப்பேன்ல.." ஆவலாக அவர் கூற அவன் பதிலே சொல்லவில்லை.

தாய் மகனிடம் கோபம் கொள்வது, திருமண பேச்சில் மட்டும் தான். பார்வதியின் உயிர், உலகம் எல்லாம் மகன்தான்

மூவரும் சாப்பட்டு பந்திக்கு வர அங்கு அதிக கூட்டம். இடமில்லையென்று மூவரும் திரும்ப மணப்பெண்ணின் தாய் மீனாட்சி அவர்களை பார்த்துவிட்டார், 

ஓடிவந்தவர் பார்வதியின் கையை பிடித்துக் கொண்டார் ஒரு ஐந்து நிமிடம் இருங்க என்று யமுனாவிடமும்  வேண்டிக் கொண்டு அங்கே இருந்த கதிரையில் உட்கார வைத்தவர். அருகில் இருந்த பெண்ணை அழைத்தவர்.

"வர்சினி இங்க வாம்மா இவங்களுக்கு கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து கொடு' என்ற மீனாட்சி, சற்று நேரம் அவர்களோடு உரையாடிவிட்டு மற்ற விருந்தினர்களை கவனிக்கச் சென்றார்.

"இந்தாங்கம்மா." சிரித்த முகமாகக் தண்ணீர் பாட்டிலை கொடுத்த வர்சினியை, முதல் பார்வையிலேயே பார்வதிக்குப் பிடித்துப் போனது..

"நீ மீனாட்சிக்கு என்ன வேணும்மா?" பார்வதி கேட்க

"நான் அவங்க அண்ணன் பொண்ணு."

"ஏம்மா அப்ப நம்ம வள்ளி பொண்ண நீ என்று பார்வதி ஆசையோடு பார்க்க "ஆம்' என்று தலையசைதாள் பெண்.

"அப்ப நான் உனக்கு அத்தை வேணும்டா" உன்ன சின்ன வயதில் பார்த்தது இப்ப எவ்வளவு அழகா இருக்க என்று கன்னம் தடவியவர், அவளைத் தழுவிக் கொண்டார்.

அப்பா, அம்மா, படிப்பு என்று பேச்சு நீள பொறுமையாக பதில் சொன்னாள் பெண். பார்வதிக்கு அவ்வளவு பிடித்துவிட்டது பெண்ணை.

சரி அத்தை.. நான் வரேன்." என்றவள் நிமிர்ந்து மகிழனை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெட்கத்துடன் அங்கிருந்து செல்ல, பார்வதி பார்வையோ அவளையே தொடர்ந்தது.. அதை கவனித்த மகிழன்

“அம்மா.. சாப்பிட போகலாமா?" என்றான் சிரித்துக்கொண்டே பார்வதியும், யமுனாவும் எழுந்து சென்றார்கள்.

வீட்டுக்குத் திருப்பும் போது மகிழ்ச்சியாக தெரிந்தார் பார்வதி. வர்சினியை பார்த்தது முதல் அவரது மனதில் அத்தனை மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது. வர்சினியின் தாய் வள்ளியை தேடிச்சென்று பேசிவிட்டு அதை வெளிப்படையாகவே யமுனாவிடம் சொல்லிவிட்டார்.

'யமுனா! நான் முடிவே பண்ணிட்டேன். என் வீட்டு மருமக இவதான். இந்தப் பொண்ணுதான் மகிக்குப் பொருத்தமான பொண்ணு.' '

'அப்படியே நடந்தா எனக்கும் சந்தோஷம் தான் அத்தை' ஆனால் எதுன்னாலும் மகிட்ட சொல்லிட்டு செய்ங்க..  யமுனா அவர்கள் வீட்டுக்கு சென்றுவிட புன்னகை முகமாக வீட்டிற்குள் நுழைந்தார் பார்வதி.

வீட்டிற்கு வந்தும் வர்சினியின் முகமே அவர் மனக்கண்ணில் இருந்தது.. 

மதியம் சிறு தூக்கத்திற்குப் பின் தாயும், மகனும் தேநீரை அருந்தியவாறே பேசிக் கொண்டிருந்தனர்..

"மகி வர்சினி அழகா இருக்க இல்ல.. நமக்கு ஏத்த குடும்பம் என்று தாய் ஆரம்பித்தார்.

"அம்மா இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும்..

"இப்பவே முப்பது டா உனக்கு' 

“நான்தான் ஏற்கனவே சொன்னேன்லமா..இன்னும் இரண்டு வருடங்கள் போகட்டும்.'

"எனக்குன்னு ஒரு ஆசை இருக்கும்லடா.." ஊர்ல கேட்கிற எல்லாருக்கும் நான் தானே பதில் சொல்லணும். உன் வயசு பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க நீ ஏன்டா இப்படி இருக்க..”

மகிழன் எதுவும் பேசவில்லை அமைதியாக இருந்தான்.

