Posts

கனவுகளை சுமந்த கண்களுக்கு பல கதைகளை சுமப்பதென்ன கடினமாகுமா... நாம் நம் மனதிற்கு இனியவரை காதலித்திருக்கலாம்... அவர்களுடனே நமது கடைசிக் காலம் வரையும் பயணிக்க வேண்டும் என்றும் நினைத்திருக்கலாம்... ஆனால் துரதிஸ்டவசமாக அவர்களின் நேசத்தை விட்டு நாம் விலகியும் இருக்கலாம்... அதற்குக் காரணமாக நமது திருமணங்கள் கூட அமைந்திருக்கலாம்...   இதனால் இந்தத் திருமண வாழ்க்கையில் நீங்கள் அதிருப்தியடைந்து,  சஞ்சலப்பட்டு கடந்த காலத்தின் நினைவிற்கே திரும்பியுமிருக்கலாம்.. அது ஆராத வடுக்களை ஆற்றியும் இருக்கலாம்... இதனால் ஏன் இந்த வாழ்க்கையை நாம் அடையத் தவறிவிட்டோம் என நூற்றுக்குத் தொன்னூற்றொன்பது முறை நாம் வருந்தியுமிருக்கலாம்.... ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்... தூரத்தில் இருக்கும் நிலவு அழகாகத்தான் இருக்கும்.. நம்மை ஈர்ப்பவையாகத் தான் இருக்கும்... உண்மையில் அதனோடு  பயணிக்க நாம் நினைத்திருந்தால்..  மேடு பள்ளங்களைக் கடந்து தான் பயணித்திருக்க வேண்டும்.. அதே போன்று தான் கைகூடாத காதலும் கூட... தூரத்தே இருந்து ரசிப்பதற்கு சுகமாகத் தெரிந்திருக்கலாம்... காலப்போக்கில் அதுவும் கை...
அம்மு." இயல்பாக அவளை அணைக்க வர. லேசாகத் தடுமாறியவள் ஜன்னலோரம் போய் நின்று கொண்டாள். அவன் நெருங்கினால் தான் கோபம் எல்லாம் பறந்துவிடும் என்னும் பயம் அவளுக்கு. மாமன் தோளில் சாய விரும்பியவள் அவனோடு ஒன்ற முடியாமல்  தவித்தாள். அவள் விலகல் கண்டு அவன் கண்கள் லேசாகச் சுருங்கிப் பின் தன்னை மீட்டுக் கொண்டது. "நான்... உங்ககிட்டப் பேசணும் மாமா." அவள் பதட்டம் அவனுக்குக் கொஞ்சம் குதூகலமாகத்தான் இருந்தது. "என்ன புதுசா யாரோ மாதிரி பேசுற." என்றான் கேலியாக "எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க மாமா?" குரோதமாக வந்தது அவள் கேள்வி. மகிழன்  லேசாகச் சிரித்தான். "இதென்ன கேள்வி மது? பத்து வருடம் காத்திருந்து கிடைத்த வரம் நீ,  என் காதல். உனக்கும் என்னை ரெம்ப பிடிக்கும் பண்ணிக்கிட்டேன்." "எனக்கு உங்களை ரெம்ப பிடிக்கும் மாமா, உண்மையிலேயே என்ன உங்களுக்கு பிடிக்குமா மாமா?" வீம்பான கேள்வியில் மகிழனை காயப்படுத்தினாள். "பிடிக்காமப் போறதுக்குக் காரணம் இருக்காடா,  என்ன பேசுற அதுவும் இந்த நேரத்துல?” அவன் குரல் கலக்கமாக வந்தது. "உங்களுக்கு என்ன பிடிக்கல ...
எனக்கு பிடித்த கவிதை ------------------------------------------- "உங்கள் திருமணத்தன்று நான் எங்கிருந்தேன்?" மகளின் கேள்விக்கு விடைகூற முயன்றேன்‌... "அந்தத் தீயின் நடுச்சுடராக ஒளிர்ந்திருந்தாய்... எம் தலைமீது தூவப்பட்ட  அட்சதையில்  ஒரு மணியாக இருந்தாய்... சூடிய மாலை நறுமணத்தில்  இருந்ததும் நீதான்.... தாத்தா பாட்டியரின் கண்களில்  நீர்துளியாக நீ திரண்டு நின்றாய்... உன் தாயை கரம் பற்றிய என் உள்ளங்கைக்குள் வெப்பமாக இருந்ததும்  நீயே.‌.‌ கவிஞர் மகுடேசுவரன் "ஞாயிற்றுக்கிழமைகளை வாங்கித்தரும் தந்தை *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** வேலை நாட்களில் வந்துவிடும் விடுமுறையற்ற குட்டிக் குட்டிப் பண்டிகைகளுக்கு அழுதபடியே அப்பாவிடம் விடுமுறை கேட்கும் பள்ளி செல்லும் மகள்களுக்கு மறுப்பேதும் சொல்லாமல் இனிப்போடு சேர்த்து விடுமுறையை வழங்கி ஞாயிற்றுக்கிழமைகளையும் வாங்கித் தர அப்பாக்களால் மட்டுமே முடிகிறது."

