mm 2

இம்ரானின் தங்கை, ராபினின் தங்கை, துளசி மூவரும் சேர்ந்து மதுவை கேலி பேசிக் கொண்டிருந்தார்கள்.

"பொண்ணு கூட பேசலையா நீ?" ஆதி வேண்டுமென்றே நம்பியை சீண்டினான்.

"டேய்! நீ கொஞ்சம் சும்மா இர்றா."

"நீயெல்லாம் என்னத்தைக் கல்யாணம் பண்ணி... பாவம் அந்தப் பொண்ணு." சாதாரணமாக சொல்லிக் கொண்டிருந்தவன் சட்டென்று,

"மாப்பிள்ளைக்குப் பொண்ணு கூட ஏதோ தனியா பேசணுமாம்." என்றான் சத்தமாக.

சபை அப்படியே அடங்கிப் போனது. நம்பி விறைத்துப் போனான்.

"டேய் ஆதி! சண்டாளா! ஏன்டா?" நண்பர்கள் இருவரும் வாய்க்குள் முணுமுணுக்க, பெண்ணின் அப்பா சிரித்துக் கொண்டார்.

"பெரியவாக்கு ஓகேன்னா தாராளமா பேசட்டும், வாழப்போறது அவா ரெண்டு பேரும்தானே."

மாப்பிள்ளை வீட்டார் அனைவருக்கும் தெரியும், இது ஆதியின் சதி என்று. நம்பி ஒரு களிமண் என்பது அவர்கள் அறியாததா?

“என்ஜாய் நம்பி, இதெல்லாம் லைஃப்ல ஒரு தரம்தான்டா." முதலில் முறைத்த நம்பி இப்போது லேசாக சிரித்தான்.

"இங்கப்பாரு நம்பி, என்ன நடந்ததுன்னு அப்புறமா கேட்பேன், ரெண்டு வார்த்தைப் பேசிட்டு வந்தேன்னு மட்டும் சொன்னே..." மிரட்டினான் ஆதி.



"சரி மாமா."

“என்னாச்சு தம்பி? கொஞ்சம் சோர்வாத் தெரியுறீங்க?"

"என்னன்னு தெரியலை மாமா. டயர்டா இருக்கு."

"பின்ன... இப்படியே ஓடிக்கிட்டு இருந்தா என்னத்துக்கு ஆகுறது? அது உடம்பா இல்லை மிஷினா?" உரிமையாக யமுனா கண்டிக்கவும், அமைதியாக இருந்தான் மகிழன்

"கொஞ்சம் ஓய்வெடுங்க தம்பி."

"சரி மாமா." தயவாக வடிவேல் சொல்லவும் சட்டென்று இறங்கி வந்தான் அர்ஜூன். யமுனா சொல்லி எதையும் அவன் மறுப்பதில்லை.

"எங்கையாவது வெளியூர் போங்க தம்பி. ஃப்ளைட் வேணாம். ட்ரெயின்ல போங்க. லாங் ஜர்னியா. ராஜ்தானியில டிக்கெட் போடட்டுமா தம்பி?" அந்த மனிதர் கேட்கவும் விலுக்கென்று நிமிர்ந்தான் அர்ஜூன்.

'ராஜ்தானியா! ராஜ்தானி எக்ஸ்பிரஸ்?' அவன் முகபாவம் பார்த்து வடிவேல் திடுக்கிட்டுப் போனார்.


"இல்லை... என்னமோ இருக்கு தம்பி."

"அந்த ட்ரெயின்ல தான் முதல் முதலா டெல்லி போனேன். அப்போ தான்..." அவன் மேலே பேசவில்லை. ஆனால் வடிவேல் புரிந்து கொண்டார்.

"விடுங்க தம்பி. முப்பத்தியோரு வயசாச்சு. கல்யாணம் பண்ணி இருந்தா இந்நேரத்துக்கு ரெண்டு பிள்ளைங்களுக்கு அப்பா ஆகி இருப்பீங்க. அதை விட்டுட்டு... உங்களால வீட்டுலயும் இப்போ வீணான மனவருத்தம்."

“என்னை என்ன பண்ணச் சொல்லுறீங்க

“அபிராமி அம்மாவைக் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க தம்பி. கழுத்துல ஒரு தாலியைச் சுமக்கணும்னு அவங்களுக்கும் ஆசை இருக்காதா?"

"கொஞ்சம் யோசிங்க தம்பி. போனது போனதாவே இருக்கட்டும். அதற்கு மேல் எதுவும் பேசாமல் நகர்ந்து விட்டார் வடிவேல்.