நீ வேலை வேலைன்னு ஓடுற "நான் மட்டும் தனியா இந்தா நாலு சுவத்தையே பார்த்துகிட்டு எத்தனை நாளைக்கு இருக்கிறது. உனக்கும் பொண்டாட்டி, குழந்தைகள்னு இருந்த எனக்கும் மகிழ்ச்சி இருக்கும்.." 

இப்போதும் மகிழன் தாய்க்கு எந்த பதிலும் சொல்லவில்லை.
தனக்காகவே வாழ்ந்து, தனக்காகவே யோசித்து, எல்லாவற்றையும் பார்த்து பார்த்து  செய்து தரும் தன் தாய்க்கு உண்மையான சந்தோஷம் எதையுமே தான் கொடுக்கவில்லையோ என்ற ஒரு குற்றவுணர்வு மாத்திரம் அவன் மனதிற்குள் விடாமல் அரித்துக் கொண்டே இருந்தது.

இதற்கு மேல் அவனிடம் வாதம் செய்ய விருப்பம் இல்லாமல் தாய் தேநீர் அருந்திய காலிக் கோப்பைகளை எடுத்துக்கொண்டு சமையல் அறைக்குள் புகுந்தார்.

                       (2)

ஒருவாரம் கடந்திருந்தது. மகனிடம் திருமணம் தொடர்பாக பார்வதி எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அந்த சிந்தனையே மனதில் ஓடிக்கொண்டிருக்கும், வீட்டில் துணைக்கு ஒரு பெண் இருக்கிறாள், பெயர் குழலி. கணவன் இல்லாதவள், இரண்டு பெண் குழந்தைகள். அவளுக்கு எல்லாமே பார்வதியும், யமுனாவும் தான். யமுனாவின் ஜவுளிக் கடையில் தான் முதலில் வேலை பார்த்தாள். கணவன் விட்டுச்சென்றதும் பிள்ளைகளை வைத்துக்கொண்டு வேலைக்கும் வரமுடியாமல் வீட்டு வாடகையும் தரமுடியாமல் தவித்தவளை யமுனா தான் உடன் அழைத்து வந்து தன் வீட்டு மாடியில் தங்கவைத்தார். இரண்டு வீட்டிலும் எல்லா வேலைகளையும் செய்வாள். யமுனாவிற்கு அவள் தங்கை. பார்வதிக்கு மகள்.  எல்லா வேலையிலும் பார்வதியின் பங்கும் இருக்கும். அப்படியே பழகிவிட்டார். இன்று மதிய உணவுக்கு மகிழன் வரவில்லை. அரவிந்த் வீட்டில் இருந்து சாப்பாடு வந்ததாக தகவல் சொல்லிவிட்டான்.


அன்று வெள்ளிக்கிழமை
அழைப்பு மணி ஒலிக்க, படுக்கையில் இருந்து எழுந்து கடிகாரத்தை பார்த்தார் பார்வதி, நேரம் மாலை நான்கை காட்டியது. 

"இந்த நேரத்தில் யாராக இருக்கும்' அவர் தூங்கும் நேரம் என்பதால் பக்கத்தில் யாரும் அவரை தொந்தரவு செய்ய மாட்டார்கள். 

கதவை திறந்தவர். அந்த நேரத்தில் சண்முகபாண்டியனை அங்கே எதிர்பார்க்கவில்லை 

."அண்ணா, வாங்க வாங்க... வீட்டுக்கு வந்தாலே உங்களைப் பார்க்க முடியாது. நீங்க என்னடான்னா வீடு தேடி வந்திருக்கீங்க?" ஆச்சரியமாக பார்வதி ஆர்ப்பரிக்க ஒரு புன்னகையோடு வந்து உட்கார்ந்தார் சண்முகபாண்டியன்.

"பார்வதி... மகிழன் இல்லையாம்மா?"" 

இல்லையேண்ணா!. போன் போட்டு வரச்சொல்லவா"

"வேண்டாம்மா நான் உங்கூடத்தான் பேசணும்." சண்முகபாண்டியன் பேச்சில் பார்வதி ஆச்சரியப்பட்டுப் போனார்.

"சொல்லுங்கண்ணா. ஏதாவது பிரச்சனையா?""

பிரச்சனையெல்லாம் இல்லைம்மா. நம்ம மகிழனுக்கு ஒரு வரன் கொண்டு வந்திருக்கேன்."

"அப்படியா!" பார்வதியின் முகமெல்லாம் மகிழ்ச்சி பூக்கள்.

"கொஞ்சம் பொறு பார்வதி. நான் சொல்லப் போறதை முழுசாக் கேட்டுட்டு அதுக்கப்புறமா சந்தோஷப்படு." சிரித்துக் கொண்டே சொன்னார்.