சாப்பிங்

காரை திருச்சியின் பிரசித்தமான அந்த ஜவுளி மாளிகைக்குள் நிறுத்தியவன், "இறங்கு மது, உனக்கு என்னெல்லாம் புடிக்குதோ " என்றான். "ம்..." மது தலையசைக்க, மலர்ந்த முகத்துடன் இருவரும் கடைக்குள் நுழைந்தார்கள். “மாமா, எனக்கு நீங்க செலெக்ட் பண்ணுங்க. நான் அத்தைக்கு செலெக்ட் பண்ணுறேன், ஓ கே." என்றாள். சிரித்துக்கொண்டே தலை ஆட்டிய மகிழ, ஃபங்ஷனுக்கு கிரான்ட்டாக செஞ்சந்தனக் கலரில் அநார்க்கலி ட்ரெஸ் தேர்ந்தெடுத்தான். உடல் முழுவதும் நெட்டில் மெல்லிய இழையாக த்ரெட் வேர்க் இருந்தது. பார்டர், கை, கழுத்து என அனைத்து இடத்திலும் தங்க ஜரிகை வேலைப்பாடு கண்ணைப் பறித்தது. "மாமா! சூப்பரா இருக்கு. என்ன இப்படி அசத்துறீங்க?” என்றாள் ஆச்சரியமாக. புடவை செக்ஷ்னுக்கு சென்றவன், குங்குமக் கலரில் ஒரு பட்டுப் புடவையை தேர்ந்தெடுத்தான். "ஐயோ மாமா! எதுக்கு இவ்வளவு காஸ்ட்லியா எடுக்குறீங்க?" அவள், அவன் காதைக் கடிக்க, முறைத்துப் பார்த்தவன், அவன் நினைத்ததை சாதித்தான். குங்குமப் பூ கலரில் இருந்தது புடவை. பெரிய தங்க நிற சூர்யகாந்திப் பூக்கள் ஹெட்பீஸை அலங்கரிக்க, ஹெட்பீஸின் முடிவில் மயில் கண்கள் வரி...

mm1

07-08-2008 என்னும் நாட்காட்டியின் தாளைக் கிழித்துக் கொண்டிருந்தார் தேநீர் கடை உரிமையாளர்.   நடை பயிற்சியை முடித்துக்கிக்கொண்டு நான்கு பெண்கள் படியேறினார்கள். மதுநிலா நமது கதையின் நாயகி. அவளின் தோழிகள் கார்த்திகா, நிகிலா, ஜானகி நடைபயிற்சி முடித்து விட்டு தேநீர் கோப்பையுடன்  ஹாலில் அமர்ந்திருந்தார்கள் தோழிகள் நால்வரும். நிகிலா ஏதோ ஒன்றைப் பேச அதற்கு பதிலாக ஜானகி வேறு ஒன்று பேச அந்த வீடே அவர்களது பேச்சில் கதிகலங்கிப் போனது. வழக்கமாக இவ்வாறு ஏதாவது நடக்கும் போது மதுவும் அவர்களுடன் இணைந்து கொண்டு மேலும் வம்பிழுப்பாள். ஆனால் இன்று அவளிருந்த மனநிலையில் அவை எவற்றிலும் தன் கவனத்தைச் செலுத்தாமல் இருக்க அவளை விசித்திரமாக பார்த்த நிகிலா “என்ன ஆச்சு டி? ஏன் டல்லா இருக்க? உடம்புக்கு எதுவும் முடியலடா?” அக்கறையுடன் அவளது நெற்றியில் கை வைத்து பார்த்துக் கேட்கவும் சிறு புன்னகையுடன் அவளைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவள் “ஒண்ணும் இல்லை டி! நான் ரூமுக்கு போறேன்" என்று விட்டு அங்கிருந்து எழுந்து சென்று விட அவளோ கார்த்திகாவிடம்  ஜாடையாக என்னவென்று வினவினாள். மது திருச்சி வந்து ஒன்றரை வருடங...