மது மகிழன் - 7
மதுவை அழைத்துச் செல்ல தாமரையும், சந்திரனும் நாளை திருச்சி வருகிறார்கள். ஆனால் இந்த ஆடி அழைப்பை மகிழன் விரும்பவில்லை, "அம்மா மதுவை அனுப்பனுமா" என்றான் தாயிடம்.. "சும்மா இரு மகி. எல்லத்திலும் விளையாட்டு கூடாது, உங்க பெரியாம்மாவுக்கு யாரு பதில் சொல்றது? நாளைக்கு அவங்க எல்லாம் வந்ததும் நாம அனுப்பித்தான் ஆகணும்" "நானும் கூட போகலாமா? பார்வதி முறைத்தார்... "அப்போ ஒரு வாரம் கழிச்சுப் போகலாமா." சும்மா இருக்க விடுடா என்னப் படுத்தாத எதுன்னாலும் உன் அக்காவிடம் கேட்டுக்க சொன்னவர் சமையல் அறைக்குள் நகர்ந்து விட்டார். மறுநாள் காலையில் சந்திரனும், தாமரையும் வந்துவிட்டார்கள். மகிழன் பேக்டரிக்கும் போகாமல் பள்ளி மாணவனை போல் காரணம் சொல்லிக்கொண்டே அங்கேயே சுற்றிக் கொண்டிருக்க, தாய் அவனைப் பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டார். எப்போதும் காலையில் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருப்பவன். இன்று சம்மந்தமே இல்லாமல் மேலேயும் கீழேயும் நடக்க. "மகி கால் வலிக்க போகுது ஒரு இடத்தில் உட்கார் என்றார். "அம்மா' என்றான் கோபமாக. "போகாதேன்னு சொல்லலாம் தானே இந்த மாமாவுக்கு என்னை...