எவ்வளவு ஆசையாக் காத்துக்கிட்டு இருக்கேன் தெரியுமாண்ணா? மகிக்குன்னு ஒரு பொண்ணு வரணும். என்னோட பேரக் குழந்தைங்களைக் கொஞ்சணும். இப்படி என்னெல்லாமோ ஆசை இருக்கு.".

"நம்ம முத்துப்பாண்டிக்கு நம்ம மகிழன் மேல ஒரு எண்ணம் இருக்கும் போல. அவர் பொண்ணுக்கு மகிழனை வெளியாட்கள் மூலம் கேட்டவர். இப்ப என்கிட்ட நேரடியாகவே கேட்டுட்டார். நீ என்னமா நினைக்கிற...

"அண்ணா நானே உங்ககிட்ட சொல்லி அந்த பொண்ண கேட்க சொல்ல நினைத்தேன். மகிழனுக்கு ஏத்த பொண்ணுண்ணா, 

"இதுதான்மா கூடி வர்றதுன்னு சொல்றது' என்று சிரித்தார் அவர்

வள்ளியை எனக்கு சின்ன வயதில் இருந்தே தெரியும்.  அவங்க குடும்பத்து மேலயும் மகிழனுக்கும் நல்ல அபிப்பிராயம் இருக்கு. பொண்ணும் பார்க்க தங்க சிலையாட்டம் இருக்க...

பொண்ணு தங்கம் தான் குடும்பமும் நல்ல மாதிரி தான். ஆனால் மூத்த பையன் தான் கொஞ்சம் முரடன். ரெண்டு மூணு தடவை போலீஸ் கேஸ் கூட ஆகியிருக்கு.

பார்வதி கொஞ்சம் யோசித்தார். என்னண்ணா இப்படி சொல்லிட்டீங்க?

இல்லம்மா உள்ளதை உள்ளபடி சொல்லணும் அதுதான் முறை. பையன் நல்லவன் தான் கொஞ்சம் முன்கோபம் அதிகம். 

இந்த காலத்தில் பாதி பிள்ளைகள் அப்படித்தானே இருக்கிறார்கள். 

"அந்தப் பையனை மகிழனுக்கும் நல்லாவே தெரியும். என்ன சொல்லுவான்னு தெரியலையே பார்வதி."

"அதை நான் சமாளிக்கிறேன் அண்ணா. முதல்ல பொண்ணைப் பார்ப்போம். அதுக்கப்புறமா என்ன பண்ணுறதுன்னு யோசிப்போம்."

அவசரப்படாத பார்வதி! மகிழனிடம்  பேசிட்டு முடிவு பண்ணலாமே.

'இல்லைண்ணா... எம் பேச்சுக்கு எப்பவுமே மறுப்புச் சொல்ல மாட்டான். ஆனா என்ன பொண்ணு பார்க்கவர கொஞ்சம் முரண்டு பிடிப்பான்.

 அதனால கோவில்ல வச்சு பொண்ணு பார்க்கலாம். எதார்த்தமா கோவிலில் சந்திச்சாதா இருக்கும்.

"இது சரியா வருமா?

முத்துப்பாண்டி அண்ணனிடம் நீங்க சொல்லி பாருங்க, நான் மகிழனை சமாளிச்சிடுவேன்.'

"சரிம்மா... நான் பேசிட்டு சொல்றேன்,

"சரிண்ணா." தாமதப் படுத்தாதீங்க. நான் காத்துக்கிட்டு இருப்பேன்.

"அப்போ நான் கிளம்புறேம்மா."

"சரிண்ணா".


                       (3)

கவரில் இருந்த போட்டோவை எடுத்து மகனிடம் காட்டியவர்

"இந்தப் பெண்ணை ஞாபகம்  இருக்கா மகி?" என்று கேட்டார்..

அதை வாங்கிப் பார்த்தவன் முகத்தில் எந்த உணர்வும் தெரியவில்லை..

"நம்ம நந்தினி கல்யாணத்தில் பார்த்தோம்லடா.. நந்தினியோட அத்தைப் பொண்ணு.. எனக்கு கூட தண்ணி கொடுத்தாளே..” பார்வதி கூற, மகிழனுக்கு எதுவும் நினைவில் இல்லை.. 

"ஞாபகம் இல்லம்மா.." அவன் கூறியதும், மகனை முறைத்தவர்

"வயசுப் பையனாட நீ? ஒரு வாரத்துக்கு முன்னாடி பார்த்த அவ்வளவு அழகான பொண்ண ஞாபகம் இல்லைன்னு சொல்ற" என்று தலையில் அடித்துக் கொண்டார்..

"உங்களுக்கு திடீர்னு எப்படி இந்தப் பொண்ணை எனக்குப் பார்க்கணும்னு தோணுச்சு?" மகிழன் கேட்க

"உன்னை மாதிரியா நான்.. எங்க போனாலும் வயசுப் பொண்ணுங்களைப் பார்த்தா நம்ம பையனுக்குப் பொருத்தமா இருப்பாளான்னு தான் என் மனசுல நினைப்பேன்.. அப்படி தான் வர்சினியை பார்த்ததும் நினைச்சேன்.. 