ஆனால் அர்ஜூன் முகத்தில் ரௌத்திரம்

*************

எந்தப் பந்தாவும் இல்லாமல் அந்தச் சாமான்ய மனிதர்களோடு ஐக்கியமாகிப் போனார் மலர். அபிராமியும் மலரும் பம்பரம் போல சுழன்று கொண்டிருந்தார்கள். இன்னும் சிறிது நேரத்தில் முகூர்த்த நேரம் வந்துவிடும். எல்லா ஆயத்தங்களையும் கடைசியாக ஒரு முறை சரிபார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"ராமு ண்ணா... சாப்பாடு வந்திருச்சா?"

"அம்மா... எல்லாம் ரெடியா இருக்கு. பொண்ணை அழைச்சுக்கிட்டு வரப்போறாங்க. நீங்க ரெண்டு பேரும் அங்க போங்க. நான் இதையெல்லாம் பார்த்துக்கிறேன்."

"எந்தக் குறையும் வந்திடக் கூடாது ண்ணா.”

"அதெல்லாம் எனக்கும் தெரியும். நீங்க முதல்ல போங்கம்மா." ராமு விரட்டவும் அபிராமியும் மலரும் மணப்பெண்ணின் அறைக்குப் போனார்கள்.

ஏற்கனவே மாப்பிள்ளை மந்திரங்கள் சொல்ல ஆரம்பித்திருந்தான். பட்டு வேஷ்டி சட்டையில் மாலையும் கழுத்துமாக உட்கார்ந்திருந்த அர்ஜூனை

08:21



மகிழன் காலையில் கண்விழித்த போது அம்மாவும் மகளும் கன்னத்தில் கை வைத்தபடி இவனருகில் இவனையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்கள். மகிழன் திடுக்கிட்டுப் போனான்.

"ஹேய்! குட்மார்னிங். சின்னக்குட்டி என்ன நைட் அப்பா வர்றதுக்கு முன்னாடியே தூங்கிட்டீங்க?" மகளை அள்ளிக்கொண்டான் மகிழன்.

குழந்தையும் சிரித்துக்கொண்டு அப்பாவுக்கு முத்தம் வைத்தது. மதுராவின் முகம் கொஞ்சம் கடுகடுத்ததை மகிழன் பாராமல் பார்த்துச் சிரித்துக் கொண்டான்.

"பட்டு... நீங்க மட்டும் தான் அப்பாக்குக் கிஸ் குடுத்தீங்க. அம்மா குடுக்கலை.” சொல்லிவிட்டு சோகமாக முகத்தை வைத்துக் கொண்டான். குழந்தையும் நம்பிக்கொண்டது.

"அப்பா பாவம் செர்ரி. ஒரேயொரு கிஸ் குடுக்கலாமில்லை.” சின்னவள் மதுராவைச் செர்ரி என்று அழைத்தபோது மகிழனுக்கு அத்தனைப் பரவசமாக இருந்தது. மகளுக்குத் தெரியாமல் மனைவியைப் பார்த்துக் கண்ணடித்தான்.


"நீங்க நைட் தூங்கினதுக்கு அப்புறம் அப்பா நிறைய கிஸ் எங்கிட்ட இருந்து வாங்கினாங்க செல்லம்.” இது மது

"ஏய்! என்னடி பேச்சு இது குழந்தைக்கிட்ட.” அர்ஜூன் பதட்டத்தில் எழுந்து உட்கார்ந்து விட்டான்.

"ஆ... இந்தப் பயம் இருக்கணும். ஹ... யாருக்கிட்ட... மதுகிட்டேவா?” அவள் மிரட்டியபடி நகரவும்,

"ரவுடி... கடைஞ்செடுத்த ரவுடி!" என்றான் மகிழன்.

"காஃபி கொண்டு வர்றேன். சீக்கிரம் ப்ரஷ் பண்ணுங்க.” மீண்டும் மிரட்டி விட்டுப் போனாள் மது. ஆனால் மகிழன் அதைக் கண்டு கொள்ளவில்லை. மகளோடு ஐக்கியமாகிவிட்டான்.

அவர்கள் இருவருக்கும் பேச ஆயிரம் கதைகள் இருந்தது. குழந்தையின் மழலையை ரசித்தபடி அமர்ந்திருந்தான் மகிழன். கையில் காஃபியோடு வந்த மது மீண்டும் சத்தம் போட்டாள்.

“இன்னும் பேசி முடிக்கலையா நீங்க? குட்டி... அப்பாவை பாத்ரூம் போக விடாம இப்படித்தான் பேசிக்கிட்டு இருப்பீங்களா?" இப்போது குழந்தை அம்மாவைக் கெஞ்சும் பார்வை பார்த்தது.

மகிழன் அந்தச் சூழலை வெகுவாக ரசித்தான். காலைப்பொழுது... கையில் காஃபியோடு மிரட்டும் மனைவி... ஓயாமல் கதை பேசியபடிப் பக்கத்தில் குழந்தை. அம்மாவும் அப்பாவும் இதைப் பார்த்தால் எவ்வளவு சந்தோஷப் படுவார்கள். இதையெல்லாம் நான் அனுபவிக்கவில்லை என்பதுதானே அவர்கள் ஏக்கமும்.