ரெண்டு நாளைக்கு முன்னாடி ஜாதகம் கேட்டு போன் பண்ணாங்க.. நானும் அனுப்புனேன் பொண்ணுக்கு உன்னை பிடிச்சிருக்குடா அவளே வாய்விட்டு சொல்லிட்டாலாம் ஜாதகம் பொருந்திப் போனதும் அவங்க அப்பா இன்னைக்கு போன் பண்ணாங்க.. இனி நீ தான் பதில் சொல்லனும்.." 

மகிழன் எதுவும் பேசவில்லை

ரெண்டுநாள் எடுத்துக்கோ மகி.. உனக்கு பிடிச்சுருக்கே இல்லையோ, கண்டிப்பாக பொண்ணு பார்க்க போறோம்.." என்றவர் மகனுக்கு தனிமை கொடுத்துவிட்டு சமையல் அறைக்குச் சென்றார்..

தேநீரை குடித்துமுடித்தவன் விட்டாள் போதுமென்று படியேறி மாடிக்கு ஓடிவிட்டான்

*********


"என்ன விஷயம் அத்த."

"மகிழனுக்குத் தெரியுமா அத்த?"

"இன்னைக்குக் காலையில தான் பேசினேன்.  பொறுமையா கேட்டான்." பார்வதியின் முகத்தில் இப்போது கொள்ளைப் புன்னகை.

"கொஞ்சம் டைம் குடுங்கம்மா, யோசிச்சுப் பதில் சொல்றேன்னு சொன்னான்."

"யமுனா... நாம அந்தப் பொண்ணை கோவிலில் போய்ப் பார்க்கலாமா?

"மகிட்ட சொல்லியே கூட்டிட்டு போவோம் அத்த,

வேணாம்மா அவன் கண்டிப்பாக வரமாட்டான். நான் அரவிந்த்திடம் சொல்லிட்டேன், அவனை கூட்டி வருவது அவன் பொறுப்பு.

"சொல்லும்மா."

“பார்வதி... நான் அவர்கிட்டப் பேசிட்டேன். உங்களுக்கு சரின்னா அவருக்கும் சம்மதம் தான் போல. 

நாம இன்னைக்கேப் பொண்ணைப் பார்க்கலாமாண்ணா?" பார்வதியின் குரலில் அத்தனை மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி சண்முகபாண்டியனையும் தொற்றிக் கொண்டது. 

"நான் போன் பண்ணிக் கேட்டுட்டு உன்னைக் கூப்பிடுறேன் பார்வதி ."

                         (4)

மஹா, என்ன நடக்குது இங்க? எதுக்கு எல்லாரும் கூட்டமா கோயிலுக்கு வந்திருக்கீங்க?" ஏதாவது விசேஷமா?"

"நீ கோவிலுக்கு வர்றதே விசேஷம் தானே மகி. எந்த மறுப்பும் சொல்லாம நான் சொல்றபடி செய்யனும்," யமுனா சொல்ல அவரை கேள்வியாகப் பார்த்தான்,

"நான் மறுக்கிற மாதிரி நீங்க அப்பிடி என்ன சொல்லப் போறீங்க?” என்றவன்.

"வாக்குவாதம் பண்ண இது நேரமில்லை. நீ எங்கூட வா." என்று சொன்னவர், அவனைக் கைப்பிடியாக மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார், என்ன நடக்கிறது என்று புரியாவிட்டாலும், அழைத்துச் செல்வது யமுனா என்பதால் அவரோடு போனான்.

கூட்டத்தை  விலக்கிக் கொண்டு உள்ளே போக சிரித்த முகத்துடன் வணக்கம் வைத்தார் முத்துப்பாண்டி, அருகில் அலங்கார பொம்மையாய் நின்றாள் வர்சினி. கேள்வியாக அவன் யமுனாவை பார்க்க,

"அமைதியா இரு மகி" என்றார் யமுனா. 

அப்போதுதான் சுற்றம் கவனித்தில் பட, அங்கே ஒரு பெண் பார்க்கும் படலம் நடப்பது புரிந்ததும் திகைத்துப் போனான். உள்ளே போவதா வேண்டாமா என்ற சிந்தனையில் அங்கேயே நின்றான். 

யமுனாவையும், தன் தாயையும் பார்த்தவன் கண்களில் அதிர்ச்சி இருந்த போதும், அவர்களை பார்த்த பார்வையில் கோபம் இருக்கவில்லை. ஒரு வேதனை தெரிந்தது.

யமுனாவும், பார்வதியும் கண்களால் அவனிடம் யாசித்திக் கொண்டிருந்தனர்! எதுவும் சொல்லிவிடுவானோ என்ற பயத்தில்.

மகிழன் செயல்கள் ஒரு நிதானத்திற்கு மாறியிருந்தது! சூழலும், இங்கு என்ன நடக்கிறது என்பதும் தெளிவாக புரிந்தபோதும் அடுத்து என்ன செய்வது என்று அவனுக்கு புரியவில்லை

வர்சினியின் பார்வை மகிழனிடமே இருந்தது. தரையை பார்ப்பதும் அவனைப் பார்ப்பதுமாய் வெட்கத்தோடு போராடிக் கொண்டிருந்தாள் பெண். முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி விரவிக் கிடந்தது. இதழ்களில் வெட்கம் கலந்த புன்சிரிப்பு தவழ்ந்தது. பார்வதியும் யமுனாவும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள்.

"அம்மா! வர்சினிக்கு சித்தப்பாவை அவ்வளவு பிடிச்சிருக்கு போல. அங்க பாருங்கம்மா எப்படி பாக்குறான்னு." ரகசியக் குரலில் மஹா சொல்ல தாய் செல்லமாக முதுகில் ஒரு அடி வைத்தார்.

"கழுதை... நீ இதைத்தான் பார்த்துக்கிட்டு இருந்தியாக்கும்!" தாய் அடிக்க வாய்பொத்திச் சிரித்தாள் மஹா.  தன் சித்தப்பனை வர்சினிக்கு பிடிச்சிருக்கு என்பது அவ்வளவு மகிழ்ச்சியாக இனித்தது அவளுக்கு. 

மஹாவிற்கு வர்சினி மனது ஓரளவு முன்பே தெரியும். கொடைக்கானலில் நடந்த ஒரு உறவினர் திருமணத்திற்கு குளிரை காரணம் காட்டி பார்வதியும், யமுனாவும் மறுத்துவிட, மகிழனும், மஹாவும் மட்டும் சென்றார்கள். திருமணத்தில் மஹாவோடு வர்சினி ஒட்டிக்கொண்டு திரிந்தபோதும், நான் மஹாவின் காரில் வருகிறேன் என தன் தந்தையிடம் ஒப்புதல் வாங்கிய போதும் வாராத சந்தேகம் அதன் பிறகு அவள் அடிக்கடி வீட்டுக்கு தேடி வந்தபோது வந்தது. கூர்ந்து கவனிக்க அவள் கண்கள் மகிழனை தேடுவதும் புரிந்தது.

மகிழன் மேல் அவளுக்கு ஒரு நாட்டம் இருக்கிறது என்று தன் அம்மாவிடம் மஹா சொல்ல யமுனா அதை அத்தனை சுலபத்தில் நம்பிவிடவில்லை. ஆனால் மகள் சொன்னதிலும் உண்மை இருக்குமோ என்று இப்போது தோன்றியது.

"நான்தான் சொன்னேனில்லை?" என்றாள் மஹா

"ஆமா மஹா! நீ சொல்லும் போது நான் நம்பவே இல்லை. யமுனாவும் சிரித்தார்.

"யமுனா மகியை பாரேன், கோபமா இருக்கான் போல"' பார்வதி ஆதங்கமாய் சொல்ல

"எனக்கும் அப்படித்தான் தோணுது அத்தை என்றார் 

"எதுக்குடி உன் சித்தப்பா வெறைப்பா நிக்குறான்?" இங்க என்ன போலீசுக்கா ஆள் எடுக்கிறாங்க? அவனை கொஞ்சம் சிரிச்ச மாதிரியாவது இருக்கச் சொல்லு' என்றார் யமுனா

"போம்மா சித்தப்பா பார்க்க நல்ல ஜம்முன்னுதான் இருக்காரு... என்றாள் மஹா கோபமாக

"இவவேற சித்தப்பனை சொன்னா கோபம் பொத்துக்கிட்டு வந்திரும்.. அது இல்லடி  அங்க அந்த பொண்ண பாரு தேவதை மாதிரி எவ்வளவு அழகாக சிரிசிக்கிட்டே இருக்க, உன் சித்தப்பன் மூஞ்சியப்பாரு 

இந்த விசுவாமித்திரர் ஒரு பொண்ணைப் பார்த்து அப்படியே சிரிசிட்டாலும்  !' சித்தப்பன் குணம் தெரிந்ததால் மஹா சலித்துக்கொண்டாள்.

மகிழன் அத்தனை எளிதில் தன் எண்ணங்களை வெளிக்காட்டிக் கொள்பவனல்ல. கொஞ்சம் இறுக்கமாகத்தான் எப்போதும் நடமாடிக் கொண்டிருப்பான். ஆனால் அது அவன் முகத்தில் எப்போதும் தெரியாது. இன்று இயல்பு தாண்டி அவன் முகத்தில் ஒரு இறுக்கம் தெரிந்தது.