“மாமா! என்ன ஆச்சு?” மகிழனின் திடீர் மௌனம் மதுவைக் கலவரப்படுத்தியது.

"ம்ஹூம்... ஒன்னுமில்லை.” நகரப்போனவனின் கையைப் பிடித்து நிறுத்தினாள் மது. அவன் வசியப் புன்னகையை அவள் மீது தெளித்தவன் அந்தக் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டான்.

"மது! ரெண்டு பேரும் ரெடி ஆகுங்க." உள்ளிருந்த படியே குரல் கொடுத்தான்.


"எங்க போறோம் மாமா?"

"கோயிலுக்குப் போறோம். நீ புடவை கட்டு."

"புடவையா?" மதுவிற்கு 'ஐயையோ' என்றிருந்தது. புடவை கட்டினால் அத்தனை வசதியாக உணரமாட்டாள் பெண். அது அவனுக்கும் தெரியும்.

"பாங்..."

"சொன்ன பேச்சைக் கேளு மது." அவன் அத்தோடு முடித்துக் கொண்டான்.

கொஞ்ச நேரத்திலெல்லாம் அவர்களின் சின்னக் குடும்பம் கோவிலுக்குப் போக ரெடியாகி நின்றிருந்தது. மகிழனும் வேஷ்டி சட்டையில் இருந்தான். மதுராவின் பார்வை அவனையே அடிக்கடித் தொட்டு மீண்டது. மகள் சற்று அந்தப் புறம் நகரவும் மனைவியைத் தன்னருகே இழுத்துக்கொண்டான்.

"என்ன... சைட் அடிக்கிறயா?"

"ம்... ஆமா." தயக்கமே இல்லாமல் ஒத்துக்கொண்டது பெண்.

"புதுசாத்தான் எனக்கு இப்போ நீ தெரியுற மாமா. டெல்லியில நான் பார்த்த மாமா இல்லை இது." அவள் கண்கள் அவனை ஆசையாக மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொண்டது.

"அப்போ யாராம்?"

“இப்போ நீ மாறிட்டே. ஏன் மாமா? உனக்கு நான் பொருத்தமா இருக்கேனா?" புடவையில் எழிலே உருவாக நின்று கொண்டு அவள் கேட்க அவன் கண்களில் மயக்கம் தெரிந்தது.

"நான் முன்ன மாதிரி இல்லையே மாமா. ஆறு வயசுல ஒரு பொண்ணு இருக்கு. நான் அழகா இருக்கேனா?” அவள் கேள்வியில் அவன் சிரித்தான்.

"சிரிக்காத மாமா. நான் அழகா இருக்கேனான்னு சொல்லு."

"நீ எத்தனை அழகா இருக்கேன்னு நேத்து ராத்திரி நான் சரியாச் சொல்லலை போல இருக்கு." அவன் கண்ணடித்துச் சிரிக்கவும் முறைத்தபடிப் போனாள் மது.

அந்தச் சின்ன கிராமத்தைக் கொஞ்ச நேரம் சுற்றிப் பார்த்தார்கள் மூவரும்.

"ஓஹோ! ஐயாவுக்கு அந்த ஐடியா வேற இருக்கோ? உங்க மனசுல என்ன சார் நீங்க நினைச்..." மேலே அவளைப் பேசவிடாமல் அடாவடியாக இழுத்து, பேசிய அந்த இதழ்களை மூடி இருந்தான். மதுவை எத்தனை தூரம் அவன் உள்ளும் புறமும் தேடியிருக்கின்றன என்று சிறுகச் சிறுக அவளுக்குப் புரிய வைத்துக் கொண்டிருந்தான் மகிழன்  சண்டை ஒன்றிற்குத் தயாரானவள் அவனிடமே சரணடைந்திருந்தாள்.

"செர்ரி..." குழந்தையின் அழைப்பில் சட்டென்று இருவரும் விலகிக் கொண்டார்கள். அப்போதும்  மகிழன் அவளை முற்றாக விலக விடவில்லை.

"செர்ரி... கோர்ட்ல எல்லாம் முடிவாகிறதுக்குக் கொஞ்ச நாள் எடுக்கும். என்னால முடிஞ்ச வரை சீக்கிரமா முடிக்க ட்ர்ரை பண்ணுறேன். அதுவரைக்கும் கவனமா இரு. குழந்தை பத்திரம். உங்கம்மாக்கும் எல்லாம் தெரியும். அவங்க உனக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. சஞ்சீவ் எதுலயாவது சைன் பண்ணச் சொன்னாப் பண்ணாதே. உன்னால சமாளிக்க முடியலைனா

Comments

Popular posts from this blog

மது மகிழன் - 2

mm1

மது மகிழன் - 3