காரணம் வர்சினி, அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதை கொடைக்கானலில் வைத்தே அவன் புரிந்து கொண்டான். காதலின் வலி எப்படி இருக்கும் என்று அவனுக்கும் தெரியும். அவளை காயப்படுத்தி விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தான். அவள் பார்வை படும் தூரத்தில் கூட அவன் இருப்பதில்லை. ஆனால் அவனுக்கே தெரியாமல் நடந்த இந்த ஏற்பாடு அவனை மிகவும் பாதித்தது.

மஹா அவன் அருகில் வந்து சித்தப்பா என்று அழைத்தாள்

மஹாவை திரும்பிப் பார்த்தவன் முகத்தில் உணர்ச்சிகள் துடைக்கப்பட்டிருத்தது.. நியாயம்தானே! எதுவுமே சொல்லாமல் கோவிலுக்கு அழைத்து வந்து பெண்ணை பார் என்றாள் அவனும் தான் என்ன செய்வான்.

நீ என்ன நினைக்கிறேன்னு தைரியமா சொல்லுமா. உன் விருப்பமும் எங்களுக்கு ரொம்ப முக்கியம்” இருவரும் ஒரே வாக்கியமாய் சொன்னாலும், அமுதா 

தாயின் முகத்தில் தெரிந்த எதிர்பார்ப்பை அவன் அறிவான். ஆனால்...? இந்த இடத்தில் அவன் தாய்க்காக முடிவெடுக்க முடியாது.

“இன்னும் எனக்கு கடை வேலை பாக்கியிருக்கு  எனக்கு இப்ப கல்யாணமெல்லாம் வேண்டாமே"

"உன் வேலையை பத்தி அப்புறம் யோசிக்கலாம். வர்சினியை கல்யாணம் செய்துக்க உனக்கு சம்மதமான்னு மட்டும் சொல்லு!"

பார்வதி படபடக்க, சண்முக பாண்டியன் இடைப்புகுந்தார்.

“பார்வதி யோசிக்க கொஞ்சம் டைம் கொடு! மகிழன் நீ நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வா. நீ என்ன முடிவெடுத்தாலும் எங்களுக்கு முழு சம்மதம்!"

பெண் வீட்டார்  கோவிலிருந்து சென்ற பின்பும் நீண்ட நேர யோசனையில் அவன் அங்கேயே அமர்ந்திருந்தான். 

"ஏன் இந்த கோபம்!"

எங்கோ வெறித்துக் கொண்டிருந்தவளின் பக்கம் அரவம் கேட்ட நொடியில் இந்த கேள்வியும் காதில் விழுந்தது! டாக்டர் மேகலா அங்கே வந்திருந்தார்!

"எதுவுமில்லையே”

அவன் அமர வழி செய்துக் கொடுத்தான்!

ஆனால் இவளுக்கு எதிரில் தன் கைகளை குறுக்கே கட்டியபடி சுவற்றில் சாய்ந்து நின்றுக் கொண்டார் மேகலா!

"இல்லைன்னு வாய் பொய் சொல்லுது, கண்ணை பார்த்தா அப்படி தெரியலையே!"

தலைகுனிந்துக் கொண்டான்!
என்னவென்று சொல்வது!

“என் கிட்ட சொல்லலாமே!"

அத்தையிடம் இதையெல்லாம் சொல்ல முடியாது! அன்று நடந்தவைகளை ஏனோ விஷ்ணுவிடம் சொல்லத் தோன்றவில்லை! அவளின் ரணம் புரியாமல் கேலிப்பேச்சு பேசுவான்! பாரத்தை குறைக்கலாம் என்று எண்ணி ஏதோ ஒரு உத்வேகத்தில் விவேக்கிடம் நடந்ததையெல்லாம் சின்ன குரலில் சொல்லிவிட்டாள்.

ஈவு இரக்கம் இல்லாத தம்பிக்கு அண்ணனாய் பிறந்தவன் எப்படியிருப்பான். இம்மி பிசகாமல் அந்த தடியனை போலவே சிரிக்க ஆரம்பித்தான்! இத்தனை நேரமும் முகமாறுதல் எதையும் காட்டாது கவனித்தவன் இந்நொடி கண்களில் நீர் தேங்கும் அளவுக்கு சிரித்து முடித்துவிட்டான், மகாபாவி!

அவன் சிரித்த குரலுக்கு கீழிருந்து அமுதா கூட என்னவென்று விசாரித்தார்!

"மதினி ப்ளீஸ் சும்மா இருங்க! அம்மாட்ட எதையும் சொல்லிடாதீங்க!"

இத்தனை நேரம் சண்டை சச்சரவு நடந்த இடம் போல் இல்லை அது!

சூழ்நிலை சட்டென்று மாறிவிட்டிருந்தது!

மகனும் தாயும் ஒருவரையொருவர் சிரித்த முகத்துடன் பார்துக் கொண்டிருக்க, போன் வந்தது பார்வதிக்கு

எதிர்முனையில்,

"பார்வதியாங்க பேசுறது!"

"ஆமா. யார் பேசுறது?"

“உங்க பையன் ஜாதகம் பார்த்தோம், எங்களுக்கு ஒத்து வருது! அதைப்பத்தி மேற்படி உங்ககிட்ட பேசலாமுங்களா?"

பார்வதி திரும்பி யமுனாவிடம் பேசிக்கொண்டிருந்த தன் மைந்தனை பார்த்தார்


                            ( 5)

இவன் செஞ்சதை சாதாரணமா என்னால எடுத்துக்க முடியல யமுனா! இப்படி ஒரு பிள்ளையை வளர்த்திருக்கேன்னு நினைச்சா எனக்கே கஷ்டமா இருக்கு! மாறிட்டான்னு நினைச்சி தான் இந்த கல்யாணத்தை செய்யலாம்னு நினைச்சோம், இப்படி செஞ்சிட்டானே!"

எத்தனை நாளா கேட்குறேன்! இந்த பொண்ணுக்கு என்ன டா குறைச்சல், நம்ம குடும்பத்துக்கு ஏத்தவளா இருக்கா! இதையும் விட்டுட்டு இன்னும் என்னால, பொண்ணு தேடி ஊர் பூரா அலைய முடியாது. உனக்கு என்ன தான் டா பிரச்சனை!"

வர்சினி புத்திசாலிப்பெண் என்பதைச் பார்வதியும் யமுனாவும் கணக்கிட்டு விட்டனர். புத்திசாலிதான்! ஆனால் மகிழனை சமாளிக்கும் அளவு அவளுக்குத் திறமை இருக்கிறதா என்று யமுனா தன் அத்தையிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

"கல்யாணத்தைப் பண்ணி வெச்சுடுவோம் யமுனா. அப்புறம் அவங்க இரண்டு பேரோட பாடு! மகிக்கு ஒரு கல்யாணம் ஆனா போதும் எனக்கு..."

பெருமூச்சோடு கூறியவரை சின்னச் சிரிப்போடு பார்த்தார் யமுனா. அந்த அளவு ஓய்ந்து போயிருந்தார் பார்வதி!

"ஏன் அத்தை? இருக்கறது ஒரு மகன்... அவனுக்குக் கல்யாணத்தைப் பண்றதுக்கே இப்படிச் சலிச்சுக்கற?"

"போதும் மா தாயே... பிள்ளை வேணும்ன்னு தவமா தவம் கிடந்து, அத்தனை கோவிலுக்கு வேண்டி, ஆயிரம் வைத்தியம் பார்த்து,  பதிமூன்று வருஷம் கழிச்சுப் பெத்தேன் இவனை! அதுக்கு தான் என்னையும் சேர்த்து இவன் படாத பாடு படுத்தறானே! கொஞ்சமாவது இரக்கப்படறானா பார்?"

"கொஞ்சம் பொறுமையா இருங்கத்தை அவனா ஏதாவது சொல்வான்..."

"அவனா ஏதாவது சொல்வான்னு பார்த்துட்டே இருக்க, நான் இருக்கணுமே யமுனா? இப்பவே ஆயிரம் பிரச்சினை உடம்புல. எனக்கும் தெம்பிருக்க வேண்டாமா?"

நொந்து போய் அவர் கூற, யமுனா அவரைப் பரிதாபமாகப் பார்த்தார்.

பதில் பேசாமல் செல்பேசியை பார்த்திருந்தவனைக் கண்டு இருவருக்குமே சற்று கோபமாகத்தான் இருந்தது.

முத்துப்பாண்டியும் வள்ளியும் அவ்வளவு சந்தோஷமாக வழியனுப்பி வைத்தார்கள் அந்த மனிதருக்கு என்ன பதில் கூறுவது? அத்தனையும் கூடியிருக்கும் இடத்தை விட்டு அடமாக அமர்ந்திருக்கும் மகனைப் பார்க்கும்போது அவ்வளவு கோபமாக இருந்தது பார்வதிக்கு!

மகி' நாங்க பார்க்கிற பெண்ணை எல்லாம் இப்படி நீ வேணாம்னு சொன்ன என்ன தான் முடிவு! உனக்கு வயசு முப்பது ஆகுது. இன்னமும் எங்களால் காத்திருக்க முடியாது. உன் மனசில் யாரையும் நினைச்சிருக்கியா? வேற எந்த பொண்ணையாவது பிடிச்சிருக்கா? எதுவாயிருந்தாலும் சொல்லு!”

“அம்மா எனக்கு மதுவை பிடிச்சிருக்கு" பெற்றவளின் திகைத்த பார்வையை பார்த்தவன் தொடர்ந்தான்! 

"அவளுக்கு படிப்பு முடிந்ததும் பேசி முடிச்சிடுங்க” அதுவரைக்கும் என்னிடம் கல்யாண பேச்சு பேசவேண்டாம்! என்றபடி பணியை சாக்காக வைத்துக் கொண்டு வெளியேறிவிட்டான்.

"நல்ல வேளை இன்னைக்காவது சொன்னானே' இல்லைன்ன இன்னும் எத்தனை நாள் இதை சொல்லாம இழுத்தடிச்சிருப்பானோ” அவர் சொன்னதும் தாய் சிரித்துக் கொண்டார்.

தன் பிள்ளையின் முகத்தைப் பார்த்த பார்வதியின் முகமும் மலர்ந்து போனது. 

"என்னம்மா?" 

"தூங்கல்லை?" 

"தூங்கணும்..." 

"தூக்கம் வரல்லையோ?" பார்வதியின் குரலில் இப்போது சிரிப்பு இருந்தது. மகிழனும் புன்னகைத்தான். 

"கள்ளப்பயலே' எதுக்குடா அம்மாட்ட மறைச்ச

“அப்படி இல்லைம்மா..." 

"எதுக்கு மகி உம்மனசை அம்மாக்கிட்ட மறைக்கிறே?" ‎‫‬‎

"உனக்கு மது எவ்வளவு பிடிக்குதுன்னு உம்முகமே சொல்லுது. என்னோட பையனை எனக்குத் தெரியாதா?" குதூகலமாகத்தான் கேட்டார் பார்வதி 

ஆனால்... மகிழனின் முகம் மலர்ச்சியைச் சட்டெனத் தொலைத்தது. 

"என்னப்பா. மனசுல என்ன குழப்பம்?"

"இது சரியா வரும்னு தோணலைம்மா."

"ஏம்பா அப்படிச் சொல்லுற?”

"மாமா இதுக்குச் சம்மதிக்க மாட்டார் ம்மா."

"அதை நான் பார்த்துக்கிறேன்." அம்மாவின் பதிலில் மகிழன் ஒரு பெருமூச்சு விட்டான். 

"மகி... அம்மா கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு. மதுவுக்கு உன்னை பிடிச்சிருக்கா?" கேட்ட அம்மாவின் கண்களை ஒரு நொடி தீர்க்கமாகப் பார்த்தான் மகன். அடுத்த நொடி அவன் முகத்தில் ஒரு வசீகரப் புன்னகை வந்து போனது. அந்தப் புன்னகையின் அழகில் அம்மாவே தன் மகனை ஒரு நொடி ஆச்சரியமாகப் பார்த்தார். 

மகிழன் முகத்தில் அபூர்வமாகப் பூக்கும் புன்னகை அது. அதுவே சொன்னது... மது மனதில் அவனுக்கு இருக்கும் இடத்தை அம்மாவிற்கும் மனது நிறைந்து போனது.

மது இங்க தானே படிக்கிற, நீ அவளை போய் பார்த்தியா? 

"இல்லை' என்று தலை அசைத்தான் மகிழன்

சேது திருமணத்தின் மறுநாள் அக்கா வீட்டிற்கு போய் வருகிறேன் என்று சொல்லிப் போனவன். பத்து நிமிடத்தில் திரும்பி வந்ததும், நான் அவசரமாக திருச்சி போகணும், நீங்க இருந்து வாங்கம்மா என்று புறப்பட்டபோதும், பையனுக்கு ஏதோ அவசர வேலை என்று தான் நினைத்தார் பார்வதி. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகள் ஊரில் நடந்த எந்த விழாவிலும் அவன் கலந்து கொள்ளவில்லை, தாய்க்கு ஏதோ தவறாகிவிட்டது என்று மட்டும் புரிந்தது.  

அது மதுவாக இருக்குமென்று தாய் நினைக்கவில்லை. தாமரை கேட்டபோது சரிவராது என்று சொல்லி விட்டதை நினைத்து தாய் உள்ளம் இப்போது கலங்கியது. மனதிற்கு ஒரு பெண்ணைப் பிடித்துப் போய் இருக்கும் போது மகனிடம் வேறு பெண்ணை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதை நினைக்கும் போது தாய்க்கு வருத்தம் கூடியது.

நாளை புளியஞ்சோலையில் கோவில் திருவிழா, ஐந்து வருடங்கள் கடந்துவிட்டது, மகிழன் கோவில் திருவிழாவிற்கு போய். ஒரே மகன் தனித்துவிடக் கூடாது என்று சொந்த ஊர்ப் பக்கம் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் தவறாமல் கலந்து கொள்பவர் பார்வதி. கடந்த ஐந்து வருடங்களில் ஊருக்கே வராமல் தன்னையே எல்ல நிகழ்வுக்கும் அனுப்பி வைத்த மகனை நினைத்து பார்த்தார்.




 

Comments

Popular posts from this blog

மது மகிழன் - 2

mm1

மது மகிழன் - 3